இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றுமில்லை!
மண(ன)ப் பொருத்தம் என்றொரு தொடர்பதிவினை இந்த விநாயகர் சதுர்த்தி அன்று ஆரம்பித்தோம்.அதன் தொடர் பதிவாய் இந்த பதிவைத் தர குருவருள் வழி செய்துள்ளது.இந்த பதிவினைப் படிக்கும் நண்பர்கள் அனைவரும், தம் வாழ்க்கைத் துணையோடு மனவளக்கலை மன்றம் / அறிவுத்திருக்கோவில் சென்று, இந்த மனைவி நல வேட்பு நாள் நிகழ்வில் பங்கு பெறுங்கள். மேலும் வாழ்க்கைத் துணையைப் பற்றிய தங்கள் பார்வையை மாற்றுங்கள்.உங்களுடைய அகத்தில் வாழ்க்கைத்துணையைப் போற்றுங்கள்.அதுவே இந்த வாழ்வின் ஆதாரம்.
நன்றி சொல்ல வேண்டும். அந்த நன்றி நவிழலின் தான் வாழ்வின் புதிய கண்ணோட்டத்தை நீங்கள் உணர முடியும்.இதற்காகவே ஒவ்வொரு ஆகஸ்ட் 30 ஆம் தேதி ‘ மனைவி நல வேட்பு நாள்’ உலகெங்குமுள்ள மனவளக்கலை அன்பர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.“கணவன் – மனைவி உறவு” பற்றியும், சிறந்த தம்பதி எப்படி இருக்க வேண்டுமென்றும் அருட்தந்தை அழகாக விவரித்துள்ளார்.
இந்த உலகில் பெற்ற தாய் தந்தைக்கு அடுத்தபடி ஆறுதல் தருகின்ற, அக்கறைப்படுகின்ற உறவு கணவனுக்கு மனைவியும்,மனைவிக்கு கணவனும் தான்.அதனால் தான் தாய்க்குப் பின் தாரம் என்று சொல்லி வைத்தார்கள்.சும்மாவா சொன்னாங்க நம் பெரியவங்க.ஆண்,பெண் உறவுகளில் நிலவும் ஒழுக்கத்தின் மூலமே உயர்ந்த நாகரிகம் உண்டாகும். இந்த ஒழுக்கத்தை பாதுகாக்கும் கவசமே திருமணமாகும். ஆனால் இன்று நடக்கும் திருமணங்கள் பொருளை வைத்து அல்லவா நடக்கின்றது.இதனை நாம் சரி செய்ய சீர் தூக்கி பார்க்க வேண்டும். நடந்த திருமணங்களில் இணைந்த மனங்கள் தான் நாம் சரி செய்ய வேண்டியது.
ஓவ்வொரு கணவன் – மனைவி உறவை உயிரிலும் மேலானதாக மதித்துப் போற்ற வேண்டும்.
உடல், பொருள், ஆற்றல் என்ற மூன்றையும் ஒருவருக்கொருவர் மனதார அர்ப்பணித்து, இன்ப, துன்பங்களில் பங்கு கொண்டும் வாழும் பெருமை கணவன், மனைவி உறவில் தான் அதிகமாக அடங்கியுள்ளது.தமது பண்பாட்டின்படி பார்த்தால்,பெண்கள் இயற்கையிலேயே தியாகிகள் என்று சொல்லலாம். கணவன் வீட்டுக்கு வரும்போதே தாய் தந்தை, பிறந்த வீட்டுச் சூழ்நிலை எல்லாவற்றையும் துறந்துவிட்டுத்தான் வருகிறார்கள். திருமண வாழ்ககையைத் தொடங்குவதற்கு முன்பே, துறந்து வரக்கூடிய ஒரு இயல்பு அவர்களுக்கு வந்துவிடுகிறது.இப்படி எல்லாவற்றையும் துறந்து விட்டு இங்கே அன்பு நாடி வந்த பெண்ணுக்கு ஆதரவு கொடுக்க வேண்டியது அவசியம். இந்த உண்மையை ஒவ்வொரு கணவனும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
ஒரு மனைவி என்ற மதிப்பு மட்டுமல்ல.. பெண்மையும், தாய்மையும்
ததும்பும் எல்லோருக்கும் தர வேண்டிய அதே மதிப்பு நம் வீட்டுக்கு வாழ
வந்த பெண்ணுக்கும் உண்டு என்பதை அறிந்து கொள்ள வேண்டும். கணவன்- – மனைவி
உறவில் இந்தப் பண்பாடும் தியாகமும் இருந்தால் போதும் அதைவிடப் பெரிய
இன்பம் இந்த உலகத்தில் வேறு இருக்க முடியாது.ஒருவருக்கொருவர் சச்சரவு இல்லாத
குடும்பத்தில்தான் குழந்தை நன்றாக இருக்கும். பிரச்சினை உள்ள
குடும்பங்களில் அடக்கு முறைக்கு குழந்தைகளின் சுதந்திரம் பறிபோகும்.
