Subscribe

BREAKING NEWS

31 October 2017

அறம் செய்ய விரும்பு

அறம்

என்ற ஒற்றைச் சொல் தான் நம் வாழ்தலை உணர்த்துகின்றது. வாழ்வின் உன்னதத்தை புரிய வைக்கின்றது. எப்போது? இந்த அறம் என்ற சொல்லை நாம் கேட்டோம் என்று நினைவு படுத்திப் பாருங்கள். தொடக்கப் பள்ளியில். ஆத்திச்சூடி...அறம் செய்ய விரும்பு  என்று சொல்லி படித்திருப்போம். உச்சரிக்க எளிதாக இருப்பதால் பள்ளியில் உள்ளதோ? மனதில் எளிதில் பதிவதால் பள்ளியில் வைத்தார்களா? நம் பழமை, பண்பாடு பேசும் அற நூல் அன்றோ?

இன்றைய சமூகம் சீர்கெட்டுப் போனதற்கு மிக முக்கிய காரணம் அறம் செய்ய விரும்பாததே.வெறும் ஏட்டுக் கல்வி ? என்பதே இதற்கு காரணம்.

நமக்கு ஒரு சந்தேகம் வருகின்றது. ஒரு செயலைச் செய்ய சொல்ல வேண்டும் என்றால் அதை செய்.இதை செய் என்று தானே சொல்வோம். அப்படிப் பார்த்தல் அறம் செய் அல்லது அறம் செய்க என்று கட்டளை தானே இட்டிருக்க வேண்டும். மாறாக அறம் செய்ய விரும்பு  என்று சொல்கிறார்கள் என்றால் இதில் வேறு ஏதோ செய்தி இருப்பதாகத் தானே அர்த்தம்.

நாம் ஒரு செயலை செய்கிறோம் என்றால் நாம் அதற்கு முன்பு அந்த செயலைப் பற்றி விரும்புகிறோம் என்று அர்த்தம். இன்று காலை நாம் கோயிலுக்கு செல்கிறோம் என்றால், கோயிலுக்கு செல்வதற்கு முன்பு, கோயிலுக்கு செல்வது பற்றி விரும்புகிறோம் என்று பொருள். இது போல் தான் நாம் செய்யும் அனைத்து செயல்களும். விருப்பங்கள் விளைவுகளாகின்றன.பார்ப்பதற்கு எளிமையானது போல தெரியும் ஆனால் பின்பற்றுவது கடினம்.

இன்றைய காலத்தில், தானம்,தர்மம் என்று கேட்கிறோம், பார்க்கின்றோம். விரும்பி செய்கிறார்களா? என்றால் அது ஒரு கேள்விக்குறியாய் உள்ளது. ஆனால் இதனையே விரும்பிச் செய்தால், நம் நிலைப்பாடு வேறு மாதிரி இருக்கும்.அதனால் தான் நம் அவ்வைப் பாட்டி "அறம் செய்ய விரும்பு " என்கிறார். அறம் செய்க என்பது செயல் சார்ந்தது. அறம் செய்ய விரும்பு  என்பது மனம் சார்ந்தது. மனதில் இதை வைத்தால் தான் செயலும் சிறப்பாக இருக்கும். இதனை பதிக்க குழந்தைப் பருவமே சிறந்தது என்பதால் தான் ஆத்திச்சூடி கற்கின்றோம்.

இப்படி அறம் செய்யும் மனப்பான்மை இருந்தால் தான் நாம் ஒருவருக்கொருவர் உதவி வாழ முடியும். அப்படி இருக்கும் சூழலில் பொய்,புரட்டு போன்ற தீமைகள் இரா. மனமாசு நீங்கி, சமுதாயம் தழைத்தோங்கும்.எனவே "அறம் செய்ய விரும்பினாலே " அறம் செய்யப் படும்.

மற்றொரு கோணத்தில் யோசித்துப் பார்த்தால், இருப்பவர்கள் கொடுக்கின்றார்கள், இல்லாதவர்கள் என்ன செய்ய? நீங்கள் விரும்புங்கள். அறம் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புங்கள். நாளடைவில் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். விருப்பம் இல்லாது இந்த சமுதாயத்தில் வாழ்வது கடினம். அறம் செய்ய நீங்கள் விரும்புங்கள்.

ஒவ்வொருவரும் தம் குடும்ப உறவுகளை நேசியுங்கள்.  நட்பு வட்டாரத்தை விரிவாக்குங்கள். அண்டை வீட்டாரிடம் பழகுங்கள். சிறிது சிறிதாக அறம் செய்ய விரும்புங்கள். பக்கத்து வீட்டில் யார் இருக்கின்றார்கள் என்று கூட தெரியாமலா வாழ்வது? அறம் செய்ய நீங்கள் தானம் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. இந்த சமூகத்திற்கு உங்களால் முடிந்த அறத்தை செய்யுங்கள். உங்கள் பிரார்த்தனையில் உங்களுக்கு தெரிந்த உறவுகளுக்காக பிரார்த்தியுங்கள். உங்கள் நேரத்தை வீணடிக்கும் செயல்களை நிறுத்துங்கள்.இதுவும் அறம் தான். உதாரணத்திற்கு எப்போதும் தொலைக்காட்சி பெட்டி முன்பு உட்காருவதை சற்று கொஞ்ச கொஞ்சமாக குறையுங்கள். நம் நீதி நூற்களை படியுங்கள்.இது போல ஏகப்பட்ட அறச் செயல்கள் உண்டு. ஒவ்வொன்றாக செய்யுங்கள். உங்களுக்கு வாழ்வின் மீதுள்ள உண்மை புரியும். வாழ்க்கை மட்டுமல்ல..வானமும் வசப்படும்.

