வணக்கம் அன்பர்களே!
நான் தற்போது வட மாநிலங்களில் குடி கொண்டிருக்கும் "ஹர ஹர மஹாதேவ் " என்று மிகுந்த பக்தியுடனும், பாசத்துடனும் அவர்கள் அழைக்கும் நம் ஈஸ்வரரை பற்றிய எனக்கு தெரிந்த தகவல்களை இப்பதிவில் பகிர்கின்றேன். (முக்கியமாக மகாராஷ்டிர மாநில கோவில்கள்).
நம் தென்னிந்தியாவில் சிவன் கோவில்கள் உயர்ந்த கோபுரம், கலசங்கள், கொடிமரம், பலி பீடம், நந்தீஸ்வரர், விநாயகர், முருகர், அம்பாள், துர்கை, சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களின் சன்னதிகள் மற்றும் நவக்கிரகங்கள் சன்னதிகளும் கொண்டதாக இருக்கும். அது மட்டுமல்லாமல் அனைத்து ஈஸ்வர ஆலயங்களிலும், அந்தந்த ஸ்தல வரலாற்றுக்கு ஏற்ற பெயருடன் நம் அம்மையப்பர் கோவில் கொண்டுள்ளார். ஆனால் வட இந்தியாவில் பார்த்தோமானால் எங்கெங்கு சிவ ஆலயங்கள் இருந்தாலும், இங்கும் பல நாமங்களில் ஈஸ்வரர் பெயர் கொண்டாலும் , மக்கள் "மஹாதேவ் கி மந்திர்" என்றே பக்தியுடன் அழைக்கின்றனர்.
மிகச் சிறந்த கட்டிட அமைப்பினைக் கொண்ட பெரிய கோவில் முதல் சிறிய வீட்டின் அல்லது அடுக்கு மாடி குடியிருப்பின் முன் உள்ள குறுகிய இடத்தில் கூட நம்மவர் கோவில் கொண்டிருப்பார். இங்கு மிக விசேஷமாக கொண்டாடப்படுவது மாத சிவ ராத்திரி மற்றும் மகா சிவராத்திரி நாட்கள்தான். கடுமையான விரதத்துடன் மக்கள் இந்த நாட்களை அனுசரிக்கின்றனர்.குழந்தைப் பருவத்திலேயே விரதங்களை பழக்கப்படுத்தி விடுவதால், வளர்ந்தவுடன் விரதம் இருப்பது அவர்களுக்குச் சுலபமாக இருக்கின்றது. இந்த இடத்தில் நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஒரு முறை தெய்வாம்சமான மகா பெரியவா மகாராஷ்டிர மாநிலத்தில் முகாமிட்டிருந்த போது அவர் தங்கியிருந்த இடத்தில் கட்டிட மராமத்து வேலைகள் நடந்து கொண்டிருந்தது. அன்று ஏகாதசித் திருநாள்.வயதான காரணத்தால் மகா பெரியவரை வற்புறுத்தி பாலும், பழமும் ஒரு வேளை உணவாக தொண்டர்கள் கொடுத்து வந்தனர். பெரியவா போல் கடுமையான விரதம் இருக்க நம்மால் முடியாது. அப்பொழுது அங்கே ஒரு தொழிலாளி சுண்ணாம்பு அடித்துக் கொண்டிருந்தார். பெரியவா அவரை மதிய உணவு வேளை வந்து விட்டது. முகாமில் உணவருந்தி விட்டு வேலையை தொடரலாம் என்று சொன்னார். ஆனால் அத் தொழிலாளியோ இன்று ஏகாதசி என்றும் அவர் அடுத்த நாள் துவாதசி காலை பாராயணம் முடித்து கோவிலுக்குச் சென்று பெருமாளை தரிசித்து விட்டு, அவர் பிரசாதமான துளசி தீர்த்தத்தை அருந்திய பின்தான் உணவு எடுத்துக் கொள்வேன் என்றும் அது வரை பச்சை தண்ணீர் கூட அருந்தும் பழக்கம் இல்லை என்றும் சர்வ சாதாரணமாகச் சொன்னார். பெரியவாளுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. கடுமையான பணிச்சுமையிலும் விரதத்தை இவ்வாறு கடை பிடிக்கிறார்கள் என்று மலைத்து விட்டார். உடனே தன் தொண்டர்களை அழைத்து அன்று முதல் ஏகாதசி நாளில் பால், பழம் தானும் சாப்பிட மாட்டேன் என்று உறுதியாகச் சொல்லி விட்டார். தொண்டர்கள் வயதை காரணம் காட்டி மறுத்தார்கள். அதற்கு அவர் சம்சாரியாக இருக்கும் அத் தொழிலாளியே கடுமையான வேலையிலும் முழு பட்டினி இருக்கும் போது சந்நியாசியான தனக்கு எதற்கு உணவு என்று கூறி விட்டார். இவ்விஷயம் அம்மாநில மக்களின் விரதத்திற்கு எடுத்துக்காட்டாய் உள்ளது.
