இன்றைய பதிவில் நம் மன வளம் பற்றி பார்ப்போம். பேராசை,சினம்,கடும்பற்று,உயர்வு தாழ்வு மனப்பான்மை போன்ற அறுகுணங்கள் நம்மிடம் மண்டிக் கிடக்கின்றன.இதில் கோபம் பற்றி பார்ப்போம்.கோபத்தை சினம் என்றும் கொள்வார்கள்.இது அனைவரும் அறிந்ததே.
ஆறுவது சினம் என்று எங்கோ கேட்ட மாதிரி உள்ளதா? ஒன்றாம் வகுப்பிலோ,இரண்டாம் வகுப்பிலோ படித்திருப்போம்.நமக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷங்கள் பல உண்டு.அதில் ஆத்திசூடி,திருக்குறள் இல்லாமல் இருக்காது. ஏழு சொல் திருக்குறளும், இரு சொல் ஆத்திசூடியும் கற்காது நாம் வாழவே முடியாது. ஆனால் ஏழடி திருக்குறள் பெற்ற சிறப்பினை ஆத்திசூடி பெறவில்லை என்பது உண்மையே. முதலில் ஆறுவது சினம் என்பது பற்றி அறிவோம்.
ஆறுவது சினம்
சினம்/கோபம் நம்மிடம் உருவானால் அது கண்டிப்பாக ஆறிவிட வேண்டும்.மணிக் கணக்கில், நாள் கணக்கில், மாதக் கணக்கில் இருக்காது. ஆறிவிடும். ஆறுவது தான் சினம்.
சினத்தை தவிர நம்மிடம் உள்ள சில உணர்ச்சிகள் ஆறவே ஆறாது. பொறாமை, துவேஷம், காதல், காமம் போன்ற உணர்ச்சிகள் ஆறாது. மேலும் மேலும் கொழுந்து விட்டு எரியும்.
ஒரு சிறிய நடைமுறை உதாரணத்தோடு ஒப்பிட்டு காணலாம். நம் வீட்டில் தேநீர் குடிக்கும் போது தேநீர் சூடாக இருந்தால் என்ன செய்கின்றோம்? வேறொரு குவளையிலோ,பாத்திரத்திலோ மாற்றி மாற்றி ஊற்றுவோம்.இப்போது அது ஆறிவிடும்.அது போல் தான் சினமும்.
இரண்டாவது உதாரணம். அதே தேநீர் தான்.இந்த முறை குவளை சூடாக இருக்கின்றது.குளிர்ந்த நீரில் வைத்து சூடு தணிய செய்யலாம்.அது போல், கோபம் வரும் போது இடத்தை மாற்றி அமைதியான சூழ்நிலைக்கு சென்று விட்டால், கோபம் ஆறி விடும்.
ஒரே உதாரணம் தான் - தேநீர் சூடு அல்லது தேநீர் குவளை சூடு. நாம் செய்ய வேண்டியது - ஆற்றுதலே.ஏனெனில் ஆறுவது சினம் அன்றோ?
கோபமாய் இருக்கும் போது பேசாதீர்கள், சண்டை போடாதீர்கள். அமைதியாய் இருங்கள்...ஏனென்றால் ...ஆறுவது சினம்....
இப்போது பார்த்தீர்களா? இரு சொல்லில் எவ்ளோ பெரிய வாழ்வியல் நீதியை நம் பாட்டி சொல்லி இருக்கின்றார்கள்.
இரு சொல் முடிந்தது.இப்போது ஏழு சொல் கூறும் குறள் காண்போம்.
