Subscribe

BREAKING NEWS

30 August 2017

ஸ்ரீ பாலாம்பிகை பாடல்


சித்தர்கள் போற்றும் வாலை தெய்வத்தின் பாடல் இரண்டை தட்டச்சு செய்யும் பாக்கியம் கிடைத்தது.அதனை அவரின் அனுமதியோடு இங்கே பகிர்கின்றோம். மற்றொரு பதிவில்
பாலாம்பிகை அம்மனின் புகழ் பற்றி மேலும் அறிவோம். சித்தர் மார்க்கத்தில் நுழைந்து சித்தர் நெறியை பின்பற்றுபவர்கள் கண்டிப்பாக பைரவர்,ஆஞ்சநேயர், பாலாம்பிகை தெய்வங்களை வணங்கி இருப்பார்கள் என்று கேள்விப்பட்டோம்.நம்மைப் பொறுத்த வரையில் உண்மையே.இந்த பதிவை படிக்கும் அன்பர்கள் மேற்சொன்ன செய்தியை தங்களோடு இணைத்து உறுதிப்படுத்தி கொள்ளவும்.

சரி ! வாலைக் கும்மி அடிப்போமா?





ஸ்ரீ பாலாம்பிகை பாடல் -1

1.  தேடுகின்ற நெஞ்சினிற்குள் ஓடி வந்து நிற்பவள் (2)
     நாடி வந்த அன்பருக்கு நன்மை யாவும் செய்பவள் (2)
     ஓடி வந்து உட்களந்து ஜோதியாகி நின்றவள்
     ஆதி அந்தம் ஆகி நின்ற அன்னை பாலைதானவள்(2)

2.  மூன்று எழுத்து மந்திரத்தை மூலமாக கொண்டவள்
     மூன்று நாதரவர்க்கும் தானே தாயுமாகிருப்பவள்
     மூவுலகை காத்து நிற்கும் சக்தியாகி நிற்பவள்
     ஆதி அந்தம் ஆகி நின்ற அன்னை பாலைதானவள்(2)

3.  கலைமகளின் மந்திரத்தை துவக்கமாகக் கொண்டவள் (அம்மா .....)
     காமன் மந்திரம் தனை மத்தியிலே வைத்தவள் 
     சவுக்கியம் தரும் மந்திரத்தை இறுதியாகக் கொண்டவள் 
     ஆதி அந்தம் ஆகி நின்ற அன்னை பாலைதானவள்(2)

4.  அன்பு கொண்ட நெஞ்சம் தனை அறியணையாய் வைத்தவள் 
     ஆசை கொண்டு அழைத்த போது ஓடி வந்து நிற்பவள் 
     இச்சை கொண்டு வந்து சேர்ந்து இன்பமுறச் செய்தவள் 
     ஆதி அந்தம் ஆகி நின்ற அன்னை பாலைதானவள்(2)

5.  ஈசன் முதல் தேவர் போற்றும் கன்னி தெய்வமானவள் 
     உயிருமாகி உடலுமாகி உணர்வுமாகியிருப்பவள் 
     ஊக்கம் தந்து சோர்வு நீக்கி வேகம் தனை தருபவள் 
     ஆதி அந்தம் ஆகி நின்ற அன்னை பாலைதானவள்(2)

6.  என்று அவளைப் பாப்போம் என ஏக்கமுறச் செய்பவள் (அம்மா .....)
     ஏக்கம் தனை தீர்ப்பது போல் எதிரில் வந்து நிற்பவள் 
     ஐயம் தொலைத்த மனதினுள்ளே ஐக்கியமாகி நிற்பவள் 
    ஆதி அந்தம் ஆகி நின்ற அன்னை பாலைதானவள்(2)



7. ஒடுங்குகின்ற மனதினுள்ளே ஒளிமயமாய் வருபவள்
    ஓடும் மனதை தடுத்தி நிறுத்தி ஆனந்தத்தை தருபவள்
   ஒளடதமாய் பிறவிப்பிணியை தீர்த்து நம்மைக் காப்பவள்
     ஆதி அந்தம் ஆகி நின்ற அன்னை பாலைதானவள்(2)

8. கஞ்ச மலரில் இருந்து நம்மை காமமுறச் செய்பவள் 
    தஞ்சம் என்று வந்தவரை தாங்கி நிற்கும் தாயவள் 
    கொஞ்சும் சலங்கை சலசலக்க ஓடி வந்து நிற்பவள் 
   ஆதி அந்தம் ஆகி நின்ற அன்னை பாலைதானவள்(2)

9. கவலை கொண்டு கதறும் போது கடுகி வந்து காப்பவள்
    கருணை கண்கள் கொண்டு நம்மை விழி இமைப் போல் காப்பவள்
    நெக்குருகி அழைக்கும்போது சொக்கி வந்து நிற்பவள்
    ஆதி அந்தம் ஆகி நின்ற அன்னை பாலைதானவள்(2)

10. வினை அறுத்து பகை முடித்து விதியை மாற்றி வைப்பவள்  (அம்மா .....)
      சதி ஒழித்து செருக்கறுத்து மதியை தெளிவு செய்பவள் 
      குதித்து ஓடும் மனதை அடக்கி நிதியும் அருளை தருபவள் 
      ஆதி அந்தம் ஆகி நின்ற அன்னை பாலைதானவள்(2)

11.  குஞ்சலங்கள் ஆட ஆட குதித்து குதித்து வருபவள் 
       குறைகள் தீர்த்து குலத்தை காத்து குதூகலத்தை தருபவள் 
       குணத்தை செம்மை ஆக்கி வைக்கும் குற்றமில்லா குரு அவள்
      ஆதி அந்தம் ஆகி நின்ற அன்னை பாலைதானவள்(2)

12. கொஞ்சி கொஞ்சி அழைக்கையிலே குழந்தையாக வருபவள் 
      வஞ்சனைகள் செய்பவரை வந்து நின்றொழிப்பவள் 
      தலை வணங்கி தாள் பணிய வரமும் அருளும் தருபவள் 
      ஆதி அந்தம் ஆகி நின்ற அன்னை பாலைதானவள்(2)


     ஓம்  ஸ்ரீ பாலாதிரிபுர சுந்தரி திருவடி போற்றி ! திருவடி சரணம் !!



ஸ்ரீ பாலாம்பிகை பாடல் -2

1.  சின்ன சின்ன நடை நடந்து சிங்காரமாய் ஆடி வந்து 
     சின்ன சின்ன நடை நடந்து சிங்காரமாய் ஆடி வந்து 
     செல்ல மகளாக நின்றாய் அம்பிகே,உன் பேர் 
     சொல்ல சொல்ல இனிக்குதடி அம்பிகே (சின்ன சின்ன )
     அம்பிகே ஜகதம்பிகே அம்பிகே ஸ்ரீ பாலாம்பிகே! (2)


2.  ஜல் ஜல் சலங்கை ஒலிக்க சடுதியில் நீ ஓடி வந்து 
     சங்கடங்கள் தீர்த்து வைப்பாய் அம்பிகே
     எமக்கு சந்தோசம் சேர்த்திடுவாய் அம்பிகே 
     அம்பிகே ஜகதம்பிகே அம்பிகே ஸ்ரீ பாலாம்பிகே! (2)

3.  கரு முதல் காசி வரை,துணை வந்தாயே 
     கற்பகம் கருவே காமதேனுவே ,நீ (சின்ன சின்ன )
     அம்பிகே ஜகதம்பிகே அம்பிகே ஸ்ரீ பாலாம்பிகே! (2)

4.  கங்கை நதி கரையோரம் கண்ணே உன் கை பிடித்து (2)
     காலாற நடக்க வேண்டும் அம்பிகே,கனவு 
     மெய்ப்பட வேண்டும்,அம்பிகே 
     அம்பிகே ஜகதம்பிகே அம்பிகே ஸ்ரீ பாலாம்பிகே! (2)

5. மனம் வெம்பி மதிமயங்கி மன்றாடும் மனித 
    வாழ்வில்,மகத்துவம் சேர்த்திடுவாய் அம்பிகே 
    மனசை,ஒருமுகப்படுத்தி வைப்பாய் அம்பிகே 
    அம்பிகே ஜகதம்பிகே அம்பிகே ஸ்ரீ பாலாம்பிகே! (2)




6. அன்பு கொண்டு அழைத்தவரை அருகிருந்து காக்க வேண்டி (2)
    அன்னை என வந்து நிற்பாய் அம்பிகே 
    அளவிலா,ஆனந்தம் தந்திடுவாய் அம்பிகே 
    அம்பிகே ஜகதம்பிகே அம்பிகே ஸ்ரீ பாலாம்பிகே! (2)


7. கொஞ்சி குலவ வேண்டி கெஞ்சி உனை தொடர்ந்தழைத்தால் (2)
    குழந்தையாய் வந்து நிற்பாய் அம்பிகே 
    எம்மோடு குதித்து விளையாடிடுவாய் அம்பிகே 
    அம்பிகே ஜகதம்பிகே அம்பிகே ஸ்ரீ பாலாம்பிகே! (2)

8. கல்வியும் கலைகளும் கசப்பில்லா வாழ்வதுவும் (2)
    கனிந்தெமக்கு அருள்வாய் அம்பிகே,உனை கண்ணார 
    காண வைப்பாள் அம்பிகே 
    அம்பிகே ஜகதம்பிகே அம்பிகே ஸ்ரீ பாலாம்பிகே! (2)


9. இகபரம் இரண்டிலும் இன்பமே பெற வேண்டி (2)
    இனிதாய் உனை வேண்டினோம் அம்பிகே 
    எமக்கு இனிது தந்தருள்வாய் அம்பிகே 
    அம்பிகே ஜகதம்பிகே அம்பிகே ஸ்ரீ பாலாம்பிகே! (2)


10. வாலையே உனை புகழ்ந்து வளமிகு செந்தமிழில் (2)
      வரவேற்று பாடி வந்தோம் அம்பிகே,எமக்கு 
      வரம் பல தர வேண்டும் அம்பிகே 
      அம்பிகே ஜகதம்பிகே அம்பிகே ஸ்ரீ பாலாம்பிகே! (2)




                             ஓம்  ஸ்ரீ பாலாம்பிகை  திருவடி போற்றி ! திருவடி சரணம் !!

வாய்ப்புக் கொடுத்த திரு.செல்வம் ஐயாவிற்கு TUT குழு சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


முந்தைய பதிவுகளுக்கு :-

இம்மாத மலை தரிசனம் - ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_15.html


இப்பிறப்பில் உன்னைக் காண்கின்றோம் - வெள்ளியங்கிரி ஈசா ! - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_51.html

வெள்ளியங்கிரி ஈசன் தரிசனம் கிடைக்குமா? - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_3.html

வெள்ளியங்கிரி ஈசனே! நீயே துணை - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_28.html

இன்பத்தை அள்ளித்தரும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_15.html

பாவம் தீர்க்கும் வெள்ளியங்கிரி - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_19.html

மனதை வெளுக்கும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_13.html


மனக் கஷ்டம் நீங்க..மயிலாண்டவர் திருக்கோவிலுக்கு வாங்க ! - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_24.html

மருதேரியில் ஸ்ரீ பதஞ்சலியின் ஆசிகள் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_15.html

உன்னுள் உத்தமனைக் காணும் வழி சாகாக் கல்வி - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_4.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html


29 August 2017

மண(ன)ப் பொருத்தம் - தொடர்பதிவு (1)

இல்லாள் அகத்­தி­ருக்க இல்­லா­தது ஒன்­று­மில்லை!

மண(ன)ப் பொருத்தம் என்றொரு தொடர்பதிவினை இந்த விநாயகர் சதுர்த்தி அன்று ஆரம்பித்தோம்.அதன் தொடர் பதிவாய் இந்த பதிவைத் தர குருவருள் வழி செய்துள்ளது.இந்த பதிவினைப் படிக்கும் நண்பர்கள் அனைவரும், தம் வாழ்க்கைத் துணையோடு மனவளக்கலை மன்றம் / அறிவுத்திருக்கோவில் சென்று, இந்த மனைவி நல வேட்பு நாள் நிகழ்வில் பங்கு பெறுங்கள். மேலும் வாழ்க்கைத் துணையைப் பற்றிய தங்கள் பார்வையை மாற்றுங்கள்.உங்களுடைய அகத்தில் வாழ்க்கைத்துணையைப் போற்றுங்கள்.அதுவே இந்த வாழ்வின் ஆதாரம்.

ஓவ்­வொரு ஆணும் தனது வாழ்க்­கைத்­து­ணையை நன்­றி­யோடு வாழ்த்த ‘ மனைவி நல வேட்பு நாள்’ என்ற கொண்­டாட்­டத்தை அறி­முகம் செய்­தவர் அருட் தந்தை வேதாத்­திரி மகரிஷி.உல­கிலே தந்­தையர் தினம், அன்­னையர் தினம், ஆசி­ரியர் தினம், குழந்­தைகள் தினம், காத­லர்கள் தினம், நண்­பர்கள் தினம்,மகளிர் தினம், முதியோர் தினம், ஊன­முற்றோர் தினம் என தனித்­த­னியே கொண்­டாடி மகிழ்­கின்­றனர்.சுமங்­கலி பூஜையை கணவன் நல­னுக்­காக மனை­வி­யரும் வேண்டுகிறார்கள் .குடும்­பத்­துக்­காக தன்னையே அர்ப்­ப­ணிக்கும் மனை­விக்கு நன்றி சொல்ல வேண்­டாமா?



நன்றி சொல்ல வேண்டும். அந்த நன்றி நவிழலின் தான் வாழ்வின் புதிய கண்ணோட்டத்தை நீங்கள் உணர முடியும்.இதற்காகவே ஒவ்­வொரு ஆகஸ்ட் 30 ஆம் தேதி  ‘ மனைவி நல வேட்பு நாள்’ உல­கெங்­கு­முள்ள மன­வ­­ளக்­கலை அன்­பர்­களால் உற்­சா­க­மாகக் கொண்­டா­டப்­ப­டு­கி­றது.“கணவன் – மனைவி உறவு” பற்­றியும், சிறந்த தம்­பதி எப்­படி இருக்க வேண்­டு­மென்றும் அருட்தந்தை அழ­காக விவரித்­துள்ளார்.

மனைவி அமை­வ­தெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று கவிஞன் அழ­காக வர்­ணித்­துள்ளான். அந்த வரத்தை நாம் எப்படி பயன்படுத்துகின்றோம் என்பதில் தான் வாழ்வின் இன்பம் காத்திருக்கின்றது.ஆனால் நாம் அந்த வரத்தை சாபமாக்கி..சொல்ல முடியா துயரில் வாழ்ந்து வருகின்றோம்.

இரு மனங்கள் இணை­கிற வைபோ­கமே திரு­மணம். இது மனித வாழ்வில் புனிதம் நிறைந்த உறவின் திற­வுகோல். ஒரு­வ­ருக்­கொ­ருவர் ஆத­ர­வா­கவும், ஆதா­ர­மா­கவும் அமையும் இந்த உற­வில்தான் நிறைவு வரும். ஞானம் வரும்.ஒரு ஆணின் வாழ்வு பெண்ணின் வரு­கை­யாலும், ஒரு பெண்ணின் வாழ்வு ஆணின் வரு­கை­யாலும் இனிமை காண வேண்டும்.: இன்னல் காணக் கூடாது. கண­வனும், மனை­வியும்  ஒரு­வரை ஒருவர் மன­தார விரும்ப வேண்டும்.


