Subscribe

BREAKING NEWS

19 October 2017

கடவுளைக் கண்டோம் - TUT & AVM அன்னதான நிகழ்வின் அறிவிப்பு

அன்பர்களே..

அட..!...பதிவின் தலைப்பு வித்தியாசமாய் இருக்கின்றதே என்று ஆச்சர்யப் படுகின்றீர்களா?  ஆச்சர்யம் வேண்டாம்.இது தான் உண்மையும் கூட. இன்று காலை அலைபேசியில் உள்ள காணொளிகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது, ஒரு காணொளி நம்மை ஆச்சரியப் படுத்தியது. தவறுதலாக காணொளியை அழித்து விட்டோம்.  ஆனால் அந்த காணொளி இன்னும் மனதில் நிற்கின்றது. காணொளி சொல்லும் கருத்தை இங்கே எழுத்தில் தருகின்றோம். படித்துப்  பாருங்கள்.பதிவின் தலைப்பின் அர்த்தம் புரியும்.

வீட்டில் உள்ள சிறுவன், சில ரொட்டித் துண்டுகள், பழச்சாறு குப்பிகள் எடுத்துக்கொண்டு வெளியே கிளம்புகிறான்.தாயார் அவனைப் பார்த்து எங்கே செல்கின்றாய் என்று கேட்க, அதற்கு அவன், கடவுளைப் பார்க்க செல்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகின்றான். மீண்டும் அந்த தாயார், சரி.மாலை உணவிற்கு வீடு வந்து சேர் என்று கூறி அனுப்பி வைக்கின்றார்.

அந்த சிறுவன் , பேருந்து, ரயில் என மாறி, மாறி பயணித்து, கடைசியில் ஒரு பூங்காவிலுள்ள மர அமர்வில் உட்காருகிறார். அமர்வின் மறுபுறத்தில் கூனிக் குறுகி ஒரு வயதான மூதாட்டி உள்ளார். சற்று கூர்ந்து கவனித்த சிறுவன், அவரிடம் பேச்சுக் கொடுக்கின்றார். சற்று நேரத்தில் சிறுவனுக்கு பசிக்கவே, பையில் உள்ள ரொட்டித் துண்டை எடுத்து வாயில் வைக்கும் போது, மூதாட்டியிடம் சாப்பிட்டீங்களா? என்று கேட்கின்றார். உடனே அவர் இல்லை என்று மௌனிக்கின்றார்.

உடனே அந்த சிறுவன், அந்த ரொட்டித்துண்டுகளை அவருக்கு கொடுத்துவிட்டு, தானும் சாப்பிடுகிறார். மீண்டும் தன்னிடம் உள்ள பழச்சாறு குப்பியில் ஒன்றை அவருக்கு கொடுத்து விட்டு, சியர்ஸ் என்று கூறி இருவரும் குடிக்கிறார்கள். பின்பு அவரிடம் அன்பை பரிமாறிவிட்டு அவ்விடத்தில் இருந்து, சிறுவன் வீட்டுக்கு செல்கின்றார்.

வீட்டில் அவனது தாயார், கடவுளை பார்த்தாயா? என்று கேட்க, ஆச்சரியமா பொங்க ! ஆமாம் கடவுளை பார்த்தேன். என்ன..கடவுள் மிக அதிக வயதுடையவராய் இருக்கின்றார். ரொட்டித்துண்டு சாப்பிடுகின்றார். புன்னகை செய்கின்றார் என்று கூறினான். அப்படியே அந்த மூதாட்டியின் காட்சியில் கடவுள் மிகச் சிறிய வயதுடையவராய் இருக்கின்றார். புன்னகை செய்கின்றார் என்றார்.

பார்ப்பதற்கு மிக மிக எளிய கதையாய் தோன்றுகின்றது.ஆனால் கதை சொல்லும் நீதி இருக்கின்றதே.. உதவும் மனதில் கடவுள் வாழ்கின்றார் என்று கூறலாமே என்று மனம் சொல்கின்றது.இது தான் உண்மை. கடவுள் இந்த கலியுகத்தில் நாம் நினைப்பது போன்று, பல தலைகளுடன்,கரங்களுடன் வருவார் என்று நினைத்தால் அது மிக மிகத் தவறு. கடவுள் இங்கே மனித ரூபத்தில் தான் வாழ்கின்றார்.

