Subscribe

BREAKING NEWS

17 December 2018

திருச்செந்தூரில் திருவிழா - ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி (26/12/2018)

அடியார் பெருமக்களுக்கு அன்பு வணக்கங்கள்.

இதோ. மார்கழி மாதம் பிறந்து விட்டது. இந்த மாதம் முழுதும் கொண்டாட்டம் தான்.சித்தர் வழியில் பூசை செய்பவர்களுக்கு இந்த மாதம் இரண்டு திருவிழாக்கள் உள்ளது. ஒன்று மார்கழி மாத பிருகு மகரிஷி குடிலில் அகண்ட ஜோதி தரிசனம். மற்றொன்று நம் அப்பன் அகத்தீசனின் மகா ஆயில்யம். இதனை தற்போது ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி என்று அனைவரும் கொண்டாடி வருவது இன்னும் சிறப்பு.

ஓம் அகத்தீசாய நம என்ற நாமம் சொல்வதற்கு நாம் எத்தனை பிறவி கடந்து வந்திருக்கின்றோம் என்று தெரியுமா? புல்லாகி, பூடாகி,புழுவாகி, மரமாகி என்று கடந்து இன்று மனிதப் பிறவி எடுத்து வந்திருக்கின்றோம். இதனை தான் ஒளவை பாட்டியும் அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்று சொல்லி இருக்கின்றார்.

இந்த மனிதப் பிறவியில் பிறந்து விட்டோம். அதிலும் அரிதாக கூன்,குருடு,செவிடு,பேடு நீங்கிப் பிறத்தல் அதனினும் அரிது என்று கூறியுள்ளார். நாமெல்லாம் அதே போல் மனிதராக, எந்த உடற் குறையும் இன்றி பிறந்திருக்கின்றோம். இப்படி பிறந்த நாம் ஏதோ நம் பெற்றோர் செய்த புண்ணியத்தின் பலனாக சனாதன தர்மத்தை பின்பற்றும் படி உள்ளோம். அதிலும்,இன்னும் சிறப்பாக சித்தர்களின் மார்க்கத்தில் பயணம் செய்து வருகின்றோம். இது எப்பேர்ப்பட்ட பாக்கியம். ஏதோ. விட்ட குறை தொட்ட குறை இருப்பதால் தான் நாம் சித்தர்களின் பாதையில் செல்ல முடிகின்றது. சித்தருக்கெலாம் தலைமை சித்தராய் விளங்கும் அகத்தியர் நாமம் சொல்வதற்கே நமக்கு புண்ணியம் செய்து இருக்க வேண்டும்., அவருக்கு ஆயில்யம் பூசை செய்வதற்கும் நமக்கு கொஞ்சம் கொடுப்பினை வேண்டும். இது நம் தளத்திற்கு பரிபூரணமாக கிடைத்துள்ளது. சரி. வாருங்கள் இந்த மாத ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி கொண்டாடுவோம்.

வருகிற 25/ 12/ 18 செவ்வாய் இரவு 8. 15 மணிக்கு மேலே மஹா ஆயில்யம் வருகின்றது. 
அது என்ன மஹா ஆயில்யம் என கேள்வி வரலாம்.இன்றைய தினத்தில் இறைவன் சிவ பெருமான் ஸ்ரீ அகத்திய முனிவராக அவதாரம் எடுத்த காரணத்தால் மார்கழி மாத ஆயில்யம் ஸ்ரீ மஹா ஆயில்யம்  ஆகும். இந்த ஆயில்ய நட்சத்திரம் மறுநாள் மாலை அதாவது 26/ 12/ 18 புதன் கிழமை மாலை 6.00 மணிக்கு முடிவடைகிறது. ஆக புதன் கிழமை அன்று ஸ்ரீ அகத்திய முனிவர் அவதார தினமாக கொண்டாடப்படும்.





ஓம்
அகத்தீச ராஜனே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
கும்பமுனி தேவனே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
குருமுனி அப்பனே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
முதல் இலக்கணம் தந்தவனே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
வேலவன் மைந்தனே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
ஆராதார ஜோதியே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
வெட்டவெளி ராஜனே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
சுழுமுனை சுடரே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
வாசிமுனி தெய்வமே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
வர்மமுனி ராஜனே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
வைத்தீச ராஜனே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
காயசித்தி கற்பமே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
குருநாடி தெய்வமே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
சகல கலை ஞானமே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
ரசவாத ராஜனே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
ஞானத்தின் காவியமே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
தீட்சா விதி தீபமே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
நயன விதி நாதனே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
பரிபூரண ஞானமே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
பஞ்சகாவியம் பகர்ந்தவனே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
முப்பூவின் முழுமையே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
மெய் ஞான ஜோதியே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
அகாரத்தின் அருளே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
உகரத்தின் உண்மையே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
மகாரத்தில் இருப்பவனே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
மௌன குரு மந்திரமே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
சிவ வாலை சிங்கமே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
மனோன்மணி ஜோதியே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
மகத்தான மாமுனியே,
வந்தே அருள வேண்டும்.

உன் திருப்பாதம் சரணம் சரணம் சரணம்.

ஓம் ஸ்ரீ லோபமுத்ராம்பா சமேத அகத்தீசாய நமோ நமக
டிசம்பர் 26 புதன் கிழமை அன்று  ஸ்ரீ மஹா ஆயில்ய நட்சத்திர சிறப்பு பூஜையானது  திருநெல்வேலி செங்குந்தர் வடக்கு வம்சத்தார்க்கு பாத்தியப்பட்ட திருச்செந்தூர் நமது குருநாதர் அகத்திய பெருமானுடைய ஆலயத்தில் கீழ்கண்ட நிகழ்வில் நடைபெறும்.

காலை 7 மணிக்கு
மூலிகைகளால் அபிஷேகம்
அலங்காரம்
ஆராதனைகள்
அன்னதான பிரசாத விநியோகம்
அனைத்தும் சிறப்பாக நடைபெற உள்ளது

குருநாதரின் குழந்தைகள்,மாணவர்கள்,சீடர்கள்,அடியவர்கள்,தாசர்கள்,அன்பர்கள்,பக்தபெருமக்கள்
அனைவரும் வருக... குருவருள் திருவருள்  பெற வருக வருக வருக என நம் தளம் சார்பிலும் வேண்டி அழைக்கின்றோம்.

இந்த ஆலயத்தில் இதற்கு முன்னர் நடைபெற்ற பூசையில் அகத்தியர் அருள் கொடுத்த காட்சிகளை கீழே தொகுத்து தருகின்றோம்.
















மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம். 

மீள்பதிவாக:-


அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temple.blogspot.com/2018/10/blog-post_29.html

வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_3.html

அன்பின் ஈசனே போற்றி - ஆவணி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை - http://tut-temple.blogspot.com/2018/09/blog-post_3.html 

அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (11/08/2018) - http://tut-temple.blogspot.com/2018/08/11082018.html

கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயில்,அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 15/07/2018 - http://tut-temple.blogspot.com/2018/07/15072018.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 17/06/2018 - http://tut-temple.blogspot.com/2018/06/17062018.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு 21/05/2018  - http://tut-temple.blogspot.com/2018/05/21052018.html

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_22.html

அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017- http://tut-temple.blogspot.in/2017/09/2017.html

அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி சதய பூஜை அழைப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_74.html

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!! - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_89.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html

மனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_6.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_16.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே ! - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_76.html

அகத்தியர் ஆயில்ய ஆராதனை (21/05/2018) - http://tut-temple.blogspot.com/2018/05/21052018_19.html


No comments:

Post a Comment