Subscribe

BREAKING NEWS

17 October 2017

வாருங்கள்...உளம் ஆற உழவாரப் பணி செய்வோம்

அன்பு நெஞ்சங்களே.

TUT தளத்தின் உழவாரப் பணி பற்றிய அறிவிப்பினை இந்த பதிவில் செய்கின்றோம். குறித்து வைத்துக் கொள்ளுங்கள். உழவாரப் பணியில் ஈடுபடுங்கள்.

தினமும் காலை எழுந்து அவசர, அவசரமாக அன்றாட கடமைகளை முடித்து விட்டு, பரபரக்க அலுவலகம் செல்கின்றோம். ஏன்? செல்வத்திற்காக. செல்வம் சேர்ப்பதில் எவ்வளவு அவசரம் காட்டுகின்றோம். எத்துணையோ வழிகளில் தேடுகின்றோம். இதே போன்று நாம் ஏன் ஆரோக்கியத்தை தேடுவதில்லை, நல்ல மனிதர்களை தேடுவதில்லை, நல்ல புத்தகங்களை, கடவுளை தேடுவதில்லை.

நேரமின்மை காரணமாக இருக்குமோ? என்றால் அது வெறும் சப்பைக்கட்டு. தேடிப் பாருங்கள்.இந்த உலகம் உங்களுக்கு வழிகாட்டும், இது போன்ற விசயங்கள் நம் TUT தளத்திற்கு வந்து கொண்டிருக்கின்றது. நல்ல புத்தகங்கள் பற்றி பேசி வருகின்றோம். நல்ல மனிதர்கள் பற்றி அறிந்து, உறவாடி வருகின்றோம். இதோ. இந்த மாத உழவாரப் பணியில் அப்படியொரு வி.ஐ.பி நம்முடன் இணைகிறார்.பதிவின் இறுதியில் அறிவிப்போடு தெரிந்து கொள்ளுங்கள்.

கடவுள் தேடுதல்...நம்மிடம் உழவாரப்பணி வடிவில் நடைபெற்று வருகின்றது. அவரை இரு வழியில் தேடித்தான் ஆக  வேண்டும். புற வழி ஒன்று, அக வழி மற்றொன்று. ஆலய தரிசனம், உழவாரப் பணி,தீர்த்தமாடல், கிரிவலம் போன்றவை புற வழியில் தேடுதல். புற வழியில் தேடிப் பாருங்கள். அக வழியை அவரே நமக்குக் காட்டுவார். நான்கு வழி பாதியாக சரியை, கிரியை, யோகம் , ஞானம்  என்று சொல்வார்கள். இதில் சரியை, கிரியை மட்டுமே நாம் சரி செய்து கொள்ள முடியும் இது புற வழி. மற்ற இரண்டும் யோகம் , ஞானம் அக வழி  -இதனை அவன் அருளாலே அவன் தாள் வணங்கித் தான் பெற முடியும்.

புற வழியில் செல்ல, செல்ல அக வழி தானாக திறக்கும். இப்போது புரிந்து விட்டதா? கடவுளை அறியும் வழி. உளம் ஆற உழவாரப் பணி செய்தோம் என்றால், அகத்துள் இறைவனை காண முடியும். தற்போது நாம் நம் TUT உறவுகளோடு ஓதிமலை சென்று வந்தோம்.  உழவாரப் பணி என்பது மாதமொருமுறை அனைவரும் ஒன்று கூடி கோயிலுக்கு சென்று கோயிலை சுத்தம் செய்வது என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. எப்பொழுதெல்லாம் நமக்கு வாய்ப்பு இருக்கின்றதோ, அப்போதெல்லாம் இது போன்ற திருத்தொண்டில் ஈடுபடுங்கள். 

ஓதிமலை மேலே சென்றதும், நாம் கண்டகாட்சி.அருமை. நம் உறவுகள் கோயிலை அடைந்ததும், கோயிலை சுத்தம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இதுவல்லவோ தொண்டு,சேவை,பக்தி. அந்த நிகழ்வைத் தனிப்  பதிவாக தந்து உள்ளோம்.படித்து இன்புறுங்கள்.

உழவாரப் பணி செய்யும் போது, நமக்கு என்ன நடக்கின்றது ? முதலில் நீங்கள் உழவாரப் பணி செய்ய விரும்புகின்றீர்கள் என்றால் அதுவே ஒரு நல்ல விருப்பம். அந்த விருப்பம் முதலில் நம் மனதில் தோன்ற வேண்டும். நம் மனதில் உள்ள தீய எண்ணங்கள் மேலேறி, நம் விருப்பம் வருகின்றது என்றால், நீங்கள் உங்கள் மனதில் நன்மையை விதைக்கின்றீர்கள். இந்த நல்ல விதை அடுத்து என்ன செய்யும். செயலுக்கு வரும். அடுத்து உங்களுக்கு பணியில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும். அப்படி என்றால் நம்மிடம் உள்ள தீய எண்ணங்கள் வெளியேறுகின்றது. மனம் செம்மை பெற உழவாரப் பணி செய்யலாம் என்று புரிகின்றதா?

