Subscribe

BREAKING NEWS

03 October 2017

உயிர்நிலை கோயில்கள்

கோயில்கள் நமக்குத் தெரியும்.அதென்ன உயிர்நிலை கோயில்கள் ? என்று கேட்பது நம் செவிகளுக்கு விழுகின்றது.இந்த கலியுகத்தில் எங்கு பார்த்தாலும் சித்தர்கள் என்ற சொல்லை மிக எளிதில் கேட்க முடிகின்றது.சுமார் ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு, சித்தர்கள் என்ற சொல்லைக் கேட்பதே அபூர்வம்.ஆனால் இன்று சர்வ சாதாரணமாக கேட்க முடிகின்றது. இந்த சித்தர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்றெல்லாம் நாம் பிறிதொரு பதிவில் பார்ப்போம். இங்கே சித்தர்களைத் தாண்டி மற்றுமொரு வார்த்தை அதிகமாக சொல்லப் படுகின்றது. இது சித்தர்களோடு இணைந்த சொல்லே..

கண்டுபிடித்து விட்டிர்களா ? ஆம். ஜீவ சமாதி என்ற உயிர்நிலை கோயில்களே.




சித்தர்களையும், ஜீவ சமாதியையும் பிரித்துப் பார்க்க இயலாது. வெகு நீண்ட இடைவெளிக்கு பின்பு,நமக்கு சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் உழவாரப் பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது.அங்கே சுமார் ஏழெட்டு ஜீவ சமாதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் அப்படியொரு அருள்நிலை உணர முடிந்தது.பதிவின் இறுதியில் அந்த அனுபத்தை மீண்டும் பகிர்ந்து உள்ளோம்.

ஜீவ சமாதிகள் என்று சொல்வதை விட உயிர்நிலை கோயில்கள் என்று சொல்வது நன்றாக உள்ளதல்லவா? எனவே தான் உயிர்நிலை கோயில்கள்  என்று தலைப்பிட்டோம்.இந்த பதிவில் உயிர்நிலை கோயில்கள் சென்று நாம் கடைபிடிக்க வேண்டிய நியதிகள் என்ன என்று இங்கே அறிய தருகின்றோம். அதற்கு முன்பாக உயிர் நிலை கோயில் பற்றி சில குறிப்புகளை காண்போம்.




ஜீவனை அங்கத்திலேயே சமாதி நிலையில் ஆழ்த்தி நிறுத்தி விடுவது ஜீவ சமாதி ஆகும். அதாவது நம்முடலில் உள்ள உயிரை அப்படியே ஆதிக்கு சமமாக வைத்தாலே சமாதி என்று அழைக்கப் பெறும்.ஜீவ சமாதியில் எத்தனை வருடங்கள் ஆனாலும் திருமேனி அழியாது.ஜீவனை தாங்கி நிற்கும் திருமேனியே சிவ சொரூபமாக உள்ளது .நமது பாரத தேசத்தில் ஜீவ சமாதிகள் இல்லாத இடமே இல்லை.ஆம்.அப்படியொரு புண்ணிய பூமி தான் நம் நாடு. அதுவும் தமிழ் நாட்டிலே...சொல்லவே வேண்டாம். இந்தியாவில் பிறப்பது சிறப்பென்றால்..தமிழ்நாட்டில் பிறப்பது மிகச் சிறப்பே.


ஜீவ சமாதியில் மகான்களின் ஜீவ ஆத்மா முழுமையாக ஜீவ சமாதியில் ஒடுங்கி இருந்தாலும் அதில் ஆற்றல் மட்டும் எங்கும் வியாபித்து இருக்கும். அந்த தெய்வீக ஆற்றலே  வரும் பக்தருக்கும், சீடர்களுக்கும் அருள் மழை பொழிந்து கொண்டிருக்கும்.ஜீவ சமாதியில் தவம் புரியும் அன்பர்கள் அந்த தெய்வீக ஆற்றலைப்  பற்றிய விழிப்புணர்வுடன் தவம் புரியும் போது அந்த தெய்வீக ஆற்றல்  அவர்கள் உடல் முழுவதும் வியாபிக்கும். இதனை நாம் நன்கு உணரலாம்.