முழு­மை­யாக நம்ப வேண்டும்..இரு­வரின் ரச­னையும் ஒரே மாதி­ரி­யாக இருக்க வேண்­டிய அவசியமில்லை .ஒருவர் ரச­னையில் ஒருவர் குறுக்­கி­டாமல் இருக்கும்  பெருந்­தன்­மையே போதும்.இங்கே தான் பிரச்சினை ஆரம்பிக்கின்றது.எனக்குப் பிடித்தது தான் உனக்கு பிடிக்க வேண்டும் என்ற ஒரு மாய மன  நிலையை அவர்கள் மீது திணிக்கின்றோம்.திணிப்பதை நிறுத்திவிட்டு ,அவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.

இந்த உலகில் பெற்ற தாய் தந்­தைக்கு அடுத்­த­படி ஆறுதல் தரு­கின்ற, அக்­க­றைப்­ப­டு­கின்ற உறவு கண­வ­னுக்கு மனை­வியும்,மனை­விக்கு கண­வனும் தான்.அதனால் தான் தாய்க்குப் பின் தாரம் என்று சொல்லி வைத்தார்கள்.சும்மாவா சொன்னாங்க நம் பெரியவங்க.ஆண்,பெண் உற­வு­களில் நிலவும் ஒழுக்­கத்தின் மூலமே உயர்ந்த நாக­ரிகம் உண்­டாகும். இந்த ஒழுக்­கத்தை பாது­காக்கும் கவ­சமே திரு­ம­ண­மாகும். ஆனால் இன்று நடக்கும் திருமணங்கள் பொருளை வைத்து அல்லவா நடக்கின்றது.இதனை நாம் சரி செய்ய சீர் தூக்கி பார்க்க வேண்டும். நடந்த திருமணங்களில் இணைந்த மனங்கள் தான் நாம் சரி செய்ய வேண்டியது.

ஓவ்­வொரு கணவன் – மனைவி உறவை உயி­ரிலும் மேலா­ன­தாக மதித்துப் போற்ற வேண்டும்.
உடல், பொருள், ஆற்றல் என்ற மூன்­றையும் ஒரு­வ­ருக்­கொ­ருவர் மன­தார அர்ப்­ப­ணித்து, இன்ப, துன்­பங்­களில் பங்கு கொண்டும் வாழும் பெருமை கணவன், மனைவி உறவில் தான் அதி­க­மாக அடங்­கி­யுள்­ளது.தமது பண்­பாட்­டின்­படி பார்த்தால்,பெண்கள் இயற்­கை­யி­லேயே தியா­கிகள் என்று சொல்­லலாம். கணவன் வீட்­டுக்கு வரும்­போதே தாய் தந்தை, பிறந்த வீட்டுச் சூழ்­நிலை எல்­லா­வற்­றையும் துறந்­து­விட்­டுத்தான் வரு­கி­றார்கள். திரு­மண வாழ்­க­கையைத் தொடங்­கு­வ­தற்கு முன்பே, துறந்து வரக்­கூ­டிய ஒரு இயல்பு அவர்­க­ளுக்கு வந்­து­வி­டு­கி­றது.இப்­படி எல்­லா­வற்­றையும் துறந்து விட்டு இங்கே அன்பு நாடி வந்த பெண்­ணுக்கு ஆத­ரவு கொடுக்க வேண்­டி­யது அவ­சியம். இந்த உண்மையை ஒவ்­வொரு கண­வனும் உணர்ந்­து­கொள்ள வேண்டும்.






ஒரு மனைவி என்ற மதிப்பு மட்­டு­மல்ல.. பெண்­மையும், தாய்­மையும் ததும்பும் எல்­லோ­ருக்கும் தர வேண்­டிய அதே மதிப்பு நம் வீட்­டுக்கு வாழ வந்த பெண்­ணுக்கும்  உண்டு என்­பதை அறிந்து கொள்ள வேண்டும். கணவன்- – மனைவி உறவில் இந்தப் பண்­பாடும் தியா­கமும் இருந்தால் போதும் அதை­விடப் பெரிய இன்பம் இந்த உல­கத்­தில் வேறு இருக்க முடி­யாது.ஒரு­வ­ருக்­கொ­ருவர் சச்­ச­ரவு இல்­லாத குடும்­பத்­தில்தான் குழந்­தை நன்­றாக இருக்கும். பிரச்­சினை உள்ள குடும்­பங்­களில் அடக்கு முறைக்கு குழந்­தை­களின் சுதந்திரம் பறி­போகும்.

இந்தப் போராட்­டத்தால் குழந்­தையின் உடல்­ந­லமும்,மன­ந­லமும் கெடும். ஒரு­வ­ருக்­கொ­ருவர் விட்டுக் கொடுத்தும் உதவி செய்தும் வாழ்­வ­துதான் திருமண பந்தம் என்­பதைப்  புரிந்து கொண்ட வீடு­களில் இந்தப் போராட்டம் இல்லை.விட்­டுக்­கொ­டுப்­ப­தற்குப் பதி­லாக, ஒவ்­வொ­ரு­வரும் ஒரு பிடியைப் பிடித்துக் கொண்டு “என் கருத்­துதான் உயர்ந்­தது” என பிடி­வாதம் காட்­டினால் பிணக்­குதான் வரும்.

கண­வனும்,மனை­வியும் நட்பின் மதிப்பை உணர்ந்து அதைக் காப்­பாற்ற வேண்­டிய அவ­சி­யத்தை நினைவில் வைத்துக் கொண்டால், மற்ற விஷ­யங்­களில் எந்தக் குறையும் இருக்­காது.
ஒரு குடும்­பத்தில் கணவன், மனைவி இரு­வரின் உற­வி­னர்­களும்; விருந்­தி­னர்­க­ளாக வர­வாய்ப்­புகள் உண்டு. அவர்­களை ஒத்த மதிப்­போடு இரு­வரும் உப­ச­ரிப்­பது கணவன் – மனைவி இடையே அன்பு வளரச் செய்யும். எளிய உண­வே­யா­யினும் விருந்­தி­னரை உப­ச­ரிப்­பதில் இன்­முகம் காட்­டுங்கள்.

‘இறை­வனே மனைவி வடி­வத்தில் வந்து எனக்குத் துணை­யாக இருக்­கிறான்.’ என கணவன் நினைக்க வேண்டும். மனை­வியும் கண­வனை இப்­படி கடவுளின் வடி­வ­மா­கவே தனக்கு உற­வாகி வந்­த­தாக நினைக்க வேண்டும். இப்­படி ஒரு­வ­ரிடம் இன்­னொ­ருவர் தெய்­வ­நி­லையைக் கண்­டு­விட்டால் போதும்.எத்­தனை துன்­பங்கள் வந்­தாலும் அவற்றை சமா­ளிக்கும் வலிமை கிடைக்கும். இல்­லற வாழ்க்­கையில் யாரும் அனு­ப­வித்து இருக்காத மலர்ச்சி கிடைக்கும்.



மனித இனம் வியப்­பா­னது. ஒரு பொருளை விரும்­பினால், அதை அடை­வ­தற்கு முன்பு அது பற்றி பல நன்­மை­க­ளையும், மேன்­மை­க­ளையும் கற்­பனை செய்­து­கொண்டு இன்பம் அடையும். ஆனால், அதை அடைந்­த­பி­றகு, எப்­போதும் குறை­களைக் கண்­டு­பி­டித்து சோர்ந்து போகும். இது உண்மை தானே.நீங்கள் பல விஷயங்களில் இதை உணர்ந்திருப்போம்.வாழ்க்கைத் துணை விஷயத்தில் சொல்லவே வேண்டாம்.கணவன் – மனைவி உறவில் முக்­கி­ய­மாக தவிர்க்க வேண்­டி­யது இதைத்தான். உங்கள் துணை­யிடம் இருக்கும் நல்ல விஷ­யங்­க­ளையும், உயர்ந்த குணங்­க­ளையும் பாராட்­டுங்கள். குறை­களை மனதை புண்­ப­டுத்­தாமல் எடுத்துச் சொல்லி நிறைவு செய்ய முயற்­சி­யுங்கள். வாழ்வு வளம் பெறும், குடும்பம் தழைத்­தோங்கும்.

உல­கத்­தி­லேயே நட்பு மிக மிகச் சிறந்­தது.: பய­னு­டை­யது. அதிலும் கணவன் – மனைவி நட்பு பற்றி சாதா­ர­ண­மாகச் சொல்­லி­விட முடி­யாது. புனி­த­மான உறவில் தோன்­றிய உன்­ன­த­மான நட்பு.
இரு­வ­ரு­டைய வாழ்க்­கையும் மேன்மை பெறவும், குடும்பம் வளர்ச்சி பெறவும், இந்த நட்பே பிர­தா­ன­மாக தேவைப்­ப­டு­கி­றது. இப்­ப­டிப்­பட்ட குடும்­பத்தில் வளரும் குழந்­தைகள் எத்­த­கைய நற்­பண்­பு­க­ளுடன் திகழும் என்­பதை நினைத்துப் பாருங்கள்!

கண­வனை மனை­வியும், மனை­வியை கண­வனும் பாராட்ட வேண்­டி­யது மிக மிக அவ­சியம். .சிறப்­பாக எதை­யா­வது செய்­தாலும், உயர்­வான பண்­பு­களை வெளிப்­ப­டுத்­தி­னாலும் மனம்­தி­றந்து பாராட்­டுங்கள். இது அன்­பையும், நட்­பையும் இறுக்­க­மாக்கும்.ஆனால் நம்மில் எத்தனை பேர் இப்படி பாராட்டுகின்றோம் என்று தெரியவில்லை.உதாரணத்திற்கு உணவு பரிமாறும் நிகழ்வே போதும். அன்றைய காலத்தில்.ஆம் அது அப்படி மாறி விட்டது. உணவை சமைத்து,பரிமாறி, கணவன் உண்டு முடிக்கும் வரை,கூடவே இருப்பார்கள்.ஆனால் இன்று அப்படி இல்லை.சரி விசயத்திற்கு வருவோம்.நீங்களே உணவை தட்டில் எடுத்து போட்டு சாப்பிட்டாலும்,சாப்பிட்டு முடித்த பின்பு, மனைவியிடம் சென்று,இன்றைய உணவு - அருமையாக இருந்தது.சாம்பார் சூப்பர் என்று சொல்லிப் பாருங்கள். அடுத்த நாள் முதல் சமையலில் இன்னும் சுவை மிகும்.ஆரோக்கியம் அதிகரிக்கும்.


இதற்­காக எப்­போதும் எல்­லா­வற்­றையும் பாராட்­டிக்­கொண்டு இருக்க வேண்டும். என்­ப­தில்லை. அப்­ப­டிச்­செய்து கொண்­டி­ருந்தால் அது வெறும் முகத்­துதி ஆகி மதிப்பு இழந்து விடும்.    உள்­ளதைப் பாராட்­டி­னாலே போதும். சுருக்கமாக ருசி­யாக மனைவி சமைத்துப் பரி­மா­றினால், “நன்­றாக இருக்­கி­றது” என்று சொல்­லலாம். இல்­லையா? பல­ருக்கு இதைச் சொல்ல வராது. .மாற்றிக் கொள்ள வேண்டும். காலை முதல் மாலை வரை நல்ல விஷ­யங்­களைப் பாராட்டிக் கொண்டே இருங்கள். அதுவே பண்­பாட்டின் உயர்வு.

சில குடும்­பங்­களில் கண­வனோ, மனை­வியோ பலரால் பாராட்­டப்­படும் பெரு­மைக்­கு­ரிய சாத­னை­யா­ள­ராக இருக்­கலாம். இப்­படி ஊரே தங்­களைப் பாராட்­டும்­போது, தங்கள் வாழ்க்கைத் துணையும் பாராட்­டப்ப­ட வேண்டும் என்ற எதிர்­பார்ப்பு இருக்கும். ஆனால், அப்­படி நினைப்­ப­வர்கள் ஒரு உண்­மையை உணர வேண்டும்.தன் கண­வரை   ஊரே பாராட்­டும்­போது அதில் சந்­தோ­ஷமும், பூரிப்பும் அடைந்­தி­ருப்பார் மனைவி. கண­வனும், மனைவியும் இரண்டு உடல்­க­ளாகப் பிரிந்தி­ருக்கும் ஒற்றை உயிர்தான் என்ற நம்­பிக்கை அவ­ருக்கு இருக்கும். கண­வ­னுக்குக் கிடைக்கும் பாராட்டு தனக்கும் சொந்­த­மா­னதே என்ற பூரிப்பில் திளைத்­தி­ருப்பார்.

அந்த நினைப்பில் இருக்­கும்­போது அவ­ருக்கு கண­வனைப் பாராட்டத் தோன்­றாது. எனவே இதைக் குறை­யா­கவும் எடுத்­துக்­கொள்ளக் கூடாது. அலட்­சியம் செய்­வ­தா­கவும் நினைக்கக் கூடாது.
இதே­போல இன்­னொரு விஷ­யத்­தையும் புரிந்து கொள்ள வேண்டும். தாங்கள் சொல்லும் கருத்து சரி­யா­ன­தாக இருந்­தாலும், அது எத்­தனை உயர்­வா­ன­தாக இருந்­தாலும், உங்கள் வாழ்­க்­கைத்­துணை  ஒப்­புக்­கொள்ளா விட்டால் அதை ஒதுக்­கி­வைத்து விடுங்கள். அவர் ஏற்­றுக்­கொள்­ளும்­வரை காத்­தி­ருங்கள். குடும்ப அமை­தியை இழந்­து­விட்டுப் பெறும் எந்த விஷ­யத்­தாலும் பயன் இல்லை.

பெண்­மையைப் போற்றி பணிந்து புகழ்ந்து வாழ்ந்த மனிதன் எப்­போதும் கெட்­ட­தில்லை. பெண்­ணி­னத்தை மதிக்­காத தனி மனி­தனோ,சமு­தா­யமோ உயர்­வ­டைந்­த­தாக சரித்­திரம் இல்லை. எந்தச் சமு­தாயம் பெண்­மையை போற்றி அவர்­க­ளுக்கு மதிப்­ப­ளித்து வாழ்­கி­றதோ அந்த சமு­தா­ய­ம்தான் அறி­விலும்,ஆன்­மீ­கத்­திலும் சிறப்­புற்று விளங்கும்.இதோ பெண்கள் நுழையாத ஆன்மிகத்தில், அவர்களை மதித்து அவர்களுக்காக ஒரு நாளை உருவாக்கி கொடுத்த எம் குருபிரான் யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்களையும், அன்னை லோகாம்பாள் அவர்களையும் மதித்து போற்றி மகிழ்கின்றோம்.

இல்லற நோன்பு
அன்பு ஊற்றாம் இல்லறத்தில் ஆண்பெண் இருபேரும்
அவரவர்கள் துணைவர்களை மனம்வருந்தச் செய்தால்
துன்ப உணர்வலை எழும்பி தாக்கியோரைத் தாக்கும்
தொல்லைதரும் சாபமாகும் நோய்கள் வரும்தேர்வீர்
இன்ப ஊற்று இருவரிடைப் பெருக வாழ்த்தலோடு
இன்முகமும் பொறுமை தியாகம் தகைமை காட்டவேண்டும்
தன்புகழ் விளங்கும் நல்லதரமுள்ள மக்கள்
தழைப்பார்கள் இல்வாழ்வை ஆய்ந்து கண்டஉண்மை 

- வேதாத்திரி மகரிஷி



மனைவி நல வேட்பு நாள்(AUG 30) உலகில் இதுவரை தந்தை நாள் (Father's day), தாயார் நாள் (Mother's day) தனித்தனியே கொண்டாடுகிறார்கள். சுமங்கலி பூஜை என்றளவிலே கணவன் நல வேட்பு நாளும் கொண்டாடுகின்றார்கள். மனைவி நல வேட்பு நாள் எந்த ஊரிலேயும் இல்லை. இது ஒரு நன்றி கெட்டதனம் இல்லையா ? இது என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. ஆனாலும், ஒருவர் தலையிட்டுச் செய்தால் மட்டும் போதாது. இது நாடு முழுவதும் ஆண் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். பெண்மையின் பெருமையை உணர வேண்டும் என்ற மனதோடு ஆராய்ச்சி செய்த போது இந்த ஆண்டு என் மனைவியினுடைய (அருள் அன்னை லோகாம்பாள்) பிறந்த நாள் 30.8.ல் வந்தது. அன்பர்களிடம் சொன்னேன். என் மனைவியின் பிறந்த நாளையே வைத்துத் தொடங்கி மனைவி நல வேட்பு நாள் கொண்டாடலாம். இதையே வைத்துக் கொண்டு, இது முதல் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30 ஆவது நாளை மனைவி நல வேட்பு நாளாகக் கொண்டாடுவது நம் சங்கத்தின் வழக்கமாக வரட்டும். பிறகு உலக நாடுகளிலும் பரவட்டும் என்றேன். ஆண்களும், பெண்களும் உற்சாகமாக அதை ஏற்றுக் கொண்டு பல இடங்களில் கொண்டாடுகிறார்கள். நீங்களும் உங்கள் வாழ்க்கைத் துணையை நன்றியோடு வாழ்த்தி இக்கவியைச் சொல்லி மகிழுங்கள்.




