அன்பார்ந்த மெய்யன்பர்களே.
அனைவருக்கும் வணக்கம். அகத்தியர் பூசையின் போது இந்த பாடல் கேட்டிருக்கின்றோம். நம் தளத்திலும் பதிவிட வேண்டும் என்று விரும்பி மீண்டும் ஒரு முறை உத்திரவு பெற்று இங்கே தருகின்றோம். இணைய வெளியில் தேடிய போது நமக்கு கிடைத்தது. கொங்கணர் கடைக்காண்டத்தில் இந்தப் பாடல் வருகின்றது. இதோ அந்தப் பாடல்...
அகத்திய மாரஷி நமா என்றென்றோது
அஷ்ட சித்துதனை ஈவார் குளிகை ஈவார்
அகத்தியரே காஷாய வேடமீவார்
அப்போது சித்தரெல்லாம் கைக்கொள்வார்கள்
அகத்தியரைத் தொண்டனிட்டு மேரு செல்ல
யாருக்கும் தடையில்லை அரசே யென்பார்
அகத்தியார் தாம் எக்கியத்தில் பிறந்த யோகி
ஆயிரத்தெட்டு அண்டமெல்லாம் ஆணையாச்சே.
-கொங்கணார் கடைக்காண்டம்.
ஆனால் உச்சரிக்கும் போது அகத்திய மகரிஷி நம என்றென்றோது என்று கூறுவதாக கேட்டுள்ளோம். சித்தர் பாடல் கிடைத்தால் நாம் எந்த செய்தி சரி என்று பின்வரும் நாட்களில் உறுதி செய்கின்றோம்.சரி...மகான்களை பூசித்தால் மனம் மகிழும், ஒடுங்கும்,ஓங்கும். ஒன்பது கோடி ஞானிகளுக்கு தலைவரும் கும்பமுனி என்றும் குருமுனி என்றும் பட்டம் பெற்ற ஆசான் அகத்தீசர் அவர்களின் திருவடியை பூசித்துதான் ஒன்பது கோடி மனிதர்களும் பாவத்தை நீக்கி புண்ணியத்தைப் பெற்று மரணமில்லா பெருவாழ்வு பெற்று ஞானிகள் ஆகியுள்ளார்கள். அகத்தியர் என்ற பெயரை உச்சரிக்கவே நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். எந்த பிறப்பில் நாம் செய்த புண்ணியமோ நம்மை சித்தர் மார்க்கத்தில் ஈடுபட வைத்துள்ளது. ஞாலம் சிறக்க ஞானிகளை போற்றுங்கள். போற்றினால் நமது வினை அகலுமப்பா..சரி..இந்தப் பதிவில் சென்ற மாதம் புரட்டாசி மாத ஆயில்ய வழிபாடு நிகழ்வுகளை காண உள்ளோம். இந்த பூஜையில் மூவர் தரிசனம் கண்டோம். நால்வர் தெரியும்.அதென்ன மூவர் என்கின்றீர்களா? பதிவின் முழுமையில் நீங்களே உணர்வீர்கள்.
அன்றைய தினம் காலையில் மழை பெய்து கொண்டிருந்தது. ஓராண்டில் நாம் இந்த பூசையில் காலடி எடுத்து வைத்து இருக்கின்றோம். தலைவரை சந்தித்து ஒரு கும்பிடு போட்டு விட்டு, மற்ற ஏற்பாட்டு வேளைகளில் தயாரானோம். மழை வேறு தூறிக் கொண்டிருந்தது. ஏன் தங்கையும் இந்த முறை பூசைக்கு வந்திருந்தார்கள்.இதோ பூசை பொருட்கள் தயார்.
மயிலையில் இருந்து அகத்திய அடியார் திரு.செல்வம் வந்திருந்தார்கள். நாம் சற்று தயக்கத்தில் தான் இருந்தோம்.ஏனெனில் அன்றைய மழை அப்படி.
விபூதி அபிஷேகத்தில் அப்பப்பா..சொல்ல ஒன்றும் இல்லை. உணரத்தான் முடியும். அடுத்து அலங்காரத்திற்கு காத்திருந்தோம்.
அலங்கார முடிவில்..நீங்களே பாருங்கள்.
கற்பூர ஆரத்தி எடுத்துக் கொள்ளுங்கள். ஓராண்டு முழுமையில் அன்றைய பூசைக்கு ஒரு தட்டு நிறைய பூக்கள் வந்திருந்தது. இது நமக்கே ஆச்சர்யமாக இருந்தது. நாம் ஒரே ஒரு மாலை மட்டுமே சொல்லுவோம். இந்த முறை பூக்குவியலால் அகத்தியர் தரிசனம் கொடுத்தார்.
பெய்யும் மழையில் யார் வருவார்கள் என்று ஆரம்பித்த பூசை, முழுமை பெட்ரா போது மன நிறைவாகவே இருந்தது.
