Subscribe

BREAKING NEWS

18 June 2018

எப்போ அழைப்பீரோ? - உழவாரப்பணி அறிவிப்பு

அனைவருக்கும் வணக்கம்.

சென்ற மாதம் மயிலை குழந்தைவேலர் சுவாமிகள் ஆலயத்தில் நம் குழுவின் சார்பில் உழவாரப்பணி மிக சிறப்பாக குருவருளால் நடைபெற்றது. புதிய அன்பர்கள் பங்கு கொண்டு தொண்டினை சிறப்பித்தார்கள்.விரைவில் அந்த அனுபவத்தை தனிப் பதிவாக அளிக்க குருவிடம் வேண்டுகின்றோம்.

              எப்போ அழைப்பீரோ? என்று மீண்டும் திருமால் மருகனிடம் காத்திருக்கின்றோம்.

என்று சென்ற ஆண்டு திருமால் மருகன் ஆலயத்தில் உழவாரப் பணி செய்த அனுபவத்தை பகர்ந்து இருந்தோம்.  எப்போ அழைப்பீரோ? என்று வழி மேல் விழி வைத்து காத்திருந்தோம்.இதோ..முருகன் அருள் முன்னின்று நம்மை நடத்துகின்றார்.நம் தலத்தில் ஏற்கனவே உழவாரப்பணி பற்றி கூறிய செய்திகளை மீண்டும் இங்கே தந்து, பதிவின் இறுதியில் உழவாரப்பணி அறிவிப்பை தருகின்றோம்.

தினமும் காலை எழுந்து அவசர, அவசரமாக அன்றாட கடமைகளை முடித்து விட்டு, பரபரக்க அலுவலகம் செல்கின்றோம். ஏன்? செல்வத்திற்காக. செல்வம் சேர்ப்பதில் எவ்வளவு அவசரம் காட்டுகின்றோம். எத்துணையோ வழிகளில் தேடுகின்றோம். இதே போன்று நாம் ஏன் ஆரோக்கியத்தை தேடுவதில்லை, நல்ல மனிதர்களை தேடுவதில்லை, நல்ல புத்தகங்களை, கடவுளை தேடுவதில்லை.

நேரமின்மை காரணமாக இருக்குமோ? என்றால் அது வெறும் சப்பைக்கட்டு. தேடிப் பாருங்கள்.இந்த உலகம் உங்களுக்கு வழிகாட்டும், இது போன்ற விசயங்கள் நம் TUT தளத்திற்கு வந்து கொண்டிருக்கின்றது. நல்ல புத்தகங்கள் பற்றி பேசி வருகின்றோம். நல்ல மனிதர்கள் பற்றி அறிந்து, உறவாடி வருகின்றோம். 

கடவுள் தேடுதல்...நம்மிடம் உழவாரப்பணி வடிவில் நடைபெற்று வருகின்றது. அவரை இரு வழியில் தேடித்தான் ஆக  வேண்டும். புற வழி ஒன்று, அக வழி மற்றொன்று. ஆலய தரிசனம், உழவாரப் பணி,தீர்த்தமாடல், கிரிவலம் போன்றவை புற வழியில் தேடுதல். புற வழியில் தேடிப் பாருங்கள். அக வழியை அவரே நமக்குக் காட்டுவார். நான்கு வழி பாதியாக சரியை, கிரியை, யோகம் , ஞானம்  என்று சொல்வார்கள். இதில் சரியை, கிரியை மட்டுமே நாம் சரி செய்து கொள்ள முடியும் இது புற வழி. மற்ற இரண்டும் யோகம் , ஞானம் அக வழி  -இதனை அவன் அருளாலே அவன் தாள் வணங்கித் தான் பெற முடியும்.

