சைவத்தின் கடலில் சில முத்துக்களை நாம் கேட்டோம்.அவற்றை இந்த பதிவில் தெளிக்க விரும்புகின்றோம். தமிழ் முற்றம் சார்பில் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்வில் கடந்த 3.9.2017ல் நடைபெற்ற நிகழ்வில் சிவத்திரு.வேதகிரி அவர்களின் திருத்தலங்களின் சிறப்பு என்ற தலைப்பில் கிடைத்த செய்திகளை இங்கு பகிர்கின்றோம்.
சிறு குறிப்பாக சிவத்திரு.வேதகிரி அவர்களைப் பற்றி.
இவர் திருப்புகழ் மற்றும் திருமுறை சொற்பொழிவாளர். சிலர் திருப்புகழில் அமுது படைப்பார்கள்.சிலர் திருமுறைகளில் விருந்து படைப்பார்கள்.இரண்டிலும் அமுது செய்வோர் மிகச் சிலரே.அவர்களில் ஒருவர். தேவாரம், திருப்புகழ் என பட்டையை கிளப்பி வருகின்றார்.ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஐயா குறுங்காலீஸ்வரர் கோயிலில் தேவாரத் திருத்தலங்கள் என்கிற தலைப்பில் உரை நிகழ்த்துகிறார்.
தேவாரம், திருப்புகழ் பற்றிய விளக்கவுரை மற்றும் சொற்பொழிவுகளில் பிரமாதப்படுத்தி வரும் வேதகிரி ஐயா அவர்கள் அடிப்படையில் ஒரு வைணவர். இதுவரை பல்வேறு இடங்களில் ஐயா நிகழ்த்திய சொற்பொழிவுகளின் எண்ணிக்கை மட்டும் 2500 ஐ தாண்டும். பழகுதற்கு எளியவரும், பண்பில் சிறந்தவருமான வேதகிரி ஐயா அவர்கள் நமக்கு கிடைத்த சைவக் கருவூலம் என்றால் மிகையாகாது.
இதோ. சைவக் கருவூலத்திலிருந்து சில செல்வங்களை இங்கே அறிய தருகின்றோம்.
தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி
குவளைக் கண்ணி கூறன் காண்க
அவளுந் தானும் உடனே காண்க
அவளுந் தானும் உடனே காண்க
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! என்ற சைவ முழக்கத்தோடு ஆரம்பித்தார்.தமிழ் முற்றத்திற்கு நன்றி கூறி விருந்து படைக்க ஆரம்பித்தார்.
பொதுவாக திருமுறைகளை பாடும் போது "திருச்சிற்றம்பலம்" என்று கூறி தான் ஆரம்பிக்க வேண்டும் என்ற உள்ளார்ந்த கருத்தோடு ஆரம்பித்தார். திருமுறைகளை பாடும்/படிக்கும் போது உண்டாகின்ற ஒலி எல்லாம் எங்கே இருந்து வருகின்றது என்றால் அவை ஆகாயத் தலமான சிதம்பரத்தில் இருந்து தான் தோன்றுகின்றது.ஓசைக்கு ஒலிக்கும் என்ன வித்தியாசம்? யோசித்துப் பார்த்ததுண்டா? ஆனால் அன்றைய தினம் ஐயாவின் விளக்கத்தில் ஒளி பெற்றோம்.
என்று திருமுறை பாடினார்.இவ்வாறு திருமுறை அவ்வப்போது வந்து கொண்டே இருந்தது.மேற்சொன்ன பதிகம் திருவையாறு திருமுறை பதிகம். பதிகம் கேட்க நம் செவிகள் செய்த புண்ணியம் தான் என்னே ! என்று வியப்புற்றோம்.காவிரிக்கரையில் காசிக்கு சமமாகக் கருதப்படும் 6 சிவஸ்தலங்களில் திருவையாறும் ஒன்றாகும்.ஐயாரப்பர் தரிசனம் எப்போது என்று மனதில் தோன்றியது.சரி விசயத்திற்கு வருவோம்.