இனி நீங்கள் காண இருப்பது சென்ற மாதத்தில் நடைபெற்ற அன்னதான நிகழ்வுகள்.







சென்ற மாதம் நடைபெற்ற அமாவாசை அன்னதானம் சுமார் 30 நபர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கினோம். நம்முடன் திரு. வம்சி மற்றும் திரு. மணிமாறன் இணைந்து கொண்டார்கள். சுமார் 9 மணி அளவில் இரண்டு பைக்கில் உணவுப் பொட்டலங்களை எடுத்துக் கொண்டு கிளம்பினோம். உணவுப் பொட்டலங்கள் தயாரிக்கும் முன்பு, ஒரு வயதான மூதாட்டி, நம்மிடம் யாசகம் கேட்டார்கள். நாம் உணவு தயார் செய்து தருகின்றோம் என்று சொல்லிவிட்டு அங்கே அவரை இருக்கும் படி கூறினோம்.

உணவு தயார் ஆனதும், அவரைத் தேடிச் சென்றோம். ஆனால் அங்கே அவர் இல்லை. மனதில் சற்று வருத்தம் தோய்ந்தது. பின்பு அப்படியே கூடுவாஞ்சேரியில் ஆரம்பித்து ஊரப்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் சென்றோம் .அங்கே இருந்த வயதானவர்களுக்கு உணவு வழங்கினோம். வரும் வழியில், துப்புரவு தொழிலாளர்கள் இருந்தனர். அவர்களுக்கும் உணவு கொடுத்து விட்டு, அப்படியே மீண்டும் கூடுவாஞ்சேரி நோக்கி வந்தோம்.

அப்போது கூடுவாஞ்சேரிக்கு முன்பாக உள்ள குப்பைக் கிடங்கில் உள்ள சிறுவர்களை அழைத்து, அவர்களுக்கும் உணவு கொடுத்தோம். அவர்களின் கைகளைப் பார்க்கும் போது, அவர்கள் ஒரு வேளை உணவிற்கு படும் பாடு பற்றி உணர்ந்தோம். மீதம் ஒரு 5 பொட்டலங்கள் இருந்தது. நந்திவரம் கோயிலுக்கு சென்று அங்கே கொடுக்கலாம் என்று சென்று கொண்டிருந்தோம். நந்திவரம் கோயிலுக்கு செல்லும் பாதையில் திடீரென்று வம்சி வண்டியை நிறுத்தி அங்கே உள்ள மூதாட்டிக்கு உணவு வழங்க சொன்னார்.

அவரைப் பார்த்த போது, நம் கண்களில் ஆனந்த கண்ணீர். இருக்காத ! பின்னே. ஆரம்பத்தில் யாருக்கு உணவு தருவதாக சொல்லிவிட்டு தவற விட்டோமோ..அவரே தான் அங்கே இருந்தார். மனம் மகிழ்வுற்றது.












வாருங்கள். அறம் செய்ய விரும்புவோம்..

முந்தைய பதிவுகளுக்கு :-

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தோம் ...ஐயனே! எம் ஐயனே!! - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_41.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html



30 October 2017

கொடுப்பதும் பெறுவதும்

கொடுப்பதும் பெறுவதும்

என்ன சொல்ல போகிறது இந்த பதிவு? பெற்று பெற்று நாம் அனுபவித்த இன்பம் பல முறை கிடைத்திருக்கின்றது. ஒவ்வொரு நாளும் நாம் அவரிடமிருந்து தானே பெற்றுக் கொண்டு வருகின்றோம்.இதுவே நமக்கு இன்பம் தான். ஆனால் எப்போதாவது கொடுத்து இருக்கின்றீர்களா ?
கொடுத்துப் பாருங்கள் பேரின்பம் நமக்குக் கிடைக்கும். இந்த பதிவில் கொடுப்பதும் பெறுவதும் என்ற சொல்லில் நடைபெறும் ஒரு விழா பற்றி தான் பேச உள்ளோம். அது நம் சென்னையின் மிக மிக பிரசித்தி பெற்ற விழா.

ஆங்..கண்டுபிடித்து விட்டீர்கள் என்று நாம் நம்புகின்றோம்.

இது போன்ற ஒரு விழா வேறெங்கும் நடக்குமா? எனபது சந்தேகமே? பக்தி,பண்பாடு,கலாச்சாரம் என அனைத்தும் ஒருங்கே நடைபெறும் ஒரு உற்சாகத் திருவிழா.அடியார்களின் அன்பைப் பெறும் விழா. சென்னையின் பாரம்பரியத் திருவிழா. இந்த திருவிழா பற்றி நமக்கு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தெரிந்தது. நேரில் சென்று அருள் பெற விரும்பினோம். இதோ இந்த ஆண்டு நடைபெற்ற அந்த விழாவின் காட்சிகளை இங்கே இணைத்துள்ளோம். இந்த பதிவை நாம் அளிக்க இருக்கின்றோம் என்று நாம் கனவிலும் நினைக்க வில்லை. ஆனால் வழி நடத்துபவன் அவன் அன்றோ. அவனின்றி ஓரணுவும் அசையாது. நாமெல்லாம் எம்மாத்திரம்? அடுத்த வருடம் நடைபெறும் விழாவில் நம் TUT குழுவின் சார்பாக நாமும் கொடுக்க விரும்புகின்றோம், இதுவே இந்த பதிவின் சாராம்சம் கூட.