பெற்றோரைப் பிறந்தகத்தைப் பிறந்த ஊரை விட்டுப்
பிரிந்து வந்து, பெருநோக்கில் கடமையறம் ஆற்றப்,
பற்றற்ற துறவியெனக் குடும்பத்தொண்டேற்றுப்
பண்பாட்டின் அடிப்படையில் எனைப் பதியாய்க் கொண்டுஎன்
நற்றவத்தால் என் வாழ்க்கைத் துணையாகிப் பெண்மை
நல நோக்கில் அன்போடு கருணை இவை கொண்டு
மற்றவர்க்கும் தொண்டாற்றும் மாண்புமிக்க எந்தன்
மனைவியை நான் மதிக்கின்றேன் வாழ்த்தி மகிழ்கின்றேன்.


-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

குடும்ப வாழ்க்கைக்கு செயல்வினை தான் காரணம். காண்பதெல்லாம் கண்வழியாலே, அறிவு தேடல் என்பது இல்லை. உடலில் அதிகம் எடையுடன் திகழ்வது உயிர்தான். காந்தம் என்பது உடல் முழுவதும் உள்ளது. உயிருக்கு போராடுபவர்கள் உயிராற்றல் நிறைந்த சொந்த பந்தங்களை பார்க்கும் போது, உயிராற்றல் பெற முடியும். தம்பதியர் நேருக்கு நேர் அமர்ந்து, தங்கள் கைகளை சேர்த்து வைத்துக் கொண்டால், காந்த பரிமாற்றம் நடக்கும். திருமணம் நடந்த நாள் முதல் கணவன் மனைவிக்காகவும், மனைவி கணவனுக்காவும் செய்தவற்றை நினைத்துப் பார்க்க வேண்டும்.இந்த அற்புத வேள்வியின் சூட்சுமம் இது தான்.எனவே மனைவி நல வேட்பு நாளில் பங்கு பெறுங்கள்.


நாளை நடைபெற உள்ள சில நிகழ்வின் அழைப்பிதழ்கள் கீழே 



 சென்னை சைதாப்பேட்டை மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் சார்பில்; அன்னை லோகாம்பாள் அவர்களின் 103-வது பிறந்த நாள் விழா - "மனைவி நல வேட்பு நாள்" (WIFE APPRECIATION DAY) நம் மன்றத்தில் கொண்டாடப்படுகிறது.





நாள்: 30-ஆகஸ்ட்-2017 (புதன்கிழமை மாலை 6 மணி முதல்)
Address: 45/17 & 18, Jones Road, Saidapet, Chennai, Tamil Nadu 600015, India (Vaazhga Valamudan Building Complex)
தொடர்புக்கு: +91-44-23810055, 9080888883









நிகழ்த்துனர்: சென்னை நகர மண்டல SKY.பேரா.திரு.S.பொன்னுசாமி மற்றும் SKY.பேரா.திருமதி.லோகநாயகி பொன்னுசாமி (பழனி)
சிறப்புத் தம்பதிகள்: திரு.வெங்கடேசன் மற்றும் SKY.பேரா.திருமதி.முத்துலட்சுமி வெங்கடேசன் (மதுரை)

தம்பதிகள் அனைவரும் கலந்து கொள்ளும்படி பணிவன்புடன் அழைக்கிறோம்.இது நம் குடும்ப விழா.அனுமதி இலவசம்.


அன்னை லோகாம்பாள் அவர்களின் தியாகமே நமக்கு அருட்தந்தை கிடைத்தார். அருட்தந்தை அவர்கள் பெண்ணினத்தைப் போற்றும் வகையில் அம்மையார் பிறந்த தினத்தை மனைவியர் தினமாக சிறப்பித்துள்ளதை நாமறிவோம்.

கணவன் மனைவி இருவரும் உயிர்கலப்பு பெற்று... காந்த பரிமாற்றம் நிகழ்வுற்று... ஒருவரை ஒருவர் அன்போடு நோக்கி... நினைந்து... ஒருவருக்கொருவர் ஒத்தும் உதவியும் இன்புற்று வாழ அரியதோர் வாய்ப்பு 30-Aug-2017 திருமணம் ஆகி 50 வருடம் பிணக்கோடு வாழ்ந்த தம்பதிகள் கூட... இதுநாள் வரை அனுபவித்திராத மனநிறைவை பெற அழைக்கிறோம்...
இரவு விருந்துடன் விழா நிறைவுப்பெறுகிறது.
அனைவரும் வருக! For more details, please visit us https://goo.gl/maps/NeRY44fqFh32 or http://saidaijrmmtrust.org


மனைவி நல வேட்பு நாள் விழா - அம்பத்தூர் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை











மனை­வியர் தின­மான (30 ஆகஸ்ட் ) பெற்­றோரை, பிறந்த ஊரை,.உற­வு­களை பிரிந்து, உங்­க­ளுக்கு தொண்­டாற்றி, இனி­மை­யாக, இன்­ப­மாக உங்­க­ளுக்­காக தன்­னையே முழு­மை­யாக அர்ப்­ப­ணித்து வாழும் அன்­புக்கும், பாசத்­துக்கும் உரிய  மனை­வியை ஒவ்­வொரு கண­வரும் மதித்து, வாழ்த்தி உங்களின் மாசற்ற அன்­பினால் அவர்­களை நனைத்­தி­டுங்கள்.இல்லற நோன்பை,நல்லறமாக்க மனைவி நல வேட்பு நாளில் பங்கு பெறுவோம்.

முந்தைய பதிவுகளுக்கு :





தாலாட்டு வேண்டுமா? தேசிய கீதம் வேண்டுமா? - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_51.html




28 August 2017

சனீஸ்வரர் தோஷம் நீங்க...


மகாபாரதத்தில் இடம்பெற்றிருக்கும் நள சரிதம், நள – தமயந்தியின் வாழ்க்கையை விவரிக்கிறது. தருமருக்கு முன்னரே சூதாட்டத்தில் அனைத்து செல்வங்களையும் இழந்து, படாத கஷ்டங்களை எல்லாம் அனுபவித்தவர் நள மகாராஜா.பேரழகும் பெருஞ்செல்வமும் பெற்றுத் திகழ்ந்ததைப்போலவே, அளவற்ற துன்பங்களையும் எதிர்கொண்டு வாழ்ந்தவர். நிடத நாட்டின் மன்னரான நளன், விதர்ப்ப தேசத்து இளவரசியான தமயந்தியை மணந்த கதையும், பின்னர் பிரிந்து திரிந்த சோக வாழ்க்கையும் நமக்குத் தெரியும்.
நளனின் சரிதத்தைப் படிப்பவர்கள், சனீஸ்வரரின் பிடியில் இருந்து விடுபடுவர் என்றும் சொல்வது உண்டு. *ஆனால், நளனின் பூர்வ ஜன்மக் கதையைக் கேட்பவர்களைத்தான் சனீஸ்வரர் பிடிக்க மாட்டார் என்று சொல்லப்படுகிறது. நளனின் அந்த 
பூர்வஜன்மக் கதை.


"அதிதி தேவோ பவ”அயோத்தியை அடுத்த காட்டுப்பகுதியில் வாழ்ந்தவர்கள் ஆகுகன் – ஆகுகி தம்பதியினர். வேடுவ இனத்தைச் சேர்ந்தபோதிலும் இவர்கள் உயிர்க்கொலை செய்யாத உத்தமர்கள்.
சிவனின் மீது மாறாத அன்புகொண்ட ஆகுகன், தினமும் ஒருவேளை மட்டுமே காட்டுக்குள் சென்று உணவு தேடுவான். அதுவும் தானாக விழுந்த காய், கனிகளை மட்டுமே எடுத்து வருவான். அவற்றை இறைவனுக்கு நைவேத்தியம் செய்துவிட்டு, மனைவியோடு பங்கிட்டு உண்பான்.
அப்படி ஒருநாள் உணவு தேடிச் சென்றபோது, மாலை வரை அலைந்து திரிந்தும் ஒரே ஒரு மாம்பழம் மட்டுமே அவனுக்கு கிடைத்தது. அதைக் கொண்டு வந்து, பசியோடு இருந்த மனைவியிடம் கொடுத்து சாப்பிடச் சொன்னான் ஆகுகன்.
மனைவியோ `குளித்து முடித்து, சிவபூஜை செய்த பின்னர் இருவருமே சாப்பிடுவோம்’ என்றாள். பூஜை முடித்து உண்ணப்போகும் நேரத்தில் வந்து சேர்ந்தார் ஒரு சிவனடியார்.
விருந்தினர் என்போர் புண்ணியத்தை தரும் இறைவனுக்குச் சமம் என்று கருதிய தம்பதியினர், அவருக்கு அந்தப் பழத்தை கொடுத்து உண்ணச் செய்தனர்.சின்னஞ்சிறிய அந்தக் குடிலில் மூவர் தங்க வசதி இல்லாததால், தனது மனைவியை அந்த அடியாருக்குத் துணையாக வைத்துவிட்டு, வெளியே காவலுக்கு நின்றான் ஆகுகன். கொடிய மிருகங்கள் உலவும் அந்தக் காட்டில் சிவனடியாருக்கு ஒரு துன்பமும் நேரக் கூடாதே என்று எண்ணி இரவு முழுக்கக் காவல் இருந்தான்.உள்ளே இருந்த ஆகுகி இரவு முழுக்க அடியாருக்கு கால் பிடித்தபடி பாதசேவை செய்தாள். அவர் உறங்கியதும் கணவனைப் பார்க்க எழுந்தாள். அப்போது அடியார் உறக்கத்தில் முனகவும், தம்மால் அவர் தூக்கம் கலையக் கூடாதே என்று சேவையைத் தொடர்ந்தாள்.வீடு தேடி வந்த விருந்தினரை இவர்கள் கவனித்தவிதத்தைக் கண்டு சிவபெருமான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.


அலகிலா விளையாட்டுக்குச் சொந்தக்காரரான ஈசன், வேடுவ தம்பதியினரின் பெருமையை உலகறியச் செய்ய எண்ணினார். காவலுக்கு இருந்த வேடுவனின் மேல் ஒரு சிங்கத்தை ஏவினார்.கோரப் பசியோடு விரைந்து வந்த சிங்கத்திடம், தாமே வலியச் சென்று வணங்கினான் ஆகுகன். தன்னை நாடி வந்திருக்கும் அதிதியின் தூக்கம் கலையாமல் இருக்க, சத்தமின்றி தன்னை வேறு ஓர் இடத்தில் வைத்து உண்ணுமாறு வேண்டினான்.
ஒரு மனிதன் தன்னிடம் பேசுவதையும், தன்னை உண்ணுமாறு வேண்டுவதையும் எண்ணி வியந்தது சிங்கம்.
அவனைப் பாராட்டி, ஆகுகனை விட்டுவிடுவதாகவும், அதற்கு பதில் வீட்டில் உள்ள வேறு ஒருவரை உண்ணுவதாகவும் கூறியது. ஆனால், அதை மறுத்த ஆகுகன், தன்னை நாடி வந்திருக்கும் அதிதியைக் கொல்வது பாவம்.அவருக்கு பாத சேவை செய்யும் தன் மனைவியைக் கொல்வதும் அடாத செயலே என்று கூறி, தன்னையே கொன்று பசியை தீர்த்துக்கொள்ளுமாறு வேண்டினான். சிங்கமும் ஆகுகனை கொன்று தின்னத் தொடங்கியது.
அப்போதும் ஒரு சிறு சத்தம்கூட போடாமல் தன்னையே கொடுத்தான் ஆகுகன்.பொழுது விடிந்தது......
வெளியில் வந்த ஆகுகி மாமிசத்தின் மிச்சத்தையும், ஆடைகளையும் கண்டு இறந்து கிடப்பது தனது காதல் கணவனே என்று அறிந்து துடித்தாள். மனம் வெடித்தாள். வந்திருந்த சிவனடியாரும் மனம் வேதனை கொண்டார்.
தன்னுயிரைக் காட்டிலும் பிரியமான கணவன் மாண்ட பின்னர், தான் வாழத் தேவையில்லை என்று கருதிய ஆகுகி, குடிசைக்குள் நுழைந்து தீ வைத்துக்கொண்டாள்.
கீழிருந்து மேலாகப் பற்றிய தீ, அக்கினி பகவானையே சுட்டது. ஆதி பரம்பொருளான சிவனையும் தொட்டது. விடையேறி, உமையம்மையோடு அங்கே காட்சி அளித்தார் பரமேஸ்வரன்.
தீ மலர்க்குவியலானது; மாமிசப் பிண்டத்தில் இருந்து, ஆகுகன் எழுந்தான். மலர்க் குவியலில் இருந்து ஆகுகி எழுந்தாள். சிங்கம், சனீஸ்வரர் ஆனார். சிவனடியார் இந்திரன் ஆனார். அந்த இடமே சொர்க்கலோகமாக மாறியது.


தன்னை நாடி வந்த அதிதிக்காக தன்னையே கொடுத்த அந்தத் வேடுவத் தம்பதியரை எல்லோரும் வாழ்த்தினர்.
அடுத்த பிறவியில் அரச குடும்பத்தில் பிறந்து, எடுத்துக்காட்டான தம்பதியாக வாழ்வீர்கள்’ என சிவனால் ஆசீர்வதிக்கப்பட்டார்கள். அந்த ஆகுகனும் ஆகுகியுமே அடுத்த பிறவியில் நளனாகவும் தமயந்தியாகவும் பிறந்தார்கள்.
வந்த விருந்தினரை உபசரித்து, பாதுகாத்து வழியனுப்புவதே தமிழர்களின் இல்லற தர்மம். எந்த நேரத்திலும் நம்மை நம்பி வந்தவர்களை கைவிடவே கூடாது.
அதிதியாக வருபவர் இறைவனே என்பதால்தான் அதிதியை ‘அதிதி தேவோ பவ’ என்ற வாக்கியம் உணர்த்துகிறது.

எனவே, நம் வீடு தேடி வருபவர் யாராக இருந்தாலும், இன்முகத்துடன் வரவேற்று உபசரிப்பது நம்முடைய கடமை.

Thanks to Mrs,Ramasankar.