சும்மா அப்படியே ரோட்ல நடந்து போகும் போது கேட்கின்ற சப்தங்கள் ஓசை. ஆனால் பொருள் பொதிந்த, அருள் நிறைந்த சப்தங்கள் ஒலி.இவை பக்குவப்பட்டது.இவை நம் உடலில் உள்ள சிதம்பரத்தில் இருந்து தான் தோன்ற முடியும். எவ்ளோ பெரிய உண்மை. அதாவது ஆகாயத் தலமான சிதம்பரத்தில் இருந்து ஒலியை வாங்கி நாம் திருமுறை ஓதி, நிறைவு செய்யும் போதும் திருச்சிற்றம்பலம் என்று கூறி நிறைவு செய்ய வேண்டும். இவ்வாறு ஓதும் போது, ஆகாய தலமான சிதம்பரத்தில் நாம் ஒலியை உணர்ந்து வாங்கி, மீண்டும் முடிக்கும் போது, நாம் ஓதிய திருமுறை சிதம்பரம் சென்று சேர்கின்றது.உடலெல்லாம் சிலிர்ப்பு. ஆரம்பமே அட்டகாசம்.
இந்த ஆகாயம் இருக்கின்றதே..பஞ்ச பூதங்களில் சேர்ந்தும் இருக்கும்,தனித்தும் இருக்கும். இதே பஞ்ச பூத தத்துவங்களால் தான் நம் உடலும் உருப்பெற்றுள்ளது.
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே.திருமந்திரம் - 571.
என்று கூறினார். மூச்சு விடுறதும், வாங்குறதுக்கு ஒரு கணக்கில் உள்ளது.வெளியே போறது அபானன்.உள்ளே செல்லும் காற்று பிராணன். யோகிகள் இந்த மூச்சை சமப்படுத்தி வாழ்கிறார்கள்.
உள்ளேசென்று தேவையானதை ஏற்றியும், தேவையற்றதை இறக்கியும், வளரும் அழியும் இரண்டு காலமும் தொழில் புரியும் காற்றைப் பிடிக்கும் நுட்பம் அறிவார் இல்லை. காற்றைப் பிடிக்கும் நுட்பம் அறிபவருக்கு கூற்றை தடுக்கும் குறியாய் அது இருக்கும். பின்குறிப்பு - காற்றை வசப்படுத்தி காலத்தை ஆளலாம்.
கோயிலுக்கு போய்ட்டு வந்திகளா என்று கேட்டால், ஆமாம் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று வந்தோம் என்று சொல்வோம்.ஆனால் சைவ நெறியில் கோயில் என்றால் அது சிதம்பரம் மட்டுமே குறிக்கும்.இது போல் வைணவர்களுக்கு கோயில் என்றால் ஸ்ரீரங்கம் என்று நினைக்கின்றோம்.யாராவது தகவலை உறுதிப்படுத்தவும்.அப்படியானால் மற்ற கோயில்களெல்லாம்?
276 தேவாரத் தலங்கள் நமக்கு கிடைத்திருக்கின்றது.கோயிலுக்கு செல்லும் போது அந்த கோயில் பற்றி தெரிந்து கொண்டு செல்வது சிறந்தது என்று கூறினார்.இவற்றை நடைமுறை உதாரணம் கொண்டு ஐயா விளக்கியது சிறப்பாக இருந்தது. அப்படியே நூல்களை பற்றி பேச ஆரம்பித்தார்.பேச ஆரம்பித்தால் திருக்குறள்,திருமந்திரம்,தேவாரம்,திருவாசகம் என சரளாமாக வருகின்றது. நேரில் இருந்து அனுபவித்தால் தான் புரியும்.
12 திருமுறை படித்து முடிக்க சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என்றார். ஒரு நாள், ஒரு மணி நேரம் திருமுறை படிப்பது நலம்.அதுவும் விடியற்காலை படிப்பது சிறப்பு தரும்.வீட்டில் நலம் பயக்கும் என்றார்.
இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.
என்ற பாடல் பாடினார்.நாம் மெய் மறந்து ரசித்துக் கொண்டு இருந்தோம். அடுத்து பன்னிரு திருமுறை பற்றி விளக்கம் கொடுத்தார்.
அப்பப்பா ! தமிழில் உள்ள பக்தி இலக்கியங்கள் தான் இவை. இது இன்னும் நீண்டு கொண்டே தான் செல்கின்றது.இவை அனைத்தும் படித்து முடிக்க இந்த ஒரு பிறவி போதுமா? என்றால் இல்லை என்பதே பொருளாக வருகின்றது. விவேகானந்தர் ஒரு முறை வெளி நாட்டிற்கு சென்ற போது, நம் இந்திய சமய நூலை அடியில் வைத்து , மற்ற நாட்டின் நூல்களை மேலே வைத்தார்களாம்.உடனே அருகில் இருந்தவர்கள் , விவேகானந்தரிடம், எம் நாட்டு மத நூல்கள் மேலே உள்ளது.ஆனால் இந்திய நாட்டு நூல்கள் அடியில்,கீழே உள்ளது என்றார்களாம்.
அதற்கு விவேகானந்தர், நாங்கள் அடியில் இருந்து மற்ற நாட்டின் மதங்களை தாங்கிப் பிடித்து பாதுகாத்து வருகின்றோம். நாங்கள் இல்லையென்றால் நீங்கள் இல்லை என்றாராம். ஆம்.இது உண்மை தானே. ஆன்மிக கலாச்சாரத்தை உலகிற்கு வழங்கிய நாடு.இங்கே பிறந்ததிற்கு பெருமைப் பட்டுக் கொள்ளுங்கள்.நாம் வாழ்வது புண்ணிய பூமியில். ஆயிரமாயிரம் மகான்கள் காலடி பதித்த தேசத்தில் நாம் வாழ்வது பெருமை தானே !
நூலொன்றைப் பற்றி நுனியேற மாட்டாதார் என்றொரு பதம் பிரித்தார்.ஆம்..நூலொன்றைப் பற்றி வாழ்வில் உயர வேண்டும் என்று கூறியது சாலப் பொருத்தம்.
தேவாரம் போன்ற திருமுறைகள் பாடும் போது, நாம் அந்த திருத்தலத்திற்கு சென்று வந்த உணர்வைத் தருகின்றது என்பது கண்கூடு.தினமும் 5 பதிகம் 20 நிமிடம் படித்தால் சுமார் ஒன்றரை ஆண்டுகளில் திருமுறையை படித்து முடிக்கலாம் என்று சொன்ன செய்தி களிப்பாம். இவற்றோடு நடைமுறை சார்ந்த விஷயங்களைக் கூறினார்.
ராமேஸ்வரத்தில் நடைபெறும் முதல் கால பூஜையைப் பார்க்க வேண்டும்.எல்லா சிவன் கோயிலைவிட இங்கே சிறப்பாக இருக்கும்.
உச்சிகால பூஜை சைவத்தில் சிறந்தது. அதனோடு சேரும் அன்னதானம் மேலும் சிறப்பே. அதவாது மதியம் 12 மணிக்கு உண்ணும் உணவு சிவனுக்கு செய்யும் அபிஷேகம்.இதனைத்தான் அடியொற்றி
அடியார்களுக்கு அமுது படைத்து, தட்சிணை கொடுத்து, அவர்களை சிவமாக பாவித்து மாகேஸ்வர பூஜை செய்யும் வழக்கம் இருந்து வருகின்றது. இது போன்ற ஒரு பூஜையை நாம் திருவண்ணாமலையில் உள்ள தயவு சித்தாஸ்ரமத்தில் கண்டோம். மனம் உருகினோம். என்பதே உண்மை. மேற்கண்ட செய்திகளோடு அவ்வப்போது அருள் பாடல்களும் வெளிப்பட்டது.
முந்தைய நிகழ்வில்வேதகிரி அய்யாவுடன் இருந்த நிகழ்வினை மேலே காணலாம்.