இந்தப் போராட்டத்தால் குழந்தையின் உடல்நலமும்,மனநலமும் கெடும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும் உதவி செய்தும் வாழ்வதுதான் திருமண பந்தம் என்பதைப் புரிந்து கொண்ட வீடுகளில் இந்தப் போராட்டம் இல்லை.விட்டுக்கொடுப்பதற்குப் பதிலாக, ஒவ்வொருவரும் ஒரு பிடியைப் பிடித்துக் கொண்டு “என் கருத்துதான் உயர்ந்தது” என பிடிவாதம் காட்டினால் பிணக்குதான் வரும்.
கணவனும்,மனைவியும் நட்பின் மதிப்பை உணர்ந்து அதைக் காப்பாற்ற வேண்டிய அவசியத்தை நினைவில் வைத்துக் கொண்டால், மற்ற விஷயங்களில் எந்தக் குறையும் இருக்காது.
இதற்காக எப்போதும் எல்லாவற்றையும் பாராட்டிக்கொண்டு இருக்க
வேண்டும். என்பதில்லை. அப்படிச்செய்து கொண்டிருந்தால் அது வெறும்
முகத்துதி ஆகி மதிப்பு இழந்து விடும். உள்ளதைப் பாராட்டினாலே
போதும். சுருக்கமாக ருசியாக மனைவி சமைத்துப் பரிமாறினால், “நன்றாக இருக்கிறது”
என்று சொல்லலாம். இல்லையா? பலருக்கு இதைச் சொல்ல வராது. .மாற்றிக்
கொள்ள வேண்டும். காலை முதல் மாலை வரை நல்ல விஷயங்களைப் பாராட்டிக் கொண்டே
இருங்கள். அதுவே பண்பாட்டின் உயர்வு.
அந்த நினைப்பில் இருக்கும்போது அவருக்கு கணவனைப் பாராட்டத்
தோன்றாது. எனவே இதைக் குறையாகவும் எடுத்துக்கொள்ளக் கூடாது.
அலட்சியம் செய்வதாகவும் நினைக்கக் கூடாது.
மனைவி நல வேட்பு நாள்(AUG 30) உலகில் இதுவரை தந்தை நாள் (Father's day), தாயார் நாள் (Mother's day) தனித்தனியே கொண்டாடுகிறார்கள். சுமங்கலி பூஜை என்றளவிலே கணவன் நல வேட்பு நாளும் கொண்டாடுகின்றார்கள். மனைவி நல வேட்பு நாள் எந்த ஊரிலேயும் இல்லை. இது ஒரு நன்றி கெட்டதனம் இல்லையா ? இது என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. ஆனாலும், ஒருவர் தலையிட்டுச் செய்தால் மட்டும் போதாது. இது நாடு முழுவதும் ஆண் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். பெண்மையின் பெருமையை உணர வேண்டும் என்ற மனதோடு ஆராய்ச்சி செய்த போது இந்த ஆண்டு என் மனைவியினுடைய (அருள் அன்னை லோகாம்பாள்) பிறந்த நாள் 30.8.ல் வந்தது. அன்பர்களிடம் சொன்னேன். என் மனைவியின் பிறந்த நாளையே வைத்துத் தொடங்கி மனைவி நல வேட்பு நாள் கொண்டாடலாம். இதையே வைத்துக் கொண்டு, இது முதல் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30 ஆவது நாளை மனைவி நல வேட்பு நாளாகக் கொண்டாடுவது நம் சங்கத்தின் வழக்கமாக வரட்டும். பிறகு உலக நாடுகளிலும் பரவட்டும் என்றேன். ஆண்களும், பெண்களும் உற்சாகமாக அதை ஏற்றுக் கொண்டு பல இடங்களில் கொண்டாடுகிறார்கள். நீங்களும் உங்கள் வாழ்க்கைத் துணையை நன்றியோடு வாழ்த்தி இக்கவியைச் சொல்லி மகிழுங்கள்.