அதற்கு முன்பாக, சினம் எப்படி ஏற்படுகின்றது. சினம் தோன்றும் இடம் ஆசையே.சீரமைக்கப்படாத ஆசை செயலாகாமல் தடைபடும் போது அத்தடையை நீக்க எழும் ஆர்வமே சினம் ஆகும். அது உணர்ச்சி வயப்பட்ட பகை உணர்வாகும்ஆசைக்கு தடை வரும் போது அத்தடையை வென்று விட வேண்டும் என்ற வேகம் உயிரில் பிறக்கின்றது. தடையை நீக்க உயிர் எழுச்சி பெறுகின்றது. போதிய வலுவான சூழ்நிலையில் தான் சினம் எழும். சினத்திற்கு கோபம் வெகுளி, குரோதம் சீற்றம் என்று பல பெயர்கள் உண்டு. இந்த சினம் கருவழியே வந்து மனிதனிடத்திலும் இருக்கிறது. தனக்கும் பிறருக்கும் உண்டாகும் உணர்ச்சி வயப்பட்ட மனிதன் பகை உணர்வே சினம் ஆகும்.
சினத்திற்கான காரணங்கள்.
1.கருவமைப்பு, 2.சூழ்நிலை
சினம் வெளிப்படுத்த இயலாத இடத்தில் வஞ்சமாக
மாறுகின்றது நான் நானாக இருக்கும்போது சினம் அங்கு இல்லை. சினமாக
இருக்கும்போது நான் அங்கு இல்லை. கோபமே பாவங்களுக்கு எல்லாம் தாய் தந்தை
கோபமே குடிகெடுக்கும் கோபமே ஒன்றையும் கூடி வரவிடாது கோபமே துயர்
கொடுக்கும். கோபமே பொல்லாதது கோபமே சீர்கேடு கோபமே உறவை அறுக்கும்.
“தன்னையே தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்”
சினம் ஒரு தற்கொலை நிகழ்வு
சினம் ஒரு தற்கொலை நிகழ்வு
சினத்தினால் வரும் கேடுகள்
1. கண்கள் சிவக்கின்றன.
2. நாக்கு குளறுகின்றது.
3. முக அழகு கெடுகின்றன.
4. கைகள் கால்கள் உடல் நடுங்குகின்றது.
5. இதயம்
படபடக்கின்றது.
6. இரத்த அழுத்தம் கூடுகின்றது.
7. மனம் தடுமாறுகின்றது.
8.
என்ன செய்கின்றோம் என்று தெரிவதில்லை.
9. தன்னையே மறக்கின்றோம் என்ன
பேசுகின்றோம் என்று தெரிவதில்லை.
10. உயிர் ஆற்றல் அதிகம் செலவு ஆகின்றது.
11. நரம்புகள் பலவீனம் அடைகின்றன.
12. நோய்கள் உண்டாகின்றன. (கண் நோய்
நாக்குப்புண், குடல்புண் மூலம் மலச்சிக்கல் உண்டாகின்றன).
13. சீவகாந்த
சக்தி குறைகின்றது.
14.குடும்பம் மற்றும் பிறரின் வெறுப்பு, சாபம்
வருகின்றது.
15. உடல் நலம், நட்பு நலம் பாதிப்பு அடைகின்றது.
16.சமுதாய
நலம் பாதிப்படைகின்றது. சினம் ஒருவரின் சங்கிலித்தொடராக வருவது.
“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்"
தீமை செய்தார்க்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற பண்பாடு உடைய இந்த மனித சமுதாயத்தின் உயர்வில் நல்லது செய்பவர்களுக்குத் தீமை அளிக்கும் ஒரு எண்ண வேகம் உணர்ச்சி வேகம் சினம் என்றால், அதைத் தவிர்க்க வேண்டியதுதானே?