சரி..எப்படியோ இந்நேரம் ஊகித்து விட்டீர்கள் இல்லையா? அந்த திருவிழா மயிலையையே..இல்லை இல்லை சென்னையையே அதிரவைக்கும் மயிலை அறுபத்து மூவர் திருவிழா தான். லட்சக்கணக்கானோர் பங்கு பெறுகின்றார்கள் என்றால் சும்மாவா? இங்கே நடக்கும் அதிர்வில் அந்த கயிலையும் அதிரும் என்று நாம் நினைக்கின்றோம். மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் கோவில் நடைபெறும் பங்குனித் திருவிழா ஒட்டி இந்த அறுபத்து மூவர் உலா நடைபெறும்.மனித வாழ்க்கையில் ஒருமுறையேனும் பார்த்துப் பரவசப் பட வேண்டிய ஒன்று.அழகு மட்டுமல்ல பிரம்மாண்டம் சேர்ந்த ஒரு விழா.

நமக்குத் திருவிழா என்றால் நமது கிராமம் தான் நினைவிற்கு வரும். அது போல் அன்றொரு நாள் மட்டும் மந்தைவெளி முதல் மயிலாப்பூர் வரை எங்கு பார்த்தாலும் கடைகள்,தின்பண்டங்கள் என களை கட்டும். மயிலையின் வாசம் மந்தையில் வீசும் என்றால் அது தான் அறுபத்து மூவர் விழாவின் சிறப்பு.

இது போன்ற விழாக்களுக்கு குடும்பம் சகிதமாக சென்று கலந்து கொள்ளுங்கள்.அப்போது தான் கொடுப்பதின் சிறப்பும்,பெறுவதின் இன்பமும் புரியும். ஒரே கூட்டம் என்றெல்லாம் நினைக்காதீர்கள்.ஏனெனில் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் விழா இது. தவற விடாது கலந்து கொண்டு சிவ புண்ணியம் பெறுங்கள். சென்னையை சுற்றிப் பார்க்க தினமும் ஏராளமானோர் வந்து கொண்டிருக்கின்றார்கள்.அப்படி வருபவர்கள் இது போன்ற அறுபத்து மூவர் விழா காலத்தில் வந்து பார்ப்பது சிறப்பாக இருக்கும் அன்றோ?நம் அனைவருக்கும் சிறிதாவது அறுபத்து மூவர் பற்றி தெரியும். இனிவரும் பதிவுகளில் அறுபத்து மூவர் பற்றி நம் தளத்தில் அருள, எல்லாம் வல்ல ஈசன் அருள் புரியட்டும்.

இந்தாண்டு நடைபெற்ற விழாவிற்கு நாம் செல்லும் போது, மந்தைவெளியிலே பானங்கள் தர ஆரம்பித்து விட்டார்கள். பேருந்தில் இருப்பவர்கள் ஒவ்வொருவராக வாங்கிக் கொண்டு இருந்தார்கள். நாமும் வாங்க முற்பட்டோம். நமக்குக் கிடைக்கவில்லை.அப்போது அருகே இருந்த வைஷாலி பாட்டி ( பாட்டியின் பேர் கடைசில் தான் கேட்டுத் தெரிந்து கொண்டோம் ) சற்று சங்கடமாக இருந்தார்கள் நமக்குக் கிடைக்கவில்லை என்று. எப்படியோ பேருந்தில் இருந்து இறங்கும் முன் நமக்கு கிடைத்த உடன் தான் அவர் அவருடைய பானத்தை குடிக்க ஆரம்பித்தார். நமக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? மயிலையில் அன்றொரு நாள் மட்டும் இப்படி அன்பில் நனைவார்கள். அது தான் அறுபத்து மூவரின் சிறப்பு. கொடுத்து கொடுத்து சிறந்தவர்கள் அன்றோ?

பின்னர் பாட்டியுடன் சேர்ந்து கொண்டு சாய் பாபாகோயில் சென்று பிரார்த்தனை செய்து விட்டு, திருவீதி உலா  காண சென்றோம். ஆச்சர்யத்தில் உறைந்தோம். ஐஸ் கிரீம், குளிர்பானம், தர்பூசணி, அன்னதானம், தேநீர், காப்பி  என்று கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்.கொடுப்பது சிறப்பு என்பது இவ்விழாவின் தாத்பர்யம். பழைய ஆன்மிக புத்தகங்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம். நாமும் சில இடங்களில் பெற்றுக் கொண்டோம். நம்மால் பாட்டியின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. சுமார் 5 மணி அளவில் அப்படியே கபாலீசுரவர் கோயில் முன் சென்றோம்.

என்ன கூட்டம். ! உள்ளே சென்றால் வெளியே வருவது கடினம். நாம் தனித்து சென்றிருந்தால், அப்படியே மாட வீதிகளில் நின்று தரிசனம் பெற்று வந்திருப்போம், ஆனால் அந்தப் பாட்டி விடவே இல்லை. எப்படியோ அந்த கூட்டத்தில்,பல தள்ளு முள்ளுக்கு இடையில் என்னை அழைத்துக் கொண்டு சென்றார். கடைசியில் தேரில் தயாராக இருந்த கபாலீசுரவர் ,கற்பகாம்பாள் தரிசனம் பெற்றோம். சில மணித்துளிகளில் வீதி உலா அறுபத்து மூவரோடு ஆரம்பித்தது.








நம்மால் அலைபேசி எடுத்து, காட்சிகளை பதிக்க முடியவில்லை. அவ்வளவு கூட்டம். ஏதோ நம்மால் முடிந்த அளவு எடுத்த காட்சிகளை இங்கே அறியத் தருகின்றோம். அடுத்த ஆண்டு நிகழ்வில் இன்னும் அதிக காட்சிகளோடு பதிவேற்றம் செய்வோம்.