அவ்வாறு மகானின் தெய்வீக ஆற்றல் நம்மை ஊடுருவும் போது நாம் விழிப்புணர்வுடன் இருந்து அப்போது நமது பிரார்த்தனைகளை சமர்ப்பிக்க  வேண்டும்.அவ்வாறு சமர்பிக்கப்படும் அனைத்து பிரார்த்தனைகளும் மகானின் திருவருளால் நிறைவேற்றப்படும்.பல நேரங்களில் மகானின் தெய்வீகஆற்றல், ஜீவ சமாதி ஆலயத்தை பராமரிக்கும் குருக்களின் மேல் பிரசன்னமாகி நமக்கு தேவையான உபாயங்களை உரைத்திடும்.




ஜீவ சமாதி அடைந்து உள்ள மகானின் திருவுள்ளத்தில் நம்மை நினைத்தால் நாம் எங்கு எந்த சூழ்நிலையில் இருந்தாலும் அப்போது மகானின் தெய்வீக ஆற்றல்  நம்மை தேடி வந்து ஆசீர்வதிக்கும். அவ்வாறு நாம் ஆசீர்வதிக்க படும் போது அதனை நன்கு உணரலாம்.அப்போது நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் அதனை விடுத்து வேறு ஒரு தெய்வீக சூழ்நிலைக்கு உந்தப்படுவோம்.

ஜீவ சமாதிக்கு திருப்பணி செய்வது புண்ணியத்திலும் புண்ணியம் ஆகும்.ஜீவ சமாதியில் ஆழ்ந்திருக்கும் ஒவ்வொரு மகானும் அவருக்கென்று தனித்தன்மையான நறுமணத்தை பிரயோகம் செய்வார்கள்.இந்த நறுமணத்தை கொண்டே நாம் எப்போதெல்லாம் மகானின் தெய்வீக ஆற்றல் நம்மை ஆசீர்வதிக்க வருகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
மகான்கள் ஜீவ சமாதியில் அமர்ந்த பிறகு அங்கு சமாதி பீடம் அல்லது ஆலயம் கட்டப்படும்.



மகான்களுக்கு இந்த நில உலகில் வருவதும் போவதும் ஒரு மாய விளையாட்டு . சில மகான்கள் இந்த நில உலகிற்கு வந்து பல்வேறு ஆன்மீக சாதனைகளையும் ஆன்மீக தொண்டுகளையும் ஆற்றியபிறகு நம் பணி இத்துடன் நின்று போய்விட கூடாது, இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு தொடர வேண்டும் என்று முடிவு செய்த பின்பு இந்த மஹா பிரபஞ்சத்தின் ஆலோசனையுடன் ஒரு திருநாள் தேர்வு செய்து மஹா பிரபஞ்சம் இசைவுடன் திரு நேரத்தையும் முடிவு செய்து அந்த தெய்வீக நிகழ்ச்சியை பக்தர்கள் அனைவருக்கும் சூசகமாகவும் நேரிலும் உணர்த்தி அழகாக அனைத்து ஆயத்தங்களையும் செய்து முடிப்பர். அந்த திருநாளில் பக்தர்கள் அனைவருக்கும் ஆசி வழங்கிவிட்டு தன் ஆசனத்தில் அமர்ந்து , இறை நிலையில் மூழ்குவார்கள் அல்லது இறை நிலையில் மூழ்கும் போது தான் வாழ்ந்த காலத்தில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகள், அவர்களின் மனக்கண் முன் தோன்றும். அதனை பார்த்துவிட்டு தன்  உடலை கடப்பார்கள். பின்பு மனம் என்னும் கருவியையும் கடப்பார்கள், பின்பு தான் என்னும் அக உணர்வில் நிலை பெறுவார்கள்.

அவர்கள் உடல், மனம் இவற்றை கடக்கும் போது இதுவே இறுதி சந்திப்பு என முடிவு செய்து கடப்பார்கள். ஆகவே திரும்பவும் எக் காரணத்தை கொண்டும் அவர்களின் தடம் என்னும் மகா பிரகாசம் உடல், மனம் இவற்றின் மீது திரும்பாது . அவர்கள் தான் எனும் அக சுய உணர்வில் நிலைத்து கொள்ளுமாறு நிற்பார்கள் இந்த தெய்வீக நிலை பல ஆயிரம் ஆண்டுகள் தொடரும் . அந்த சுய பிரகாச ஜோதி ஆன்மீக அருளாசியை வாரி வழங்கி கொண்டிருக்கும்.