27 August 2017

குருவாயூர் அப்பனின்நாராயணீயம் உருவான அருமையான வரலாறு


அந்த காலத்தில் எந்த நோய்க்கும் நாட்டு வைத்தியம் தானே . மந்திரத்தில் வியாதி குணம் ஆனவர்களும் உண்டு. பத்தியத்தில் வியாதி குணமாகும். கோவில்களில் மண்டல விரதமிருந்து பெற்ற ஈஸ்வர பிரசாதமும் மருந்தாக வியாதி நிவாரணம் செய்திருக்கிறதே.
மலையாள தேசத்தில் ஒரு ஆச்சார நம்பூதிரி  குடும்பம். அதில் ஒருவருக்கு உடலில் பெரும் வாத நோய் கண்டது. அந்த நம்பூத்ரி கல்விமான். உயர்ந்த கௌரவமான மதிப்பான குடும்பம்.  கர்மா அவருக்கு இப்படியொரு வியாதி. எங்கெங்கோ மருத்துவர்களிடம் அலைந்தும் பயனில்லை. கொஞ்சம் பூஸ்திதி உண்டு.
ஒரு நாள் அவர் வேலைக்காரனை கூப்பிட்டு ''ஏ குட்டா, உடனே போ. யாரோ ஜோசியர் ஊருக்கு வந்திருக்கிறாராம். பல வியாதிகளுக்கு அவரிடம் மருந்து இருக்கிறதாம். உங்கள் உடம்பை பற்றி கேட்கக்கூடாதா என்று தெரிந்தவர்கள் என்னிடம் சொல்கிறார்கள். என்னால் நடக்க முடியவில்லை. நீ அவரைப் பார்த்து என் நிலைமையைச் சொல். அவரிடம் ஏதாவது மருந்து வாங்கி வா'' என்று கோபாலனை அனுப்பினார்.


அவர் வேலைக்காரன் கோபால குட்டன் ஜோஸ்யரிடம் சென்றான். வேலைக்காரன் விவரங்களை சொல்லி ஜோசியர் என்ன சேதி சொன்னார் என்று அறிந்துகொள்ள ஆவலுடன் பட்டத்திரி என்கிற வியாதிக்கார நம்புதறி காத்திருந்தார். ஏன் அவன் இன்னும் வரவில்லை?
சற்றைக்கெல்லாம் அந்த வேலைக்காரன் அலறி அடித்துக் கொண்டு அவரை நோக்கி ஓடி வந்து விட்டான். அவனைக் கண்ட பட்டத்ரி
''என்னப்பா ஆயிற்று? எனக்கு ஏதாவது நிவாரணம் உண்டு என்று ஜோசியர் சொன்னாரா? ''
'' ஐயா, அவர் உங்களுக்கு வியாதி குணமாகும். கண்டிப்பாகப் பரிகாரம் இருக்கிறது'' என்று கூறினார்.அதுவும் ஒரே ஒரு பரிகாரம் செய்தால் போதும் என்றும் கூறினார். ஆனால் அதற்குப் பிறகு அவர் சொன்ன பரிகாரம் தான் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது''
''அப்படி என்ன ஜோசியர் சொல்லி விட்டார்?''
கோபாலன் ஜோதிடர் சொன்ன விவரமெல்லாம் சொல்லி ''புனிதமான க்ஷேத்ரமான குருவாயூரில் நீங்கள் மீனை நாக்கில் வைத்துக் கொண்டு பாடினால் வியாதி குணமாகுமாம்'' என்றான்.
''குருவாயூர் கோயிலில் ஒரு சின்னக் குழந்தை அசுத்தம் செய்து விட்டாலே மூன்று மணி நேரத்திற்குக் கோயில் கதவை மூடி புண்யாகவாசனம்  செய்துவிட்டுத்தான் பிறகு திறப்பார்கள். அப்பேர்ப்பட்ட பெருமை மிகுந்த கோயிலில், உங்களை மீனை நாக்கில் தொட்டுப் பாடச் சொல்கிறார்.
அப்படிச் செய்வதற்கு நீங்கள் மேல்புத்தூரிலேயே உங்கள் வாத ரோகத்துடன் இருக்கலாம். நானே உங்களைப் பார்த்துக் கொள்கிறேன். இந்த ஜோசியர் இப்படிச் சொல்லுவார் என்று தெரிந்திருந்தால் நான் போயே இருக்க மாட்டேன்.
நான் ஏன் தான் அந்த ஜோசியரிடம் போனேனோ?'' கோபால குட்டன் அழாத குறையாக சொன்னான்.
பட்டத்திரி யோசித்தார். அவருக்கு சிரிப்புவந்தது. ஜோசியர் கூறியதன் உட்பொருள் புரிந்தது.



மனம் சந்தோஷம் அடைந்தது. ''கோபாலா, வாடா, நாம் இன்றே குருவாயூர் போகணும். பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கோ''
''ஏய், இதென்ன அக்கிரமம். நான் வரமாட்டேனாக்கும்'' என்றான் கோபாலன். உங்களையும் போக விட மாட்டேன். அதெப்படி நீங்கள் குருவாயூர் க்ஷேத்ரத்தில் கோவிலுக்குள்ளே போய் அனாசாரம் பண்றது. நான் ஒப்புத்துக்க மாட்டேன். உங்களுக்கு வேணா எப்படியாவது வியாதி குனமாகாதா என்று இப்படி செய்ய பிடிக்கலாம். அந்த பாபத்துக்கு நான் துணை போக விரும்பலே.'' ரொம்ப கோபத்துடன் கோபாலன் கத்தினான்.
பட்டத்திரி என்ன சமாதானம் பண்ணியும் கோபாலன் கோபம் அடங்கவில்லை. '' ஜோசியன் சொன்னதுக்கு வேறே அர்த்தம்டா கோபாலா'' என்று திருப்பித் திருப்பி சொல்லி கடைசியில் கோபாலன் ஒரு வழியாக அமைதியானான்.
''ஜோசியன் சொன்னது நீ புரிஞ்சிண்ட மாதிரி இல்லே. அதற்கு அர்த்தம் வேறே. ''மத்ஸ்யம் தொட்டுப் பாடணும்'' என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? சாதாரண மீன் என்று நீ ஏன் நினைக்கிறே? பகவான் குருவாயூரப்பனின் தசாவதாரத்திலே முதல் அவதாரம் மத்ஸ்ய அவதாரம். அவர் மிகவும் இஷ்டப்பட்டு எடுத்த அவதாரமும் மத்ஸ்ய அவதாரம்தான்.
''மத்ஸ்யம் தொட்டு'' என்றால் மத்ஸ்ய அவதாரத்திலிருந்து தொடங்கி தசாவதாரம் பத்தையும் அவர் என்னைப் பாடச் சொல்லி இருக்கிறார். அதனால் நான் மத்ஸ்ய அவதாரம் தொடங்கி தசாவதாரங்களைப் பற்றி குருவாயூரில் பாடப் போறேன்.
நீ என்ன பண்றே. என்னை இப்பொழுதே குருவாயூருக்கு அழைத்துச் செல்.'' அப்பாடா, கடைசியில் சுலபமாக வாத நோய் குணமாக ஒரு பரிகாரம் கிடைத்ததே என்ற சந்தோஷம் அவருக்கு.
''ஒ, நான் ஒரு முட்டாளாக்கும் . இப்படி ஒரு அர்த்தமோ இதுக்கு. அதுவும் நம்பூதிரி, அதுவும் குருவாயுரப்பன் கோவில்லே உள்ளே மீனை வாயில் வைத்துக்கொண்டு............'' என்று அந்த ஜோசியன் சொன்னதை வேறே மாதிரி புரிஞ்ஜிண்டுட்டேன். நம்பிவிட்டேன் .
அதாக்கும் கோபம் வந்துது. ''


பட்டத்திரிக்கு இன்னுமொரு சந்தோஷம் என்ன வென்றால் அவருடைய குரு கற்றுக் கொடுத்த சமஸ்கிருத மொழியில் பாட அந்த பகவானே நம்மைப் பணித்திருக்கிறார் என்று. அவர் கண்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தது..
அந்த குருவாயூரப்பனைப் பாடப் பாட , நம் ரோகம் நிவர்த்தி ஆகும் என்று நினைத்ததுமே மனம் ஆனந்தக் கூத்தாடியது. பகவானின் பெருங் கருணையை எண்ணி மனம் பரவசம் அடைந்தது.
''நாராயண பட்டத்திரிக்கு எந்த மருந்திலும் குணமாகாத வாத நோய், வெறுமே பாட்டுப்பாடுவதால் மட்டும் குனமாகப்போகிறதா என்ன ? '' என்று ஏற்கெனவே நொந்து போயிருந்த அவர் குடும்பம் ,உறவினர்கள் அவநம்பிக்கையுடன், வெறுப்புடன், வேறு வழியில்லாமல் அவர் குருவாயூர் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்தனர்.
நடக்க முடியாதே பட்டதிரிக்கு. ஒரு பத்துப் பதினைந்து பேர் அவரை ஒரு பல்லக்கில் தூக்கி வைத்துத் கொண்டு குருவாயூர் சென்றனர். ''எப்போ குருவாயூர் வரும், எப்போ நாராயணனைப் பார்ப்போம்'' --- பட்டத்ரியின் மனம் பல்லக்கை விட வேகமாகச் சென்றது. குருவாயூரப்பனின் தரிசனத்திற்காக மனம் ஏங்கியது. மனத்தில் இருந்த பயம் விலகியது. இந்த ரோகத்தால் இனி நம்மை ஒன்றும் செய்ய முடியாது. அந்தக் குட்டிக் கிருஷ்ணன் நம்மைப் பார்த்துக் கொள்வான். நாளைக் காலை நிர்மால்ய தரிசனத்தின்போது நாம் அந்த குருவாயூரப்பன் சன்னதியில் இருப்போம்'' என்று எண்ணிக் கொண்டார்.
அடுத்த நாள் விடியற்காலையில் அவர்கள் குருவாயூர் சென்றடைந்தனர். அவரை நாராயண சரஸில் ஸ்நானம் செய்ய வைத்தனர்.



'' ஆஹா என் பகவானே ஸ்நானம் செய்த குளமாச்சே இது ? இதில் ஸ்நானம் செய்ய நாம் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்'' -- அவர் மனம் துடித்தது. புது வஸ்த்ரம் உடுத்தினர். அவரை தூக்கிக் கொண்டு கருடரை வணங்கி, பின் பிரதான வாயிலைத் தாண்டி கொடிக் கம்பத்தைக் கடந்து கர்ப்பகிரகத்தின் சிறிய வாயில் நுழைந்தனர்.
தினமும் காலையில் மூன்று மணிக்கு நிர்மால்ய தரிசனத்திற்கு வைகுண்டத்திலிருந்து அந்தர்யாமியாக (கண்ணுக்குத் தெரியாமல்) வந்து குருவாயூரப்பனை தொழுது செல்லும் முப்பத்து முக்கோடி தேவர்கள்,  அனைவரும் அவனைத் தொழ வருவார்களே. அவர்களில் ஒருவராக பட்டத்திரியும் உள்ளே நுழைந்தார்.
இவரைக் கண்ட தேவர்கள், இவரால் நாராயணியம் என்னும் மாபெரும் க்ரந்தம் ஒன்று பின்னால் உருவாகப் போகிறது என்பதை உணர்ந்து மிகவும் சந்தோஷம் அடைந்தனர்.
குருவாயூரப்பனின் தரிசனம் ஒரு விநாடி நேரமாவது கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் பக்தர்களுக்கு நடுவே பட்டத்திரியும் உள்ளே நுழைந்தார். அப்பொழுது அவரைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள் அங்குள்ள திண்ணையைக் கண்டனர்.
பகவானுக்கு வலப் பக்கம் தமக்கு இடப்பக்கம் உள்ள அந்தத் திண்ணையில் அவரை அமர வைத்தனர். பட்டத்ரி முதன்முறையாக குருவாயூர் வருகிறார். அவர் இதற்கு முன் குருவாயூரப்பனைப் பார்த்தது இல்லை.
ஆனால் கேள்விப்பட்டிருக்கிறார். அவரது உடல் பரவசத்தால் சிலிர்த்தது. சாதாரண மானிடனான என்னை அந்த பகவானின் கருணையன்றி வேறு எது இங்கு அழைத்து வரமுடியும்? இவரது திவ்ய ஸ்வரூபத்தைக் காண கண் கோடி வேண்டுமே? எத்தனை அழகு? எவ்வளவு தேஜஸ்? இப்பேர்ப்பட்ட அழகு வாய்ந்த இவரைப் பாட என்னால் முடியுமா?
அதற்கு நான் தகுதி உடையவனா? அந்த பகவான் என்னை ஏற்றுக் கொள்வானா? அவர் என்னையும் தன் சரணாரவிந்தங்களில் சேர்த்துக் கொள்வானா? இப்படி பட்டத்ரி மனத்திற்குள் ஆயிரம் கேள்விகளை எழுப்பிக் கொண்டே அந்த குருவாயூரப்பனைக் காணத் துடிக்கிறார் பட்டத்திரி.
அந்த மண்டபத்தில் அமர்ந்து கொண்டு, '' என் கண்ணா'' என பக்தியுடன் கதறினார்.  சப்தம் பக்தியோடு வெளிவந்தது. அவரது கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன. குருவாயூரப்பன் அவருக்கு செவி சாய்த்தானா?
பட்டத்ரி அந்த மண்டபத்தில் உட்கார்ந்தவுடன் அவருக்கு குருவாயூரப்பனின் தரிசனம் கிடைக்கவில்லை. அந்த மண்டபமானது குருவாயூரப்பனுக்கு வலது பக்கத்தில் இருந்தது. பட்டத்ரிக்கோ வாத ரோகம் . தன் கழுத்தைத் திருப்பி குருவாயூரப்பனை தரிசனம் செய்ய இயலவில்லை.
அப்போது பட்டத்ரி அந்த குருவாயூரப்பனை மனதில் நினைத்துக் கொண்டு, ''ஏ உன்னிக் கண்ணா! கிருஷ்ணா! பரந்தாமா!'' என்று கதறுகிறார்.
'' இதோ பார் குட்டி கிருஷ்ணா உன் திவ்ய தரிசனத்தைக் காணாமல் என்னால் எப்படி நாராயணியம் எழுத முடியும் னு நீ நினைக்கிறாய்? அதனால் நீ முதல்லே எனக்கு உன் திவ்ய தரிசனத்தைத் தா'' என்று அழுது கண்ணீர் மல்குகிறார்.
அதற்கு குருவாயூரப்பன் ஒன்றும் பேசவில்லை. வாத ரோகம் உள்ள காரணத்தால் பட்டத்ரி மனம் வருந்தி கண்ணனிடம்
'' சரி கிருஷ்ணா, நீ எனக்கு ஒன்றுமே செய்ய வேண்டாம்.
என் வலது பக்க கழுத்தில் மட்டுமாவது லேசாக அசைவு வரும்படி செய். கழுத்தையாவது திருப்பி உன்னைப் பார்க்க அனுகிரகம் செய். நான் இப்போ தான் முதன் முதலில் குருவாயூர் வந்திருக்கிறேன்.
இதற்கு முன் உன்னைப் பார்த்தது கூட கிடையாது. என் காதால் மட்டுமே இதுவரை உன் புகழைக் கேட்டிருக்கிறேன். உன் சௌந்தர்ய ரூபத்தைப் பார்க்காமல், உன் மேனி அழகைக் காணாமல், நீ சூடி இருக்கும் ஆடை, ஆபரணங்களைக் காணாமல், உன் தேஜோமய திவ்ய சொரூபத்தைக் காணாமல், கருணா கடாக்ஷத்தைக் காணாமல் நான் எப்படி அப்பா உன் பெருமையைப் பாட முடியும்? உன் புராணமாகிய நாராயணியத்தை, நான் எதை நினைச்சு எழுத முடியும்? நீயே சொல்லு, அதனால் தான் கேட்கிறேன் நீ உன் தரிசனத்தை முதலில் எனக்கு கொடு'' என்று மனம் குழைய கெஞ்சிக் கேட்டார் .
குருவாயூரப்பன் சும்மாவா இருப்பான் ? அவனுக்கு நாரயணீயம் வேண்டாமா. அதற்காக தானே இத்தனை வேலை செய்து, அவருக்கு வாத ரோகத்தை வேறு கொடுத்து இழுத்து வந்திருக்கிறான். முதன் முதலில் பட்டத்ரியிடம் பேசுகிறான் .
''நாராயண பட்டத்திரி, நீ நினைக்கிற மாதிரி எல்லாம் என்னால் இப்பொழுது உன் கழுத்தை சரி செய்ய முடியாது. என்றைக்கு நீ இங்கே வந்த காரியம் முடிவடைகிறதோ, அன்றுதான் உன் வியாதி நீங்கும் சரியா ?''
'' அடே, குட்டி கிருஷ்ணா, எனக்கு உன் தரிசனம் எப்போது கிடைக்கும்? ''
'' பட்டத்ரி, நீ உன் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு உன்னுடைய கழுத்தை சாய்த்துதான் என்னைப் பார்க்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறாய்? என் கழுத்தின் ரெண்டு பக்கமும் நன்றாகத்தானே இருக்கிறது. அதனால் என் கழுத்தைத் திருப்பி என்னால் உன்னைப் பார்க்க முடியும்அல்லவா ?. பட்டத்திரி.
நானே என் தலையைச் சாய்த்து உன்னைப் பார்க்கிறேன். என்று கூறி பாண்டுரங்கனாக மாறி இடுப்பில் கையை வைத்துக் கொண்டு தலையை சாய்த்து பட்டத்ரியைப் பார்த்து, நீ நாராயணியம் பாட ஆரம்பி'' என்று கூறி கிருஷ்ணன் அனுக் ரஹம் செய்கிறார்.
(இப்பொழுதும் குருவாயூர் ஆலயத்தில் 'நாராயண பட்டத்ரி மண்டபத்தில்' உட்கார்ந்து கொண்டு பார்த்தால் நமக்கு அந்த குருவாயூரப்பன் தெரிய மாட்டான். ஆனால் குருவாயூரப்பன் நின்று கொண்டிருக்கும் இடத்தில் இருந்து நம்மைக் காணமுடியும்.)
அப்பேர்ப்பட்ட புனிதமான இடமானதால் இப்பொழுது அங்கு ஒரு செப்புப் பட்டயம் வைத்து, 'நாராயண பட்டத்ரி நாராயணியம் எழுதிய இடம்'' என்று எழுதி வைத்திருக்கின்றனர். சாட்சாத் அந்த குருவாயூரப்பனே, பட்டத்ரி நாராயணியம் எழுதி முடித்தவுடன், ''மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி , இந்த ஊரில் உள்ள எல்லா இடமும் எனக்குச் சொந்தம். ஆனால் இன்று முதல் இந்த இடம் உனக்கு மட்டுமே சொந்தம். இதற்கு இனிமேல் ''பட்டத்ரி மண்டபம்'' என்று பேர்'' குருவாயுரப்பனே கூறினார்.)
எந்த காவியத்துக்கும் இல்லாத பெருமை இந்த நாராயணியத்திற்கு உண்டு. என்ன வென்றால், இந்த நாராயணியம் என்கிற க்ரந்தம் முழுவதுமே நாராயண பட்டத்ரியும் குருவாயூரப்பனும் பேசும் பாவனையில் எழுதப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க அவர்களுக்குள் நடக்கும் சம்பாஷணை போல் அமைந்திருக்கிறது.
'' நான் நாராயணியம் எழுத ஆரம்பிக்கட்டுமா? என்று பட்டத்ரி கேட்க,
'' உம். எழுது. நான் கேட்க ஆவலாக இருக்கிறேன்'' என்று குருவாயூரப்பன் கூறுகிறான்.
'' நான் நாராயணியத்தைத் தொடங்க வேண்டும் என்றால் சில பல நிபந்தனைகள் உள்ளன. அவற்றை எல்லாம் நீ பூர்த்தி செய்தால் மட்டுமே என்னால் நாராயணியம் பாட முடியும். இல்லையென்றால் நான் ஊருக்குச் செல்கிறேன்''
ஒரு முக்ய விஷயம். மற்றவர்கள் எல்லாம் தங்கள் வாழ்வில் சில சமயங்களில் தங்கள் இஷ்ட தெய்வத்தோடு பேசியிருக்கிறார்கள். ஆனால் குருவாயூரில் பட்டத்ரி நூறு நாளும் தொடர்ந்து குருவாயூரப்பனோடு பேசும் மகா பாக்யத்தைப் பெற்றார்.! பேசியது மட்டுமல்ல ஒரு நண்பனாக, தந்தையாக, குழந்தையாக, பணியாளாக என அத்தனை பாவங்களிலும் அவரோடு பேசுகிறார்.
குருவாயூரப்பன் ப்ரத்யக்ஷ தெய்வம்