ஒரு முறை உழவாரப் பணியில் ஈடுபட்டுப் பாருங்கள். நம் உடல் தகுதி என்ன என்று தெரியும். பின்பு நீங்கள் ஆரோக்கியம் சார்ந்து யோசிக்க ஆரம்பிப்பீர்கள். இது மட்டுமா? அருமையான இறை தரிசனம் உழவாரப் பணி  நிறைவில் பெற்று வருகின்றோம். இது நமக்குக் காண கிடைக்குமா? சில கோயில்கள் மிகவும் பழமை வாய்ந்த கோயில்களாக இருக்கும். யோசித்துப் பாருங்கள். நம் பாட்டன்,முப்பாட்டன் கட்டிய கோயில்களுக்குச் சென்று, அவர்களின் தடத்தில் நாமும் செல்வது நமக்கு இன்பம் அல்லவா தரும்? இதன் மூலம் பெருமக்கள் பாடிய திருத்தலங்களுக்கு செல்ல வாய்ப்பாகவும் அமைகின்றது.

ஒன்றா? இரண்டா? சொல்லில் அடக்க முடியவில்லை உழவாரப் பணி  சிறப்புக்களை. அனுபவித்தால் தான் புரியும். பதிவினை படிக்கும் அன்பர்கள், பணியில் ஈடுபட முயலுங்கள். உங்கள் நட்பு,சுற்றம்,உறவுகளுக்குத் தெரிவியுங்கள்.

இம்மாத உழவாரப் பணி  அறிவிப்பு இதோ:

இறை அன்பர்களே.
நமது TUT குழுமத்தின் உழவாரப்பணி கொளத்தூரில் உள்ள ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் கோவிலில்  வருகின்ற 22/10/2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது.உழவாரப்பணியைத் தொடர்ந்து அபிஷேகம்,ஆராதனை நடைபெறும்.அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு தொண்டினை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.




நிகழ்வின் நிரல் 

உழவாரப்பணி 
மரம் நடுதல் 
அபிஷேகம்,ஆராதனை 
தீபாராதனை 
பிரசாதம் வழங்கல் 


நாள்:22/10/2017 ஞாயிற்றுக்கிழமை 

இடம் : ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் திருக்கோயில்
கொளத்தூர் கிராமம் 
வேங்கடபுரம் அஞ்சல் 
சிங்கப்பெருமாள் கோயில் 
செங்கல்பட்டு மாவட்டம் 




நேரம்: காலை 9 மணி முதல் 1 மணி வரை 

தங்களின் வருகையை கண்டிப்பாக உறுதி செய்ய தொடர்பு கொள்ளவும் 

காலை உணவு கோயிலில் செய்யப் பட்டுள்ளது. எனவே காலை உணவு பற்றி கவலை கொள்ள வேண்டாம்.


தோட்ட வேலை அதிகம் இருப்பதனால், நாம் கண்டிப்பாக காலை 9 மணிக்கு கோயிலுக்குள் இருக்க வேண்டும். அன்பர்களின் வசதிக்காக மகிழுந்து ( வேன் ) ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. சரியாக கூடுவாஞ்சேரியில் 8 மணிக்கும், சிங்கப்பெருமாள் கோயிலில் 8:30 மணிக்கும் வேன் புறப்பட்டு செல்லும். எனவே அன்பர்கள் சரியான நேரத்திற்கு வரவும். இல்லையேல் நீங்கள் சுமார் 4 கி.மீ ஆட்டோ வில் தான் வர வேண்டி வரும். ஏதேனும் சந்தேகம் இருந்தால் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

இம்முறை நிகழ்வில், சிறிய அளவில், கோயிலினுள்ளே  மரம் நடு விழா சுமார் 10 மரங்கள் நட ஏற்பாடு செய்துள்ளோம்.பதிவின் ஆரம்பித்தில் நாம் சொன்ன நல்லோர் நட்பில் ஒருவராய் மர நேயம் வளர்க்கும் முல்லைவனம் ஐயா அவர்கள் கலந்து கொள்ள இசைந்துள்ளார்கள். அவருடைய கடும் சேவையில், நமக்கு நேரம் ஒதுக்கி உள்ளார்கள் எனபது மகிழ்வான செய்தி. 