பெற்றோரைப் பிறந்தகத்தைப் பிறந்த ஊரை விட்டுப்
பிரிந்து வந்து, பெருநோக்கில் கடமையறம் ஆற்றப்,
பற்றற்ற துறவியெனக் குடும்பத்தொண்டேற்றுப்
பண்பாட்டின் அடிப்படையில் எனைப் பதியாய்க் கொண்டுஎன்
நற்றவத்தால் என் வாழ்க்கைத் துணையாகிப் பெண்மை
நல நோக்கில் அன்போடு கருணை இவை கொண்டு
மற்றவர்க்கும் தொண்டாற்றும் மாண்புமிக்க எந்தன்
மனைவியை நான் மதிக்கின்றேன் வாழ்த்தி மகிழ்கின்றேன்.
மனைவியர் தினமான (30 ஆகஸ்ட் ) பெற்றோரை, பிறந்த ஊரை,.உறவுகளை பிரிந்து, உங்களுக்கு தொண்டாற்றி, இனிமையாக, இன்பமாக உங்களுக்காக தன்னையே முழுமையாக அர்ப்பணித்து வாழும் அன்புக்கும், பாசத்துக்கும் உரிய மனைவியை ஒவ்வொரு கணவரும் மதித்து, வாழ்த்தி உங்களின் மாசற்ற அன்பினால் அவர்களை நனைத்திடுங்கள்.இல்லற நோன்பை,நல்லறமாக்க மனைவி நல வேட்பு நாளில் பங்கு பெறுவோம்.
மண(ன)ப் பொருத்தம் என்றொரு தொடர்பதிவினை இந்த விநாயகர் சதுர்த்தி அன்று ஆரம்பித்தோம்.அதன் தொடர் பதிவாய் இந்த பதிவைத் தர குருவருள் வழி செய்துள்ளது.இந்த பதிவினைப் படிக்கும் நண்பர்கள் அனைவரும், தம் வாழ்க்கைத் துணையோடு மனவளக்கலை மன்றம் / அறிவுத்திருக்கோவில் சென்று, இந்த மனைவி நல வேட்பு நாள் நிகழ்வில் பங்கு பெறுங்கள். மேலும் வாழ்க்கைத் துணையைப் பற்றிய தங்கள் பார்வையை மாற்றுங்கள்.உங்களுடைய அகத்தில் வாழ்க்கைத்துணையைப் போற்றுங்கள்.அதுவே இந்த வாழ்வின் ஆதாரம்.
ஓவ்வொரு ஆணும் தனது வாழ்க்கைத்துணையை நன்றியோடு வாழ்த்த ‘ மனைவி நல வேட்பு நாள்’ என்ற கொண்டாட்டத்தை அறிமுகம் செய்தவர் அருட் தந்தை வேதாத்திரி மகரிஷி.உலகிலே தந்தையர் தினம், அன்னையர் தினம், ஆசிரியர் தினம்,
குழந்தைகள் தினம், காதலர்கள் தினம், நண்பர்கள் தினம்,மகளிர் தினம்,
முதியோர் தினம், ஊனமுற்றோர் தினம் என தனித்தனியே கொண்டாடி
மகிழ்கின்றனர்.சுமங்கலி பூஜையை கணவன் நலனுக்காக மனைவியரும் வேண்டுகிறார்கள் .குடும்பத்துக்காக தன்னையே அர்ப்பணிக்கும் மனைவிக்கு நன்றி சொல்ல
வேண்டாமா?