தன்னை உணர்ந்து தெளிந்த மகான்கள், ஜீவன் முக்தர்கள் தாங்கள் இதுவரை இந்த உடலுடன் மக்களுக்கு உழைத்தது  போதும், இனி தங்கு தடையில்லாமல் எப்போதும் அந்த பேரின்பதிலேயே லயித்து, லயம் ஆகி நிற்கலாம் என்று முடிவு எடுப்பார்கள். அந்த முடிவு அவர்கள் மற்றும் தனியே எடுப்பதில்லை. மேலிடத்திலிருந்தும், அதற்கு ஆமோதிப்பு வரும். அதற்கு பின்பே அவர்கள் ஒரு நல்ல நாளை தேர்ந்தெடுத்து சரியான நேரத்தை கணித்து, ஊர் மக்களுக்கு எல்லோருக்கும் அதனை அறிவித்துவிட்டு, அவர்கள் அனைவருக்கும் ஆசீர்வாதம் வழங்கிவிட்டு சமாதியில் இறங்கி மோன தவத்தில் ஆழ்ந்துவிடுவார்கள்.




தியானத்தில் ஒரு எல்லையை தாண்டும் வரை அவர்களின் இறந்த மனம் பழைய உறவுகளை, சம்பந்தங்களை, நிகழ்ச்சிகளை, எல்லாம் எடுத்து காட்டும். அந்த எல்லையை அவர்கள் தாண்டிவிட்டால் பின்பு மனமும் இல்லை, எதுவும் இல்லை, எல்லாம் அந்த பரம்பொருளே எங்கும் வியாபித்து  இருக்கும். ஆனாலும், ஜீவ அங்க சமாதியில் ஒரு நுட்பமான பேரியக்க தன்மையில் தான் என்ற உணர்வு கொலுவீற்றிருக்கும்.

அந்த உணர்வு மகானின் நெருங்கிய சொந்தங்கள், மற்றும் சிஷ்யர்கள்  மற்றும் அவரை நினைத்து உருகும் ஆன்மீக குழந்தைகள் ஆகியவர்களின் வருகை அமையும் போது அந்த உணர்வு அதிர்வுறும். அந்த அதிர்வுகள், வந்திருக்கும் மக்கள் அனைவரிடமும் சொல்ல முடியாத, வார்த்தைகளில்லாத, பல அனுபவங்களை ஏற்படுத்தும். அவரின் அந்த அதிர்வலைகள் ஆன்மீக வளர்ச்சிக்காக வரும் அன்பர்களின் ஆன்மீக வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும். அப்போது ஆன்மீக அன்பர்கள் மற்றும் தபஸ்விகள் தவம் இயற்றும்போது, யார் யாருக்கு, எந்த இடத்தில் எவ்வாறு தவம் இயற்ற வேண்டும் என்ற வழியில்லாத வழியை மகான்கள், தபஸ்விகள், ஞானிகள், மாமுனிகள் மட்டுமே காட்ட முடியும்.



ஆகவே ஜீவ சமாதிகள் எங்கு இருந்தாலும், அங்கு போய், அங்கு அருள் வழங்கி கொண்டு  இருக்கும் மகானுடனும் அவரின் நுண்ணிய அதிர்வலைகளிடமும் நாம் தொடர்பு வைத்துகொண்டால் இந்த மானிடப் பிறவியில் நாம் எதை சாதிக்க வேண்டும் என்று இந்த  நர உடலை எடுத்தோமோ அந்த சாதனைக்கு முதல் அடி எடுத்து வைத்தது போல ஆகும். தினமும் ஜீவ சமாதியில் உள்ள மகானை உள்ளார்ந்த அன்போடும், அதிதீவிரபக்தியுடனும், நாம் தரிசித்து வந்தால், எல்லா பலன்களையும் அடையலாம். பெறுவதிலும் அரிய பேறாம்  வீடு பேற்றை எளிதில் அடையலாம். –

இது புனிதமான இடம். இந்த இடத்தில் சித்த புருஷர் ஜீவசமாதியில் உறைந்திருக்கும் இடம்.
இந்த புனிதமான இடத்தில் நீங்கள் தரிசனம் செய்தால் உங்களின் பாவ பதிவுகள் அனைத்தும் பறந்தோடிவிடும்.



