Subscribe

BREAKING NEWS

05 August 2017

நால்வர் பெருமக்கள் - தொடர்ச்சி




நாலு பேரு சொல்றத கேளுங்க என்ற பதிவின் மூலம் நால்வர் பெருமக்கள் பற்றி அறிந்தோம். திருநாவுக்கரசர் பற்றி ஏற்கனவே அறிந்து கொண்டோம்.இந்த பதிவில் ஏனைய மூவர் பற்றி குறிப்பால் உணர்ந்து கொள்வோம். நால்வர் பற்றி யாரேனும் பேசினாலோ,கேட்டாலோ இங்கே உள்ள குறிப்புகளைக் கூறினாலே தகும்.



திருஞானசம்பந்தர்






தந்தையார் : சிவபாதஇருதயர்

தாயார் : பகவதி

அவதாரம் செய்த நாடு : திருமுனைப்பாடி (கடலூர் மாவட்டம், தமிழ்நாடு)

அவதாரம் செய்த தலம் : சீர்காழி (கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து மேற்கே 22 கி.மீ.)

 பெற்றோர் இட்ட பெயர் : பிள்ளையார்

இறையருளால் விளங்கிய திருநாமம்: திருஞானசம்பந்தர்

ஏனைய பெயர்கள் : காழிவேந்தன், தமிழாகரன், புகலிவேந்தன், தமிழ்ஞானசம்பந்தன்,
  ஆளுடைபிள்ளையார்

மனைவி : தோத்திரபூர்ணாம்பிகை                                  

காலம் : கி.பி. 6 ஆம் நூற்றாண்டு

பின்பற்றிய நெறி : மகன்மை நெறி (சற்புத்திரமார்க்கம்)

உலகில் நிலவிய காலம் : 16 ஆண்டுகள்

ஆக்கிய திருமுறைகள் : ஒன்று, இரண்டு, மூன்று

அருளிய நூல் : திருக்கடைக்காப்பு (தேவாரம்)

பாடிய பதிகங்கள் : 1600

பாடல்களின் எண்ணிக்கை : 16000

கிடைத்த பதிகங்கள் : 385 (கடைசியாக கிடைத்த கிளியனூர் பதிகம் உள்பட)

கிடைத்த பாடல்கள் : 4169

ஒன்றாம் திருமுறை : 136 பதிகங்கள் (1469 பாடல்கள்)

இரண்டாம் திருமுறை : 122 பதிகங்கள் (1331 பாடல்கள்)

மூன்றாம் திருமுறை : 127 பதிகங்கள் (1369 பாடல்கள்)

முதல் பாடல் : தோடுடைய எனத்தொடங்கும் பாடல்

இறுதிப் பாடல் : நறும்பொழில் எனத்தொடங்கும் பாடல்                          

முக்தி அடைந்த தலம் : நல்லூர்ப்பெருமணம் என்கிற ஆச்சாள்புரம்
 (கடலூர் மாவட்டம், கொள்ளிடத்திலிருந்து 6 கி.மீ.)

சமகால நாயன்மார்கள் : அப்பூதியடிகள், குலச்சிறையார், திருநீலகண்டயாழ்ப்பாணர்,
 திருநாவுக்கரசர், மங்கையர்க்கரசியார், முருக நாயனார்,
                                திருநீலநக்கர், நம்பியாண்டார்நம்பி, நின்றசீர்நெடுமாறன்

இறைவன் திருவடியில்
இணைந்த நட்சத்திரம் : வைகாசி மாதம் மூலம் நட்சத்திரம்


திருஞானசம்பந்தர் வாழ்வில் நிகழ்ந்த திருவருள் நிகழ்ச்சிகள்

உமாதேவியார் ஞானப்பால் அளித்தது
"தோடுடைய செவியன்" - 1-1-1

இறைவனிடம் பொற்றாளம் பெற்றது
"மடையில் வாளை" – 1-23-1

இறைவனிடம் முத்துச் சிவிகைப் பெற்றது
"எந்தை ஈசன் எம்பெருமான்" - 2-90-1

இறைவனிடம் முத்துப் பந்தர் பெற்றது
"பாடல்மறை சூடல்மதி" – 3-73-1


திருஞானசம்பந்தர் தம் வாழ்வில் நிகழ்த்தியருளிய திருவருள் நிகழ்ச்சிகள்

பாலை நிலத்தை நெய்தல் நிலமாக்கியது
"காரைகள் கூகைமுல்லை" – 2-84-1

முயலக நோய் தீர்த்தல்
"துணிவளர் திங்கள"– 1-44-1

பனி நோய் தீர்த்தல்
"அவ்வினைக் கிவ்வினையாம"– 1-116-1

உலவாக்கிழி பெறுதல்
"இடரினும் தளரினும்"– 3-4-1

அரவம் தீண்டிய வணிகனை உயிர்ப்பித்தது
"சடையாய் எனுமால"– 2-18-1

மறைக்கதவம் அடைக்கப் பாடியது
"சதுரம் மறைதான்"– 2-37-1

பாண்டியனின் வெப்பு நோய் தீர்த்தது
"மந்திரமாவது நீறு"-2-66-1

சமணரை வாதில் வென்றது (அனல்வாதம்)
"வாழ்க அந்தணர்"– 3-54-1

சமணரை வாதில் வென்றது (புனல்வாதம்)
"போகமார்த்த பூண்முலையாள்" 1-49-1

ஓடம் உய்த்தது
"கொட்டமே கமழும"– 3-6-1

ஆண் பனையைப் பெண் பனையாக்கியது
"பூத்தேர்ந்து ஆயன"– 1-54-1

எலும்பைப் பெண்ணாக்கியது
"மட்டிட்ட புன்னையங்கானல்"– 2-47-1



சுந்தரர்






தந்தையார் : சடையனார்

தாயார் : இசைஞானியார்

அவதாரம் செய்த நாடு : திருமுனைப்பாடி (கடலூர் மாவட்டம் தமிழ்நாடு)

அவதாரம் செய்த தலம் : திருநாவலூர் (கடலூர் மாவட்டம்,
                                   பண்ருட்டியிலிருந்து மேற்கே 19 கி.மீ.)