நன்றி சொல்ல வேண்டும். அந்த நன்றி நவிழலின் தான் வாழ்வின் புதிய கண்ணோட்டத்தை நீங்கள் உணர முடியும்.இதற்காகவே ஒவ்வொரு ஆகஸ்ட் 30 ஆம் தேதி ‘ மனைவி நல வேட்பு நாள்’ உலகெங்குமுள்ள மனவளக்கலை அன்பர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.“கணவன் – மனைவி உறவு” பற்றியும், சிறந்த தம்பதி எப்படி இருக்க வேண்டுமென்றும் அருட்தந்தை அழகாக விவரித்துள்ளார்.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
என்று கவிஞன் அழகாக வர்ணித்துள்ளான். அந்த வரத்தை நாம் எப்படி பயன்படுத்துகின்றோம் என்பதில் தான் வாழ்வின் இன்பம் காத்திருக்கின்றது.ஆனால் நாம் அந்த வரத்தை சாபமாக்கி..சொல்ல முடியா துயரில் வாழ்ந்து வருகின்றோம்.
இரு மனங்கள் இணைகிற வைபோகமே திருமணம்.
இது மனித வாழ்வில் புனிதம் நிறைந்த உறவின் திறவுகோல். ஒருவருக்கொருவர்
ஆதரவாகவும், ஆதாரமாகவும் அமையும் இந்த உறவில்தான் நிறைவு வரும்.
ஞானம் வரும்.ஒரு ஆணின் வாழ்வு பெண்ணின் வருகையாலும்,
ஒரு பெண்ணின் வாழ்வு ஆணின் வருகையாலும் இனிமை காண வேண்டும்.: இன்னல்
காணக் கூடாது. கணவனும், மனைவியும் ஒருவரை ஒருவர் மனதார விரும்ப
வேண்டும்.
முழுமையாக நம்ப வேண்டும்..இருவரின் ரசனையும் ஒரே மாதிரியாக இருக்க
வேண்டிய அவசியமில்லை .ஒருவர் ரசனையில் ஒருவர் குறுக்கிடாமல்
இருக்கும் பெருந்தன்மையே போதும்.இங்கே தான் பிரச்சினை ஆரம்பிக்கின்றது.எனக்குப் பிடித்தது தான் உனக்கு பிடிக்க வேண்டும் என்ற ஒரு மாய மன நிலையை அவர்கள் மீது திணிக்கின்றோம்.திணிப்பதை நிறுத்திவிட்டு ,அவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.
இந்த உலகில் பெற்ற தாய் தந்தைக்கு அடுத்தபடி ஆறுதல் தருகின்ற, அக்கறைப்படுகின்ற உறவு கணவனுக்கு மனைவியும்,மனைவிக்கு கணவனும் தான்.அதனால் தான் தாய்க்குப் பின் தாரம் என்று சொல்லி வைத்தார்கள்.சும்மாவா சொன்னாங்க நம் பெரியவங்க.ஆண்,பெண் உறவுகளில் நிலவும் ஒழுக்கத்தின் மூலமே உயர்ந்த நாகரிகம் உண்டாகும். இந்த ஒழுக்கத்தை பாதுகாக்கும் கவசமே திருமணமாகும். ஆனால் இன்று நடக்கும் திருமணங்கள் பொருளை வைத்து அல்லவா நடக்கின்றது.இதனை நாம் சரி செய்ய சீர் தூக்கி பார்க்க வேண்டும். நடந்த திருமணங்களில் இணைந்த மனங்கள் தான் நாம் சரி செய்ய வேண்டியது.
ஓவ்வொரு கணவன் – மனைவி உறவை உயிரிலும் மேலானதாக மதித்துப் போற்ற வேண்டும்.