பெற்றோர்களோ, ஆசிரியர்களோ நம் மீது சினம் கொண்டால் மனம் என்ன பாடு படுகின்றது? பிறர் நம் மீது சினம் கொள்ளும்போது மனம் எவ்வாறு துன்பப்படுகின்றது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அதுபோன்றுதானே பிறர் மேல் நாம் கொள்ளும் சினம் அவர்களுக்கு வருத்தத்தை அளிக்கும் என்று கண்டு கொண்டால் நம்மோடு ஒத்த உறவினர், நமக்கு நலம் செய்பவர்களை இப்படி வருந்த விடுவது நல்லதா? நல்லதல்ல. எனவே அதைத் தவிர்க்கத்தான் வேண்டும். அது மட்டுமல்ல ஒருவர் மேல் சினம் கொண்டால் அது ஒரு அவமதிப்பும் கூட. சினம் கொள்ளுவது என்பது ஒழுக்கக் கேடான செயல். இரக்கமற்ற செயல், சினம் நட்பையும் கெடுத்துவிடும். அதனைத்தான் வள்ளுவர்
“சினமெனும் சேர்ந்தாரைக் கொல்லி இனமெனும்
ஏமப்புனையைச் சுடும் என்கிறார்.
அறப்பளீசுவரர் சதகத்தில்
கோபமே பாவங்களுக்கெல்லாந் தாய் தந்தை
கோபமே குடிகெடுக்கும்
கோபமே ஒன்றையும் கூடிவர ஒட்டாது
கோபமே துயர்கொடுக்கும்
கோபமே பொல்லாது, கோபமே சீர்கேடு
கோபமே உறவறுக்கும்
கோபமே பழிசெய்யும், போகமே பகையாளி
கோபமே கருணை போக்கும்
கோபமே ஈனமாம், கோபமே எவரையும்
கூடாமல் ஒருவனாக்கும்
கோபமே மறலிமுன் கொண்டுபோய்த் தீயநர
கக்குழியி னிற்றள்ளும்
என எழுதப்பட்டுள்ளது.
எனவே ஒருவர் மீது சினம் கொள்ளும்போது அவர்கள் படும் வருத்தம் சாபமாகவே மாறுகிறது. இதையெல்லாம் எண்ணிப் பார்க்கும்போது பிறரை எவ்வாறு சினம் பாதிக்கிறது என்பது நன்றாக தெரியும்.
தீமை செய்தார்க்கும்
நல்லது செய்ய வேண்டும் என்ற பண்பாடு உடைய இந்த மனித சமுதாயத்தின் உயர்வில்
நல்லது செய்பவர்களுக்குத் தீமை அளிக்கும் ஒரு எண்ண வேகம் உணர்ச்சி வேகம்
சினம் என்றால், அதைத் தவிர்க்க வேண்டியதுதானே? பெற்றோர்களோ, ஆசிரியர்களோ
நம் மீது சினம் கொண்டால் மனம் என்ன பாடு படுகின்றது? பிறர் நம் மீது சினம்
கொள்ளும்போது மனம் எவ்வாறு துன்பப்படுகின்றது என்பதைச் சிந்தித்துப்
பாருங்கள். அதுபோன்றுதானே பிறர் மேல் நாம் கொள்ளும் சினம் அவர்களுக்கு
வருத்தத்தை அளிக்கும் என்று கண்டு கொண்டால் நம்மோடு ஒத்த உறவினர், நமக்கு
நலம் செய்பவர்களை இப்படி வருந்த விடுவது நல்லதா? நல்லதல்ல. எனவே அதைத்
தவிர்க்கத்தான் வேண்டும். அது மட்டுமல்ல ஒருவர் மேல் சினம் கொண்டால் அது
ஒரு அவமதிப்பும் கூட. சினம் கொள்ளுவது என்பது ஒழுக்கக் கேடான செயல்.
இரக்கமற்ற செயல், சினம் நட்பையும் கெடுத்துவிடும். அதனைத்தான் வள்ளுவர்
“சினமெனும் சேர்ந்தா அரக் கொல்லி இனமெனும் ஏமப்புனையைச் சுடும் என்கிறார்.