இந்த புனித இடத்தில் நீங்கள் உட்கார்ந்து தவம் இயற்றினால் உங்களின் ஆத்மா பரிசுத்தம் அடையும்.

ஆன்மீக தாகம் கொண்டவர்கள் இங்கு தவம் இயற்றும் போது மகானின் சூக்கும சரீரம் உங்களுள் ஊடுருவுவதை கண்கூடாக உணர்வீர்கள்.

உங்களின் தேவையற்ற சிந்தனைகள், கட்டுப்பாடில்லாத எண்ண ஓட்டங்கள் மற்றும் உங்களை படுகுழியில் தள்ளிவிடும் அர்த்தமற்ற ஆசைகள் அனைத்தும் நின்று போகும்.

ஜீவன் முக்தர் உறையும் இடத்தில் தொடர்ந்து நித்திய கருமமாக நீங்கள் தவம் இயற்றினால் நீங்கள் இந்த மனிதப் பிறவி எடுத்ததற்கான முழு அர்த்தத்தை உணர்ந்து அந்த பெறுவதற்கு அரிய   பேறையும் அடைவீர்கள்.

 பரமஹம்ச யோகானந்தா தன் உடலை விடும்பொழுது, அவர்முன் 700 பேர் இருந்தனர். அமெரிக்காவில், போஸ்டன் நகரில், அவர் மஹாசமாதி அடைந்தார். தான் உடலை விடும் முன்பே, ‘நான் உடலை விடப்போகிறேன்’ என்று அவர் அறிவித்திருந்ததால், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் என பலரும் அங்கே வந்து அமர்ந்திருந்தனர். வந்தவர்களுடன் சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு, ‘இப்போது என் உடலை நான் விடப்போகிறேன்’ என்று சொல்லி, பத்மாசனத்தில் அமர்ந்து, தன் உடலை நீத்தார். மருத்துவர்கள் எத்தனை சோதனை செய்தாலும் அவர்களுக்கு புலப்படாத ஒரு விஷயமிது. ஏனெனில், மருத்துவ அறிவியலைப் பொருத்தவரை, உடலில் ஏதேனும் சிதைவு ஏற்பட்டு, உடல் இயங்க முடியாத நிலையில் மட்டுமே உயிர் பிரியும் என்று நம்பப்படுகிறது. இதயமோ, நுரையீரலோ, வேறு எதோ ஒன்று கெட்டுப்போனால் உயிர் நீங்கும் என்பது அவர்களது நம்பிக்கை. நன்றாக, ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர், ‘இப்போது நான் போகப்போகிறேன்’ என்று சொல்லிவிட்டு, தன் உடல் நீப்பதை அவர்கள் எங்கும் பார்த்திருக்கவில்லை.
அதுமட்டுமில்லை, பரமஹம்ச யோகானந்தா உடலை விடும்போது, ‘33 நாட்களுக்கு பிறகுதான் இவ்வுடல் அடக்கம் செய்ய வேண்டும் அழிந்து போகாத  இவ்வுடலை அப்படியே வைத்துக் கொள்ளலாம்’ என்று சொல்லிவிட்டு உடலை நீத்தார். உடலில் தேவையான அளவிற்கு ‘வியானப் பிராணா’வை அவர் தக்கவைத்துச் சென்றதால், அத்தனை நாட்களுக்கு உடல் நன்றாக இருக்கும். இதைச் செய்வதற்கு அவருக்கு எவ்வித அவசியமும் இல்லை. ஆனால், அவர் உயிரோடு இருக்கும்போது, காரண அறிவை மட்டுமே பயன்படுத்தும் மனிதர்கள் பலர், அவருக்கு அதிகளவில் தொல்லைகள் தந்தனர். அதனால் போகும்போது, அவர்களுக்கு கொஞ்சம் விளையாட்டுக் காட்டிவிட்டுச் செல்லலாம் என்று அவர் முடிவு செய்தார். காரண அறிவை மட்டுமே பயன்படுத்தி அவரைப் பற்றி இல்லாததை எல்லாம் பேசிய விஞ்ஞானிகளுக்கு, புரியவைத்துப் போகலாம் என்றெண்ணி, 30 நாட்கள் உடல் அப்படியே இருக்கும், அனைத்து சோதனைகளையும் நன்றாக செய்யுங்கள் என்று சொல்லி, உடலை விட்டுப் போனார் அவர்.