உடல், பொருள், ஆற்றல் என்ற மூன்றையும் ஒருவருக்கொருவர் மனதார அர்ப்பணித்து, இன்ப, துன்பங்களில் பங்கு கொண்டும் வாழும் பெருமை கணவன், மனைவி உறவில் தான் அதிகமாக அடங்கியுள்ளது.தமது பண்பாட்டின்படி பார்த்தால்,பெண்கள் இயற்கையிலேயே தியாகிகள் என்று சொல்லலாம். கணவன் வீட்டுக்கு வரும்போதே தாய் தந்தை, பிறந்த வீட்டுச் சூழ்நிலை எல்லாவற்றையும் துறந்துவிட்டுத்தான் வருகிறார்கள். திருமண வாழ்ககையைத் தொடங்குவதற்கு முன்பே, துறந்து வரக்கூடிய ஒரு இயல்பு அவர்களுக்கு வந்துவிடுகிறது.இப்படி எல்லாவற்றையும் துறந்து விட்டு இங்கே அன்பு நாடி வந்த பெண்ணுக்கு ஆதரவு கொடுக்க வேண்டியது அவசியம். இந்த உண்மையை ஒவ்வொரு கணவனும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
இந்தப் போராட்டத்தால் குழந்தையின் உடல்நலமும்,மனநலமும் கெடும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும் உதவி செய்தும் வாழ்வதுதான் திருமண பந்தம் என்பதைப் புரிந்து கொண்ட வீடுகளில் இந்தப் போராட்டம் இல்லை.விட்டுக்கொடுப்பதற்குப் பதிலாக, ஒவ்வொருவரும் ஒரு பிடியைப் பிடித்துக் கொண்டு “என் கருத்துதான் உயர்ந்தது” என பிடிவாதம் காட்டினால் பிணக்குதான் வரும்.
கணவனும்,மனைவியும் நட்பின் மதிப்பை உணர்ந்து அதைக் காப்பாற்ற வேண்டிய அவசியத்தை நினைவில் வைத்துக் கொண்டால், மற்ற விஷயங்களில் எந்தக் குறையும் இருக்காது.
ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி
இருவரின் உறவினர்களும்; விருந்தினர்களாக வரவாய்ப்புகள் உண்டு.
அவர்களை ஒத்த மதிப்போடு இருவரும் உபசரிப்பது கணவன் – மனைவி இடையே
அன்பு வளரச் செய்யும். எளிய உணவேயாயினும் விருந்தினரை உபசரிப்பதில்
இன்முகம் காட்டுங்கள்.
‘இறைவனே மனைவி வடிவத்தில் வந்து
எனக்குத் துணையாக இருக்கிறான்.’ என கணவன் நினைக்க வேண்டும். மனைவியும்
கணவனை இப்படி கடவுளின் வடிவமாகவே தனக்கு உறவாகி வந்ததாக நினைக்க
வேண்டும். இப்படி ஒருவரிடம் இன்னொருவர் தெய்வநிலையைக்
கண்டுவிட்டால் போதும்.எத்தனை துன்பங்கள் வந்தாலும் அவற்றை சமாளிக்கும் வலிமை கிடைக்கும்.
இல்லற வாழ்க்கையில் யாரும் அனுபவித்து இருக்காத மலர்ச்சி கிடைக்கும்.
மனித இனம் வியப்பானது. ஒரு பொருளை
விரும்பினால், அதை அடைவதற்கு முன்பு அது பற்றி பல நன்மைகளையும்,
மேன்மைகளையும் கற்பனை செய்துகொண்டு இன்பம் அடையும். ஆனால், அதை
அடைந்தபிறகு, எப்போதும் குறைகளைக் கண்டுபிடித்து சோர்ந்து போகும். இது உண்மை தானே.நீங்கள் பல விஷயங்களில் இதை உணர்ந்திருப்போம்.வாழ்க்கைத் துணை விஷயத்தில் சொல்லவே வேண்டாம்.கணவன் – மனைவி உறவில் முக்கியமாக
தவிர்க்க வேண்டியது இதைத்தான். உங்கள் துணையிடம் இருக்கும் நல்ல
விஷயங்களையும், உயர்ந்த குணங்களையும் பாராட்டுங்கள். குறைகளை மனதை
புண்படுத்தாமல் எடுத்துச் சொல்லி நிறைவு செய்ய முயற்சியுங்கள். வாழ்வு
வளம் பெறும், குடும்பம் தழைத்தோங்கும்.
உலகத்திலேயே நட்பு மிக மிகச் சிறந்தது.:
பயனுடையது. அதிலும் கணவன் – மனைவி நட்பு பற்றி சாதாரணமாகச்
சொல்லிவிட முடியாது. புனிதமான உறவில் தோன்றிய உன்னதமான நட்பு.