இந்த கதையில் வருவது போல, நாமும் பல சந்தர்ப்பங்களை கடந்து வந்திருப்போம். ஆனால் இனி இது போன்ற சூழல் இருந்தால், இது போன்ற முதியவரிடம், ஆதரவு அற்றவரிடம் சென்று நலம் விசாரியுங்கள். அதுவே..பெரிய விஷயம். முடிந்தால்  அவர்களுக்கு உணவு வாங்கி கொடுங்கள். இப்படி நீங்கள் செய்யும் போது, கடவுளாய் நீங்கள் அவருக்குத் தெரிவீர்கள்.

நாம் AVM குழுவோடு இணைந்து அன்னதானம் செய்வதை நீங்கள் அறிவீர்கள். ஆரம்பிக்கும் போது, எளிமையாய் இருந்தது. ஆனால் நிகழ்வின் போது  நாம் அறியும் விஷயங்கள் நம்மை கடவுளிடம் நெருங்க செய்கின்றது என்பதே உண்மை.

உலகில் எவ்வளவோ அறநூல்கள் உள்ளன. ஆனால் நம் மரபில் உள்ளது போன்று,, ஹ்ம்ம் இல்லவே இல்லை. பள்ளியில் சேர்கின்ற குழந்தைகளுக்கு கொடுத்துப் பழக வேண்டும் என்ற கருத்தை "அறம் செய விரும்பு  " என்று அவ்வைப் பாட்டி சொல்லித் தருகின்றார் என்றால் சும்மாவா? அறம் நீங்கள் செய்ய வேண்டாம். அறம் செய்ய விரும்புங்கள். ஏனெனில் விருப்பத்தில் இருந்து தான் விளைவுகள் கிடைக்கும். சற்று பெரியவர்களுக்கு "யாதும் ஊரே யாவரும் கேளிர் " அப்பப்பா ..என்ன ஒரு வாழ்வியல் தத்துவம். இதை கடைபிடியுங்கள். இந்த மனப் பக்குவம் வந்தால் தான் இது போன்ற தொண்டில் நாம் திளைக்க முடியும்.

தமிழைப் படியுங்கள். வாழ்வாங்கு வாழுங்கள். இவை ஒரு சில மாதிரிகள்.இது போல் இன்னும் ஏராளம் தாராளமாய் கொட்டிக் கிடக்கின்றது.

என்ன அன்பர்களே. பதிவின் தலைப்பு உண்மை தானே.! இதோ தீபாவளி வந்து விட்டது. அனைவருக்கும் தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் சொல்வதில் TUT தளம் மகிழ்வுறுகின்றது. சுற்றம்,உறவினர்,நண்பர்கள் சூழ பாதுகாப்பான, மாசற்ற தீப ஒளித் திருநாள் கொண்டாடி மகிழுங்கள். மேலும் வருகின்ற 19/10/2017 அன்று தேனியில் பூரண தான நிகழ்வு சிறிய அளவில் நடைபெறும். மேலும் நம் AVM அன்னதான நிகழ்வைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நம்முடன் தொண்டில் ஈடுபடுங்கள்.

மெய் அன்பர்களே.




அகத்தியர்வனம் மலேஷியா மற்றும் TUT( தேடல் உள்ள தேனீக்களாய்) இணைந்து வருகின்ற சனிக்க்கிழமை (21/10/2017) மதியம் சுமார் 12 மணி அளவில்  வேளச்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அன்னதானம் செய்ய இறையருளும்,குருவருளும் கூட்டியுள்ளது. அன்பர்கள் தவறாது கலந்து கொண்டு அன்னதானத்தில் உதவும் படி வேண்டுகின்றோம்.

இவண்,

அகத்தியர்வனம் மலேஷியா - http://agathiyarvanam.blogspot.in/
தேடல் உள்ள தேனீக்களாய் - tut-temple.blogspot.in


நம் TUT குழுவின் உறுப்பினர் செய்த தொண்டை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம். திருமதி பரிமளம் அவர்கள் தன்னால் இயன்ற உதவியை ஒரு முதியவருக்கு செய்துள்ளார்.இது போல் அனைவரும் உதவி செய்ய முன் வாருங்கள்.


எதிர்வரும் அன்னதான நிகழ்வுகளோடு, சாலையோர முதியவர்கள், ஆதரவற்றோருக்கு வஸ்திர தானமும் செய்ய முடிவெடுத்துள்ளோம். குருவின் அருள் நம்மை வழி நடத்திட வேண்டுகின்றோம்.

முந்தைய பதிவுகளுக்கு :-


பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தோம் ...ஐயனே! எம் ஐயனே!! - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_41.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html

No comments:

Post a Comment