Subscribe

BREAKING NEWS

22 September 2018

நம்பிமலை யாத்திரையின்போது நாம் தரிசித்த ஆலயங்கள் பகுதி 1.


சென்னையில் இருந்து கன்னியாகுமரி விரைவு இரயிலில் இரவு 8.00 மணிக்கு   புறப்பட்டு திருநெல்வேலி ரயில் நிலையம் காலை 8.00.சென்றடைந்தோம் .
நாம் முன்னதாகவே ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த வாகனமும் நமக்காக அங்கே காத்திருந்தது அதில் அனைவரும் ஏறி அமர்ந்தோம் ,




பஜார் வீதியில் பூக்கடையில் பூஜைக்குத்தேவையான பொருட்களையும் மற்றும் குடிநீர் கேன் ஒன்றையும் வாங்கிவைத்துக்கொண்டு மீண்டும் நமது வாகனத்தில் ஏறி அமர்ந்து நேராக சென்ற முதல் கோவில்,சீவலப்பேரி ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவில் அதற்குமுன்னர் தாமிரபரணி ,சித்ராநதி,கோதண்டராம நதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் “முக்கூடல் சங்கமம்” எனப்படும் ஆற்றில் நீராடினோம்.ஆற்றின் அருகிலேயே அமைந்துள்ளது இந்த ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவில் .இன்று புரட்டாசி முதல் வார சனிக்கிழமை என்பதால் என்னவோ பெருமாளின் பதிவு எழுதத்தோன்றியது .(நாராயணா )



மீண்டும் அனைவரும் புறப்பட்டு ஆலயத்தை அடைந்தோம் .








ஸ்ரீ ஸ்ரீ பூதேவி பூதேவி சமேத சுந்தரராஜபெருமாள் 

இக்கோவிலின் சிறப்பம்சம் பற்றி சித்தனருள் வலைதளைத்தினில் பதிவிட்டைதை அப்படியே இங்கே அளிக்கின்றோம் நன்றி:-https://siththanarul.blogspot.com/2018/02/  

தாமிரபரணி நதியை உருவாக்கிய பொழுது, இறைவன் உத்தரவால், தாமிரபரணி தாயை திருநெல்வேலியும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள, புண்ணியம் நிறைந்த அனைத்து கோவில்களின் வழியாகவும் அழைத்துச் சென்று கடைசியில் கடலில் சங்கமிக்கும்படிச் செய்தார், அகத்தியப் பெருமான். நதியை உருவாக்கியது முழுமை பெற்றபின், தொடங்கிய இடத்திலிருந்து, கடலில் சங்கமிக்கும் இடம் வரையில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஒரு சில காலம் தங்கியிருந்து, இறைவன் மூர்த்தங்களுக்கு அபிஷேக பூசை செய்து வரலானார். அப்படி ஒரு முறை சீவலப்பேரி அழகர் கோவிலில் இறைவனுக்கு பூசை செய்திருந்த காலத்தில், தினமும் கடலில் (சங்கமத்தில்) ஸ்நானம் செய்து, சூரியன், பித்ருக்கள் போன்றவர்களுக்கு செய்ய வேண்டிய நித்ய அனுஷ்டானங்களை, அங்கேயே கடலிலிருந்து நீரை எடுத்து, சூரிய உதயத்தின் பொழுது செய்து வந்தார். ஒரு நாள், இருகைகளையும் சேர்த்து வைத்து, கடல் நீரை எடுத்து தாரை வார்த்திட நீரை எடுத்த பொழுது, அவர் கைக்குள், ஒரு சங்கு வந்து அமர்ந்தது.


"அடடா! இது என்ன இறைவனுடைய திருவிளையாடல்? எத்தனையோ கோடி கல்பத்தில் இதுபோல் ஒரு சங்கு உருவாகும் என்று கேட்டிருக்கிறேன். அது, இப்பொழுது, அடியேன் கைக்கு ஏன் வந்து சேர்ந்தது? என்று யோசித்தார்? அகத்தியப் பெருமான்.

இதற்குள், இவர் செல்லும் வழியில் அவரை தொடர்ந்து வந்து அனைத்து இடங்களிலும் ஸ்நானம் செய்து இறைவனுக்கு அகத்திய பெருமான் செய்கிற பூசைக்கு உதவுகிற, அனைத்து சித்தர்களும் ஒன்று கூடிவிட்டனர்.