அவர் உடல்  (U.S.A) லாஸ் ஏஞ்சல்ஸில்
இன்றும் அவர் உடல் அழிவில்லாமல் அப்படியே இருக்கிறது.

இவரது  குரு யுக்தேஸ்வரகிரியும் இவரை போலவே தன் உயிரை துரக்க போவதை முன்கூட்டியே அரிவித்தார் மேலும் அவர் இறந்த மருநாளே பரமஹம்ஸ யோகானந்தருக்கு தன் உடலோடு காட்சி கொடுத்தார்.

ஒவ்வொரு யோகியும் தன் உடம்பை கை விடும் நிலை தனித்துவமானது. மகா சமாதி என்றழைக்கப்படும்.

கபீர் மறைந்த இடத்தில வெறும் ரோஜா பூக்களே இருந்தன.
ரமணர் மறைந்த பொழுது ஒரு ஒளி தோன்றி திருவண்ணமலையில் மறைந்தது.
பிரம்பு கூடைக்குள் புகுந்து கடற்கரையோர சிறுவர்களுக்கு விளையாட்டு காட்டிய பட்டினத்தார் அந்த கூடைக்குள்ளிருந்தே மறைந்து போனார். அடையாளம் அழித்து பூரணமான அவரின் அடையாளமாக, அவர் இருந்த இடத்தில ஒரு சிவ லிங்கம் இருந்தது..



1. பக்தி சிரத்தையோடு காலை உள்ளே வைக்க வேண்டும்.

2. மனதை முழுமையாக மகானின் சன்னதியில் செலுத்த வேண்டும்.

3. மூச்சை மகானின் சிவலிங்கத்தில் இருந்து இழுத்து உடல் முழுவதும் செலுத்த வேண்டும்.

4. மூச்சுக் காற்றை குறைந்தது 9 முறையாவது அவ்வாறு இழுக்க வேண்டும்.

5. அவ்வாறு மூச்சை இழுத்து விழும் போது உடல் முழுவதும் ஆனந்த அதிர்வலைகள் உருவாகின்றதை நன்கு உணரலாம்.

6. குறைந்தது ஐந்து நிமிடம் சன்னதியின் முன் உட்கார்ந்து மகானின் திரு உருவத்தின் மீது மனதை செலுத்தி தியானிக்க வேண்டும்.

7. உங்களின் குறைகளை மகானின் முன், அமைதி நிலையில்  வெளிப்படுத்த வேண்டும்.

8. உங்களின் குறைகள் தீர்வு பெற்ற பின்பு உங்களால் ஆன உதவிகளை மகானின் கோவிலுக்கு செய்ய வேண்டும்.

9. உடல் உழைப்பாக இருந்தாலும் சரி, கோவிலுக்கு தேவைப்படும் அகர்பத்தி, எண்ணை, பூ, இவற்றை செலுத்தினாலும் நல்லது.

10 .மகானின் கோவிலுக்கு செல்லும் போது சிறந்த நறுமணம் கொண்ட ஊதுவத்தியுடன் செல்வது மிக சிறந்த பண்பாகும்.

11. ஜீவசமாதியில் தியானம் செய்யும் போது நம் பாவ வினைகளின் தீவிரம் குறையும்.

12. ஜீவ சமாதிக்கு செல்லும் போது மகானின் சன்னதி மிகவும் ஏழ்மை நிலையிலும், பராமரிப்பு இல்லாமல் இருந்தால், அதனை சரி செய்வதற்கு நம் சக்திக்கு முடிந்த வரை முயல வேண்டும்.

13. மகானின் ஜீவசமாதிக்கு தொண்டு புரியும் போது, நான் என்ற அகம்பாவம் வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.

மேற்சொன்ன கருத்துக்கள் திரு,சுந்தர் குருஜி அவர்களால் கூறப்பட்டது.











- சித்தர்களின் அருள் தொடரும் 

முந்தைய பதிவுகளுக்கு:-

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html



No comments:

Post a Comment