அனைத்து திருக்கோயில்களில் மதியம் நடைபெறும் உச்சி கால பூஜை உண்டு. திருச்சி திருஆனைக்காவில் நடைபெறும் உச்சி கால பூஜை நாம் வாழ் நாளில் காண வேண்டிய ஒன்றாம்.இங்கு அம்பாளே சிவ பூஜை செய்வதாக ஐதீகம். சுமார் 11:30 மணி அளவில் கோயில் சென்றால் உச்சி கால பூஜை கண்டு ரசிக்கலாம். அகிலாண்டேஸ்வரி அன்னை பற்றி பல சிறப்பு செய்திகளை இயம்பினார்.
ஒன்றா..இரண்டா..நம்மால் தான் உட்கிரகிக்க முடியவில்லை. திருநீறு பற்றியும் செய்திகளை அள்ளி வீசினார். காலை எழுந்த உடன் திருநீறு அணிவது அருளே என்று விளக்கம் கொடுத்தார்.திருநீறு அணிந்து , பஞ்சாட்சரம் சொல்லி..அடடா..இந்த பேரின்பம் பெற வேண்டும் பெருமானே!
திருநீருக்கு செல்வம் என்று ஒரு பெயரும் உண்டு. அதனால் தான் திருநீறு உள்ள கையை தட்டக் கூடாது. இது போல் பஞ்சாட்சரம் என்ற பெயரும் உண்டு. சாயரட்சை பூஜை காண திருவாரூர் சென்று பார்க்க வேண்டும். சிவாச்சாரியார்கள் இந்திரன் போல் வேடம் அணிந்து, சிவ பூஜை செய்வார்களாம். ஐயாவின் செந்தமிழில் , தேன் பருகினோம் என்றால் அது மிகையல்ல. கோயில் சென்றால் அவசரப் படாமல், நிறைமாத கர்ப்பிணி நடப்பது போல் நடக்க வேண்டும் என்று முத்தாய்ப்பு சேர்த்தார். கோயில் கோபுரம் வழியாக தான் கோயிலினுள் செல்ல வேண்டும்.
கொடி மரம் வணங்கி, உள் பிரகாரங்கள் வணங்கும் போது, மனதுள் பஞ்சாட்சரம் சொல்லி வணங்க வேண்டும்.
நம்முடைய நடைமுறை வாழ்வின் யதார்த்தங்களை தொட்ட விதம் குன்றிலிட்ட விளக்கு. அடுத்து பள்ளியறை பூஜை காண வேண்டியது சிதம்பரத்தில் தான்.
இங்கே நாம் சொல்லியுள்ள செய்திகள் மிக மிக குறைவாம். நேரில் சென்று கேட்டால் தான் நாம் சொல்ல வருகின்ற செய்தி புரியும். நாம் என்ன தான் தேன் இனிப்பு என்று சொன்னாலும், நீங்கள் தேனை சுவைத்தால் தான், தேனின் சுவை தெரியும்.அது போல் நம் வேதகிரி ஐயாவின் சொற்பொழிவும்.
திருத்தலங்களின் வரிசையில் ராமேஸ்வரம்,திருஆனைக்கா, திருவாரூர்,சிதம்பரம் சென்று முறையே முதல் கால பூஜை,உச்சி கால பூஜை, சாயரட்ச பூஜை சிதம்பரத்திலும் காண பெருமானை வேண்டுகின்றோம்.
சிவத்திரு.வேதகிரி ஐயா அவர்கள் கிருத்திகை தோறும் மாலை 6.30மணி க்கு கோயம்பேடு சிவன் திருப்புகழ் விளக்கவுரை அளித்துக் கொண்டு வருகின்றார்கள். வாய்ப்புள்ளவர்கள் கேட்டு இன்புறவும். நல்லதொரு சொற்பொழிவில் இணைத்து நமக்கு நல்வழி காட்டிக் கொண்டிருக்கும் சிவத்திரு.வேதகிரி ஐயாவின் பொற்பாதம் பணிந்து வணங்குகின்றோம்.