பெற்றோர் இட்ட பெயர் : நம்பி

இறையருளால் விளங்கிய திருநாமம்: சுந்தரர்

ஏனைய பெயர்கள் : வன்றொண்டர், நம்பிஆருரன், ஆளுடைநம்பி

மனைவியர் : பரவையார், சங்கிலியார்                                  

காலம் : கி.பி. 7 ஆம் நூற்றாண்டு

பின்பற்றிய நெறி : தோழமைமை நெறி (சகமார்க்கம்)

உலகில் நிலவிய காலம் : 18 ஆண்டுகள்

ஆக்கிய திருமுறை : ஏழாம் திருமுறை

அருளிய நூல் : திருப்பாட்டு (தேவாரம்)

பாடிய பதிகங்கள் : 3800

பாடல்களின் எண்ணிக்கை : 38000

கிடைத்த பதிகங்கள் : 100

கிடைத்த பாடல்கள் : 1026

முதல் பாடல் : பித்தா பிறைசூடீ எனத்தொடங்கும் பாடல்

இறுதிப் பாடல் : ஊழிதோறு ஊழிமுற்றும் எனத்தொடங்கும் பாடல்                          

முக்தி அடைந்த தலம் : திருஅஞ்சைக்களம் (கேரள மாநிலம்,
                                      கொடுங்களூரிலிருந்து 2 கி.மீ

சமகால நாயன்மார்கள் : சேரமான் பெருமாள் நாயனார், ஏயர்கோன்
                                      கலிக்காமர்                                  

இறைவன் திருவடியில்
இணைந்த நட்சத்திரம் : ஆடி மாதம் சுவாதி நட்சத்திரம்


சுந்தரர் வாழ்வில் நிகழ்ந்த திருவருள் நிகழ்ச்சிகள்


இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்டது
பித்தா பிறைசூடீ – 7-1-1

இறைவனால் திருவடி சூட்டப்பட்டது
தம்மானை அறியாதசாதியர் – 7-38-1

இறைவனால் முதலடி எடுத்துக் கொடுக்கப்பட்டது
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் – 7-39-1

இறைவன் நெல் மலையை அளித்தது
நீள நினைந்தடியேன் – 7-20-1

இறைவன் கூடலையாற்றுக்கு வழிகாட்டியது
வடிவுடை மழுவேந்தி – 7-85-1

இறைவனால் பார்வை மறைக்கப்பட்டமை
அழுக்கு மெய்கொடு நின் திருவடி – 7-54-1

இடக்கண் பெறுதல்
ஆலந்தான் உகந்து – 7-61-1

வலக்கண் பெறுதல்
மீளா அடிமை – 7-95-1

களையா உடலோடு திருக்கயிலை செல்லுதல்
தானெனை முன் படைத்தான்  - 7-100-1



சுந்தரர் தம் வாழ்வில் நிகழ்த்தியருளிய திருவருள் நிகழ்ச்சிகள்


திருமுதுகுன்றம் மணிமுத்தாறு நதியில் பொன்னை இட்டு திருவாரூர் குளத்தில் எடுத்தது
பொன் செய்த மேனியினீர் – 7-25-1

இழந்த பொருளை மீட்டது
கொடுகு வெஞ்சிலை – 7-49-1

முதலை உண்டபாலகனை மீட்டது

உரைப்பார் உரை உகந்து – 7-92-4





மாணிக்கவாசகர்




 
அவதாரம் செய்த நாடு  : பாண்டிய நாடு (மதுரை மாவட்டம்,தமிழ்நாடு)
அவதாரம் செய்த தலம்  : திருவாதவூர் (மதுரை மாவட்டம்)
பெற்றோர் இட்ட பெயர்  : திருவாதவூரர்
இறையருளால் விளங்கிய திருநாமம்: மாணிக்கவாசகர்
ஏனைய பெயர்கள்  : தென்னவன் பிரம்மராயன், ஆளுடைஅடிகள்
 காலம்    : கி.பி. 8 ஆம் நூற்றாண்டு (கருத்து வேறுபாடுள்ளது)
பின்பற்றிய நெறி   : அன்பு நெறி (சன்மார்க்கம்)
உலகில் நிலவிய காலம்  : 32 ஆண்டுகள்
ஆக்கிய திருமுறை  : எட்டாம் திருமுறை
அருளிய நூல்   : திருவாசகம்
பாடிய பதிகங்கள்   : 51
பாடல்களின் எண்ணிக்கை  : 656
முதல் பாடல்   : நமச்சிவாய எனத்தொடங்கும் பாடல்
இறுதிப் பாடல்   : செம்மை நலம் அறியாத எனத்தொடங்கும் பாடல்                             
முக்தி அடைந்த தலம்  : சிதம்பரம்,                                      
இறைவன் திருவடியில் 
இணைந்த நட்சத்திரம்  : ஆனி மாதம் மகம் நட்சத்திரம்





நால்வர் பெருமக்களைத் தரிசிக்க - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_30.html
 
 

No comments:

Post a Comment