இந்த ஆண்டு நவராத்திரி நம் TUT தளத்திற்கு ஒரு கொண்டாட்டமாக இருந்தது. இந்த நவராத்திரி தரிசனத்தில் நமக்கு ஆத்ம தரிசன சேவா சமிதி குழுவின் அறிமுகத்தால் தங்க சாலையில் அருள் பாலிக்கும் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் உழவாரம் செய்யும் வாய்ப்பும், அருமையான ஆலய தரிசனமும் செய்யும் வாய்ப்பும் கிட்டியது. அந்த அனுபவத்தை இங்கே தர முயற்சிக்கின்றோம்.
முதலில் சிறு குறிப்பாக ஏகாம்பரேஸ்வரர் கோயிலை பற்றி உணர்வோம்.
பொதுவாக ஏகாம்பரேஸ்வரர் என்று சொன்னாலே நமக்கு நினைவிற்கு வருவது காஞ்சியில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் தான். நாமும் அப்படித்தான் நினைத்தோம். ஆனால் இந்த திருத்தலம் நேரில் சென்று பார்த்த பின்பு தான் ஏகாம்பரேஸ்வரர் அருள் புரிந்தது. பல்லாண்டுகளுக்கு முன்பு தீவிர ஏகாம்பரேஸ்வரர் பக்தர் ஒருவர், காஞ்சியில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் தரிசனம் பெற பிரதோஷம் அன்று தீர்மானித்து, அதற்கான ஏற்பாடுகள் செய்து உள்ளார். தடைகள் மேல் தடைகளாக இருந்த நிலையில் , பணியில் உள்ள போது, முதலாளியின் பேச்சையும் மீறி காஞ்சி செல்ல முற்பட்டார். அப்போது, தங்க சாலையில் உள்ள இவ்விடத்தில் சற்று ஓய்வெடுத்தார். அப்போது சிவனும்,பார்வதியும் காட்சி தந்து, "இனி எம்மை வழிபட நெடுந்தூரம் வரவேண்டாம். நீ ஓய்வெடுக்கும் இந்த இடத்திலேயே யாம் சுயம்புவாக இருந்து அருள் பாலிப்போம் " என்றார். இந்நிகழ்விற்கு பின்னரே இந்த திருத்தலம் இங்கே எழுந்தருளி உள்ளது. இதுவே இத்திருக்கோயிலுக்கான தல வரலாறும் ஆகும்.
தங்க சாலையில் சிறிது தூரம் கந்த கோட்டம் தாண்டி நாம் சென்றால் கோடி புண்ணியம் தருகின்ற கோபுர தரிசனம் பெறலாம். இதோ உங்களுக்காக !
நாம் உள்ளே நுழைந்ததும், கோயிலின் வெளியில் ஆஞ்சநேயர் தரிசனம் தருகின்றார். அங்கே அரச மரத்தின் அடியில் ஒரு லிங்கம் உள்ளது. அங்கேயே, விநாயகரும் அருள் பாலிக்கின்றார். கோயிலின் உள்ளே, ஏகாம்பரேஸ்வரர் காட்சி தருகின்றார். இங்கே காமாட்சி அம்மனாக தாயார் அருள் தருவது சிறப்பே. தாயாரின் பாதம் முன்பு ஸ்ரீ சக்கரம் உள்ளது.
உழவாரப் பணி செய்யும் பொருட்டு, கோயில் மேலே ஏறி, அங்கே இருந்த பழைய பொருட்கள், தேங்காய் மட்டைகள் அனைத்தும் சுத்தம் செய்தோம்.அப்போது எடுக்கப்பட்ட காட்சிகள் மேலே இணைத்துள்ளோம். இந்த வயதில், இந்த சிறார்கள் உழவாரப் பணியில் ஈடுபட்டது கண்டு மகிழ்ந்தோம்.
அன்றைய காலை நேரம் ..மிதமான மலைச் சாரல், கோபுர தரிசனம், உழவாரப் பணியில் இணைந்த நேரம்..வேறென்ன வேண்டும்? இந்த இன்பம் வாழ்நாள் முழுதும் வேண்டும் என்று ஏகாம்பரேஸ்வரரிடம் வேண்டினோம். பணியின் ஆரம்பத்தில் காலை உணவும், இடையில் தேநீரும் வழங்கப்பட்டது. மதியம் அருமையான ஒரு விருந்து உணவு உண்டோம். கோயிலின் உள்ளே அம்மன் சன்னதி,நவகிரக சன்னதி, கனவு ஆஞ்சநேயர் உள்ளார்கள்.கோயிலின் உள்ளே சுத்தம் செய்வதற்காக நீர் அடிக்கும் எந்திரம் மூலம் தூய்மை செய்தார்கள். எந்திரம் என்றாலும், அதனை உபயோகித்து, சுத்தம் செய்வதெற்கென மூன்று நபர்கள் தேவை.
நாம் சென்ற போது, நவராத்திரி என்பதால், அருமையான கொலு வைத்து இருந்தார்கள். அட..ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு. நீங்களே பாருங்கள். நாம் சொல்ல வரும் செய்தி புரியும்.
நவராத்திரி பதிவு என்று நினைத்தாலும் பரவாயில்லை. நம்மைப் பொறுத்தவரை , நவராத்திரியில் ஒரு ஆலய தரிசனம். கொலுவை - சாதாரணமாக நினைக்க வேண்டாம். நம் சனாதன தர்மத்தின் சத்தியத்தை கூறும் நிகழ்வே கொலுப் படிகள். ஒவ்வொன்றும் காரணத்தோடு தான் இங்கே சொல்லப்பட்டு இருக்கின்றது, நாம் தான் காரணமும் அறியவில்லை, காரியமும் அறியவில்லை.
