Subscribe

BREAKING NEWS

29 October 2017

"ஞாயிறு" கோவில் பற்றி அறிவோமா?


ஞாயிறு அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் "சூர்ய ஸ்தலத்தை"  பற்றி இன்று அறிந்து சூர்ய பகவானின் அருளை பெற்றிடுவோம்.
ஞாயிற்றுக் கிழமைகளின் காலை நேரம் பொதுவாக உங்களுக்கு எப்படி?
ஒரே ஒரு ஞாயிறு மட்டும்
ஞாயிறு  சென்று பாருங்கள்!
புரியவில்லையா?
சென்னையிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள ஞாயிறு என்ற கிராமத்திற்குச் சென்று, அங்கே அருள் புரியும் ஞாயிறையும்(அதாவது)சூரிய பகவானையும்,புஷ்பரதேஸ்வரரையும்
வணங்கிப் பாருங்கள்.
உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படுவதை உணர்வீர்கள்.
ஞாயிறு கோயிலுக்குள் நுழைந்ததுமே உங்கள் மனசுக்குள் பூப்பூக்கும். ஆலயத்திற்கு வந்திருக்கிறோமா அல்லது ஏதாவது சோலைக்குள் தவறி நுழைந்து விட்டோமா என்ற ஐயம் எழும். ஆம். எங்கு திரும்பினாலும் பசுமை பசுமை. அருகம்புல் தோட்டம், மலர்ச்செடிகளின் கூட்டம் என்று இயற்கையே இறைவனாகக் காட்சியளிக்கும் உணர்வு எழும்.


ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை மிக்க ஞாயிறு ஆலயத்தின் சிறப்பை ஒரு ஞாயிற்றுக்கிழமை முழுக்கச் சொல்லிக் கொண்டே போகலாம்.சுந்தரமூர்த்தி நாயனாரின் துணைவியான தெய்வமகள் சங்கிலி நாச்சியார் அவதரித்த பூமி. சாகுந்தல காவியம் போற்றும் கன்வமகரிஷி முக்தி பெற்ற புண்ணிய இடம். ஆதிசங்கரரால் சொர்ணாம்பிகை ஸ்தாபிக்கப்பட்ட கோயில் என்று பட்டியல் தொடர்ந்து கொண்டே போகும்.கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் இந்தக் கோவிலுக்கும் என்ன சம்பந்தம்  இருக்கிறது என்று பார்ப்போம். இந்தக் கோவில் எழுந்ததே ஒரு மன்னனின் கண்கள் குருடானதால்தான்!பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் சிவ பக்தனான சோழ மன்னன் ஒருவன் ஆந்திரத்தில் உள்ள
நெல்லூர் வரை, படையெடுத்துச் சென்று வெற்றி வாகை சூடிவந்தான்.இந்த ஊருக்கு அருகில் உள்ள சோழவரத்தில் முகாமிட்டான். அதிகாலையில் சிவ பூஜை செய்வதற்காக செந்தாமரை மலர்களைத் தேடி, இறுதியில் இந்த ஞாயிறு கிராமத்திற்கு வந்தான். குளம் முழுக்கத் தாமரை மலர்கள். அதிலும் நடுவில் ஒரு மலர், ஓங்கி உயர்ந்து மன்னனைப் பார்த்துப் புன்னகைப்பது போல் அசைந்தது. அதனைப் பறிக்க முயற்சித்தான் சோழன்.அவன் நெருங்க, நெருங்க மலர் விலகிற்று. போக்குக் காட்டிற்று.பொறுமையிழந்த மன்னவன், அந்த அபூர்வ தாமரை மலரை நோக்கித் தன் கத்தியை எடுத்து வீசினான்.
அந்தக் கத்தி, தாமரை மலர் இத்தனை நாட்களும் பாதுகாத்துக் கொண்டிருந்த, அதன் அடியில் இருந்த சிவலிங்கத்தின் மேல் பட்டுச் சிதறியது. அந்த லிங்கத்திலிருந்து ரத்தம் பீறிட்டு, குளம் முழுக்க குங்கும நிறமானது. அத்துடன் பேரொளி எழும்பிற்று. அதைப் பார்த்த மன்னவனின் கண்கள் பறி போயிற்று. மன்னன் மயங்கி விழுந்தான். அவன் வந்த குதிரை வெறிகொண்டு எங்கோ ஓடிற்று.
அப்புறம் என்ன? சிவபெருமான் பேரொளியுடன் ஞாயிறாக மன்னனுக்குக் காட்சி தந்து மீண்டும் பார்வை தந்தார். அந்த இடத்திலே தனக்கு ஒரு கோவில் எழுப்பும்படி கட்டளையிட்டார்.
மலர் வழியாக இறைவன் காட்சி தந்ததால் `புஷ்பரதேஸ்வரர்' (பூத்தேர் ஆண்டார்) என்று அந்தச் சிவலிங்கத்திற்குப் பெயரிட்டு குளத்தங்கரையிலேயே அழகுற ஆலயம் அமைத்தான் மன்னன்.
இந்தச் சிவலிங்கத்தின் மேல், கத்தி பட்ட வடு இருப்பதை இன்றும் காணலாம்.மன்னன் கண்பார்வையைத் திரும்பப் பெற்றதால், இங்கே வந்து இறைவனை தரிசனம் செய்தாலே கண் சம்பந்தமான நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.( மன்னன் வீசிய கத்தியின் முனை சிதறி உடைந்து விழுந்த இடம்தான் `கத்திவாக்கம்'. கைப்பிடி விழுந்த இடம் `கண்டிகை'. அரசன் தன் மார்பு கீழே படும்படி விழுந்த இடம்தான் `மாரம்பேடு.' குதிரை விழுந்த இடம் `குதிரைப் பள்ளம்' என்ற பெயர்களில் அருகில் உள்ள ஊர்களாக இன்றும் விளங்குன்றன.)பிரிந்து போன கணவன் அல்லது மனைவி ஒன்று சேரவும் இங்கே வழிபாடு நடத்துகிறார்கள். 
அதற்கும் ஒரு கதை!