புற வழியில் செல்ல, செல்ல அக வழி தானாக திறக்கும். இப்போது புரிந்து விட்டதா? கடவுளை அறியும் வழி. உளம் ஆற உழவாரப் பணி செய்தோம் என்றால், அகத்துள் இறைவனை காண முடியும். தற்போது நாம் நம் TUT உறவுகளோடு ஓதிமலை சென்று வந்தோம்.  உழவாரப் பணி என்பது மாதமொருமுறை அனைவரும் ஒன்று கூடி கோயிலுக்கு சென்று கோயிலை சுத்தம் செய்வது என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. எப்பொழுதெல்லாம் நமக்கு வாய்ப்பு இருக்கின்றதோ, அப்போதெல்லாம் இது போன்ற திருத்தொண்டில் ஈடுபடுங்கள். 

உழவாரப் பணி செய்யும் போது, நமக்கு என்ன நடக்கின்றது ? முதலில் நீங்கள் உழவாரப் பணி செய்ய விரும்புகின்றீர்கள் என்றால் அதுவே ஒரு நல்ல விருப்பம். அந்த விருப்பம் முதலில் நம் மனதில் தோன்ற வேண்டும். நம் மனதில் உள்ள தீய எண்ணங்கள் மேலேறி, நம் விருப்பம் வருகின்றது என்றால், நீங்கள் உங்கள் மனதில் நன்மையை விதைக்கின்றீர்கள். இந்த நல்ல விதை அடுத்து என்ன செய்யும். செயலுக்கு வரும். அடுத்து உங்களுக்கு பணியில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும். அப்படி என்றால் நம்மிடம் உள்ள தீய எண்ணங்கள் வெளியேறுகின்றது. மனம் செம்மை பெற உழவாரப் பணி செய்யலாம் என்று புரிகின்றதா?

ஒரு முறை உழவாரப் பணியில் ஈடுபட்டுப் பாருங்கள். நம் உடல் தகுதி என்ன என்று தெரியும். பின்பு நீங்கள் ஆரோக்கியம் சார்ந்து யோசிக்க ஆரம்பிப்பீர்கள். இது மட்டுமா? அருமையான இறை தரிசனம் உழவாரப் பணி  நிறைவில் பெற்று வருகின்றோம். இது நமக்குக் காண கிடைக்குமா? சில கோயில்கள் மிகவும் பழமை வாய்ந்த கோயில்களாக இருக்கும். யோசித்துப் பாருங்கள். நம் பாட்டன்,முப்பாட்டன் கட்டிய கோயில்களுக்குச் சென்று, அவர்களின் தடத்தில் நாமும் செல்வது நமக்கு இன்பம் அல்லவா தரும்? இதன் மூலம் பெருமக்கள் பாடிய திருத்தலங்களுக்கு செல்ல வாய்ப்பாகவும் அமைகின்றது.

ஒன்றா? இரண்டா? சொல்லில் அடக்க முடியவில்லை உழவாரப் பணி  சிறப்புக்களை. அனுபவித்தால் தான் புரியும். பதிவினை படிக்கும் அன்பர்கள், பணியில் ஈடுபட முயலுங்கள். உங்கள் நட்பு,சுற்றம்,உறவுகளுக்குத் தெரிவியுங்கள்.

நாம் ஏற்கனவே கூறியது போல உழவாரமும், அன்னதானமும் நம் இரு கண்கள். உழவாரப் பணி செய்யச்  செய்ய நம்முள் உள்ள மன அழுக்குகள்,கசடுகள் முழுதும் நீங்காவிட்டாலும்,சிறிது சிறிதாக நீங்கிக் கொண்டிருப்பதை நாம் உணர்ந்து வருகின்றோம். மனமது செம்மையானால்,சித்தமும் செம்மையாகுமே.சித்த சுத்திக்கு  உழவாரப் பணி ஒரு அருமருந்தாகும். இந்த பணியில் ஈடுபடும் முன்பு, நாம் எப்படி இருக்கின்றோம். 