இங்கே வள்ளலார் வருகை புரிந்து இருக்கின்றாரா? என்று தெரியவில்லை. ஆனால் கோயிலின் உள்ளே உள்ள கோபுரத்தில் வள்ளலார் திருஉருவம் இருந்தது. காட்சிப்படம் எடுக்க வில்லை. மற்றுமொரு தரிசனத்தில் இணைக்க விரும்புகின்றோம். கோயிலின் பின்பகுதியில், வள்ளலார் சந்நிதி உள்ளது.
அப்படியே அருகில், பசு மடம் இருக்கின்றது. அதன் அருகிலே இரண்டு மரங்கள் இருந்தது. அங்கே சில வடநாட்டினர் வந்து வணங்கிக் கொண்டு இருந்தார்கள், நமக்கு ஒன்றும் புரியவில்லை. அருகே சென்று பார்த்த போது தான் அங்கே ஶ்ரீ வாவேஷ்வர் மகாதேவ் அருள் பெறலாம் என்று தெரிந்தது. அரச மரம் மற்றும் வன்னி மரம் கீழே ஶ்ரீ வாவேஷ்வர் மகாதேவ் உள்ளார். அவரை வழிபடவே, வடநாட்டினர் வந்தார்கள் என்று புரிந்தது. பற்பல புகழ் கொண்ட வாவேஷ்வர் ராஜஸ்தானில் உள்ளார் என்றும். அங்கே உள்ள சிறப்புகளை போன்றே இந்த கோயிலில் உள்ளதால் வாவேஷ்வர் இங்கே உள்ளார்.இதனைப் பற்றிய செய்திகள் கீழே உங்கள் பார்வைக்கு

என்ன ஒரே ஹிந்தியாக? உள்ளது என்று நினைக்கின்றீர்களா? தமிழில் கீழே
உழவாரப் பனியின் போது ,இந்த மரத்தைச் சுற்றி ஏகப்பட்ட மஞ்சள் கயிறுகள், குப்பை,கூழங்கள் என்று இருந்தது. அனைத்தும் எடுக்கப்பட்டு, மரம் பார்க்க அழகாக உள்ளது அன்றோ? அப்படியே பின்புறம் சென்றோம்.அடடா ! உச் கொட்ட வைத்தது கோயிலின் திருக்குளம்.பார்ப்பதற்கே ரம்மியமாக இருந்தது.
முடிந்த அளவில் குளத்தைச் சுற்றியும் தூய்மை செய்தார்கள். நெகிழிப் பைகள், குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. சரியாக 3 மணி இருக்கும். கோயிலின் முன்புறம் சென்றோம். நீர் அடிக்கும் எந்திரம் மூலம் கோயிலின் வெளிப் பிரகாரம், கதவுகள், பைரவர் சன்னதி என்று சுத்தம் செய்தார்கள். மாலை பிஸ்கட் உடன் தேநீர் வழங்கப்பட்டது. சரியாக 5 மணி அளவில் அனைத்து சன்னதிகளும் தூய்மை செய்யப்பட்டது. பணி நிறைவில் அருமையான தரிசனம் கிடைத்தது. அம்மையே அப்பா ஒப்பிலாமணியே என்று உருகி வேண்டினோம். பிரசாதம் பெற்றுக் கொண்டு விடை பெற்றோம்.
அருமையான தரிசனமும், சிறிதளவில் உழவாரப் பணி செய்யவும் வாய்ப்புக் கொடுத்த ஆத்ம தரிசன சேவா சமிதி குழுவிற்கும், குழுவின் தலைவர் திரு.சிவக்குமார் ஐயா அவர்களுக்கும் நம் நன்றியை இங்கே தெரிவித்துக் கொள்வதில் TUT தளம் மகிழ்ச்சி அடைகின்றது.
நம் அன்பர்கள் ,இது போன்ற கோயில்களுக்கு செல்லுங்கள். ஆத்ம தரிசனம் பெறுங்கள்.
முந்தைய பதிவுகளுக்கு :-
குன்றத்தூர் முருகனுக்கு அரோகரா - கந்த சஷ்டி பதிவு (3) - https://tut-temple.blogspot.in/2017/10/3.html
முருகன் 60 - கந்த ஷஷ்டி சிறப்பு பதிவு - (2) - https://tut-temple.blogspot.in/2017/10/60-2.html
சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_20.html
திருத்தலங்களின் சிறப்பு - சிவத்திரு.வேதகிரி அவர்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_12.html
ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html
பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html
வேலவனின் திருப்பாதத்தில் - வேல்மாறல் அனுபவம் - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_10.html
வேல்மாறல் அகண்ட பாராயணம் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_12.html
வெற்றியைத் தரும் வேலவா போற்றி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_6.html
சரணம் சரணம் சண்முகா சரணம்! - கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வின் துளிகள் - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_12.html
64 வது நாயன்மார் - http://tut-temple.blogspot.in/2017/06/64.html
கணவன் மனைவியிடையே ஒற்றுமையும், அன்பும் ஓங்க ஓர் பரிகார ஸ்தலம்...- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_14.html
ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் அருள் பெற வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/07/blog-post_99.html
சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் - உழவாரப் பணி அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_2.html
என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html
ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html
ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html
ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html
சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html
பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html
AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html
ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html
உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html
பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html
காப்போம் வாருங்கள் - தமிழகத்தில் உள்ள ஒரே கரக்கோயில் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_7.html
நவராத்திரியில் நவரசங்கள் தரும் நவதரிசனம் - (9) - https://tut-temple.blogspot.in/2017/10/9.html
எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html
No comments:
Post a Comment