இருவருடைய வாழ்க்கையும் மேன்மை பெறவும், குடும்பம் வளர்ச்சி
பெறவும், இந்த நட்பே பிரதானமாக தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட
குடும்பத்தில் வளரும் குழந்தைகள் எத்தகைய நற்பண்புகளுடன் திகழும்
என்பதை நினைத்துப் பாருங்கள்!
கணவனை மனைவியும், மனைவியை கணவனும்
பாராட்ட வேண்டியது மிக மிக அவசியம். .சிறப்பாக எதையாவது செய்தாலும்,
உயர்வான பண்புகளை வெளிப்படுத்தினாலும் மனம்திறந்து
பாராட்டுங்கள். இது அன்பையும், நட்பையும் இறுக்கமாக்கும்.ஆனால் நம்மில் எத்தனை பேர் இப்படி பாராட்டுகின்றோம் என்று தெரியவில்லை.உதாரணத்திற்கு உணவு பரிமாறும் நிகழ்வே போதும். அன்றைய காலத்தில்.ஆம் அது அப்படி மாறி விட்டது. உணவை சமைத்து,பரிமாறி, கணவன் உண்டு முடிக்கும் வரை,கூடவே இருப்பார்கள்.ஆனால் இன்று அப்படி இல்லை.சரி விசயத்திற்கு வருவோம்.நீங்களே உணவை தட்டில் எடுத்து போட்டு சாப்பிட்டாலும்,சாப்பிட்டு முடித்த பின்பு, மனைவியிடம் சென்று,இன்றைய உணவு - அருமையாக இருந்தது.சாம்பார் சூப்பர் என்று சொல்லிப் பாருங்கள். அடுத்த நாள் முதல் சமையலில் இன்னும் சுவை மிகும்.ஆரோக்கியம் அதிகரிக்கும்.
சில குடும்பங்களில் கணவனோ, மனைவியோ
பலரால் பாராட்டப்படும் பெருமைக்குரிய சாதனையாளராக இருக்கலாம்.
இப்படி ஊரே தங்களைப் பாராட்டும்போது, தங்கள் வாழ்க்கைத் துணையும்
பாராட்டப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், அப்படி
நினைப்பவர்கள் ஒரு உண்மையை உணர வேண்டும்.தன் கணவரை ஊரே பாராட்டும்போது அதில் சந்தோஷமும், பூரிப்பும்
அடைந்திருப்பார் மனைவி. கணவனும், மனைவியும் இரண்டு உடல்களாகப்
பிரிந்திருக்கும் ஒற்றை உயிர்தான் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கும்.
கணவனுக்குக் கிடைக்கும் பாராட்டு தனக்கும் சொந்தமானதே என்ற பூரிப்பில்
திளைத்திருப்பார்.
இதேபோல இன்னொரு விஷயத்தையும் புரிந்து
கொள்ள வேண்டும். தாங்கள் சொல்லும் கருத்து சரியானதாக இருந்தாலும், அது
எத்தனை உயர்வானதாக இருந்தாலும், உங்கள் வாழ்க்கைத்துணை ஒப்புக்கொள்ளா விட்டால் அதை ஒதுக்கிவைத்து விடுங்கள். அவர் ஏற்றுக்கொள்ளும்வரை
காத்திருங்கள். குடும்ப அமைதியை இழந்துவிட்டுப் பெறும் எந்த
விஷயத்தாலும் பயன் இல்லை.
பெண்மையைப் போற்றி பணிந்து புகழ்ந்து
வாழ்ந்த மனிதன் எப்போதும் கெட்டதில்லை. பெண்ணினத்தை மதிக்காத தனி
மனிதனோ,சமுதாயமோ உயர்வடைந்ததாக சரித்திரம் இல்லை. எந்தச் சமுதாயம்
பெண்மையை போற்றி அவர்களுக்கு மதிப்பளித்து வாழ்கிறதோ அந்த
சமுதாயம்தான் அறிவிலும்,ஆன்மீகத்திலும் சிறப்புற்று விளங்கும்.இதோ பெண்கள் நுழையாத ஆன்மிகத்தில், அவர்களை மதித்து அவர்களுக்காக ஒரு நாளை உருவாக்கி கொடுத்த எம் குருபிரான் யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்களையும், அன்னை லோகாம்பாள் அவர்களையும் மதித்து போற்றி மகிழ்கின்றோம்.