                                 குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று அல்லவா?



அடுத்து கொடை வள்ளல்கள். கொடுப்பதின் இலக்கணம் காட்டியவர்கள். சிவ புண்ணிய அருளாளர்கள் .. அறுபத்து மூவர் தரிசனம்,











அட. திருவள்ளுவரும், வாசுகி அம்மையாரும்ஒரு சேர அருள் பாலிக்கின்றார்கள். திருவள்ளுவரும் ஒரு நாயன்மார் என்பது இதில் தெரிகின்றது அல்லவா? இந்தக் காட்சி காணக் கிடைக்குமா? உலகப் பொது மறை இயற்றிய திருவள்ளுவருக்கு நாம் செய்கின்ற சிறப்பு இங்கே தான் காண முடியும்.அதனால் தான் சொல்கின்றோம். அறுபத்து மூவர் விழா சென்று வாருங்கள் என்று ! என்ன கொடுக்கின்றார்கள் என்று ஒரு முறை சொல்கின்றோம்.

திருவிழாவில் கலந்து கொள்ள வந்த பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் உணவுப் பொருட்கள்  வழங்கப்பட்டது. சாம்பார் சாதம், தயிர் சாதம், புளி சாதம், லெமன் சாதம், சர்க்கரை பொங்கல், கீரை சாதம், கருவேப்பிலை சாதம், கொத்தமல்லி சாதம், புதினா  சாதம், தேங்காய் சாதம், பால் சாதம், ஜவ்வரிசி பாயாசம், பருப்பு பாயாசம், சுண்டல் மற்றும் பல்வேறு பயிறு வகைகள், தர்பூசணி, மோர், ரஸ்னா, இளநீர்,  கிர்ணிப்பழ ஜூஸ், பாதாம் ஜூஸ், கிரேப் ஜூஸ், ஆரஞ்ச் ஜூஸ், லெமன் ஜூஸ், சர்பத், பலாப்பழம், வெள்ளரிக்காய், கேப்பை கூழ், வாட்டர் பாக்கெட், லட்டு,  ஜாங்கிரி, சம்சா, வடை, தோசை உள்ளிட்ட 88 வகையான பொருட்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

கொடுப்பதின் சிறப்பு புரிகின்றது. பெறுவதில் என்ன சிறப்பு இருந்து விடப் போகின்றது? பெறுவதற்கு யாரேனும் இருந்தால் தானே கொடுக்க முடியும். பெறுபவர்கள் இங்கே சும்மா பெறுவதில்லை. அறுபத்து மூவர் ஆசியோடு இங்கே பெறுகின்றார்கள். நம் உயிர் வளர்க்க உதவும் உடம்பினை வளர்க்க அன்றொரு நாள் பெறுவதும் சிறப்பே. பெறுபவர்கள் வாயார வாழ்த்துவார்கள். இல்லையேல் மனதின் அடி நாதத்தில் இருந்தேனும் வாழ்த்து கிடைக்கும். உதாரணத்திற்கு  நாம் இந்த ஆண்டு கலந்து கொண்ட விழாவில் ஜீஸ், ஐஸ் கிரீம், தேநீர் அனைத்தும் பெற்றோம். நம் உள்ளம் இப்போது நினைத்தாலும் வாழ்த்துகின்றது. இதுவே பெறுவதில் உள்ள சிறப்பு.

சிலர் மறுபடியும் மறுபடியும் வந்து பெற்றுக் கொண்டிருப்பதைக் கண்டோம். தவறொன்றும் இல்லையே. பெறுவதற்கான விழாவில் எத்தனை முறை வேண்டுமானாலும் பெறலாம். எத்துணை முறை வேண்டுமானாலும் கொடுக்கலாம். அடுத்த ஆண்டு விழாவில் நாமும் கொடுப்போம். நாமும் பெறுவோம்.

முந்தைய பதிவுகளுக்கு:- 

எண்ணிக்கை முக்கியமல்ல...எண்ணங்களே முக்கியம்... உழவாரப் பணி அனுபவம் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_27.html

வாருங்கள்...உளம் ஆற உழவாரப் பணி செய்வோம் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_17.html

கணவன் மனைவியிடையே ஒற்றுமையும், அன்பும் ஓங்க ஓர் பரிகார ஸ்தலம்...- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_14.html

ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் அருள் பெற வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/07/blog-post_99.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் - உழவாரப் பணி அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_2.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

மனிதம் வளர்க்கும் மாமனிதர் முல்லைவனம் - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_77.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

காப்போம் வாருங்கள் - தமிழகத்தில் உள்ள ஒரே கரக்கோயில் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_7.html

நவராத்திரியில் நவரசங்கள் தரும் நவதரிசனம் - (9) - https://tut-temple.blogspot.in/2017/10/9.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html




எண்ணிக்கை முக்கியமல்ல...எண்ணங்களே முக்கியம்... உழவாரப் பணி அனுபவம்


அன்பார்ந்த மெய்யுணர்வாளர்களே.


தேடல் உள்ள தேனீக்களாய் என்ற குழுவின் மூலம் நம் தொண்டினைத் தொடர்ந்து வருகின்றோம்.
வலைத்தளம் ஆரம்பித்து இன்றைய பதிவில் 200 ஆவது பதிவைத் தொட்டு விட்டோம்.இவை அனைத்தும் குருவருளால் மட்டுமே நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. நம்மைப்
பொறுத்தவரை எண்ணிக்கை முக்கியமல்ல. எண்ணங்களே முக்கியம்.இந்த பதிவில் கொளத்தூரில் உள்ள திருமால் மருகன் ஆலயத்தில் நடைபெற்ற  உழவாரப் பணியின் அனுபவத்தை தங்களோடு பகிர விரும்புகின்றோம்.அதற்கு முன்பாக உழவாரம் பற்றிய சில குறிப்புகளை காண உள்ளோம். இவை நம்முள் உள்ள சில ஐயப்பாடுகளை நீக்கும் என்று நாம் நம்புகின்றோம்.