முந்தைய பதிவுகளுக்கு :-
அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_27.html
அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017 - https://tut-temple.blogspot.in/2017/09/2017.html
எண்ணுவோம் பெற்றோர்களை முதல் குருவாக! - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_29.html
அகத்தியர் தேவாரத் திரட்டு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_65.html
நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_24.html
மழை வாழ்த்து - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_8.html
சரணம் சரணம் சண்முகா சரணம்! - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_4.html
சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் - https://tut-temple.blogspot.in/2017/10/tut-avm.html
பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html
AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html
ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html
உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html
என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html
ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html
ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html
ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html
சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html
எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html
TUT நவராத்திரி 5 ம் நாள் தரிசனம் - https://tut-temple.blogspot.in/2017/09/tut-5.html
நவராத்திரி - 4 ம் நாள் தரிசனம் - (5) - https://tut-temple.blogspot.in/2017/09/4-5.html
TUT நவராத்திரி சிறப்புப் பதிவு(3) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-3.html
TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/09/tut-2.html
TUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு (1) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-1.html
TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temple.blogspot.in/2017/09/tut.html
TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - https://tut-temple.blogspot.in/2017/08/tut.html
விநாயகர் சதுர்த்தி செய்தி - மண(ன)ப் பொருத்தம் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_78.html
வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html
ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலாம் ஆனாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலாம் ஆனாய் நீயே
திருவையாறு அகலாத செம்பொன் சோதீ.
சும்மா அப்படியே ரோட்ல நடந்து போகும் போது கேட்கின்ற சப்தங்கள் ஓசை. ஆனால் பொருள் பொதிந்த, அருள் நிறைந்த சப்தங்கள் ஒலி.இவை பக்குவப்பட்டது.இவை நம் உடலில் உள்ள சிதம்பரத்தில் இருந்து தான் தோன்ற முடியும். எவ்ளோ பெரிய உண்மை. அதாவது ஆகாயத் தலமான சிதம்பரத்தில் இருந்து ஒலியை வாங்கி நாம் திருமுறை ஓதி, நிறைவு செய்யும் போதும் திருச்சிற்றம்பலம் என்று கூறி நிறைவு செய்ய வேண்டும். இவ்வாறு ஓதும் போது, ஆகாய தலமான சிதம்பரத்தில் நாம் ஒலியை உணர்ந்து வாங்கி, மீண்டும் முடிக்கும் போது, நாம் ஓதிய திருமுறை சிதம்பரம் சென்று சேர்கின்றது.உடலெல்லாம் சிலிர்ப்பு. ஆரம்பமே அட்டகாசம்.
இந்த ஆகாயம் இருக்கின்றதே..பஞ்ச பூதங்களில் சேர்ந்தும் இருக்கும்,தனித்தும் இருக்கும். இதே பஞ்ச பூத தத்துவங்களால் தான் நம் உடலும் உருப்பெற்றுள்ளது.
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே.திருமந்திரம் - 571.
என்று கூறினார். மூச்சு விடுறதும், வாங்குறதுக்கு ஒரு கணக்கில் உள்ளது.வெளியே போறது அபானன்.உள்ளே செல்லும் காற்று பிராணன். யோகிகள் இந்த மூச்சை சமப்படுத்தி வாழ்கிறார்கள்.
உள்ளேசென்று தேவையானதை ஏற்றியும், தேவையற்றதை இறக்கியும், வளரும் அழியும் இரண்டு காலமும் தொழில் புரியும் காற்றைப் பிடிக்கும் நுட்பம் அறிவார் இல்லை. காற்றைப் பிடிக்கும் நுட்பம் அறிபவருக்கு கூற்றை தடுக்கும் குறியாய் அது இருக்கும். பின்குறிப்பு - காற்றை வசப்படுத்தி காலத்தை ஆளலாம்.