இல்லற நோன்பு
அன்பு ஊற்றாம் இல்லறத்தில் ஆண்பெண் இருபேரும்
அவரவர்கள் துணைவர்களை மனம்வருந்தச் செய்தால்
துன்ப உணர்வலை எழும்பி தாக்கியோரைத் தாக்கும்
தொல்லைதரும் சாபமாகும் நோய்கள் வரும்தேர்வீர்
இன்ப ஊற்று இருவரிடைப் பெருக வாழ்த்தலோடு
இன்முகமும் பொறுமை தியாகம் தகைமை காட்டவேண்டும்
தன்புகழ் விளங்கும் நல்லதரமுள்ள மக்கள்
தழைப்பார்கள் இல்வாழ்வை ஆய்ந்து கண்டஉண்மை

- வேதாத்திரி மகரிஷி
மனைவி நல வேட்பு நாள்(AUG 30) உலகில் இதுவரை தந்தை நாள் (Father's day), தாயார் நாள் (Mother's day) தனித்தனியே கொண்டாடுகிறார்கள். சுமங்கலி பூஜை என்றளவிலே கணவன் நல வேட்பு நாளும் கொண்டாடுகின்றார்கள். மனைவி நல வேட்பு நாள் எந்த ஊரிலேயும் இல்லை. இது ஒரு நன்றி கெட்டதனம் இல்லையா ? இது என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. ஆனாலும், ஒருவர் தலையிட்டுச் செய்தால் மட்டும் போதாது. இது நாடு முழுவதும் ஆண் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். பெண்மையின் பெருமையை உணர வேண்டும் என்ற மனதோடு ஆராய்ச்சி செய்த போது இந்த ஆண்டு என் மனைவியினுடைய (அருள் அன்னை லோகாம்பாள்) பிறந்த நாள் 30.8.ல் வந்தது. அன்பர்களிடம் சொன்னேன். என் மனைவியின் பிறந்த நாளையே வைத்துத் தொடங்கி மனைவி நல வேட்பு நாள் கொண்டாடலாம். இதையே வைத்துக் கொண்டு, இது முதல் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30 ஆவது நாளை மனைவி நல வேட்பு நாளாகக் கொண்டாடுவது நம் சங்கத்தின் வழக்கமாக வரட்டும். பிறகு உலக நாடுகளிலும் பரவட்டும் என்றேன். ஆண்களும், பெண்களும் உற்சாகமாக அதை ஏற்றுக் கொண்டு பல இடங்களில் கொண்டாடுகிறார்கள். நீங்களும் உங்கள் வாழ்க்கைத் துணையை நன்றியோடு வாழ்த்தி இக்கவியைச் சொல்லி மகிழுங்கள்.
பெற்றோரைப் பிறந்தகத்தைப் பிறந்த ஊரை விட்டுப்
பிரிந்து வந்து, பெருநோக்கில் கடமையறம் ஆற்றப்,
பற்றற்ற துறவியெனக் குடும்பத்தொண்டேற்றுப்
பண்பாட்டின் அடிப்படையில் எனைப் பதியாய்க் கொண்டுஎன்
நற்றவத்தால் என் வாழ்க்கைத் துணையாகிப் பெண்மை
நல நோக்கில் அன்போடு கருணை இவை கொண்டு
மற்றவர்க்கும் தொண்டாற்றும் மாண்புமிக்க எந்தன்
மனைவியை நான் மதிக்கின்றேன் வாழ்த்தி மகிழ்கின்றேன்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
குடும்ப வாழ்க்கைக்கு செயல்வினை தான் காரணம். காண்பதெல்லாம் கண்வழியாலே,
அறிவு தேடல் என்பது இல்லை. உடலில் அதிகம் எடையுடன் திகழ்வது உயிர்தான்.
காந்தம் என்பது உடல் முழுவதும் உள்ளது. உயிருக்கு போராடுபவர்கள் உயிராற்றல்
நிறைந்த சொந்த பந்தங்களை பார்க்கும் போது, உயிராற்றல் பெற முடியும்.