சீரும் சிறப்பும் மிக்க உழவாரத் திருப்பணியை ஏன் செய்கிறோம்?

 இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு உயிரும் விரும்பி அறிய வேண்டிய ஒன்றாகும்.
 நம் போன்ற மானிட உயிர்க் கூட்டங்களிலிருந்து கண்ணுக்குத் தெரியாத வைரஸ், அமீபா போன்ற உயிர்களிலிருந்து, மிகவும் பெரிய யானை, திமிங்கலம் போன்ற விலங்குகள் வரை - ஏன்? இந்திரன், திருமால், நான்முகன் உள்ளிட்ட முப்பத்து முக்கோடித் தேவர்கள் வரை இவ்வுலகில் காலம் காலமாக உடல் எடுத்துப் பிறந்து வருகிறோம்.

 நாம் செய்த நல்வினை, தீவினைகளுக்கு ஏற்பப் பிறப்பெடுத்து வருகிறோம். பாவங்களுக்கு ஏற்ப துன்பமயமான நரக வாழ்வையும், புண்ணியங்களுக்கு ஏற்ப  சொர்க்கலோக வாழ்வையும் பெறுகிறோம். இவ்விரண்டு வாழ்க்கையும் நிலையற்றவை. ஏனென்றால் நாம் செய்த நல்வினைகளுக்கு ஏற்பச் சொர்க்கலோக இன்பங்களை நுகர்ந்த பின்பு மீண்டும் பூவுலகிற்கு வந்து தீர வேண்டும். அதுபோல நாம் செய்த தீவினைகளுக்கு ஏற்ப நரகம் சென்று துன்பங்களை அனுபவித்தபின் மீண்டும் இப்பூவுலகம் வந்தே தீரவேண்டும்.

 நாம் முற்பிறவியில் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்ப நமக்கு நோய், வறுமை, கடன், அவமானம் போன்ற இழிநிலையும்...

புண்ணியங்களுக்கு ஏற்பப் பணம், புகழ், திடீர் யோகம், ஆரோக்கியம் போன்ற உயர் நிலையும் வந்து சேர்கின்றன.

 இந்த உயிர், “சிவபுண்ணியம்” செய்வதால் தான் நமது பாவ புண்ணியங்களே இல்லாமற் போகும். அதன் பிறகு, இந்த உயிர் மீண்டும் உடல் எடுக்காது.   

சிவபுண்ணியம் என்றால் என்ன?

சைவ சமயக் குரவர் நால்வரும், 63 நாயன்மார்களும் காட்டிய, செய்த, சொல்லிய நெறிகளே சிவபுண்ணியங்களாகும்.

1. சிவாலயம் முறையாகக் கட்டுவது.

2. நாள்தோறும் சிவாலயம் சென்று வழிபடுவது.

3. சிவனடியார்களுக்கு அமுது படைப்பது.

4. சிவாலயங்களுக்குச் சென்று “உழவாரப் பணி” - அதாவது புல்பூண்டுகளை நீக்கி,
  வெள்ளையடித்து, தூய்மை செய்து, அபிஷேக ஆராதனைகள் செய்வது.

5. சிவாலய உழவாரப் பணி செய்ய ஊக்குவித்தல், செய்தல், செய்வித்தல் ஆகியன.

முதலில்  சிவாலயம் கட்டுதல்

இன்று நம்போன்ற சாமான்யர்களால் இயலாது. சிவாலயம் கட்டுவதால் மாயப் பிறப்பு அறுபடும் என்பதை உணர்ந்த அக்கால அரசர்கள் தங்கள் தகுதிக்கு ஏற்பச் சிவாகம விதிப்படிச் சிவாலயங்களைக் கட்டுவித்தார்கள்.அரசுப் பெருமக்கள் தங்கள் அழியும் புகழை நிலைநிறுத்த எண்ணாமல் என்றும் நிலையான பிறவாத பேரின்ப வாழ்வுக்கு வழிகாட்டும் சிவாலயம் கட்டி
“பிறவாத கைலாய முக்திப்” பேற்றைப் பெற்றார்கள்! இந்நாளில் சிவாலயம் கட்டுவதென்பது அரிதினும் அரிதே!..

இரண்டாவது  சிவாலய தரிசனம்.

தினசரி சிவாலய தரிசனம் என்பது பலதரப்பட்ட தொழில்புரியும் அனைவருக்கும் இயலாத ஒன்று. எனவே, முடிந்தால் தினசரி அல்லது வாரம் ஒருநாள், வழிபடுவது என்று உறுதி எடுத்து வணங்கலாம். அன்றி 15 நாட்களுக்கு ஒரே முறை பிரதோஷ காலத்தில் வணங்கலாம்! அதுவுமின்றேல் - மாதம் ஒரே முறை; அமாவாசை, பௌர்ணமி, கார்த்திகை என வகுத்து வணங்கலாம். இன்றேல், சிவராத்திரி அன்றாவது வணங்குதல் சிவபுண்ணியம் தரும்!

அடுத்து  சிவனடியார்களுக்கு அமுது படைத்தல்...