அனைவருக்கும் வணக்கம். அகத்தியர் பூசையின் போது இந்த பாடல் கேட்டிருக்கின்றோம். நம் தளத்திலும் பதிவிட வேண்டும் என்று விரும்பி மீண்டும் ஒரு முறை உத்திரவு பெற்று இங்கே தருகின்றோம். இணைய வெளியில் தேடிய போது நமக்கு கிடைத்தது. கொங்கணர் கடைக்காண்டத்தில் இந்தப் பாடல் வருகின்றது. இதோ அந்தப் பாடல்...
அகத்திய மாரஷி நமா என்றென்றோது
அஷ்ட சித்துதனை ஈவார் குளிகை ஈவார்
அகத்தியரே காஷாய வேடமீவார்
அப்போது சித்தரெல்லாம் கைக்கொள்வார்கள்
அகத்தியரைத் தொண்டனிட்டு மேரு செல்ல
யாருக்கும் தடையில்லை அரசே யென்பார்
அகத்தியார் தாம் எக்கியத்தில் பிறந்த யோகி
ஆயிரத்தெட்டு அண்டமெல்லாம் ஆணையாச்சே.
-கொங்கணார் கடைக்காண்டம்.
ஆனால் உச்சரிக்கும் போது அகத்திய மகரிஷி நம என்றென்றோது என்று கூறுவதாக கேட்டுள்ளோம். சித்தர் பாடல் கிடைத்தால் நாம் எந்த செய்தி சரி என்று பின்வரும் நாட்களில் உறுதி செய்கின்றோம்.சரி...மகான்களை பூசித்தால் மனம் மகிழும், ஒடுங்கும்,ஓங்கும். ஒன்பது கோடி ஞானிகளுக்கு தலைவரும் கும்பமுனி என்றும் குருமுனி என்றும் பட்டம் பெற்ற ஆசான் அகத்தீசர் அவர்களின் திருவடியை பூசித்துதான் ஒன்பது கோடி மனிதர்களும் பாவத்தை நீக்கி புண்ணியத்தைப் பெற்று மரணமில்லா பெருவாழ்வு பெற்று ஞானிகள் ஆகியுள்ளார்கள். அகத்தியர் என்ற பெயரை உச்சரிக்கவே நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். எந்த பிறப்பில் நாம் செய்த புண்ணியமோ நம்மை சித்தர் மார்க்கத்தில் ஈடுபட வைத்துள்ளது. ஞாலம் சிறக்க ஞானிகளை போற்றுங்கள். போற்றினால் நமது வினை அகலுமப்பா..சரி..இந்தப் பதிவில் சென்ற மாதம் புரட்டாசி மாத ஆயில்ய வழிபாடு நிகழ்வுகளை காண உள்ளோம். இந்த பூஜையில் மூவர் தரிசனம் கண்டோம். நால்வர் தெரியும்.அதென்ன மூவர் என்கின்றீர்களா? பதிவின் முழுமையில் நீங்களே உணர்வீர்கள்.
அன்றைய தினம் காலையில் மழை பெய்து கொண்டிருந்தது. ஓராண்டில் நாம் இந்த பூசையில் காலடி எடுத்து வைத்து இருக்கின்றோம். தலைவரை சந்தித்து ஒரு கும்பிடு போட்டு விட்டு, மற்ற ஏற்பாட்டு வேளைகளில் தயாரானோம். மழை வேறு தூறிக் கொண்டிருந்தது. ஏன் தங்கையும் இந்த முறை பூசைக்கு வந்திருந்தார்கள்.இதோ பூசை பொருட்கள் தயார்.
மயிலையில் இருந்து அகத்திய அடியார் திரு.செல்வம் வந்திருந்தார்கள். நாம் சற்று தயக்கத்தில் தான் இருந்தோம்.ஏனெனில் அன்றைய மழை அப்படி.
போற்றிகளை பாடியும், படித்தும் துதித்தோம்.போற்றினால் வினை அகலும்மப்பா..ஆம்.மகான்களை போற்ற போற்ற மனமாசு நீங்கும். எப்படி போற்ற வேண்டும். விண்ணைப்பிளக்கும் சத்தத்தில் போற்ற வேண்டும்.சும்மா..ஏனோ தானோ என்று படித்தால் நம் நிலையும் ஏனோ தானோ என்று தான் இருக்கும். மேல் தொண்டையில் இருந்து படிக்காது அடிவயிற்றில் இருந்து படியுங்கள். தமிழே ஒரு மந்திரம் தான். தமிழ் ...தமிழ் என்று கூறினாலே நாம் உயர்வோம். ஏனெனில் சிறப்பு "ழ" கரம் ஒன்றே போதும்.இது வேறெந்த மொழிகளிலும் இல்லாத ஒன்று. ஓம் அகத்தீசாய நம என்று சொல்லும் போது நம் உள் மனதில், இதய கமலத்தில் இருந்து சொல்ல வேண்டும். இப்படி போற்றி வந்தால் நம் வினை அகலும் என்பது உறுதி. இனி அபிஷேக காட்சிகள் தருகின்றோம்.
அலங்கார முடிவில்..நீங்களே பாருங்கள்.