நம் ஊரில் எல்லாம் கருவறைக்குள் சிவாச்சாரியார் தவிர எவருக்கும் அனுமதி இல்லை. அனால் இங்கெல்லாம் , குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் அவர்கள் கரங்களால் விரும்பிய அபிஷேகம் செய்தல், புஷ்பம் மற்றும் வில்வ தளங்களைச் சமர்ப்பித்தல், அவர்கள் விருப்பப்படி நைவேத்யம் படைக்கும் பாக்கியம் உண்டு. மேலும் மஹாதேவரை குழந்தை போல் பாவித்து முத்தமிட்டுச் செல்வோரும் உண்டு. அடியேனுக்கும் அந்த பாக்கியம் அவ்வப்போது கிட்டுகின்றது. மேலும், அநேக ஆலயங்களில் லிங்க ரூபனை தரைக்குச் சமமான அளவிலேயே பிரதிஷ்டை செய்து இருப்பதால் அமர்ந்து கொண்டு பூஜை செய்ய மிகவும் ஏதுவாக இருக்கின்றது. வந்து பூஜை செய்த பின் சிறிது நேரம் தியானித்து விட்டுச் செல்கின்றனர்.
இக்கோயில்களில் நந்தீஸ்வரர் , விநாயகர் மற்றும் பஜ்ரங்பலி என்று அன்போடு அழைக்கப்படும் நம் ஆஞ்சநேயர் அவசியமாக வீற்றிருப்பார்கள் . சில கோவில்களில் சனீஸ்வரருக்கும் முக்கியத்துவம் உண்டு. அவ்வப்போது சொற் பொழிவுகளும் நடத்துகின்றனர்.
அதி முக்கியத்துவம் வாய்ந்த பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் மூன்று ஜோதிர்லிங்கங்கள் மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ளது. (திரயம்பகேஸ்வரர் ஜோதிர்லிங்கம், பீமா ஷங்கர் ஜோதிர்லிங்கம் மற்றும் கிரிஸ்னேஸ்வர் ஜோதிர்லிங்கம்) .
இவை தவிர வேறு பழைமையான சிவ ஆலயங்களையும் இங்கே காண முடியும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு வாய்ந்தவைகளாகும். கீழே இம் மாநிலத்தின் புகழ் பெற்ற சிவாலயங்களின் புகைப்படங்களை தங்கள் பார்வைக்கு அளித்துள்ளேன்.
12 ஜோதிர்லிங்கங்களின் வரிசையையும், எங்கு உள்ளது என்ற விபரங்களையும் இங்கே குறிப்பிடுகின்றேன்.
1) சோம்நாத் ஜோதிர்லிங்கம் - குஜராத்
2) மல்லிகார்ஜுன ஜோதிர்லிங்கம் - ஸ்ரீ சைலம் (ஆந்திரா)
3)மஹாகாளேஸ்வர் ஜோதிர்லிங்கம் - உஜ்ஜயினி (மத்திய பிரதேசம்)
4) ஓம்காரேஸ்வர் ஜோதிர்லிங்கம் - சிவபுரி (மத்திய பிரதேசம் )
5) வைத்யநாத் ஜோதிர்லிங்கம் - ஜார்கண்ட்
6)பீமாஷங்கர் ஜோதிர்லிங்கம் - புனே (மகாராஷ்டிரா)
7) ராமேஸ்வர் ஜோதிர்லிங்கம் - ராமேஸ்வரம் (தமிழ்நாடு)
8) நாகேஸ்வர் ஜோதிர்லிங்கம் - சௌராஷ்ட்ரா (குஜராத்)
9) காசி விஸ்வநாத் ஜோதிர்லிங்கம் - காசி
10)த்ரியம்பகேஸ்வரர் ஜோதிர்லிங்கம் - நாசிக் (மகாராஷ்டிரா)
11) கேதார்னாத் ஜோதிர்லிங்கம் - இமாலயம்
12)கிரிஸ்னேஸ்வர் ஜோதிர்லிங்கம் - ஒளரங்காபாத் ( மகாராஷ்டிரா)
அன்பான ஆன்மீக அன்பர்கள் யாவரும் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுது ஜோதிர்லிங்கங்களை தரிசிக்கத் தவற வேண்டாம். ஆலய தரிசனம் மன நிம்மதியையம்,
சகல நலன்களையும், வளங்களையும் பெற்றுத் தரும் என்பது அனைவரும் அறிந்ததே.
மீண்டும் சந்திப்போம் !
ஓம் நமச்சிவாய !
தென்னாடுடைய சிவனே போற்றி ! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !
திருச்சிற்றம்பலம் !
-ரமாசங்கர்.
மும்பை.
முந்தைய பதிவுகளுக்கு:-
முருகன் 60 - கந்த ஷஷ்டி சிறப்பு பதிவு - (2) - https://tut-temple.blogspot.in/2017/10/60-2.html

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_20.html
திருத்தலங்களின் சிறப்பு - சிவத்திரு.வேதகிரி அவர்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_12.html
ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html
பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html
வேலவனின் திருப்பாதத்தில் - வேல்மாறல் அனுபவம் - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_10.html
வேல்மாறல் அகண்ட பாராயணம் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_12.html
வெற்றியைத் தரும் வேலவா போற்றி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_6.html
சரணம் சரணம் சண்முகா சரணம்! - கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வின் துளிகள் - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_12.html
64 வது நாயன்மார் - http://tut-temple.blogspot.in/2017/06/64.html
No comments:
Post a Comment