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே பஞ்சேஷ்டியில் (பஞ்செட்டி) அமைந்துள்ளது  ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில்.  இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. விஷேச நாட்களில் மட்டுமின்றி மற்ற நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் முக்கிய சிவ ஸ்தல மாக உள்ளது. கோவிலின் தல வரலாற்றில், கோவிலின் கிழக்கு பகுதியில் பரந்து விரிந்து காணப்படும் அகத்தியர் தீர்த்தத்திற்கு முக்கிய பங்கு உண்டு. தல வரலாற்றின்படி ஒரு முறை சுகேது என்ற அரக்கன் மகிஷாரண்யம் என்ற வனத்தில் இருந்த மகா ராட்சதர்களான மத்தன், உன்மத்தன், பிரமத்தன் என்பவர்களோடு சண்டையிட்டு சோர்ந்து போய் கடலுக்குள் சென்று ஒளிந்து கொண்டான். இதையறிந்த சுகேதுவின் மூன்று மகன்களும் ஒன்று சேர்ந்து அந்த மூன்று மகா ராட்சதர்களையும் கொன்று போட்டு, பின்னர் தங்கள் தந்தையை தேடி கடலை கலக்கினர். இதனால் உலகில் பிரளயம் ஏற்பட்டு அனேக உயிர்களும் அவதிப்பட்டதை கண்ட அகத்திய முனிவர், சமுத்திரத்தை பானகம் போல் அருந்திவிட்டார்.சமுத்திரம் வரண்டதால் வேதனையடைந்த வருடன், குபேரன் ஆகியோர் அகத்திய முனிவரிடம் பணிந்து வேண்டியதால் சமுத்திரத்தை முதலில் கொஞ்சம் உமிழ்ந்து பஞ்சேஷ்டி தலத்தில் ஒரு புண்ணிய தடாகத்தை அகத்தியர் ஏற்படுத்தினார். பின், தன்னுள் மீதமிருந்த சமுத்திரத்தை பழைய நிலைக்கு கொண்டு சென்றார். அகத்திய முனிவரின் வயிற்றில் சிக்கிக்கொண்ட சுகேதுவும் அவனது மகன்களும் தங்களின் பாவ விமோசனத்திற்காக அகத்திய முனிவரை மனம் உருகி வேண்டினர். மனம் இறங்கிய அகத்தியரும் அவர்களை, தான் உருக்கிய புண்ணிய தடாகத்தில் (அகத்திய தீர்த்த குளம்) மூழ்க செய்து சிவாலயத்தில்  ஐந்து யாகங்கள் (தேவயாகம், பிரம்மயாகம், பூதயாகம், பிதுர்யாகம், மானுடயாகம்) வளர்க்க ஏற்பாடு செய்தார்.பஞ்சேஷ்டி (பஞ்ச-ஐந்து, இஷ்டி-யாகம்) திருத்தலத்தில் ஐந்து யாகங்களை வளர்த்து அந்த யாக விபூதியை சுகேது மற்றும் அவனது மகன்களுக்கு பூசி அவர்களுக்கு பரமபதம் அருளினார் அகத்தியர்.அகத்திய முனிவர் கூறியபடி சுகேது அரக்கனும் அவனது குடும்பத்தினரும் அகத்திய தீர்த்த குளத்தில் மூழ்கி, சிவனை வழிபட்டு யாகம் வளர்த்து சாபவிமோசனம் பெற்றதால், அங்கு வரும் பக்தர்களும் அந்த குளத்தில் மூழ்கி சிவனை வழிபட்டால் சாப விமோசனம் பெறுவதாக ஐதீகம்.