கோயிலுக்கு போய்ட்டு வந்திகளா என்று கேட்டால், ஆமாம் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று வந்தோம் என்று சொல்வோம்.ஆனால் சைவ நெறியில் கோயில் என்றால் அது சிதம்பரம் மட்டுமே குறிக்கும்.இது போல் வைணவர்களுக்கு கோயில் என்றால் ஸ்ரீரங்கம் என்று நினைக்கின்றோம்.யாராவது தகவலை உறுதிப்படுத்தவும்.அப்படியானால் மற்ற கோயில்களெல்லாம்?
276 தேவாரத் தலங்கள் நமக்கு கிடைத்திருக்கின்றது.கோயிலுக்கு செல்லும் போது அந்த கோயில் பற்றி தெரிந்து கொண்டு செல்வது சிறந்தது என்று கூறினார்.இவற்றை நடைமுறை உதாரணம் கொண்டு ஐயா விளக்கியது சிறப்பாக இருந்தது. அப்படியே நூல்களை பற்றி பேச ஆரம்பித்தார்.பேச ஆரம்பித்தால் திருக்குறள்,திருமந்திரம்,தேவாரம்,திருவாசகம் என சரளாமாக வருகின்றது. நேரில் இருந்து அனுபவித்தால் தான் புரியும்.
12 திருமுறை படித்து முடிக்க சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என்றார். ஒரு நாள், ஒரு மணி நேரம் திருமுறை படிப்பது நலம்.அதுவும் விடியற்காலை படிப்பது சிறப்பு தரும்.வீட்டில் நலம் பயக்கும் என்றார்.
இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.
என்ற பாடல் பாடினார்.நாம் மெய் மறந்து ரசித்துக் கொண்டு இருந்தோம். அடுத்து பன்னிரு திருமுறை பற்றி விளக்கம் கொடுத்தார்.
இல | திருமுறை |
முதலாம் திருமுறை | தேவாரம் |
இரண்டாம் திருமுறை | தேவாரம் |
மூன்றாம் திருமுறை | தேவாரம் |
நான்காம் திருமுறை | தேவாரம் |
ஐந்தாம் திருமுறை | தேவாரம் |
ஆறாம் திருமுறை | தேவாரம் |
ஏழாம் திருமுறை | தேவாரம் |
எட்டாம் திருமுறை | திருவாசகம்,திருக்கோவையார் |
ஒன்பதாம் திருமுறை | திருவிசைப்பா,திருப்பல்லாண்டு |
பத்தாம் திருமுறை | திருமந்திரம் |
பதினோராம் திருமுறை |
திருமுகப் பாசுரம்,திருவாலங்காட்டுத் திருப்பதிகம்,
திருவிரட்டை மணிமாலை,அற்புதத்திருவந்தாதி,சேத்திர வெண்பா,
பொன்வண்ணத்தந்தாதி,திருவாரூர் மும்மணிக்கோவை,திருக்கைலாய ஞானஉலா அல்லது ஆதி உலா
கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி,திருஈங்கோய்மலை எழுபது,திருவலஞ்சுழி மும்மணிக்கோவை,
பெருந்தேவபாணி,கோபப் பிரசாதம்,கார் எட்டு,போற்றித்திருக்கலிவெண்பா,திருமுருகாற்றுப்படை
திருக்கண்ணப்ப தேவர் திருமறம்,மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி
சிவபெருமான் மும்மணிக்கோவை,மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை,கோயில் நான்மணிமாலை,
திருக்கழுமல மும்மணிக்கோவை,திருவிடைமருதூர் மும்மணிக்கோவை,திருவேகம்பமுடையார் திருவந்தாதி என நீளும்.
|
பனிரெண்டாம் திருமுறை | பெரியபுராணம் |
அதற்கு விவேகானந்தர், நாங்கள் அடியில் இருந்து மற்ற நாட்டின் மதங்களை தாங்கிப் பிடித்து பாதுகாத்து வருகின்றோம். நாங்கள் இல்லையென்றால் நீங்கள் இல்லை என்றாராம். ஆம்.இது உண்மை தானே. ஆன்மிக கலாச்சாரத்தை உலகிற்கு வழங்கிய நாடு.இங்கே பிறந்ததிற்கு பெருமைப் பட்டுக் கொள்ளுங்கள்.நாம் வாழ்வது புண்ணிய பூமியில். ஆயிரமாயிரம் மகான்கள் காலடி பதித்த தேசத்தில் நாம் வாழ்வது பெருமை தானே !