ஸ்ரீ குருவாயூரப்பன் திருவடிகளே சரணம்.

Thanks to Mrs,ramasankar.

ஸ்ரீதர ஐயாவாள் வீட்டு கிணற்றில் பொங்கிய கங்கை

ஷேத்ராடணம்திருத்தலம் 46- திருவிசைநல்லூர்

ஸ்ரீதர ஐயாவாள் வீட்டு கிணற்றில் பொங்கிய   கங்கை

ஸ்ரீதர ஐயாவாள்

மைசூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாக இருந்தவர் இலிங்கார்யர். இவரது ஒரே மைந்தன் ஸ்ரீதர வெங்கடேசர்
இவர் கர்நாடக சமஸ்தானத்தில் திவானாகப் பணிபுரிந்தவர் தன் பதவி, சொத்துகளைத் துறந்துவிட்டு தமிழக காவிரிக் கரையிலுள்ள திருவிசநல்லூரில் குடியமர்ந்தவர்...!தினமும் அருகேயுள்ள மத்யார்ஜூனமான திருவிடைமருதூர்மகாலிங்கேஸ்வரரை தரிசிப்பார். அர்த்தஜாம பூஜையும் காண்பார்.சிவன்மேல் அபார பக்தி கொண்டவர்.அதே சமயம் ஸ்ரீ ஐயாவாள் ஏக பாவத்தில், சிவ-விஷ்ணு வித்யாசம் ஏதும் பாராட்டாமல் திகழ்ந்தவர்..!


"அநித்யத்வம் ஜானன்னதி த்ருடமதர்ப் பஸ்ஸவினய:
ஸ்வகே தோஷே அபிக்ஞ: பரஜுஷிது மூடஸ்ஸகருண:
ஸதாம் தாஸ: சாந்த: ஸமமதிரஜஸ்வரம் தவ யதா
பஜேயம் பாதாப்ஜம் யதுவர தயேதா மம கதா"

என்று ஸ்தோத்திரம் செய்கிறார்.
உலகத்தின் அநித்ய நிலையை புரிந்தவனாகவும்,
கர்வமில்லாதவனாகவும், வினயமுடையவனாகவும்,
என்னுடைய தோஷங்களை அறிந்தவனாகவும்,
பிறர் தோஷங்களை அறியாதவனாகவும்,
எல்லா ஜீவராசிகளிடமும் இரக்கம் உடையவனாகவும்,
பாகவதர்களுக்கு தாசனாகவும், சாந்தனாகவும்,
உன் பாதகமலத்தை எப்போதும் பூஜிப்பவனாகவும்
எப்போது நான் மாறுவேன் கிருஷ்ணா என்று  அவர் பகவான் கிருஷ்ணன் மீது செய்த ஸ்தோத்திரம் தான் "கிருஷ்ண த்வாதச மஞ்சரி" ..!
     

வீட்டிற்கு வந்த கிருஷ்ணரின்  விக்ரகம்                   
                      
தாங்கள்தான் சிவ பக்தராயிற்றே..! என்று  தேரில் ஊர்வலம் வந்த கிருஷ்ண விகரஹத்தை வணங்க விடாமல் தடுத்தனர் பொறாமை கொண்டவர்கள்..!
அமைதியாக இல்லத்துக்குள் சென்று ஐயாவாள் தம்மை மறந்து டோலோத்ஸவ ஸேவை சார்த்துவதாக பாடிக்கொண்டிருக்க  ஊர்வலத்தை விட்டு கண்ணன் விக்ரஹம்  ஐயாவாள்  பூஜை அறையில் தோன்றிய போது பாடியது "டோலோ நவரத்ன மாலிகா" ..!
தந்தையின் சிரார்த்தம்கார்த்திகை மாதத்தில் வரும் இவரது தந்தையார் மறைந்த திதி நாளில் இவர் பிராமணர்களுக்கு சிரார்த்த  சமையல் தயார்செய்ய ஏற்பாடு செய்துவிட்டு, காவிரியில் நீராடச்சென்றார்.நீராடி இல்லம் திரும்பும்போது எதிரேவந்த வயதான ஏழை ஐயாவாளிடம், "சுவாமி, ரொம்ப பசிக்கிறது. ஏதாவது கொடுங்களேன்'' என கேட்டார்.அவர்மீது இரக்கம்கொண்ட ஐயா அவரை இல்லத்திற்கு அழைத்து வந்தபோது,  சிரார்த்த  சமையல் மட்டுமே தயாராக இருந்தது.பசி மயக்கத்தில் இருந்த ஏழைக்கு சிரார்த்த சமையல்உணவைக்கொடுத்து பசியாற்றினார்.
சிரார்த்த சமையலை திதி கொடுக்கும் அந்தணர்கள்மட்டுமே உண்ணவேண்டும்.மீதம் உள்ளதை பசுவுக்குதான் தருவார்கள். அந்த நியதியை மீறினார் ஐயாவாள். அதனால் கோபமடைந்த அந்தணர்கள் வெளியேறி,

"பரிகாரம் செய்தால் தான் நாங்கள் திதி கொடுப்போம்' என்றனர்.
"ஒரேநாளில் காசியிலுள்ள கங்கையில் நீராடி விட்டுவா'
என்பதுதான் அவர்கள் சொன்ன பரிகாரம்.
ஒரேநாளில் எப்படி அவ்வளவு தூரத்திலுள்ள காசி சென்று கங்கையில் நீராடிவிட்டு அன்றே திரும்பமுடியும்? இதை நினைத்து வருத்தத்துடன் படுத்தவர் அசதியில் உறங்க, கனவில் சிவன் காட்சி கொடுத்து, "உன் இல்லக் கேணியில் நாளை கங்கையைப் பிரவேசிக்கச் செய்வேன்' என உறுதியளித்து மறைந்தார். இக்கனவை ஐயா எல்லாரிடமும் சொன்னார்.

கிணற்றில் பொங்கிய கங்கை



கார்த்திகை மாத அமாவாசை. ஊரே திரண்டு ஐயா வீட்டுமுன் கூடிவிட்டது. ஐயாவாள் கிணற்றடியில் நின்றபடி மனம் உருக "கங்காஷ்டகம்' பாடினார்.ஐந்தாம் பாடல் பாடியவுடன் கேணியில் கங்கை பொங்கி வழிந்து, திருவிச நல்லூர் சாலை முழுவதும் வெள்ளமாய்ப் பாய்ந்தோடினாள்!

அதில் காசியில், கங்கையில் போடப்பட்டமங்கல திரவியங்கள் காணப்பட்டன.பெரும் வெள்ள அபாயத்தைத் தடுப்பதற்காக "கிணற்றிலேயே கங்காதேவி அடங்க வேண்டும்' என்று மனமுருகி வேண்டினார் ஐயாவாள்.

நீர்ப்பெருக்கு படிப்படியாகக் குறைந்து  கங்கா தேவி அக்கிணற்றில் நிரந்தரமாகக் குடியிருப்பதாக ஐதீகம்.
அந்த நீர் கங்கைதான் என்பதற்கு பிரமாணம் கேட்டார்கள் பிராமணர்கள்..ஐயாவாள் ஒரு விழுதுகளுடன் கூடிய பெரிய ஆலமரத்தை வேருடன் பிடுங்கி தலைகீழாக வேர் மேலே இருக்கும் வண்ணம் நட்டு தன் கிணற்று நீரைப்பாய்ச்சினார்.. ஆலமரம்  செழித்து வளர்ந்து அவர் பீமனின் அவதார அம்சம் என்பதையும் , கிணற்று நீர் கங்கை தான் என்பதையும் ஒருங்கே நிரூபித்தது..

அந்தணர்கள் ஐயாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு கங்கை நீராடினார்கள்.அவர் கிணற்றிலே வற்றிய கங்கை
சில வருடங்களுக்கு முன்னால்  தஞ்சாவூர் ப்ரதேசத்தில்  ஐப்பசியில் பருவ மழை பெய்யாது பொய்த்தது.. மேட்டூர் ஜலமும் வரவில்லை..  காவேரியில் சுத்தமாக வரத்து இல்லை.. ஸ்ரீஐயாவாள்  மடத்தின் பின்புறம் கங்கை ஆவிர்பவிக்கும் கிணறும்  வறண்டு போனது..
ஸ்ரீஐயாவாள்  மடத்தின்  கார்த்திகை அமாவாஸ்யை உத்ஸவம்  அந்த வருஷம்   நடக்குமா என்ற பயம் வந்து விட்டது..

ஸ்ரீபெரியவாளின் அபயம்

உத்ஸவ பத்ரிகையை  எடுத்துக் கொண்டு போய் காஞ்சி ஸ்ரீபெரியவாளின் ஸன்னதியில் ஸமர்ப்பித்து அங்கு இருக்கும் நிலைமையை பெரியவாளிடம் விவரித்தார்கள் பக்தர்கள்.
சிரிது நேரம் அமைதியாக இருந்த பெரியவாள் பின் தன் சீடர்களை ஒரு செப்பு குடத்தில் கங்கை நீர் நிரப்பிவரும்படி உத்தவிட்டார். அதன் கங்கா ஜலத்தைக் கொண்டு வந்து அவர்முன் வைத்தார்கள்.
பக்தர்களை பார்த்து பெரியவாள் மழை வராவிட்டால்  ஸ்ரீஐயாவாள்  மடத்தில் இருக்கும் கங்கை ஆவிர்பவிக்கும் கிணற்றில்  கார்த்திகை அமாவாசைக்கு முன்னால் சேர்த்து விடுங்கள் .. ! " என்று அபயம் காட்டி  அவர்களுக்கு  ப்ரஸாதம் அளித்து அனுப்பி வைத்தார்..
ஆனால் அம்மாவாசை முதல் நாள்வரை மழை பெய்யவில்லை பிறகு செப்புக் குடத்திலிருந்த ஸ்ரீபெரீவா அனுக்ரஹித்திருந்த கங்கையைக் கிணற்றில் சேர்த்த சில மணி நேரத்தில்..  தொடங்கியது  பெரும் மழை.. விடிய விடிய விடாது பெய்து ஊரையே வெள்ளத்தில்  மிதக்க வைத்தது ..

ஸ்ரீஐயாவாள் அவர்கள் கங்கையை வரவழைத்தது போல்  மடத்திலிருந்த கிணற்றில் ஜலம் பெருகியது..
அமாவாஸ்யை  அன்று விடியற்காலை   கிணற்றின்  கைப்பிடிச் சுவற்றிற்கு மேல் ஜலம் பெருகி வழிந்தோடியதைக் கண்டோர் அதிசயித்தனர்.. அதேவிதமாகக் காவேரியிலும் கால் வைக்கக்கூட  முடியாத அளவிற்கு ப்ரவாஹம் மிக  அதிகமாக இருந்தது..
பல நூறு பக்த ஜனங்கள் அன்று மடத்திலிருந்த கிணற்றில் ஸ்நானம் செய்தும் வழிபட்டனர்..

