Subscribe

BREAKING NEWS

23 October 2017

குன்றத்தூர் முருகனுக்கு அரோகரா - கந்த சஷ்டி பதிவு (3)

முருகன் அருள் முன்னிற்க !



நேற்று ஸ்ரீ துளஸீஸ்வரர் திருக்கோயிலில் உழவாரப் பணியையும், மரம் நடு விழா ஒன்றையும் (சிறிய அளவில்) செய்து முடித்தோம். TUT உறவுகளின் அருமையான கூட்டு முயற்சியில் உழவாரமும் சிறப்பாக இருந்தது. பணி நிறைவில் அருமையான தரிசனமும் கிடைக்கப் பெற்றோம். விரைவில் தனிப் பதிவாக அனைவரையும் சந்திக்கின்றோம்.

இந்த பதிவில் நாம் கடந்த வாரம் முதல் தரிசனம் செய்த அழகனின் அருள் நிலைகளை காட்சிகளாக இங்கே அறியத் தருகின்றோம். கந்தன் அருள் அனைவரும் பெறுவோம்.

சனிக்கிழமை காலை குன்றத்தூர் சென்றோம். அங்கே அருள்பாலிக்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சென்று, கருணைக் கடலாம் கந்தனை வழிபட்டோம்.கூட்டம் சற்று குறைவாக இருந்தது. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. இங்கு முருகப் பெருமான் வள்ளி,தெய்வானையுடன் வடக்கு நோக்கி இருக்கின்றார். திருமணத் தடை உள்ளவர்கள் இங்கே அதிகம் வேண்டிக் கொள்கின்றார்கள் என்பது இத்தலத்தின் மற்றொரு சிறப்பாம்.









குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்.ஹ்ம்ம்..குன்றத்தூரிலும் குமரனுக்கு கொண்டாட்டம் என்று நமக்கு தோன்றியது. கந்த ஷஷ்டி திருவிழாவினை ஒட்டி, இலட்சார்ச்சினை நடந்து கொண்டிருந்தது. உற்சவரை தரிசனம் செய்த காட்சிகள் தான் மேலே நீங்கள் பார்ப்பது.அழகன் அழகன் தான்.








குன்றத்தூர் முருகன் சேக்கிழார் குரு பூஜையின் போது, மலையில் இருந்து இறங்கி வந்து, கீழே உள்ள சேக்கிழார் கோயிலுக்குச் சென்று காட்சி தரும் வைபவம் இன்றளவும் நடைபெற்று வருகின்றது.இந்த ஆண்டு சேக்கிழார் குருபூஜை நிறைவு பெற்று விட்டது என்று நாம் நினைக்கின்றோம். முருகன் அருள் முன்னிற்க அடுத்த ஆண்டு சேக்கிழார் குரு பூஜை காண வேண்டுகின்றோம்.

பொதுவாக குன்றத்தூர் ஒரு புனித பூமி. குன்றத்தூர் முருகன் கோயில், சேக்கிழார் பிறந்த ஊர். கந்தலீஸ்வரர் திருக்கோயில்,திருஊரகப் பெருமாள் கோயில் ,திருமுறை விநாயகர் கோயில் என்று திரும்பும் இடமெல்லாம் திருக்கோயில்கள் தான்.










கருணைக்கடலாம் கந்தனை நன்கு தரிசனம் செய்யுங்கள். உள்ளே மூலவரை பார்க்க சென்றோம். நாம் அப்படியே வெளியே வரும் சமயம், குருக்கள் தீபாராதனை காட்டினார். அப்படியே முருகனின் அழகில்,அருளில்,தமிழில்,அன்பில், கருணையில், ஆற்றலில் உறைந்து நின்றோம்.அடுத்து கந்த சஷ்டி திருவிழாவில் சிறப்பு சேர்க்கும் விதமாக, மாலையில் சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற்று வருகின்றது. நாம் சென்ற பதிவில் கந்த புராணச் சொற்பொழிவு கூடுவாஞ்சேரியில் உள்ள நந்தீஸ்வரர் கோயிலில் நடைபெறுவது பற்றிய அழைப்பிதழை இணைத்து இருந்தோம். அந்த அனுபவத்தை அடுத்த பதிவில் காண்போம்.

வாய்ப்புள்ள நல்லுள்ளங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவும். வேதகிரி ஐயாவின் சொற்பொழிவு பற்றியும் முந்தைய பதிவுகளில் உள்ள இணைப்பில் காணவும்.






முந்தைய பதிவுகளுக்கு :-


முருகன் 60 - கந்த ஷஷ்டி சிறப்பு பதிவு - (2) - https://tut-temple.blogspot.in/2017/10/60-2.html

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_20.html

திருத்தலங்களின் சிறப்பு - சிவத்திரு.வேதகிரி அவர்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_12.html

ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

வேலவனின் திருப்பாதத்தில் - வேல்மாறல் அனுபவம் - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_10.html

வேல்மாறல் அகண்ட பாராயணம் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_12.html

வெற்றியைத் தரும் வேலவா போற்றி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_6.html

சரணம் சரணம் சண்முகா சரணம்! - கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வின் துளிகள் - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_12.html

64 வது நாயன்மார் - http://tut-temple.blogspot.in/2017/06/64.html





No comments:

Post a Comment