சிவனடியார்கள் யார்? சிவனடியார்கள் நெற்றி நிறையத் திருநீறு; கழுத்தில் சிவக்கண்மணி - ருத்ராக்ஷம் அணிந்தவர்கள்; இவைகள் சிவசின்னங்கள் : இந்தச் சின்னங்களுடையவர்கள் அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தவறுகள் செய்திருப்பது நமக்குத் தெரிந்தாலும் அதை எண்ணாது “சிவ சிவ” என்று சொல்லி அவரைச் சிவனடியாராகவே எண்ணி நமது தகுதிக்கு ஏற்பப் பொருளுதவியோ, அமுதோ தருவது சிவ புண்ணியமாகும். ஒன்றுமே சொல்லாமல் சிவ சிந்தனையின்றி உயிர்களுக்கு செய்யும் புண்ணியம் - உயிர் புண்ணியம்.

 அதாவது பசுப்புண்ணியத்தைத் தந்து நாம் மீண்டும் பிறக்க வழி வகுக்கும். எனவே, தர்மத்தை மட்டுமல்ல, எல்லா நற்செயல்களையும், “சிவ சிவ” என்று சொல்லி பரம் பொருளாகிய சிவத்தை எண்ணிச் சிவனார்க்கு அர்ப்பணம் செய்வோமானால் அத்தனையும் சிவ புண்ணியமாகி நமது பிறப்பை ஒழிக்கும்.

 அடுத்து சிவாலயத்தில் உழவாரப் பணி செய்தல்

சைவ சமயக் குரவர் நால்வரில் அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர் உழவாரப்பணி செய்து உயர்ந்தவர். அவர் திருக்கரத்தில் உழவாரப்படை இருப்பதை அன்பர்கள் காணலாம்! ஏற்கனவே நமது முன்னோர்கள் கட்டிய - கோயில் கோபுரம், சுவர் ஆகிவற்றிலும் செடி, கொடிகள் முளைத்து சிதிலமடையக் கூடிய நிலையில் உள்ளன. ஏன்?! சிவலிங்கத் திருமேனியின் மேல் எண்ணெய் படாத சிவாலயங்கள் கூட உள்ளன.

பெற்ற தாய் தந்தையரைப் பேணாமல் யார் யாரையோ பெற்றோர் என எண்ணிப் பேதலித்துக் கொண்டாடும் வழி தவறிய மகனைப் போல நாம் இருக்கின்றோம்! ஆனால், சிவ பெருமான் நினைத்தால் தன் கருணையின் காரணமாக அனைத்துச் சிவாலயங்களையும் ஒரு நொடியில் பொன்னாக ஒளிரவைக்க முடியும்! நம்மைப் போன்ற அற்ப உயிர்கள் இச்சிவாலயங்களில் “உழவாரப்பணி” புரிந்து உய்யும் பொருட்டே அவற்றை இறைவன் அவ்வாறே விட்டு வைத்துள்ளான்! தான் பெற்ற குழந்தையின் நோய் தீரத் தாய் பத்தியம், உண்ணா நோன்பு இருப்பது போலத் தாயிற் சிறந்த தயை நிரம்பிய தத்துவனான சிவ பெருமான் நாம் சிவ புண்ணியம் பெறக் காட்டிய எளிய வழியே இந்த உழவாரப்பணி.

 (உலகில் எந்த ஒரு பணியும் வழிபாடும் ஒரு குறிப்பிட்ட நோக்கம் அல்லது இலாபம் கருதியே இருக்கும்.)

சிவபெருமானை வழிபட்டால் முன்-7, இடை-7, கடை-7 ஆகிய 21 தலைமுறைகளுக்கும் முன்னோர், பின்னோர் வம்சாவழியினர் மீண்டும் பிறவா நெறி உள்ள “கைலாய முக்தி”யைப் பெறுவர்.
அத்தகைய சிவபுண்ணியம் தரும் இந்த உழவாரப் பணியானது சிவாலயங்களுக்குச் சென்று தேவையற்ற புல்பூண்டு, முள், புதர் நீக்குவதாகவும், ஒட்டடை, தூசு நீக்குவதாகவும், வெள்ளையடிப்பதாகவும், கோயில்களைச் சுத்தமாக மெழுகிக்கோலமிட்டு அழகூட்டுவதாகவும் நிறைவாக அபிஷேக ஆராதனைகள் நடத்துவதாகவும் அமைகிறது.இத்தகைய அரும்பணியை - சிவாலய உழவாரத் திருப்பணியை - ஆடவர், பெண்டிர், பெரியவர், சிறியவர் உட்பட எல்லா தரப்பு மக்களும் பணியாற்றி வருகின்றனர்.

 இந்த திருப்பணியில் எல்லோரும் பங்குபெற்று இயன்ற அளவு பொருளாலும், உடல் உழைப்பாலும் மற்றும் பிறவகைகளாலும், சிவபுண்ணியம் செய்ய அருமையான வாய்ப்புக் கிட்டியுள்ளது.
இப்புண்ணியத்தில் பங்கேற்போர் 21 தலைமுறைகள் தாங்களும் தங்கள் வம்சாவழியினரும் பேரின்பம் பெற்று மீண்டும் பிறவா நெறி பெற்று உய்ய இத்தெய்வத் திருப்பணியில் பங்கு கொண்டு சிவ புண்ணியம் ஈட்டி என்றும் மாறாத சிவானந்தப் பெருவாழ்வில் திளைத்து இன்புறுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

சரி அன்பர்களே. நம்முடைய உழவாரப் பணி இன்பத்துள் செல்வோமா?