அறப்பளீசுவரர் சதகத்தில் கோபமே பாவங்களுக்கெல்லாந் தாய் தந்தை கோபமே
குடிகெடுக்கும் கோபமே ஒன்றையும் கூடிவர ஒட்டாது கோபமே துயர்கொடுக்கும்
கோபமே பொல்லாது, கோபமே சீர்கேடு கோபமே உறவறுக்கும் கோபமே பழிசெய்யும்,
போகமே பகையாளி கோபமே கருணை போக்கும் கோபமே ஈனமாம், கோபமே எவரையும் கூடாமல்
ஒருவனாக்கும் கோபமே மறலிமுன் கொண்டுபோய்த் தீயநர கக்குழியி னிற்றள்ளும் என
எழுதப்பட்டுள்ளது. எனவே ஒருவர் மீது சினம் கொள்ளும்போது அவர்கள் படும்
வருத்தம் சாபமாகவே மாறுகிறது. இதையெல்லாம் எண்ணிப் பார்க்கும்போது பிறரை
எவ்வாறு சினம் பாதிக்கிறது என்பது நன்றாக தெரியும்.
Cheap Offers: http://bit.ly/gadgets_cheap
Cheap Offers: http://bit.ly/gadgets_cheapஅன்பான நண்பர்களே நாம் கோபப்படும்போது நமது உடலில் உள்ள முக்கிய உறுப்பான கல்லிரல் பாதிக்கபடுகிறது . இதை ஆரம்பத்திலேயே தடுக்கவேண்டும் .
Cheap Offers: http://bit.ly/gadgets_cheapஅன்பான நண்பர்களே நாம் கோபப்படும்போது நமது உடலில் உள்ள முக்கிய உறுப்பான கல்லிரல் பாதிக்கபடுகிறது . இதை ஆரம்பத்திலேயே தடுக்கவேண்டும் .
பொதுவாக நாம் நமக்கு ஏற்படும் கோபத்தை இரண்டு விதங்களில் கையாள்கிறோம். ஒன்று கோபத்தின் முழு காரணகர்த்தாவாக தோன்றும் மனிதர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்துகிறோம். அல்லது கோபத்தை அடக்கிக் கொண்டு விழுங்கிக் கொள்கிறோம்.
பிறர் மீது கோபித்து அனல் கக்கி ஓயும் போது பெரும்பாலும் நாம் மகிழ்ச்சியாய் இருப்பதில்லை. குற்ற உணர்வு, பச்சாதாபம், இந்தக் கோபம் தேவைதானா என்கிற மறுபரிசீலனை..... என்று பல்வேறு உணர்வுகளால் பாதிக்கப்படுகிறோம். இது ஒருபுறமிருக்க, இதன் விளைவாக, நாம் யாரிடம் கோபத்தைக் காட்டினோமோ அவருக்கு பதிலுக்கு நம்மீது கோபமும் வெறுப்பும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தால் விளைவுகள் விபரீதமே.
ஏற்படும் கோபத்தை அடக்கி நமக்குள்ளே விழுங்கிக் கொண்டாலும் கோபம் மறைவதில்லை. உள்ளே சேர்த்து வைத்த கோபம் என்றாவது எப்போதாவது யார் மீதாவது வெளிப்பட்டே தீரும். அது இயற்கை. இல்லையென்றால் நமக்குள்ளே தங்கி இருந்ததன் வாடகையாக அல்சர் முதலான நோய்களைத் தந்து விட்டே கோபம் நம்மை விட்டு அகலும்.
ஆக, இந்த இரு வழி முறைகளும் நம்மைத் துன்பத்திற்கே அழைத்துச் செல்கின்றன. பின் என்ன செய்வது? இந்த கேள்விக்குப் பதிலை ஒரு சிறு கதை மூலம் காண்போம்.
ஒரு துறவிக்கு படகில் பிரயாணம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. அவரிடம் ஒரு சிறு படகும் இருந்தது. அருகில் இருந்த ஏரிக்குச் சென்று அந்தப் படகில் மணிக்கணக்கில் இருப்பார். பல சமயங்களில் கண்களை மூடித் தியானம் செய்வது கூட படகில் இருந்தபடிதான்!
