அன்பர்களே.
TUT தளத்தின் நவராத்திரி தொடர் பதிவில் தினமும் அன்னையின் தரிசனம் பெற்று வருகின்றோம்.
இதற்கு முந்தைய பதிவில் நவராத்திரி பற்றி சில குறிப்புகள் பார்த்தோம்.தேவி மகாத்மியம்,அபிராமி அந்தாதி,துர்க்கா அஷ்டகம்.இலட்சுமி தோத்திரம் (கனகதாரா தோத்திரம்)சகலகலாவல்லி மாலை,சரஸ்வதி அந்தாதி,மஹிஷாசுரமர்த்தினி தோத்திரம்,ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் போன்ற தோத்திரங்களை இந்த நவராத்திரியில் துதிப்பது சிறந்தது என்று பார்த்தோம்.
எந்த ஒரு கலையில் தேர்ச்சி பெறவும், எந்த ஒரு தொழிலில் வளர்ச்சி பெறவும். அன்னை கலைவாணியின் அருள் அவசியம். அந்த கலைவானியையே கண்ணால் கண்ட ஞானிகளின் வாக்கில் இருந்து வரும் ஒவ்வொரு சொல்லுமே நமது கர்ம வினைகளை தீர்க்கும் சக்தி வாய்ந்த மந்திரங்கள் ஆகும்.
இந்த தொகுப்பில் சகலகலாவல்லி மாலை பற்றி சிறிது காண்போம். சகலகலாவல்லி மாலை என்ற நூலை கருவாக்கியவர் குமரகுருபரர் ஆவார். யார் இந்த குமரகுருபரர்? இவரைப் பற்றி இந்த நவராத்திரி தினத்தில் அறிந்து கொள்வது சிறப்பாம்.
குமர குருபரர். 17 ம் நுற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய ஞானி. முருகன், தேவி சரஸ்வதி இருவரையும் கண்ணால் கண்டவர். பல அதிசயங்களும், அற்புதங்களும் செய்தவர்.
குமரகுருபரர் திருவைகுண்டம் என்னும் ஊரில் பிறந்தவர். இவரது தந்தையார் சண்முக சிகாமணிக் கவிராயர்; தாயார் சிவகாமி அம்மையார். குமரகுருபரர் ஐந்து வயதுவரை வாய் பேசாது இருந்தார். தங்கள் மகன் வாய் பேசாது இருப்பதைக் கண்ட குமரகுருபரரின் பெற்றோர் மனம் வருந்தினர்; குமரகுருபரருடன் திருச்செந்தூருக்குச் சென்றனர். அங்கே முருகன் அருளால் குறை நீங்கப் பெற்று முருகனைப் போற்றும் வகையில் கந்தர் கலிவெண்பாப் பாடலைப் பாடினார். இவரது காலம் பதினேழாம் நூற்றாண்டு.

No comments:
Post a Comment