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆண்டுதோறும் கார்த்திகை அமாவாசை நாளில் திருவிசநல்லூர் ஸ்ரீதரஐயாவாள் இல்லத்தில் உள்ள கிணற்றில் கங்கை நீர் பொங்குவதாக பக்தர்கள் நம்புகிறார்கள். இந்த கிணற்றை பக்தர்கள் “புனித கங்கை கிணறு” என்றே அழைக்கிறார்கள். தற்போது ஸ்ரீதரஐயாவாள் இல்லம் மடமாக மாற்றப்பட்டு, அங்கு ஆண்டுதோறும் கார்த்திகை அமாவாசை நாளில் புனித நீராடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 
இன்றளவும் கார்த்திகை அமாவாசையன்று,பொங்கி வந்ததுபோல, ஐயாவாள் இல்லக் கேணியில் நீர் பொங்கி வருவதைக் காணலாம்; நீராடலாம்.



செல்லும் வழி

 திருவிடைமருதூரிலிருந்து 7Km தொலைவிலும். திருவிசைநல்லூர்,சிவயோகிநாத சுவாமி ஆலையத்தின் மிக அருகிலும் உள்ளது.
ஷேத்ராடணம்
ஸ்ரீதர ஐயாவாள்.



நன்றி:-திருமதி,ரமாசங்கர்.

25 August 2017

TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி,சித்தத்தின் உள்ளே சிவ லிங்கம் காட்டும் எங்கள் வினை தீர்க்கும் நாயகனை இந்த நன்னாளில் வணங்குகின்றோம்.அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.ஆனைமுகன் அருளால் ஏற்கனவே ஒரு பதிவு வெளியாகிவிட்டது.அந்த பதிவை நம் தளத்தின் - இன்றைய நாளின் சிறப்பு செய்தியாக சொல்ல விழைகின்றோம்.தவற விட்ட அன்பர்கள்,பதிவை படிக்கவும்.பதிவின் கடைசியில் மீண்டும் ஒருமுறை பதிவின் முகவரியைக் கொடுத்துளோம்.மேலும் நம் நண்பர்களின் வீட்டில் எழுந்தருளிய விநாயகரை இணைத்துள்ளோம்.








வினை தீர்க்கும் விநாயகப் பெருமானின் அருளைப் பெரும் நாள் இன்று.


விநாயகரைப் பற்றிய சில செய்திகளை இங்கே அறிவோம்.பக்தி மார்க்கத்தில் மட்டுமே நாம் பார்த்துப் பழகிவிட்டோம்.விநாயகர் ! வெற்றியின் நாயகன்.பெருமையைத் தர வல்லவர்.அவர் பக்தியை மட்டும் காட்டுபவர் அல்லர்.மாறாக யோகம்,ஞானம் என்றும் காட்ட வல்லவர்.இதை உணர நாம் ஒளவையார் அருளிய விநாயகர் அகவல் படித்து உணர வேண்டும்.



இறைவன் தூணிலும் இருப்பார்.துரும்பிலும் இருப்பார் அதைப் போன்று தான் விநாயகர்.ஆற்றோரத்திலும் இருப்பார், வீட்டின் சந்துக்குள் இருப்பார்.பிள்ளையார் கோவில்கள் எங்கும் இருக்கும்.மற்ற கோவில்கள் கட்டுவதற்கு உரிய இடம்,ஆகம விதி என்று பல இருக்கும்.இவர் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர். தோஷமற்ற ஒரே தெய்வம் பிள்ளையார் தான். எந்த தோஷத்தையும் போக்குபவர் இவர். அதாவது ஆகம விதிகளுக்குள் இவர் அடங்கமாட்டார்.

அதாவது குளக்கரையிலும், மரத்தடிகளிலும், முட்டுச் சந்திலும், எங்கு வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பிள்ளையாருக்கு கோவில் எழுப்பலாம். (சட்டத்தை மீறாமல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல்!)

அறுபடை வீடு என்றால் அது முருகனுக்கு தான் என்று நாம் நினைக்கின்றோம்.ஆனால் இவருக்கும் அறுபடை வீடு உண்டு.சரியான தகவல் திரட்டி இது பற்றி மேலும் காணலாம்.இப்போது விநாயகருக்கு அறுபடை வீடு உண்டு என்று தெரிந்து கொள்வதில் எந்த தவறும் இல்லையே.

முதல் படைவீடு – திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில்
இரண்டாம் படைவீடு – கடலூர் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில்
மூன்றாம் படை வீடு – நாகப்பட்டினம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்
நான்காம் படைவீடு – மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
ஐந்தாம் படைவீடு – காசி துண்டிவிநாயகர் திருக்கோயில்
ஆறாம் படைவீடு – கடலூர் திருநாரையூர் சித்தநாதேஸ்வரர் திருக்கோயில்

முதல்படை வீடு திருவண்ணாமலை

இங்குள்ள விநாயகரின் பெயர்  ”அல்லல் போம் விநாயகர்” இவரைக் குறித்துப் போற்றிப் பாடப்படும் பாடலே ”அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம்” என்பதாகும்.

இரண்டாம் படைவீடு விருத்தாச்சலம்

இங்குள்ள  அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள விநாயகருக்கு ”ஆழத்துப் பிள்ளையார்” என்று பெயர். பெயருக்கேற்ப ஆழத்தில் சன்னிதி கொண்டுள்ளார்.

இறங்கிச் சென்று வழிபடப் படிக்கட்டுகள் உள்ளன. இவரைத் துதித்தால் செல்வம் கல்வி சீரான வாழ்வு அமையும்.

மூன்றாம் படைவீடு   திருக்கடவூர்/திருக்கடையூர்

அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றாக இத்தலம் விளங்குகிறது. இங்குள்ள விநாயகருக்கு ” கள்ள வாரணப் பிள்ளையார்” என்று பெயர். நமக்கு நீண்ட ஆயுளை அள்ளி வழங்குபவராக விளங்குகிறார்.

அபிராமி பட்டர்  அபிராமி அந்தாதியின் காப்புச் செய்யுளில் குறிப்பிடும் விநாயகர் இந்தக் கள்ள வாரணப் பிள்ளையார்தான். ” தாமரைக் கொன்றையும் செண்பக மாலையும்” என்று தொடங்குகிறது அப்பாடல்.

நான்காவது படைவீடு  மதுரை

மீனாட்சி அம்மன் கோவிலில் மீனாட்சி அம்மையைத் தரிசிக்கச் செல்லும் வழியில் ” சித்தி விநாயகர்” என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது.

மாணிக்கவாசகர் பாண்டிய மன்னருக்காகக் குதிரை வாங்கப் புறப்படுகையில் இந்த சித்தி விநாயகரை தரிசித்து சென்றதாகத் திருவிளையாடல் புராணம் தெரிவிக்கிறது.

ஐந்தாவது படைவீடு  காசி மற்றும் பிள்ளையார்பட்டி

காசியில் ”துண்டி ராஜ கணபதி” யாகவும், பிள்ளையார்பட்டியில் ”கற்பக விநாயகர்” ஆகவும் இருந்து அருள்பாலிக்கிறார்.

காசியில் இருக்கும் துண்டி ராஜ கணபதி, தீட்சா கணபதியாக இருந்து, ஞானத்தை வாரி வாரி வழங்குகிறார்  காசிக்கு போகமுடியாதவர்களுக்கு அதே பலனைப் பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் அருளுகிறார்.

இவர் கையில் சிவலிங்கத்தைத் தாங்கியிருப்பது விசேஷமான அமைப்பு.

ஆறாம்படைவீடு திருநாரையூர்

இங்கு ”பொண்ணாப் பிள்ளையார்” என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். சிற்பியின் உளியால் போள்ளப்படாமல் சுயம்புவாகத் தோன்றியவர் என்பதால் இத்திரு நாமம்.

இத்திருத்தலத்தில்தான் தேவாரத் திருமுறைகள் கிடைக்கக் காரணமாக இருந்த நம்புயாண்டார் நம்பிகளும் அவதரித்தார். கணபதியை அவரது படை வீடுகளுக்கே சென்று தரிசித்து சிறப்பான பயன்களைப் பெறுவோமாக.

விநாயகரை நாம் முதலில் ஆசிரியராக எடுத்துக் கொள்ள வேண்டும்.நல்லாசிரியராக அவர் தரும் பாடத்தை,நாம் சொல்வதை விட,நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.



விநாயகர் பற்றி சொல்ல இந்த ஒரு பதிவு போதாது.அவரது அருள்காட்சிகளும் காண இந்த பதிவு பத்தாது.விநாயகர் பற்றிய அறிய வேண்டிய 100 அரிய தகவல்களும், அவர் எளிமை பேசும் ஒரு கதையையும் இனி கண்டு உணர்வோம்.

 விநாயகர் பற்றிய 100 அரிய தகவல்கள்

எந்த காரியத்தை தொடங்குவதற்கு முன்னும் விநாயகர் வழிபாடு சிறந்த பலனை தரும. விநாயகர் பற்றிய 100 அரிய குறிப்புகளை தெரிந்து கொள்ளலாம்.

விநாயகர் பற்றிய 100 அரிய தகவல்கள்
1. விநாயகர் ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் ஆறெழுத்துக்கள் உடையவர்.

2. விநாயகர் பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அக்திணையாய் எல்லாமாய் விளங்குகிறார்.

3. யானையை அடக்கும் கருவிகள் பாசமும் அங்குச மும், விநாயகர் தன் கையில் பாசாங்குசத்தை ஏந்தி இருக்கின்றார். தன்னை அடக்குவார் ஒருவரும் இலர் என்ற குறிப்பை இதன் மூலம் உணர்த்துகிறார்.

4. அகில உலகங்களும் விநாயகருடைய மணி வயிற்றில் அடங்கிக் கிடப்ப என்ற குறிப்பை அவருடைய மத்தள வயிறு புலப்படுத்துகின்றது.

5. விநாயகர் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற மும்மதங்களைப் பொழிகின்றார்.

6. கும்பம் ஏந்திய கை படைக்கும் தொழிலையும், மோதகம் ஏந்தியகை காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தல் தொழிலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தொழிலையும் புரிகின்றன. எனவே விநாயகர், சிருஷ்டி, திதி, சங்காரம், திரௌபவம், அனுக்கிரகம் என்ற ஐம்பெருந் தொழில்களை ஐந்து கரங்களால் புரிந்து ஆன்மாக்களுக்கும் அருள் புரிகின்றார்.

7. விநாயகர் தாய் தந்தையரை அன்புடன் வழிபட்டதால் பிள்ளை என்ற பெயருடன் ஆர் என்ற பன்மை விகுதி பெற்றுப் பிள்ளையார் என்று பேர் பெற்றார்.

8. முருகர், அம்பிகை, ராமர், கிருஷ்ணர் முதலிய உருவங்கள் சிற்ப முறைப்படி செய்து வழிபட வேண்டி யவை. அவை சிற்ப லட்சணத்திற்கு மாறுபட்டிருந்தால் வழிபாடு செய்பவருக்கு நன்மை கிடைக்காது. ஆனால் பிள்ளையார் உருவம் அப்படி அல்ல. மஞ்சளை அரைத்து ஒரு சிறு குழந்தை கூட பிடித்து வைத்தால் போதும் பிள்ளையார் தயார். பிள்ளையார் அவ் வடிவில் எழுந் தருளி அருள்புரிவார்.

9. சந்தனம், களி மண், மஞ்சள், சாணம் இப்படி எளிதாகக் கிடைக்க கூடிய பொருளில் விநாய கரை செய்து வழிபடுவார்கள்.

10. விநாயகருக்கு எளிதாக கிடைக்கக் கூடிய அருகம்புல் மிக விருப்பம். அருகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும்.



11. விநாயகருக்கு கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.

12. விநாயக சதுர்த்தி அன்று நாம் பூஜை செய்யும் விநாயகர் சிலை மண்ணினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நம் கட்டை விரல் அளவைப் போல பன்னிரண்டு மடங்கு அளவில் இருக்க வேண்டும்.

13. புரட்டாசி மாத சதுர்த்தி வரை நம் இல்லத்துப் பூஜையில் இருக்க வேண்டும். இந்த 30 நாட்கள் தினந்தோறும் பூஜைகளை முறையாகச் செய்து வருவதுடன் நைவேத்தியங்களும் செய்ய வேண்டும். புரட்டாசி சதுர்த்திக்கு மறுநாள் பூஜை முடிந்து சிலையை நதியிலோ, குளத்திலோ, கடலிலோ அல்லது ஏதாவது நீர்நிலைகளிலோ சேர்த்து விட வேண்டும்.

14. பார்வதி தேவியே கடைப்பிடித்து வழிகாட்டிய விரதம் இது. இந்த சதுர்த்தி பூஜையைச் செய்து தான் பார்வதி தேவி ஈசுவரனைக் கணவராக அடைந்தார்.

15. ராஜா கர்த்தமன், நளன், சந்திராங்கதன், முருகன், மன்மதன் (உருவம்பெற்றான்), ஆதிசேஷன், தட்சன் மற்றும் பலர் விநாயக சதுர்த்தி விரதத்தைக் கடைப்பித்து உயர்ந்த நிலை அடைந்தனர்.

16. விநாயகர் பக்தர்களில் தலைசிறந்தவர் புருசுண்டி முனிவர். விநாயகரை நோக்கித் தவமிருந்து விநாயகரை நேரே தரிசனம் செய்தவர்.

17. தேவேந்திரனுடைய விமானம் சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனா லேயே மீண்டும் விண் ணில் பறக்க ஆரம்பித்தது.

18. கிருத வீர்யன் இந்த விரதத்தின் பலனால் உத்தமமான குழந்தைச் செல்வமடைந்தான்.

19. சூரசேனன் என்னும் மன்னன் விநாயகர் விரதத்தைத் தான் கடைப்பிடித்ததோடு தன் நாட்டு மக்கள் அனை வரும் இதைக் கடைப்பிடிக்கும்படி செய்து சகல செல்வங்களையும் பெற்றான்.

20. திண்டிவனம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் 12 கி.மீ. மேற்கே அமைந்துள்ள கிராமம் தீவனூர். அந்த கிராமத்தில் உள்ள பொய்யாமொழிப் பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை.

21. சாணம், புற்றுமண், மஞ்சள், வெல்லம், எருக்கம் வேர், சந்தனம் ஆகியவற்றில் பிள்ளையார் உருவம் செய்து வழிபட்டால் அனைத்துவிதமான நலன்களும் பெற்று மோட்சம் அடைவர் என்று விநாயக புராணம் கூறுகின்றது.

22. தும்பைப்பூ, செம்பருத்தி மலர், சங்கு புஷ்பம், எருக்கம்பூ, மா விலை, அருகம்புல், வில்வ இலை ஆகியவை விநாயகரை அர்ச்சனை செய்யவும் மாலையாக அணிவிக்கவும் மிகவும் உகந்தவையாக கருதப்படுகிறது.

23. கிருதயுகத்தில் தேஜஸ்வி என்ற பெயரில் சிம்மவாகனத்திலும் த்ரேதா யுகத்தில் மயில் வாகனத்திலும், துவாபர யுகத்தில் மூஞ்சூறு  வாகனத்திலும் கலியுகத்தில் எலி வாகனத்திலும் விநாயகர் தோன்றியுள்ளார்.