ஒரு நாள் அவர் படகில் தியானம் செய்து கொண்டு இருந்த போது காலியான வேறொரு படகு காற்றின் போக்கில் மிதந்து வந்து அவரது படகை இடித்தது. தியானத்தில் இருந்த அவருக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. யாரோ அஜாக்கிரதையாக படகை ஓட்டிக் கொண்டு வந்து தம் படகில் மோதி விட்டதாக எண்ணி கண்களைத் திறந்து திட்ட முற்பட்டார். பார்த்தால் காலிப் படகு ஒன்றுதான் அவர் முன்னால் இருந்தது. "அவர் தன் கோபத்தை அந்தக் காலிப் படகின் மீது காட்டிப் பயன் இல்லை. மௌனமாகத்தான் இருந்தாக வேண்டும். ஆனால் அந்த நிலையே அவருக்கு ஒரு உண்மையை உணர்த்தியது.
அந்தப் படகு அவருக்கு ஞானகுருவாகத் தெரிந்தது. இப்போதெல்லாம் யாராவது அவரை அவமானப்படுத்தவோ, மனதைப் புண்படுத்தவோ முற்பட்டால் அவர் புன்னகையுடன் "இது காலிப் படகு" என்று அவருக்குள் கூறிக் கொண்டு அமைதியாக நகர்ந்து போக ஆரம்பித்துவிட்டார்.
கோபமே அவசியமில்லை, கோபத்திற்கு யாரும் காரணமில்லை என்று உணர்ந்து அந்தக் கணத்திலேயே தெளிவடைவதுதான் கோபத்திற்கு மருந்து.
ஒரு நண்பர் வந்து நம்மைக் கிண்டல் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். பெரும்பாலும் நாம் சிரித்து பதிலுக்கு ஏதாவது கிண்டலாக சொல்வோம். ஆனால் ஒரு நாள் நாம் பல பிரச்சினைகளால் சரியான மனநிலையில் இல்லாமல் இருந்தால், அன்று அந்த நண்பரின் கிண்டல் நம்முள் ஒரு எரிமலையையே ஏற்படுத்தக் கூடும். அவரது வார்த்தைகளுக்கு அந்த நேரம் ஒரு தனி அர்த்தம் தெரியும். மனம் வீணாகப் புண்படும். கடுகடுப்புக்கு முகமும், கடுஞ்சொற்களுக்கு நாக்கும் தயாராகும். இந்தச் சிறிய தினசரி அனுபவம் நமக்கு ஒரு பேருண்மையை வெளிப்படுத்துவதை நாம் சிந்தித்தால் உணரலாம். அடுத்தவரது சொற்களோ, செயல்களோ மட்டுமே கோபத்திற்குக் காரணம் என்றால் அவற்றை எப்போதும் கோபமாகத்தான் எதிர்கொள்வோம். ஆனால் உண்மையில் கோபமும், கோபமின்மையும் நம் மனப்பான்மையையும், மனநிலையையும் பொறுத்தே அமைவதை நம் தினசரி வாழ்விலேயே பார்க்கிறோம்.
வறண்ட கிணற்றில் விடப்படும் வாளி வெற்று வாளியாகவே திரும்பும். நீருள்ள கிணற்றில் விடப்படும் வாளியே நீருடன் திரும்பும். உள்ளே உள்ளதை மட்டுமே வாளியால் வெளியே கொண்டு வர முடியும். வாளியால் நீரை உருவாக்க முடியாது. அடுத்தவர்கள் வாளியைப் போன்றவர்கள். அவர்களது சொற்களும் செயல்களும் நமக்குள்ளே சென்று வெளிக்கொணர்வது நமக்குள்ளே இருப்பதைத்தான். அது கோபமாகட்டும், வெறுப்பாகட்டும், அன்பாகட்டும், நல்லதாகட்டும், தீயதாகட்டும். அவர்கள் நம்மில் வெளிக் கொணர்வது நாம் நம் ஆழ்மனதில் சேர்த்து வைத்திருப்பதையே!