கற்பூர ஆரத்தி எடுத்துக் கொள்ளுங்கள். ஓராண்டு முழுமையில் அன்றைய பூசைக்கு ஒரு தட்டு நிறைய பூக்கள் வந்திருந்தது. இது நமக்கே ஆச்சர்யமாக இருந்தது. நாம் ஒரே ஒரு மாலை மட்டுமே சொல்லுவோம். இந்த முறை பூக்குவியலால் அகத்தியர் தரிசனம் கொடுத்தார்.
ஓராண்டு முழுமை பெற்ற பூசை என்பதால் அன்று முந்திரி,பாதாம் போன்ற பருப்புகள், இனிப்புகள் என்று படைத்து அனைவருக்கும் கொடுத்தோம்.
மீண்டும் மீண்டு வந்து அள்ளி அள்ளி பருகினோம். கொங்கணர் கூறியது போல் அகத்தியார் தாம் எக்கியத்தில் பிறந்த யோகி என்பது உறுதியாக தெரிந்தது. அடுத்து குருக்களை நாம் மரியாதை செய்தோம். அந்த காட்சிகள் நாம் எடுக்கவில்லை. அடுத்து பிரசாதம் பெற்றுக் கொண்டு, பூசைக்கு உபயம் செய்த தாம்பரத்தை சேர்ந்த.திரு. அனந்த கிருஷ்னன் தம்பதியரை கௌரவித்தோம்.
அடுத்து மூவர் தரிசனத்திற்கு செல்வோமா? தமிழின் ஞானப் பரம்பரை என்றால் அதில் அகத்தியருக்கு இடம் உண்டு. அது போல் தான் அன்றைய தினம் அமைந்தது. எப்போது அகத்தியர் பூசை செய்தாலும் அகத்தியர் அருகில் உள்ள முருகப் பெருமானை நாம் கண்டுகொள்ளவில்லை என்று நமக்கு உணர்த்தப்பட்டது. அன்று முருகனுக்கு பாலபிஷேகம் செய்தோம். இதோ இரண்டாம் தரிசனம்.
சில அன்பர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மீண்டும் ஒரு முறை தரிசனம் பெறுவோமா?
அடுத்து மூன்றாவதாக தரிசனம்..தமிழ் ஞானத்தில் இவரின் பங்கும் வாய்விட்டு சொல்ல முடியாது. வேறு யார்? அருட்பெருஞ்சோதி காட்டும் வள்ளலார் தான்.
சும்மா..எடுத்தோம். கவிழ்த்தோம் என்று சித்த மார்க்கத்திற்கு வந்து விட முடியாது. புல்லாகி, பூடாகி, புழுவாகி மரமாகி என்று மாணிக்கவாசகர் சொன்னது போல் பல பிறவி எடுத்து புண்ணியம் செய்தால் தான் அகத்தீசா ! அகத்தீசா !! என்று நாம் குருவின் நாமம் சொல்ல முடியும். அதுவும் இன்று மூவர் தரிசனம் கிடைத்துள்ளது. இது நமக்கே ஆச்சர்யம் தான். நாம் ஒன்றும் திட்டமிடுவதில்லை. ஆனால் நம் குழுவினருக்காக திட்டம் நம் குருமார்கள் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.
நம் குழுவினரால் சிரமேற்கொண்டு நடந்த சதய பூசை, உழவாரப் பணி, மோட்ச தீப வழிபாடு என இனிவரும் பதிவுகளில் தொடர்வோம்.
மெய் அன்பர்களே.
நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் ஐப்பசி மாதம் 15 ஆம் நாள் 01/11/2018 வியாழக்கிழமை அன்று ஆயில்ய நட்சத்திரமும், அமிர்த யோகமும் கூடிய சுப தினத்தில் காலை 8 மணி முதல் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அகத்திய மகரிஷி அவர்களுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து ஆராதனை செய்ய உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து சித்தர்களின் அருளாசி பெறும்படி வேண்டுகின்றோம்.
தொடர்புக்கு : 7904612352/9677267266
tut-temple.blogspot.in
- அடுத்த பதிவில் சந்திப்போம்.
மீள்பதிவாக:-
வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_3.html
அன்பின் ஈசனே போற்றி - ஆவணி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை - http://tut-temple.blogspot.com/2018/09/blog-post_3.html
அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (11/08/2018) - http://tut-temple.blogspot.com/2018/08/11082018.html
கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயில்,அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 15/07/2018 - http://tut-temple.blogspot.com/2018/07/15072018.html
கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 17/06/2018 - http://tut-temple.blogspot.com/2018/06/17062018.html
எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு 21/05/2018 - http://tut-temple.blogspot.com/2018/05/21052018.html
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_22.html
அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017- http://tut-temple.blogspot.in/2017/09/2017.html
அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி சதய பூஜை அழைப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_74.html
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!! - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_89.html
கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html
மனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_6.html
மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_16.html
ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே ! - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_76.html
அகத்தியர் ஆயில்ய ஆராதனை (21/05/2018) - http://tut-temple.blogspot.com/2018/05/21052018_19.html

No comments:
Post a Comment