ஸ்ரீ துளஸீஸ்வரர் திருக்கோயில் பற்றி சொல்லாது இருந்தால், அது குறையாக தெரியும். இதோ சிறு குறிப்பாக தருகின்றோம்.

துளஸீஸ்வரர் கோவிலானாது சிங்கப்பெருமாள் கோவில் ஊருக்கு அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் பல்லவ காலத்தில் கட்டப்பட்டது.இந்த தலம் 1200 ஆண்டுகள் பழமையை உடையது.ஸ்ரீ துளஸீஸ்வரர் பக்த சபா என்ற ஆன்மிக சபா மூலம் கோவில் புணரைப்பு மற்றும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.இங்கே தினசரி பூஜை மற்றும் பிரதோஷ பூஜை சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இங்குள்ள சிவனார் கிழக்கு நோக்கியும்,சற்று ஈசான்ய மூலை நோக்கியும் பார்க்கின்றார்.இந்த கொளத்தூர் கிராமம் இவரின் அருளால் மேம்பட்டு வருகின்றது என்பது கண்கூடு.


தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானின் திருக்கல்யாணத்தைக் காண கயிலையங்கிரிக்குச் சென்றார்கள். அதனால்  பூமியின் வடபாகம் தாழ்ந்து, தென்பாகம் உயர்ந்தது.  அதை சமன் செய்ய ஈசன் குருமுனி அகத்தியரை தென் திசைக்கு அனுப்பினார். தென் திசைக்குக் சென்ற  அகத்தியர் அங்கு 108 சிவ லிங்கங்களை நிறுவி பூஜித்தார். அந்த 108 சிவலிங்கங்களுள் ஸ்ரீ துளஷீஸ்வரர் லிங்கமும் ஒன்றாகும். கோவிலுக்குத் தெற்கே அகத்தியர் ஒரு தடாகத்தை உருவாக்கி கொன்றை மாலை சார்த்தி துளசியால் அர்ச்சித்து புரட்டாசி பவுர்ணமி நாளில் வழிபட்டார். இதனால் மகிழ்ந்த ஸ்ரீ துளஷீஸ்வரர்,அகத்தியருக்கு அர்த்தனாரீஷ்வரராய் காட்சி கொடுத்தார். இவை அனைத்தும் இக் கோவில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.












கணவன்-மனைவியிடையே ஒற்றுமையும், அன்பும் ஓங்கவும், இரண்டு பேரும்  சேர்ந்து வாழ வேண்டுமென்றும்,  அன்னியோன்யமாக இருக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவார்கள். ஆனால்  ஏதோ ஒரு ஈகோவினாலும்,  வைராக்கியத்தாலும் விட்டுக் கொடுக்காமல் இருப்பார்கள்.  அப்படிப்பட்டவர்களுக்கு  இந்த   ஸ்ரீ துளஷீஸ்வரர் ஒரு வாரத்தில் பலன் கொடுக்கிறார்.  (ஒரு முறை முயற்சி செய்து  பாருங்கள்.) ஜாதகத்தில் சந்திரன் நீசமாயிருப்போரும், சந்திர பலம் குறைந்திருப்போரும், திங்கட்கிழமைகளில்,  சந்திரஹோரையில் அர்ச்சனை செய்து ஆராதிப்பது மிகச் சிறப்பாகும்.பிரதோஷ நிகழ்வின் போது எடுக்கப் பட்ட படங்களை தங்களின் பார்வைக்கு இணைத்துள்ளோம்.

அருகிலேயே ஸ்ரீ திருநாராயண் பெருமாள் கோயில் உள்ளது. அங்கேயும் நாம் சென்று தரிசனம் செய்ய உள்ளோம். அருமையான இறை தரிசனம் அனைவருக்கும் அன்றைய தினம் வழங்க, பெருமானும், பெருமாளும் காத்திருக்கின்றார்கள் என்பது உறுதி.

மேலும் நம் TUT தளத்தின் உழவாரப் பணி அனுபவங்களுக்கு, முந்தைய பதிவுகளைப் பாருங்கள்.

முந்தைய பதிவுகளுக்கு:-


கணவன் மனைவியிடையே ஒற்றுமையும், அன்பும் ஓங்க ஓர் பரிகார ஸ்தலம்...- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_14.html

ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் அருள் பெற வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/07/blog-post_99.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் - உழவாரப் பணி அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_2.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

மனிதம் வளர்க்கும் மாமனிதர் முல்லைவனம் - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_77.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

காப்போம் வாருங்கள் - தமிழகத்தில் உள்ள ஒரே கரக்கோயில் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_7.html

நவராத்திரியில் நவரசங்கள் தரும் நவதரிசனம் - (9) - https://tut-temple.blogspot.in/2017/10/9.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html


No comments:

Post a Comment