24. வாஞ்ச கல்ப கணபதி தியானம் மூலமந்திரத்தை சிரமப்பட்டு மனதில் ஏற்றிக் கொண்டு முறைப்படி ஜபித்து வந்தால் உங்கள் வாழ்வில் பொருள் சேர்க்கை, பெரியோர் நட்பு, செல்வ நிலை உயர்வு கிட்டுவது உறுதி. குரு உபதேசம் பெற்று படித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

25. ஈஸ்வரனுக்கும் உமையம்மைக்கும் இடையே ஸ்கந்த வடிவம் இருப்பின் அந்த வடிவத்தை ‘’சோமாஸ்கந்த வடிவம்‘’ என்றும் இடையில் விநாயகர் வடிவம் இருந்தால் இது கஜமுக அனுக்ரஹ வடிவம் எனவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

26. வட இந்தியாவில் விநாயகர் தன்னுடைய திருக்கரங்களில் முள்ளங்கியை வைத்து உண்கிறார். தென் இந்தியாவில் தன் கரங்களில் மோதகத்தை வைத்துக் கொண்டு ருசி பார்க்கிறார்.

27. திருஷ்டிகளை விரட்டுகிற விநாயகர் யந்திரத்தை செப்புத் தகட்டில் வரைந்து விநாயாக சதுர்த்தி அன்று பூஜை செய்து, பிரதி சதுர்த்தி அன்றும் வழிபட்டு வர கண் திருஷ்டி நெருங்காது, வீட்டு வாசலில் சட்டமிட்டு மாட்டலாம்.

28. கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை என்ப்படும் அதிகாலை 4.30 முதல் 6.00-க்குள் உச்சரிப்பது மிகவும் நல்லது என கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.

29. விநாயகரை தேய்பிறை சதுர்த்திதோறும் வழிபடுவது சங்கடகர சதுர்த்தி என்று வழங்கப்படும். அதுவும் அந்நாளில் வன்னிமரத்தடியில் வழிபடுவது மிக நன்று.

30. பிள்ளையார் 15 பெண்களை திருமணம் செய்து கொண்டதாக புராணம் சொல்கிறது. வடக்கு இந்திய புராணங்களில் இக்குறிப்பு காணப்படுகிறது. அந்த 15 தர்மபத்தினிகள் சித்தி, புத்தி, வல்லமை, மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரனம், மங்கலை, கேசினி, சாந்தை, சாருகாசை, சுமத்திரை, நந்தினி, காமதை.




31. ஜப்பான் நாட்டில் வயது முதிர்ந்த ஆணும் பெண்ணும் ஆரத்தழுவிக் கொண்டிருப்பதை போல உருவம் கொண்ட விநாயகர் சிலைகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. இந்த இரு விநாயகர்களையும் வழிபட்டால் நீண்ட காலங்கள் வாழலாம் என்று நம்புகின்றனர்.

32. ஒவ்வொரு சதுர்த்தியன்றும் விநாயகர் கோவிலுக்கு சென்று எட்டுக் கொழுக்கட்டை செய்து தானமளித்தால் வறுமைகள் நீங்கி வளம் பெருகும்.

33. சாத்தூர் அருகே உள்ள போத்திரெட்டிபட்டி கிராமத்தில் உள்ள கட்ட விநாயகர் கோவி லில் தீப்பெட்டி செய்வோர் ஒவ் வொருவரும் தினம் ஒரு தீக்குச்சி வீதம் கொளுத்தி வழிபாடு செய் வார்கள். எரித்த குச்சியை வீட்டில் சேமித்து வைப்பார்கள். விபத்து நேராமல் இவ்விநாயகர் துணை செய்வார் என்பது நம்பிக்கை. நன்னிலத்திற்கு அருகேயுள்ள திருப்பனையூர் என்ற சிவதலத்தில் எழுந்தருளியுள்ள இந்தக் கணபதியை வழிபட்டால் நீங்கள் இறங்கும் பெருஞ் செயலில் உங்களுக்குத் துணையாக இந்தக் கணபதி விளங்குவார்.

34. முதன் முதலாக விநாயகருக்கு கொழுக் கட்டை படைத்து வழிபட்டவர் யார் என்று தெரியுமா? வசிஷ்டரின் மனைவியான அருந்ததி.

35. சுவாமிமலையில் கொங்கு நாட்டு பிறவிக் குருடனுக்கு கண்பார்வை வழங்கி அருள்புரிந்த கண் கொடுத்த விநாயகர் உள்ளார். கண்களில் ஏற்படும் நோய்கள் நீங்க இவரை வழிபடலாம்.

36. வன்னி மரத்தடியில் இருக்கும் விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திர நாட்களில் வழிபாடு செய்து அன்றைய தினம் ஒன்பது கன்னிப் பெண்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் அளித்து வந்தால் மாங்கல்ய தோஷம் அகலும், திருமணத்தடையும் நீங்கும்.

37. நடனமிடும் தோற்றத்தில் உள்ள நர்த்தன விநாயகருக்கு அபிஷேகம் செய்வித்து இனிப்பு நைவேத்யம் வைத்து வழிபட்டு வந்தால் இழந்தவற்றைப் பெறலாம்.

38. அஸ்வினி அல்லது மூலம் நட்சத்திரத்தில் சிவசக்தி விநாயகர் உள்ள ஆலயத்துக்குச் சென்று அலங்காரம் செய்விப்பதுடன் வெள்ளை, நீலம், சிவப்பு மூன்று நிறங்களும் கலந்த வஸ்திரத்தை விநாயகருக்கு அணிவித்து மூன்று வித நைவேத்யங்களாக இனிப்பு, உறைப்பு மற்றும் மோதகத்தை அர்ப்பணித்து வழிபட்டு வந்தால் உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் வந்து சேரும்.

39. கேது திசை நடக்கையில் அதற்குரிய ஏழு ஆண்டுகளிலும் ஆன்மீக நாட்டம் அதிகரிக்குமாம். அச்சமயங்களில் கேதுவுக்கு உரிய தெய்வமாக விளங்கும் விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால் துன்பங்களில் துவளாமல் இன்பமாக அதைக் கடக்கலாம். கேது ஒருவருடைய சுய ஜாதகத்தில் எந்த வீட்டில் இருக்கிறார் என்பதை அறிந்து அந்த திசை நோக்கி இருக்கும் விநாயகரைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் இன்னும் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

40. குழந்தைப் பேறுக்குத் தயாராக இருப்பவர்கள் வல்லபை கணபதிக்கு நைவேத்தியங்கள் படைத்து நல்ல குழந்தையைத் தர வேண்டும் என்று வழிபட்டால் அதன்படி நடக்குமாம். சுவாமி மலையில் முருகன் சந்நிதானத்தில் வல்லபை கணபதியைக் காணலாம்.

41. திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் உள்ள சிவன் கோவிலில் ‘விநாயகர் சபை’ உள்ளது. இத்தகைய சபை தமிழ்நாட்டில் எந்த ஒரு ஆலயத்திலும் இல்லை.

42. நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கன்னடியன் கால்வாய் ஓரத்தில் மிளகு பிள்ளையார் உள்ளார். இவர் மீது மிளகை அரைத்து பூசி வழிபட்டால் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுமாம்.

43. ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகளைப் பெற்றவர்கள் அவர்களுக்குள் சண்டைகள் வராமல் இருக்க விநாயகரை வேண்டிக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

44. இலையினால் விநாயகரை அர்ச்சனை செய்தாலோ, அல்லது வன்னி விநாயகரை சுற்றி வந்து வழிபட்டாலோ தீவினைகள் விலகும் என்பது ஐதீகம்.

45. வில்வம், வேம்பு, அரசு, மந்தாரை, அத்தி, அரை நெல்லி, நாவல், வாகை ஆகிய ஒன்பது விருட்சகங்களுடன் விநாயகர் காட்சி தருவது அபூர்வம், பொதுவாக மேற்குரிய மரங்கள் எல்லாம் மருத்துவக்குணம் வாய்ந்தவை. புத்திரப் பேறுக்காக இம்மரங்களை சுற்றி வந்து வணங்குவது நல்லது.

46. பிள்ளையார், சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஐம்பெரும் தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்வதற்கு கணபதி பஞ்சாயதனம் என்பர். இதில் விநாயகப்பெருமானை ஐந்து மூர்த்திகளில் நடுவில் வைத்து வழிபட வேண்டும்.

47. தேரெழுந்தூரில் உள்ள விநாயகர் திருஞான சம்பந்தருக்கு சிவாலயத்தின் வழி காட்டியதால் இப்பெயரோடு விளக்குகின்றார்.

48. வெள்ளை எருக்கம் வேரால் விநாயகரை பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் செய்து அவருடைய மூல மந்திரத்தால் வழிபட்டு வந்தால் சகல பலனும் கிடைக்கும் என்று ஸ்ரீ பவிஷ்ய புராணம் கூறுகிறது.

49. அடியார்களின் தரித்திரத்தை நீக்கி ஆயுளையும், செல்வத்தையும், உடற்சுகத்தையும் அருள்பவர் ரண மோட்சக்கணபதி ஆவார்.



50. ‘வி’ என்றால் இதற்கு மேல் இல்லை எனப் பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது.

51. கணபதி எனும் சொல்லில் ‘க’ என்பது ஞானத்தை குறிக்கிறது. ‘ண’ என்பது ஜீவர்களின் மோட்சத்தை குறிக்கிறது. ‘பதி’ என்னும் பதம் தலைவன் எனப்பொருள்படுகிறது.

52. விநாயகருக்கு விநாயகி, வைநாயகி, வின்கேஸ்வரி, கணேசினி, கணேஸ்வரி ஐங்கினி எனும் பெண்பால் சிறப்பு பெயர்களும் உண்டு. இந்து மதத்தில் மட்டுமல்ல, பௌத்த, சமண சமயத்தவர்களாலும் சிறப்பாக வழிபடும் சிறப்பும் இவருக்குண்டு.

53. விநாயகர் வழிபாடு இந்தியாவில் மட்டுமல்லாது இலங்கை, பர்மா, கயா, ஜாவா, பாலி, இந்தோனேசியா, சீனா, நேபாளம், திபெத், துருக்கி, மெக்சிகோ, பெரு, எகிப்து, கிரேக்கம், இத்தாலி என பல நாடுகளிலும் பல நூற்றாண்டுகளாக பரவி உள்ளது.

54. சென்னை அடையாறில் உள்ள மத்திய கைலாசம் என்னும் கோவிலில் ஆதியந்த பிரபு விநாயகர் அமர்ந்திருக்கிறார். இவருடைய சிறப்பு ஒரு பாதி கணபதியும், மறுபாதி மாருதியும் இணைந்த ஒரு புதுமையான அமைப்பாகும். இவருக்கு நாமே ஆரத்தி எடுக்கலாம். நம் கையாலேயே இந்த கடவுளுக்கு பூஜை செய்யலாம் என்பதும் சிறப்பு.

55. மும்பையில் கடந்த ஆண்டு சுமார் 2 லட்சம் ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு சுமார் 20 லட்சம் விநாயகர் சிலைகள் வரை வைக்கப்பட்டுள்ளது.

56. தெருவுக்கு தெரு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதால் மும்பையில் பூசாரிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் பெண்கள் பூசாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

57. விநாயகர் சதுர்த்தி விழா கண்காணிப்புக்காக மும்பையில் 4 ஆயிரம் இடங்களில் ரகசிய கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

58. விநாயகப் பெருமான் பெண் வடிவத்தில் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயப் பெருமாள் கோவிலில் காட்சி தருகிறார். இவருக்கு புடவைதான் அணிவிக்கப்படுகிறது. கணேசாயினி என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார்.

59. திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையார் உள்ளார். இவருக்கு பருத்த தொந்தியில்லை. இவர் ஒரு வலம்புரி விநாயகர். கல்லில் தோன்றிய சுயம்பு விநாயகர் ஆவார். சிற்பியின் உளியால் பொள்ளாத (செதுக்காத) பிள்ளையார் இவர். பொள்ளாத பிள்ளையார் பிற்காலத்தில் பொல்லாப் பிள்ளையார் என மாறி விட்டார்.

60. தும்பிக்கை இல்லாத பிள்ளையாரை நன்னிலம் பூந்தோட்டம் அருகே உள்ள இதலைப் பதியில் காணலாம். இங்கு இவர் வலது காலைத் தொங்க விட்டு இடது காலை மடித்து இடது கையை இடது கால் மீது வைத்து வலது கையைச் சற்றுச் சாய்த்து அபய கரமாக விளங்குகிறார்.

61. விநாயகப் பெருமான் வீணை வாசிக்கும் காட்சியை நாம் பவானியில் காணலாம்.

62. மும்பையில் உள்ள மோர்காம் மயூரேசுவரர் கோவிலில் நந்தி தேவரே விநாயகருக்கு வாகனமாக இருக்கிறார்.

63. விநாயகர் புல்லாங்குழல் வாசிக்கும் காட்சியை ஸ்ரீசைலத்தில் காணலாம்.

64. தேவகோட்டையில் உள்ள விநாயகர் காலில் சிலம்புடன் காட்சி தருகிறார். இவருக்கு சிலம்பணி விநாயகர் என்ற பெயர்.

65. கையில் பாம்பைப் பிடித்தபடி விநாயகப் பெருமான் சங்கரன் கோவிலில் காட்சி தருகிறார்.



66. ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயமுத்தூரில் புலியகுளம் பகுதியில் இருக்கிறார். முந்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார்.
190 டன் எடையுள்ள இவர் ஒரே கல்லால் உருவானவர். உயரம் 19.10 அடி, நீளம் 11 அடி அகலம் 10 அடி, ஏணிப்படி மூலம்தான் இவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

67. வேலூரில் சேண்பாக்கத்தில் 11 சுயம்பு விநாயகர்கள் எழுந்தருளியுள்ளார்கள். இவர்கள் தோன்றிய வடிவம் ஓம்கார வடிவத்தில் உள்ளது.

68. புதுவை அண்ணாசாலையில் புற்று மண்ணில் சுயம்புவாக தோன்றிய இந்த பிள்ளையார் பெயர் அக்கா சுவாமிகள் பிள்ளையார்.

69. திருப்பரங்குன்றம் குடவரைக் கோவிலில் விநாயகர் கையில் கரும்புடன் காட்சி தருகிறார்.

70. நரமுக விநாயகருக்கு திருக்கோவில் தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் மட்டும்தான் இருக்கிறது. அவை சிதம்பரம் (தெற்கு வீதியிலும்) திருசெங்காட்டுக்குடியும் ஆகும். நரமுகம் என்பது மனித முகத்தைக் குறிக்கும்.

71. ஊத்துக்குளி அருகே உள்ள அமணேசுவரர் கோவிலில் உள்ள பிள்ளையார் தன்னுடைய வாகனமான பெருச்சாளி மீது நான்கு கைகளுடன் நடனமாடுகிறார்.

72. ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் ஒரே பீடத்தில் ஐந்து விநாயகர் சேர்ந்து காட்சி தருகிறார்கள்.

73. மயில் மீது விநாயகர் அமர்ந்திருக்கும் காட்சியை நாம் மகாராஷ்டிராவில் உள்ள மோர்காம் என்னும் ஊரில் காணலாம். இங்கு இவருடைய திருநாமம் மயூரேசர்.

74. யானை முகமும் புலிக்கால்களும் பெண்ணின் மார்பும் உடைய விநாயகர் வியாக்ரபாத விநாயகர் என அழைக்கப்படுவார். இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள நவக்கிரக மண்டபத் தூணிலும், நாகர்கோவில் அழகம்மன் கோவிலில் உள்ள தூணிலும் காட்சி தருகிறார்.

75. தஞ்சாவூர் சக்கரபாணி கோவிலில் விநாயகர் சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார்.

76. கும்பகோணம் ஸ்ரீநாகேஸ்வரசுவாமி கோவிலில் ஜீரஹர விநாயகர் என்ற திருநாமத்துடன் கணபதி கையில் குடையுடனும் தும்பிக்கையில் அமிர்த கலசத்துடனும் காட்சி தருகிறார்.