காலையில் சரியாக 9:30 மணியளவில் திருமால்மருகன் கோயிலை அடைந்தோம். ஒவ்வொருவராக வந்து தொண்டிற்கு வந்து கொண்டிருந்தார்கள். அன்பர்கள் வர, வர தொண்டினை ஆரம்பித்தோம்.இந்த உழவாரப் பணியில் ஆடவர் எதிர்பார்த்த அளவில் வரவில்லை. அதனால் என்ன? இருப்பவர்களை வைத்து பணியைச் செய்தோம்.

முதலில் கோயிலை ஒரு சுற்று சுற்றி வருவோமா? இதோ திருக்கோயிலின் நுழைவாயில்.











மகளிர் குழுவினர் வந்து சேர்ந்ததும், உழவாரப் பணி தொடங்கியது. கோயில் குருக்களுடன் சேர்ந்து, ஒவ்வொரு சன்னதியில் உள்ள பிரபையை எடுத்தோம். அதனை அப்படியே சுத்தம் செய்யும் பொருட்டு, மகளிரிடம் கொடுத்தோம். விநாயகர், சிவன், ஆஞ்சநேயர்,முருகன்,பெருமாள் என்று கோயிலை சுற்றிப் பார்க்க ரம்மியமாக இருந்தது. சந்திரசேகரன் அண்ணன் வந்த உடன், சன்னதியை சுத்தம் செய்யும் பணி தொடங்கியது. அன்றைய தினம் பிரதோஷம் என்பதால் முதலில் சிவன் சன்னதியை சுத்தம் செய்ய ஆரம்பித்தோம்.

மகளிர் குழுவின் பணி ஆரம்பமானது.தங்களின் பார்வைக்கு சில காட்சிகள் கீழே






நம் குழுமத்தின் குட்டி சுட்டிகளும் ஆர்வத்துடன் உழவார செய்தனர்.





                      நந்தியம்பெருமான் சுற்றியுள்ள எண்ணைப்பிசுக்குகள் நீக்கப்படுகிறது


                                            சிவன் சன்னதி சுத்தம் செய்த பிறகு

அடுத்து தீப மேடை சுத்தம் செய்ய வேண்டும் என்று மகளிரிடம் கூறினோம். சொன்ன உடனே, பணியை எடுத்துக் கொண்டார்கள். சுதந்திரமாக அவர்கள் ஒவ்வொரு பணியை செய்து கொண்டே வந்தார்கள். நாம் அங்கே, இங்கே செல்வதுமாய் இருந்தோமே தவிர, பணியில் ஈடுபடவில்லை. சிவன் சன்னதி முடித்த பிறகு, விநாயகர் சன்னதியை தூய்மை செய்வதாக சந்திரசேகரன் அண்ணன் கூறினார்.

அப்போது, நம் குழுவின் மற்றொரு உறவினர் திரு.வினோத் குமார் அவர்களும் கோயிலை அடைந்தார்கள். அவரிடம் கோயிலின் மேலே உள்ள கோபுரம் மற்றும் சன்னதியின் வெளியே உள்ள சுவர்களில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய சொன்னோம்.








நீங்களே பாருங்கள். எவ்வளவு அகல் விளக்குகள் என்று? தீப மேடையில் உள்ள எண்ணெய் பிசுக்குகள் துடைப்பது தெரிகின்றதா? நாங்கள் எங்கள் மனதில் உள்ள அழுக்குகளையும். மன பிசுக்குகளையும் இங்கே நீக்கிக் கொண்டிருக்கின்றோம்.அதுதானே உழவாரத்தின் ஆதாரம்.


மேலே நீங்கள் பார்ப்பது கோயிலில் உள்ள பாத்திரங்கள், தட்டுக்கள் போன்றவற்றை கழுவும் காட்சி. எங்கள் உழவாரப் பணியின் அடிநாதம் இவர்கள் தான். திருமதி தாமரை அவர்கள் தற்போது நடைபெற்ற உழவராப் பணிகளில் தவறாது தம் குழந்தைகளோடு வந்து கலந்து கொள்வது எங்களுக்கு மிகுந்த மகிழ்வைக் கொடுக்கின்றது. மேலும், இந்த தொண்டிற்கு தேவையான பொருளாதார உதவியையும் இவர்கள் செய்து வருவது இங்கே குறிப்பிடத் தக்கது. 


        அகல் விளக்குகள் அனைத்தும் அள்ளி, வேறொரு இடத்தில் குவிக்க ஏற்பாடு செய்த காட்சி




திரு,வினோத்குமார் கைவண்ணத்தில் கோயிலின் கோபுரம் மற்றும் வெளிப்புறம் தூய்மைப்படுத்தப்படுகின்றது. அவரும் தன் பங்கிற்கு தன்னால் இயன்ற சேவைச் செய்தார். நாம் மீண்டும்,மீண்டும் சொல்வது. வயோதிகர்கள், முதியவர்கள்  உழவாரப் பணி செய்ய முடியவில்லை என்று வருத்தம் கொள்ள வேண்டாம். நீங்கள் இது போன்ற உழவாரப் பணியில் வந்தாலே போதும். வந்து, பணி செய்பவர்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்யலாம். உதாரணமாக பணி செய்பவர்களுக்கு நீர் கொடுத்தல், அவர்களின் உடைமைகளை பாதுகாத்தல் போன்றவை.









                                                 பெருமாளே ..எங்கள் பெருமானே



தீப மேடையும், மூன்று சன்னதிகள் ( சிவன், விநாயகர், பெருமாள் ) என முடித்து விட்டு ,சற்று ஓய்வெடுத்தோம். கோயில் சார்பாக அருமையான தேநீர் கொடுத்தார்கள். பின்பு கோயிலின் நிர்வாக அறங்காவலர் திரு.V.R. ராஜா அவர்கள் திருக்கோயில் பற்றியும், கோயிலின் சபா உறுப்பினர்கள் பற்றியும் சுமார் 15 நிமிடங்கள் பேசினார். செவிகளுக்கு அருமையான விருந்தாய் அமைந்தது. மீண்டும் அடுத்த சுற்றுக்கான பணி ஆரம்பமானது.