நூலொன்றைப் பற்றி நுனியேற மாட்டாதார் என்றொரு பதம் பிரித்தார்.ஆம்..நூலொன்றைப் பற்றி வாழ்வில் உயர வேண்டும் என்று கூறியது சாலப் பொருத்தம்.
தேவாரம் போன்ற திருமுறைகள் பாடும் போது, நாம் அந்த திருத்தலத்திற்கு சென்று வந்த உணர்வைத் தருகின்றது என்பது கண்கூடு.தினமும் 5 பதிகம் 20 நிமிடம் படித்தால் சுமார் ஒன்றரை ஆண்டுகளில் திருமுறையை படித்து முடிக்கலாம் என்று சொன்ன செய்தி களிப்பாம். இவற்றோடு நடைமுறை சார்ந்த விஷயங்களைக் கூறினார்.
ராமேஸ்வரத்தில் நடைபெறும் முதல் கால பூஜையைப் பார்க்க வேண்டும்.எல்லா சிவன் கோயிலைவிட இங்கே சிறப்பாக இருக்கும்.
உச்சிகால பூஜை சைவத்தில் சிறந்தது. அதனோடு சேரும் அன்னதானம் மேலும் சிறப்பே. அதவாது மதியம் 12 மணிக்கு உண்ணும் உணவு சிவனுக்கு செய்யும் அபிஷேகம்.இதனைத்தான் அடியொற்றி
அடியார்களுக்கு அமுது படைத்து, தட்சிணை கொடுத்து, அவர்களை சிவமாக பாவித்து மாகேஸ்வர பூஜை செய்யும் வழக்கம் இருந்து வருகின்றது. இது போன்ற ஒரு பூஜையை நாம் திருவண்ணாமலையில் உள்ள தயவு சித்தாஸ்ரமத்தில் கண்டோம். மனம் உருகினோம். என்பதே உண்மை. மேற்கண்ட செய்திகளோடு அவ்வப்போது அருள் பாடல்களும் வெளிப்பட்டது.
முந்தைய நிகழ்வில்வேதகிரி அய்யாவுடன் இருந்த நிகழ்வினை மேலே காணலாம்.
அனைத்து திருக்கோயில்களில் மதியம் நடைபெறும் உச்சி கால பூஜை உண்டு. திருச்சி திருஆனைக்காவில் நடைபெறும் உச்சி கால பூஜை நாம் வாழ் நாளில் காண வேண்டிய ஒன்றாம்.இங்கு அம்பாளே சிவ பூஜை செய்வதாக ஐதீகம். சுமார் 11:30 மணி அளவில் கோயில் சென்றால் உச்சி கால பூஜை கண்டு ரசிக்கலாம். அகிலாண்டேஸ்வரி அன்னை பற்றி பல சிறப்பு செய்திகளை இயம்பினார்.
ஒன்றா..இரண்டா..நம்மால் தான் உட்கிரகிக்க முடியவில்லை. திருநீறு பற்றியும் செய்திகளை அள்ளி வீசினார். காலை எழுந்த உடன் திருநீறு அணிவது அருளே என்று விளக்கம் கொடுத்தார்.திருநீறு அணிந்து , பஞ்சாட்சரம் சொல்லி..அடடா..இந்த பேரின்பம் பெற வேண்டும் பெருமானே!