77. விநாயகர் தும்பிக்கை ஆழ்வார் என்ற திருநாமத் துடன் பெருமாள் கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.

78. கண் பார்வை கோளாறு உடையவர்கள், சுவாமி மலை முருகன் கோயிலில் உள்ள ‘நேத்ர கணபதி’ எனப்படும் கண்கொடுக்கும் கணபதியை வணங்குகிறார்கள்.

79. அரை அடி உயர விநாயகரை மருதமலை முருகன் கோயில் அடிவாரத்தில் தரிசிக்கலாம். இவர் சுயம்புவாகத் தோன்றியதால் ‘தான்தோன்றி விநாயகர்’ எனப்படுகிறார்.

80. சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்போடியா, மியான்மர், மங்கோலியா, திபெத் ஆகிய நாடுகளிலுள்ள பௌத்த மக்களும் தங்கள் வணக்கத்தில் பிள்ளையாரையும் சேர்த்துக் கொண்டுள்ளனர். சீனாவில் காணப்படும் பல விநாயகர் சிலைகள் 1400 வருடங்கள் பழமை வாய்ந்தவை என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.




81. திண்டிவனம் நெடுஞ்சாலையில் படாளம் கூட் ரோட்டில் அம்ருதயுரி என்ற ஊரில் 8 அடி உயரத்தில் பிரமாண்ட நவக்கிரக விநாயகர் உள்ளார். இவரை வழிபட்டால் அனைத்து கிரக தோஷங்களும் விலகும்.

82. ஈச்சனரி விநாயகருக்கு தினமும் நட்சத்திர அடிப்படையில் அலங்காரம் செய்யப்படுகிறது.

83. திருவாரூரில் ஆயிரம் ஆண்டு கள் பழமை வாய்ந்த சர்க்கரை பிள்ளையார் உள்ளார். திருமண தடை உள்ளவர்கள் இங்கு 108 தீபம் ஏற்றி வழிபடுவது பரிகாரமாக உள்ளது.

84. தஞ்சை மாவட்டம் திருப்பனந்தூரில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் பந்தநல்லூரில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள மரத்துறை கிராமத்தில் இரட்டை விநாயகர் உள்ளார். இந்த இரட்டை விநாயகரை வணங்கினால் விவசாயம் செழிக்கும் என்று விவசாயிகள் நம்புகிறார்கள்.

85. நமது மூலா தாரத்தில் உறங்கும் குண்டலினி சக்தியை விழிப்படைய செய்யும் ஆற்றல் விநாயகர் வழிபாட்டுக்கு உண்டு.

86. பிள்ளையார் பட்டியில் உள்ள விநாயகர் தன் ஒரு கரத்தில் சிவ லிங்கத்தை ஏந்தி இருப்பதை சிறப்பானதாக சொல்கிறார்கள்.

87. திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில் மலையை தூரத்தில் கிழக்கு திசையில் இருந்து பார்த்தால் விநாயகர் சிலை போலவே தெரியும்.

88. விருத்தாசலம் பழமலைநாதர் கோவிலில் பூமிக்கு அடியில் உள்ள விநாயகர் சிலை 18 அடி ஆழத்தில் அமைந்துள்ளார்.

89. சேலம் மாவட்டம் ஆத்தூரில் தலையாட்டி விநாயகர் உள்ளார்.

90. ஆம்பூர் வேம்புலி அம்மன் ஆலயத்தில் உள்ள விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயகர்சதுர்த்தி தினத்தன்று பிரமாண்ட லட்டு தயாரித்து படைப்பதை பக்தர்கள் வழக்கத்தில் வைத்துள்ளனர்.



91. நாகை மாவட்டம் நரிமணத்தில் உள்ள விநாயகரை தலையில் ஒரு குட்டு வைத்து விட்டே வழிபாடு செய்கிறார்கள்.

92. நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் உள்ள இரட்டை விநாயகர்கள் இருவரும் எப்போதும் மாப்பிள்ளை கோலத்திலேயே அருள்பாலிக்கிறார்கள்.

93. திருவாரூர் ஆலயத்தூண் ஒன்றில் மூலதார கணபதி உள்ளார். இவரை வழிபட்டால் நமக்குள் இருக்கும் அரிய சக்திகள் வெளிப்படும் என்பது ஐதீகம்.

94. ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி தினத்தன்று 16 கன்னிப்பெண்களுக்கு ரவிக்கை துணி, வளையல், மஞ்சள், குங்குமம் கொடுத்து வன்னி மரத்தடி விநாயகரை வழிபட்டால் திருமண தடைகள் அகலும்.

95. நெல்லி மரத்தடியில் உள்ள விநாயகரை வழிபட்டால் பெண் குழந்தைகளிடம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

96. மற்ற கடவுள்களை விட விநாயகர் பலன்களை முந்தி வந்து தருபவர் ஆவார். எனவேதான் அவரை முந்தி முந்தி விநாயகர் என்கிறார்கள்.

97. திண்டுக்கல் கோபால சமுத்திரகுளக்கரையில் உள்ள 108 விநாயகர் கோவிலில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட 32 அடி உயர விநாயகர் சிலை நிறுவப்பட்டது.

98. ஓம் வக்ரதுண்டாய ஹீம் என்பது தான் சட்டாட்சர மந்திரம் இந்த மந்திரத்தை உச்சரித்து விநாயகரை வணங்கினால் பகை வரை எளிதாக வென்று விடலாம்.

99. ராஜராஜ சோழன் சிறந்த சிவ பக்தர். இருப்பினும் அவர் விநாயகரை வணங்கத் தவறியதில்லை. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் மேற்கு மூலையில் திருச்சுற்று மாளிகையில் உள்ள சின்ன ச்சின்ன கோவிலுக்குள் இருக்கும் விநாயகர் களை தான் அவர் வணங்கி வந்தார்.

100. புண்ணியத் தைத்தேடி காசி மாநக ருக்கு செல் பவர்கள் அங்குள்ள அனைத்து விதமாக ஆலய வழிபாட்டுச் சம்பிரதாயங்கள் சடங்குகளை முடித்துக்கொண்டு வரும் போது முடிவில் ஒரு சிறிய ஆலயத்தில் உள்ள டுண்டி ராஜகணபதியை வணங்கினால் தான் யாத்திரை முற்றுப் பெறுவதாக நம்புகின்றனர்.




வாசியே மூலம் வாரண ஞானம்....அங்குசம்  தன்னை அடக்கும் உபாயம்.  நெடும் நிதானமாக  மூச்சு.பூரண வாசி. ஒற்றை கொம்பு செறுக்கற்ற ஏக ஞானம். பெருங்காது கலை பல கற்றல். பெறுவயிறு எதையும் சீரணித்தல்.சிறுகண்கள் பார்வை மயக்கம் தீர்த்தல் என தினமொரு செய்தி சொல்லும் கணபதியை நாளும் போற்றுவோம்.



புராணக் கதைகள் தெய்வங்களை மையமாகக் கொண்டு நன்னெறிப் பண்புகளையும், ஆன்மிக தத்துவங்களையும் மக்களிடம் எளிதான முறையில் எடுத்துரைப்பதற்காக இயற்றப்பட்டவை ஆகும். அந்த வகையில் தடைகளை நீக்கும் தெய்வமான கணபதியைக் கொண்டு ஓர் அருமையான பண்பை நமக்கு எடுத்துக் கூறும் நன்னெறி கதை இது.

செல்வங்கள் அனைத்தும் அளவில்லாமல் பெற்றிருந்த குபேரனுக்குத் தன்னிடம் இருந்த செல்வங்களைப் பற்றி ஒரே பெருமை. இந்தப் பிரபஞ்சத்தில் தன்னைப் போல் செல்வச் செழிப்புள்ளவர்கள் யாரும் இல்லை என்ற கர்வம் தலை தூக்கியது. தன்னிடம் இருக்கும் செல்வங்கள் அனைத்தையும் இறைவன் சிவபெருமானை அழைத்து வந்து காட்டி, அதில் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும் என எண்ணினான் குபேரன்.



ஒருநாள் தன் எண்ணத்தைச் செயல்படுத்திட கைலாயத்துக்குச் சென்று சிவபெருமான், பார்வதி தேவி ஆகியோரை வணங்கினான். அவர்களைத் தன் இல்லத்திற்கு ஒரு முறை வந்து விருந்து சாப்பிட்டுச் செல்லும்படி அழைத்தான். குபேரனது உள் நோக்கத்தைப் புரிந்துகொண்ட சிவபெருமான், "என்னால் உடனடியாக அங்கு வர முடியாது; நீ வேண்டுமானால் என் மகன் கணபதியைத் தற்போது அழைத்துச் செல். அவனுக்கு விருந்தளித்துத் திருப்திபடுத்தி அனுப்பி வை. பின்னொரு நாளில் நானும் பார்வதியும் உன் இல்லத்திற்கு வந்து விருந்து சாப்பிடுகிறோம்" என்றார்.
குபேரனும் அதற்குச் சம்மதித்து சிவபெருமானிடம், “விநாயகருக்குத் தேவையான உணவளித்து அவரை மகிழ்ச்சிப்படுத்தி அனுப்புகிறேன்” என்று வாக்களித்து விநாயகரைத் தன் இல்லத்திற்கு அழைத்து வந்தான். விநாயகரைத் திருப்திப்படுத்தும்படியாகவும், குபேரனின் செல்வச் செழிப்பை அவர் அறிந்து கொள்ளும்படியாகவும் பல்வேறு வகையான உணவு வகைகள் ஆடம்பரமாகச் செய்யப்பட்டன.

விநாயகர் விருந்துண்ணுவதற்காக வந்து அமர்ந்தார். உணவு வகைகள் ஒவ்வொன்றாகப் பரிமாறப்பட்டன. விநாயகரும் பரிமாறப்பட்ட உணவு ஒவ்வொன்றையும் விரும்பிச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தார். குபேரன் அவர் சாப்பிடுவதை ஆச்சரியத்துடனும், அச்சத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தான்.



குபேரன் அச்சத்தின்படியே, அவன் வீட்டில் தயார் செய்யப்பட்ட உணவு அனைத்தும் காலியாகி விட்டது. குபேரன் தன் வீட்டிற்கு அருகில் இருந்த அனைத்துக் கிராமங்களிலுமிருந்து உணவை வரவழைத்துக் கொடுத்தான். இருப்பினும் விநாயகரின் பசி அடங்கவில்லை. பசி அடங்காத விநாயகர் குபேரன் வீட்டிலிருந்த விலை மதிப்புமிக்க பொருட்களையெல்லாம் விழுங்க தொடங்கினார். இப்படியே போனால் வீட்டில் ஒன்றுமே மிஞ்சாது என்ற நிலை குபேரனுக்கு உண்டாயிற்று. குபேரன் எவ்வளவு முயன்றும் விநாயகரைத் தடுக்க முடியவில்லை.




பதற்றமடைந்த குபேரன், "ஈஸ்வரா அபயம்! அபயம்!" என கைலாயத்திற்கு ஓடினான். சிவபெருமானிடம் தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினான். அப்போது சிவபெருமான் அவனிடம்,"குபேரா, உம்மிடமிருக்கும் தான் ஒருவனே மிகப்பெரும் செல்வந்தன் என்கிற கர்வத்தை விட்டுவிட்டு விநாயகனுக்கு ஒரு கைப்பிடி சாதம் கொடு, அவன் பசி அடங்கிவிடும்" என்றார். தன் தவற்றை உணர்ந்த குபேரன் தன் கர்வத்தை விட்டுவிட்டு ஒரு பிடி சாதத்தை விநாயகருக்கு அளித்தான். அதைச் சாப்பிட்ட விநாயகரின் பசி அடங்கியது. குபேரனின் கர்வமும் காணாமல் போனது.






இந்த கதையில் ஏராளமான தத்துவங்கள் அடங்கியுள்ளன.

1) நாம் எப்போதும் நம்மிடம் இருக்கும் பொருள் மற்றும் அறிவு ஆகிய இரண்டையும் கொண்டு கர்வம் கொள்ளக் கூடாது. அவற்றைக் கொண்டு மற்றவர்களுக்கு நன்மை விளைவிக்க வேண்டும்.

2) அதேபோல நம் செல்வ வளத்தை ஊரறிய செய்வதற்காக தெய்வங்களுக்கு பலவகை பதார்த்தங்களை படைத்தலை விட, உள்ளன்போடும் தூயபக்தியோடும் ஒருபிடி சாதம் படைத்தாலும் அதுவே நிறைவானது.


இத்தகைய புராண கதைகளின் பால் பற்றுதல் கொள்ளாமல், அதன் தத்துவங்களை உள்வாங்கி கொண்டு செயல்படுதலே சாலச் சிறப்பாகும். மலரின் எழில்கண்டு வண்டு மயங்கினாலும் அது மலரிலுள்ள தேனைத் தான் பருகும். அதுபோல புராண கதைகளின் சுவாரசியத்தில் மயங்கினாலும் அதன் ஆழ்ந்த தத்துவங்களை உணர்வதே மிக முக்கியம்.


திரு.அரவிந்த் ஜனார்த்தனன் வீட்டில் எழுந்தருளும் விநாயகர்


திருமதி.பரிமளம் அவர்களின் இல்லத்திலிருந்து 



திருமதி.பரிமளம் அவர்களின்  தெருவில் வைத்து இருக்கும் விநாயகர்.





                                                              இது..என் வீட்டில் இருந்து....

               
                       திரு.சந்திரசேகரன் வீட்டின் விநாயகர் அருள்.நன்றி திரு.சந்திரசேகரன்

இதோ.மும்பையில் இருந்து விநாயகர் தரிசனம்,பட்சணம் வகைகள்.





இதோ நம் நண்பர் திரு.கணபதி சுப்ரமணியன்  அனுப்பி வைத்த விநாயகர்.செம மாடர்ன் இல்லையா ?



நம் நண்பர் திரு.பாலாஜி கணேசன் வீட்டு நாயகன்




பெரம்பலூர் விநாயகர்.திரு.சதீஷ் குமார் வீட்டிலிருந்து 




பெரம்பலூர் விநாயகர் தரிசனம். நன்றி திரு.சதீஷ் குமார்


மதுரை ரயில்வே ஸ்டேஷன் வெளியே 


மதுரை விநாயகர் தரிசனம் 




மதுரை அருள்மிகு ஆலால சுந்தர விநாயகர் திருக்கோவில் தரிசனம்.




மேலே நீங்கள் காண்பது கூடுவாஞ்சேரியில் இருந்து விநாயகர் அருள்.


அருமையான முயற்சி.வீட்டிலிருந்த படியே அன்பர்களின் வீட்டு விநாயகரை அனைவரும் தரிசித்தோம். விநாயக தரிசனம் பெற உதவிய திரு.அரவிந்த் ஜனார்தனன் திரு.சந்திரசேகரன், திரு.கணபதி சுப்ரமணியன், திரு.பாலாஜி கணேசன்,திரு.சதீஷ்குமார் மற்றும் திருமதி.ரமா சங்கர், திருமதி.பரிமளம் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

சித்தர்கள் போற்றும் கணபதியை,வினை தீர்க்கும் நாயகனை கீழே உள்ள நிலையில் சில கோவில்களில் கண்டோம்.இதன் பொருள் உணர வேண்டுகின்றோம்.யாருக்காவது தெரிந்தால் பகிருங்கள்.



இனிவரும் பதிவுகளில் விநாயகர் அகவல் பாடுவோம்.

முந்தைய பதிவுகளுக்கு:-

விநாயகர் சதுர்த்தி செய்தி - மண(ன)ப் பொருத்தம்http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_78.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர்http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html