மந்தவெளியில் இருந்து வந்து சிறப்பு சேர்த்தார் திருமதி அருணா அவர்கள். பணியில் ஈடுபட காட்சிகள் அனைவரும் பார்த்தீர்கள். இதோ தூய்மை செய்த பிறகு ..நீங்களே பாருங்கள்.


                              அழுக்கற்ற, எண்ணெய் பிசுக்கற்ற தீப மேடை தயார்


                              அகல் விளக்குகள் அள்ளி, அந்த இடம் தூய்மையான பின்பு




பெருமாளின் தரிசனம். அனைவரும் தங்கள் பணியில் தொடர்ந்த வண்ணம் இருந்தனர். நம்மால் முடிந்த அளவு உழவார செய்து கொண்டு இருந்தது.








அனைத்து சன்னதிகளும் தூய்மை செய்துவிட்டோம் என்று நினைத்தோம். அப்போது தான் தெரிந்தது, தாயாரின் சன்னதியை விட்டு விட்டோம் என்று. பின்பு சந்திரசேகரன் அண்ணன் களத்தில் இறங்கினார்.இடையில் அவர் சற்று ஓய்வெடுத்த போது , நமக்கு முருகப் பெருமான் சன்னதியை தூய்மை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
















தற்போது தாயார் சன்னதி மட்டுமே உள்ளது. மகளிர் அனைவரும் கோயிலின் தரையில் உள்ள தூசி,தும்புகளை கூட்டி அள்ள ஆயத்தம் ஆயினர். சிலர் ஆஞ்சநேயர் சன்னதியின் கதவு, மேற்புறம் என பட்டையைக் கிளப்பினார். சிலர் அங்கே இருந்த மரத்தாலான மேடையை சுத்தம் செய்தனர். தரையை சுத்தம் செய்ய அங்கே, குழாய் மூலம் நீர் அடிக்க சிறார்கள் உதவினார்கள்.











அனைத்து சன்னதிகளும் சுத்தம் செய்த பின்னர், தரையை துடைக்க ஆரம்பித்தோம். நன்கு குழாய் மூலம் நீர் பீய்ச்சி அடித்து, துடைப்பம், மாப்பு போட்டு ஒன்றுக்கு இரண்டு முறை தூய்மை செய்தோம்.இதோ ஆலயம் ஆன்ம லயமாக உள்ளது. பிரபை, கோயில் பாத்திரங்கள், கோயிலின் சன்னதிகள், மேற்கூரை,கோபுரம், வெளிச் சுவர்கள், தீப மேடை, மர மேடை, துணிகள், தரை என ஒட்டுமொத்தமாய் சுத்தம் செய்தது மனதிற்கு நிறைவாய் இருந்தது. பணி நிறைவில் கோயிலின் சார்பாக அருமையான மதிய உணவு சாம்பார் சாதம்,தயிர் சாதம், ஊறுகாய், சிப்ஸ்  என கொடுத்தார்கள். சுவையோ சுவை. கோயிலின் பிரசாதம் என்றால் அதற்கு தனி ருசி என்பது சுவைத்தால் தான் தெரியும்.







தொண்டில் இணைந்து சிறப்புச் சேர்த்த அனைவருக்கும் பிரதோஷ நந்தி வழிபாடு என்ற சிறிய புத்தகம் நம் TUT தளம் சார்பாக வழங்கப் பட்டது. அட ! அன்று பிரதோஷம். என்ன ஒற்றுமை பாருங்கள். பிரதோஷம் அன்று நந்தி வழிபாடு பற்றிய புத்தகம் கிடைக்கின்றது என்றால் சும்மாவா? எல்லாம் பெருமாளின் அருளன்றோ? திருமால்மருகனுக்கு அரோகரா !!

இந்த திருக்கோயிலில் உழவார செய்ய வாய்ப்புக் கொடுத்த திரு.V.R. ராஜா அவர்களுக்கும்,திருமால் மருகன் கோயில் நிர்வாகத்திற்கும், எங்களோடு உடனிருந்து, உணவு வழங்கும் வரை இருந்த கோயில் குருக்களுக்கும் TUT தளம் சார்பாக நன்றியை தெரிவிப்பதில் நாம் மகிழ்கின்றோம். குழு உறுப்பினர்கள் அனைவரும் இணைந்த காட்சி இல்லாது இருந்தால் எப்படி? இதோ.



              எப்போ அழைப்பீரோ? என்று மீண்டும் திருமால்மருகனிடம் காத்திருக்கின்றோம்.


முந்தைய பதிவுகளுக்கு:

வாருங்கள்...உளம் ஆற உழவாரப் பணி செய்வோம் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_17.html

கணவன் மனைவியிடையே ஒற்றுமையும், அன்பும் ஓங்க ஓர் பரிகார ஸ்தலம்...- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_14.html

ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் அருள் பெற வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/07/blog-post_99.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் - உழவாரப் பணி அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_2.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

மனிதம் வளர்க்கும் மாமனிதர் முல்லைவனம் - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_77.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

காப்போம் வாருங்கள் - தமிழகத்தில் உள்ள ஒரே கரக்கோயில் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_7.html

நவராத்திரியில் நவரசங்கள் தரும் நவதரிசனம் - (9) - https://tut-temple.blogspot.in/2017/10/9.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html