தன்னைவிட்டுப் பிரிந்த மனைவி சாயாதேவியுடன் மீண்டும் இணைவதற்காக திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தார் சூரிய பகவான். அப்போது வானத்திலே ஒரு ஜோதி காட்சியளித்து சூரியனுக்கு ஆசி கூறியபடியே மெல்ல நகர்ந்தது.
அந்த ஜோதி வானில் ஊர்ந்து வந்து ஞாயிறு சிவலிங்கத்தின் மேலே விழுந்து மறைந்தது. தொடர்ந்து வந்த சூரியன் மிக மகிழ்ந்து புஷ்பரதேஸ்வரரை வழிபட்டு மனைவியை மீண்டும் அடைந்தார்.
அந்த மகிழ்ச்சியில் ஞாயிறு ஆலயத்தில் மூலவருக்கு எதிரிலேயே காட்சியளிக்கிறார் சூரியபகவான். அவர் நீராடி சிவனை வழிபட்டதால் அங்குள்ள திருக்குளத்திற்கு சூரிய தீர்த்தம் என்று பெயர்.சித்திரை மாதம் முதல் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு சூரிய ஒளி சிவபெருமான் மற்றும் அம்மன் பாதங்களில் விழுவது கண்கொள்ளாக் காட்சி.சனி தோஷம் நீங்க திருநள்ளாறு செல்வது போல சூரிய திசை, சூரியபுத்தி நடக்கிறவர்கள் வழிபடவேண்டிய ஆலயம் இது.பல்லவர் காலத்து கமலவிநாயகர், முருகப்பெருமான், காலபைரவர், நடராஜர், சிவகாமி அம்மன், சங்கிலி நாச்சியார் ஆகியோரும் இங்கே காட்சி தருகிறார்கள்.
பஞ்ச பாஸ்கர ஸ்தலம் எனப்படும் 5 சூரியத் தலங்களுள் ஒன்று இந்த ஞாயிறு. (மற்றவை திருச்சிறுகுடி, திருமங்கலக்குடி, திருப்பரிதி நியமம், தலைஞாயிறு.)வழக்கமான எல்லா ஞாயிற்றுக்கிழமைகளும் போல் இல்லாமல் உங்கள் வாழ்வில் இனிமைகள் பூத்துக்குலுங்க, நல்லன எல்லாம் நடக்க, உங்கள் 
கண் ஒளி பலப்பட நீங்கள் ஒரே ஒரு ஞாயிற்றுக்கிழமையாவது ஞாயிறு கோயிலுக்குச் சென்று வாருங்கள். அங்கே சூரியபகவானும் அவருக்கே ஒளி தந்த புஷ்பரதேஸ்வரரும்
உங்களுக்கு அருள்புரிய காத்திருக்கிறார்கள்.

மேலும் அகத்திய முனிவர் வைத்திய துறையிலும் சம்பந்தப்பட்டு இருப்பதால் அந்த குளத் தீர்த்தத்தில் மூழ்கி கோவிலை வலம் வந்து அங்கப்பிரதட்சணம், அடி பிரதட்சணம் செய்து தீபம் ஏற்றி தொடர்ந்து வழிபாடு செய்தால் வியாதிகள் குணம் அடைவதாக ஐதீகம். அத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க அகத்திய தீர்த்த குளம் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக துப்புரவு மற்றும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளன. இதனால், தற்போது குளத்தின் பெரும்பாலான பகுதிகளில் புதர் மண்டி காட்சியளிக்கிறது. குளத்தின் படிகளில் புற்கள் முளைத்து படிகற்கள் விரிசல் விடும் நிலையில் உள்ளன. கடந்த 1995ம் ஆண்டு அந்த குளத்தில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடந்தது. அதன்பின் குளத்தை சீர் செய்யாததால் தெப்ப உற்சவம் நடத்தப்படாமல் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அகத்திய தீர்த்த குளத்தை சீர்செய்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.


ஞாயிறு கோயில் அமைவிடம்:


சென்னையிலிருந்து 30 கி.மீ. செங்குன்றம், சோழவரம், அருமந்தை வழியாகச் செல்லலாம்.
ரெட்ஹில்ஸிலிருந்து 57சி, டி57, ஏ58 போன்ற பஸ்கள் செல்கின்றன. 13 கி.மீ. தூரம்.
கோவில் நடை திறப்பு நேரம்:
தினசரி காலை 7-11 மணி,மாலை 4-7 மணி, ஞாயிறு மட்டும் காலை 6-11மணி, மாலை 4-7 மணி வரை.
உணவு, தங்கும் வசதி
எதுவும் கிடையாது. எல்லாவற்றையும் சென்னையிலேயே முடித்துக் கொள்ள வேண்டும்.
யாவரும் சென்று தரிசித்து அவர் அருளைப் பெறுவோம்.

நன்றி,திருமதி,ரமாசங்கர்.