Subscribe

BREAKING NEWS

01 October 2017

ஜீவ அமிர்தம் வழங்கும் ஐம்பெருவிழா அழைப்பிதழ்


சித்த நெறியாளர்களே...

இன்றைய பதிவில் ஐம்பெருவிழாவிற்கான அழைப்பிதழை அனைவருக்கும் இணைத்து, நம் TUT குழுவின் சார்பாகவும், ஜீவ அமிர்தம் சார்பாகவும் விழாவில் கலந்து சிறப்பிக்கும் படி கேட்டுக் கொள்கின்றோம். சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் வருக ! அருள் பெறுக !!



இந்த ஐம்பெருவிழாவில் உள்ள நிகழ்வுகள் கீழ்வருமாறு

1. ஞான அமிர்தம் நூல் வெளியீட்டு விழா

2. முருகன் ஜீவ அமிர்தம் பாடல்கள்  வெளியீட்டு விழா

3. சீரடி மகான் சரித்திரம் - ENGLISH - நூல் வெளியீட்டு விழா

4. ஜீவ அமிர்தம் - ENGLISH - நூல் வெளியீட்டு விழா

5. ஜீவ அமிர்தம் 4ம் ஆண்டு துவக்க விழா 




சித்தர்களை பற்றியும்,மஹான்களைப் பற்றியும் அறிய வேண்டுமா? ஜீவ அமிர்தம் படியுங்கள்.புதைந்து கிடக்கின்ற ஞான அமிர்தத்தை அள்ளித் தருகின்ற மாத இதழ் ஜீவ அமிர்தம்.சித்தனே சிவன்..சிவனே சித்தன் என்ற கருத்தை வெளிக் காட்டும் தங்கப் புதையல் ஜீவ அமிர்தம்.என்னப்பா? ஒரே வஞ்ச புகழ்ச்சி அணி போல் உள்ளது என்று தோன்றுகிறதா? இல்லவே இல்லை. இது இயல்பு நவிற்சி அணி ..உள்ளதை உள்ளவாறு நாம் இங்கே சொல்லுகின்றோம். பதிவின் இறுதியில் ஜீவ அமிர்தம் பற்றிய மீள் பதிவைத் தந்துள்ளோம். படித்துப் பாருங்கள்.உண்மை புரியும்.


இத்தகு சிறப்பு பெற்ற ஜீவ அமிர்தம் ஞான அமிர்தம் என்ற நூலை வெளியிடுகின்றது.இந்நூல் உண்மையான ஆன்ம வாழ்வை அடைய வைக்கும் வாழ்வியல் கையேடு என்பது திண்ணம். ஞானம் பெற கட்டாயம் இந்த நூலைப் படிக்க வேண்டும் என்று நாம் கருதுகின்றோம். சித்தர்கள், ஞானிகள் சொல்லித் தந்த ஞான யோக ரகசியம் பற்றிப் பேச இருக்கின்றது இந்த நூல்.சித்தர்களின் வழிபாட்டு முறையில் ஞான வாழ்விற்கு தேவையான வழிகாட்டுதலை வழங்கும் அருள் ஏடு இது !

இது மட்டுமா? முருகன் ஜீவ அமிர்தம் பாடல் வெளியீடு நடக்க உள்ளது. சேயோன்,அயிலவன்,ஆறுமுகன்,குமரன்,குகன்,காங்கேயன்,சரவணபவன் 
சேனாதிபதி,வேலன்,சுவாமிநாதன்,கந்தன்,கார்த்திகேயன்,சண்முகன்,தண்டாயுதபாணி,வடிவேலன்,சுப்பிரமணியன்,மயில்வாகனன்,ஆறுபடை வீடுடையோன்,வள்ளற்பெருமான்,சோமாஸ்கந்தன்,
முத்தையன்,சேந்தன்,விசாகன்,சுரேஷன்,செவ்வேள்,கடம்பன்,சிவகுமரன்,வேலாயுதன், சிங்காரவேலன், ஆண்டியப்பன்,கந்தசாமி,செந்தில்நாதன் என்று அழைக்கப் படும் முருகன் பாடல்கள் ...முருகன் அருள் பெற இவற்றைக் கேட்க வேண்டும் என்று மனது துள்ளிக் குதிக்கின்றது.
முருகனைப் போல,இந்த பாடல்கள் அழகாய் இருக்கும்,அறிவாய் விளங்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.


சித்தர்கள் தமிழ் மொழியின் வித்தகர்கள். இலக்கணம்,இலக்கியம்,மருத்துவம்,யோகம், ஞானம் என்று அனைத்தையும் தமிழ் மொழியில் வடித்துள்ளனர். முக்தி மொழியாம் தமிழ் மொழியில் இவை அனைத்தும் ஒரு சேர இருப்பது சிறப்பு.இருப்பினும் காலத்தின் தேவை கருதி, உள்ளூர் குளம் தீர்த்தம் ஆகாது என்ற வாய்மொழிக்கேற்ப, இந்த நூல்கள் ஆங்கிலத்தில் இருந்தால் தான் உலகளவில் சித்தர் நெறி வளரும்.இந்த கண்ணோட்டத்தில் இரண்டு ஆங்கில நூல்கள் வெளியீடு நடக்கின்றது.

இந்த பொன்னான தருணத்தில், ஜீவ அமிர்தம் 4 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது.நம் TUT குழுவின் சார்பாக 4 ம் ஆண்டு அடியெடுத்து வைக்கும் ஜீவ அமிர்தத்தை வாழ்த்தி,வணங்குகின்றோம்.சித்தத்தை தொட்டுக்காட்டி சித்தர் நெறி வளர்த்திட நம்மை வழிகாட்டும் ஜீவ அமிர்தத்திற்கு கோடான கோடி நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.


முந்தைய பதிவுகளுக்கு:-

"ஜீவ அமிர்தம்" பருகலாமே! - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_30.html


No comments:

Post a Comment