இறைவன் நாம் பிரபஞ்சத்தில் வாழ நமக்கு வழி செய்து கொடுப்பது போல, ஆலயங்களை சுத்தப்படுத்தி நாம் இறை தொண்டு ஆற்ற வேண்டும்.ஆன்மீக பார்வையில் பார்க்கும் போது உழவாரப்பணி இறைவனுக்கு நாம் செய்யும் தொண்டு ஆகும். கர்மவினைகள் நீக்கி நம்மை செம்மை படுத்துகிறது.

அறிவு பூர்வமாக சிந்தித்தால், கோவில் ஆனது பல ஆயிரம் மக்கள் வந்து போகும் ஒரு புண்ணிய வழிபாடு ஸ்தலம் ஆகும். இங்கு வரும் பக்தர்களுக்காக கோவிலை சுத்தப்படுத்தி மக்கள் தொண்டு ஆற்றுகின்றோம்.எவ்வாறு பார்த்தாலும் உழவாரப்பணி இக்கலியுகத்தில் இறை அருள் பெற சிறந்த ஒரு மார்க்கம் ஆகும்.ஆயிரம் தொண்டுகள் இருந்தாலும் இதற்கு ஈடு இணை உண்டா? என்றால் இல்லவே இல்லை என்பதே உண்மை.

மனம் முழுதும் ஆணவம்,கன்மம்,மாயை,பேராசை,சினம்,கடும்பற்று,உயர்வு தாழ்வு மனப்பான்மை,வஞ்சம்,சினம்,முறையற்ற பால் கவர்ச்சி என்று ஒரே கலங்கல்கள்.இதில் கடவுளைக் காண முடியவில்லை என்ற குற்றம் வேறு? எப்படி அவர் தெரிவார்? இவை அனைத்தும் நீக்கினால் தானே,அவரைக் காண முடியும். 

இம்மாத உழவாரப் பணி  அறிவிப்பு மற்றும் கூட்டு வழிபாடு:


இறை அன்பர்களே.

நமது TUT குழுமத்தின்  உழவாரப்பணியை பற்றிய அறிவிப்பை இத்துடன் அறிவிப்பு செய்கின்றோம். உழவாரப்பணி  கொளத்தூரில் உள்ள திருமால் மருகன் ஆலயத்தில் வருகின்ற 24/06/2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது.உழவாரப்பணியைத் தொடர்ந்து அபிஷேகம்,ஆராதனை நடைபெறும்.அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு தொண்டினை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். சேவையில் இணையும் ஆடவர்கள் வரும் பொழுது மாற்று வேட்டி ஒன்றினை கொண்டு வரவும். தெய்வங்களின் திருச்சந்தியை உள்ளே சென்று சுத்தம் செய்வதற்கு வேட்டி போன்ற ஆடையே சிறந்தது. 




உழவாரப்பணி 

அபிஷேகம்,ஆராதனை 

தீபாராதனை 

பிரசாதம் வழங்கல் 


நாள்:24/06/2018 ஞாயிற்றுக்கிழமை 

இடம் :
திருமால் மருகன் ஆலயம்,
முதல் பிரதான சாலை,திருப்பதி நகர்,கொளத்தூர்,சென்னை -99

நேரம்: காலை 9 மணி முதல் 1 மணி வரை 


தங்களின் வருகையை கண்டிப்பாக உறுதி செய்க.(மதிய உணவு மற்றும் இன்ன பிற ஏற்பாட்டிற்கு எங்களுக்கு உதவியாக இருக்கும்.)


அனைவரும் வருக! இறையருள் பெறுக !!



முந்தைய பதிவுகளுக்கு :-

எண்ணிக்கை முக்கியமல்ல...எண்ணங்களே முக்கியம்... உழவாரப் பணி அனுபவம் - http://tut-temple.blogspot.com/2017/10/blog-post_27.html

வாருங்கள்...உளம் ஆற உழவாரப் பணி செய்வோம் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_17.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் - உழவாரப் பணி அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_2.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html


No comments:

Post a Comment