எனவே, யாராவது வந்து நம்மை அவமானப்படுத்தவோ மனதைப் புண்படுத்தவோ முற்பட்டால் புன்னகையுடன் "இந்தப் படகும் காலியாகத்தான் இருக்கிறது" என்று நமக்குள் கூறிக் கொண்டு அமைதியாக நகர்ந்து விட முயலுவது நல்லது.ஒரு ஆள் ஜென் துறவியிடம் வந்தார்.
"சுவாமி, எனக்கு அடிக்கடி கோபம் வருகிறது. அந்த நேரத்தில் என்ன செய்கிறேன் என்பதே தெரிவதில்லை. சில நேரம் வீட்டுக் கண்ணாடிப் பொருட்களையும் கூட உடைத்துப் போட்டு இருக்கிறேன். வீட்டிலிருப்பவர்களிடமும் வெகு கடுமையாக நடந்து கொள்கிறேன். சில நேரம் தவறு என்னுடையதாகவும், சில நேரம் மற்றவர்களுடையதாகவும் இருக்கிறது. இந்த மாதிரியான என் நிலையினால் பல நண்பர்களை இழந்தும், கெட்ட பேரை சம்பாதித்துக் கொண்டும் இருக்கிறேன். இதற்குத் தாங்கள்தான் ஏதாவது வழி சொல்லவேண்டும்".
துறவி ஒரு மரப்பலகையும், கூடவே ஒரு பை நிறைய ஆணிகளையும் கொடுத்துச் சொன்னார். "எப்போதெல்லாம் உங்களுக்குக் கோபம் வருகிறதோ.. அப்போதெல்லாம் இந்தப் பலகையில் ஒரு ஆணி அடித்து வையுங்கள். பிறகு செய்தது தவறென்றோ அல்லது இன்னும் தன்மையாகப் பேசி இருக்கலாம் என்றோ நினைப்பீராயின் அந்த நேரத்தில் அடிக்கப்பட்ட ஆணியைப் பிடுங்கி எடுங்கள். ஒரு மாதம் கழித்து என்னிடம் வாருங்கள்".
ஒரு மாதம் கழித்து அந்த மனிதர் வந்தார். பலகையில் நிறைய ஆணி அறையப்பட்ட தடங்களும், சில ஆணிகளும் மிச்சமிருந்தன.
"சுவாமி, இப்போது கோபம் மட்டுப்பட்டு இருக்கிறது. பாருங்கள்! எத்தனை தடவை தவறுணர்ந்து ஆணிகளைப் பிடுங்கி இருக்கிறேன்."
ஜென் ஆசிரியர் சொன்னார். "அதெல்லாம் சரி! நான் உன்னிடம் பலகையைத் தரும்போது எப்படி இருந்ததோ அப்படியே தா என்று சொல்லி இருந்தால் எப்படி இருக்கும்? இதில் பார் எத்தனை காயங்களும் ஓட்டைகளும் ஏற்பட்டிருக்கின்றன!!". இது போல தான் ஆணியைப் பிடுங்கி விட்டாலும்,பலகை எப்படி காயங்களும்,ஓட்டைகளும் உள்ளனவோ ? நாமும் அப்படிதான். கோபத்தைக் களைந்த பிறகும்,நம் மனமும்,உடலும் காயம்பட்டிருக்கும்.
அடுத்த முறை சினம் ஏற்படும் போது, இதுவும் கடந்து போகும் என்றோ,இது காலிப் படகு என்றோ மனதிற்குள் கூறிக்கொண்டு,உடனே இடத்தை மாற்றுங்கள்.முதலில் சினத்தின் வேகம் படிப்படியாக குறையும். பின்பு என்ன? ஆரோக்கியமான வாழ்வு தான் .
மீண்டும் ஒரு முறை "ஆறுவது சினம் "
முந்தைய பதிவுகளுக்கு :-
No comments:
Post a Comment