திருநீருக்கு செல்வம் என்று ஒரு பெயரும் உண்டு. அதனால் தான் திருநீறு உள்ள கையை தட்டக் கூடாது. இது போல் பஞ்சாட்சரம் என்ற பெயரும் உண்டு. சாயரட்சை பூஜை காண திருவாரூர் சென்று பார்க்க வேண்டும். சிவாச்சாரியார்கள் இந்திரன் போல் வேடம் அணிந்து, சிவ பூஜை செய்வார்களாம். ஐயாவின் செந்தமிழில் , தேன் பருகினோம் என்றால் அது மிகையல்ல. கோயில் சென்றால் அவசரப் படாமல், நிறைமாத கர்ப்பிணி நடப்பது போல் நடக்க வேண்டும் என்று முத்தாய்ப்பு சேர்த்தார். கோயில் கோபுரம் வழியாக தான் கோயிலினுள் செல்ல வேண்டும்.
கொடி மரம் வணங்கி, உள் பிரகாரங்கள் வணங்கும் போது, மனதுள் பஞ்சாட்சரம் சொல்லி வணங்க வேண்டும்.
நம்முடைய நடைமுறை வாழ்வின் யதார்த்தங்களை தொட்ட விதம் குன்றிலிட்ட விளக்கு. அடுத்து பள்ளியறை பூஜை காண வேண்டியது சிதம்பரத்தில் தான்.
இங்கே நாம் சொல்லியுள்ள செய்திகள் மிக மிக குறைவாம். நேரில் சென்று கேட்டால் தான் நாம் சொல்ல வருகின்ற செய்தி புரியும். நாம் என்ன தான் தேன் இனிப்பு என்று சொன்னாலும், நீங்கள் தேனை சுவைத்தால் தான், தேனின் சுவை தெரியும்.அது போல் நம் வேதகிரி ஐயாவின் சொற்பொழிவும்.
திருத்தலங்களின் வரிசையில் ராமேஸ்வரம்,திருஆனைக்கா, திருவாரூர்,சிதம்பரம் சென்று முறையே முதல் கால பூஜை,உச்சி கால பூஜை, சாயரட்ச பூஜை சிதம்பரத்திலும் காண பெருமானை வேண்டுகின்றோம்.
சிவத்திரு.வேதகிரி ஐயா அவர்கள் கிருத்திகை தோறும் மாலை 6.30மணி க்கு கோயம்பேடு சிவன் திருப்புகழ் விளக்கவுரை அளித்துக் கொண்டு வருகின்றார்கள். வாய்ப்புள்ளவர்கள் கேட்டு இன்புறவும். நல்லதொரு சொற்பொழிவில் இணைத்து நமக்கு நல்வழி காட்டிக் கொண்டிருக்கும் சிவத்திரு.வேதகிரி ஐயாவின் பொற்பாதம் பணிந்து வணங்குகின்றோம்.
முந்தைய பதிவுகளுக்கு :-
அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_27.html
அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017 - https://tut-temple.blogspot.in/2017/09/2017.html
எண்ணுவோம் பெற்றோர்களை முதல் குருவாக! - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_29.html
அகத்தியர் தேவாரத் திரட்டு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_65.html
நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_24.html
மழை வாழ்த்து - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_8.html
சரணம் சரணம் சண்முகா சரணம்! - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_4.html
சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் - https://tut-temple.blogspot.in/2017/10/tut-avm.html
பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html
AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html
ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html
உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html
என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html
ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html
ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html
ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html
சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html
எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html
TUT நவராத்திரி 5 ம் நாள் தரிசனம் - https://tut-temple.blogspot.in/2017/09/tut-5.html
நவராத்திரி - 4 ம் நாள் தரிசனம் - (5) - https://tut-temple.blogspot.in/2017/09/4-5.html
TUT நவராத்திரி சிறப்புப் பதிவு(3) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-3.html
TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/09/tut-2.html
TUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு (1) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-1.html
TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temple.blogspot.in/2017/09/tut.html
TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - https://tut-temple.blogspot.in/2017/08/tut.html
விநாயகர் சதுர்த்தி செய்தி - மண(ன)ப் பொருத்தம் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_78.html
வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html
No comments:
Post a Comment