தம்பதியர் நேருக்கு நேர் அமர்ந்து, தங்கள் கைகளை சேர்த்து வைத்துக்
கொண்டால், காந்த பரிமாற்றம் நடக்கும். திருமணம் நடந்த நாள் முதல் கணவன்
மனைவிக்காகவும், மனைவி கணவனுக்காவும் செய்தவற்றை நினைத்துப் பார்க்க
வேண்டும்.இந்த அற்புத வேள்வியின் சூட்சுமம் இது தான்.எனவே மனைவி நல வேட்பு நாளில் பங்கு பெறுங்கள்.
நாளை நடைபெற உள்ள சில நிகழ்வின் அழைப்பிதழ்கள் கீழே
சென்னை சைதாப்பேட்டை மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் சார்பில்; அன்னை
லோகாம்பாள் அவர்களின் 103-வது பிறந்த நாள் விழா - "மனைவி நல வேட்பு நாள்"
(WIFE APPRECIATION DAY) நம் மன்றத்தில் கொண்டாடப்படுகிறது.
நாள்: 30-ஆகஸ்ட்-2017 (புதன்கிழமை மாலை 6 மணி முதல்)
Address: 45/17 & 18, Jones Road, Saidapet, Chennai, Tamil Nadu 600015, India (Vaazhga Valamudan Building Complex)
தொடர்புக்கு: +91-44-23810055, 9080888883
நிகழ்த்துனர்: சென்னை நகர மண்டல SKY.பேரா.திரு.S.பொன்னுசாமி மற்றும் SKY.பேரா.திருமதி.லோகநாயகி பொன்னுசாமி (பழனி)
சிறப்புத் தம்பதிகள்: திரு.வெங்கடேசன் மற்றும் SKY.பேரா.திருமதி.முத்துலட்சுமி வெங்கடேசன் (மதுரை)
தம்பதிகள் அனைவரும் கலந்து கொள்ளும்படி பணிவன்புடன் அழைக்கிறோம்.இது நம் குடும்ப விழா.அனுமதி இலவசம்.
அன்னை லோகாம்பாள் அவர்களின் தியாகமே நமக்கு அருட்தந்தை கிடைத்தார்.
அருட்தந்தை அவர்கள் பெண்ணினத்தைப் போற்றும் வகையில் அம்மையார் பிறந்த
தினத்தை மனைவியர் தினமாக சிறப்பித்துள்ளதை நாமறிவோம்.
கணவன் மனைவி
இருவரும் உயிர்கலப்பு பெற்று... காந்த பரிமாற்றம் நிகழ்வுற்று... ஒருவரை
ஒருவர் அன்போடு நோக்கி... நினைந்து... ஒருவருக்கொருவர் ஒத்தும் உதவியும்
இன்புற்று வாழ அரியதோர் வாய்ப்பு 30-Aug-2017 திருமணம் ஆகி 50 வருடம்
பிணக்கோடு வாழ்ந்த தம்பதிகள் கூட... இதுநாள் வரை அனுபவித்திராத மனநிறைவை
பெற அழைக்கிறோம்...
இரவு விருந்துடன் விழா நிறைவுப்பெறுகிறது.
அனைவரும் வருக! For more details, please visit us https://goo.gl/maps/NeRY44fqFh32 or http://saidaijrmmtrust.org
மனைவி நல வேட்பு நாள் விழா - அம்பத்தூர் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை
மனைவி நல வேட்பு நாள் விழா - அம்பத்தூர் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை
மனைவியர் தினமான (30 ஆகஸ்ட் ) பெற்றோரை, பிறந்த ஊரை,.உறவுகளை பிரிந்து, உங்களுக்கு தொண்டாற்றி, இனிமையாக, இன்பமாக உங்களுக்காக தன்னையே முழுமையாக அர்ப்பணித்து வாழும் அன்புக்கும், பாசத்துக்கும் உரிய மனைவியை ஒவ்வொரு கணவரும் மதித்து, வாழ்த்தி உங்களின் மாசற்ற அன்பினால் அவர்களை நனைத்திடுங்கள்.இல்லற நோன்பை,நல்லறமாக்க மனைவி நல வேட்பு நாளில் பங்கு பெறுவோம்.
முந்தைய பதிவுகளுக்கு :
இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. 'வெற்றி' உங்களை தேடி வரும்..! - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_4.html
No comments:
Post a Comment