அகத்திய பெருமானின் கையில் இருந்த சங்கை கண்டு, "அடடா! எத்தனை பாக்கியம் செய்தவர் நீங்கள். எத்தனையோ கோடி கல்பங்களில், இது போல் ஒரு சங்கு உருவாகும். அது உங்கள் கைக்கு வந்து சேர்ந்து நாங்கள் அனைவரும் இன்று பார்க்கும் பாக்கியம் பெற்றோம். என்னே, இறைவன் திருவிளையாடல்!" என்றனர்.

அகத்தியப் பெருமானோ "இது ஏன் அடியேன் கைகளில் வந்து அமரவேண்டும் என்று தெரியவில்லையே. இதை நான் வைத்துக் கொள்வது சரியல்லவே. இதற்குப் பின் இறைவனின் திருவிளையாடல் ஏதோ இருக்கும், என்று நினைக்கிறேன்" என்றார்.

"ஆம்! இதற்குப் பின் உள்ள காரணத்தை அறிய, தாங்களே, இறைவனிடம் பிரார்த்தனை செய்து விடுங்கள்" என்று அனைத்து சித்தர்களும் கூறினர்.

இதற்குள், அகத்தியப் பெருமானின் கைகளிலிருந்து அந்த சங்கை வாங்கி ஒவ்வொருவராக, அதை ஸ்பரிசித்து, கண்களில் ஒற்றிக்கொள்ளத் தொடங்கினர்.

அகத்திய பெருமான் இறைவனை தியானித்து தன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க, விண்ணிலிருந்து ஒரு அசரீரி வெளிப்பட்டது.

"அகத்தியனே! யாமே, எமக்காக, அதை உருவாக்கினோம், உம் கைகளில் தவழவிட்டோம். எத்தனையோ கோடி கல்பங்களில் இது போல் ஒரு சங்கை எம் எண்ணத்திலிருந்து உருவாக்கி தருவிப்போம். யாம், நாட்டுக்கும், நதிக்கும், அதன் பின்னே உள்ள காட்டுக்கும் நடுவில், நதிக்கரையில் அமர்ந்துள்ளோம். நீ இப்பொழுது பூசை செய்யும் கோவிலில் இதை சமர்ப்பித்துவிடு. எம்மை வழிபட வரும் ஒவ்வொரு ஜீவனையும் காப்பாற்றவே, இதை தருவித்துள்ளோம். "கலி"யுகம் தொடங்கி, அவனின் விளையாட்டு அதிகமாகி வருகிறது. பாவம் மனிதர்கள், அவன் சூழ்ச்சியை அறியாது, பாவங்களை செய்து மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகப் போகிறார்கள். உடலால், எப்படிப்பட்ட உபாதைகளை அனுபவிப்பவர்களும், எம் ஷேத்திரத்தில் வந்து இந்த சங்கில் துளசி தீர்த்தத்தை வாங்கி அருந்திட, யாம் அனைத்து உபாதைகளும் விலகிட அருளுவோம். நலம் உண்டாகட்டும்!" என்று கூறி மறைந்தார்.

அகத்தியப் பெருமானும் மிக மனம் மகிழ்ந்து, பெருமாளின் உத்தரவுப்படி, தற்போதைய சீவலப்பேரி சௌந்தர்ராஜ பெருமாள் (அழகர்) கோவிலில் அதை சமர்ப்பித்தார்.



இதை வாசிக்கும் அகத்தியர் அடியவர்கள் அனைவரும், ஒரு முறை சீவலப்பேரி சுந்தரராஜபெருமாள்  பெருமாள் கோவிலுக்கு சென்று, சங்கு தீர்த்தத்தை பருகி, விதி இருந்தால், அதை ஸ்பரிசித்து பார்த்து, அந்த உயர்ந்த உணர்வை பெற வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். 

இப்படிப்பட்ட அற்புதம் வாய்ந்த இத்திருத்தலத்தை நம் தேடல் உள்ள தேனிக்கள் எல்லாம் தரிசனம் செய்தது ,நம் பாக்கியமே .

அடுத்து அதன் அருகிலேயே அமைத்துள்ளது  ஸ்ரீ துர்காம்பிகா ஆலயம் 



கோவிலின் முகப்புத்தோற்றம் 

ஸ்ரீ துர்காம்பிகா தேவஸ்தானம் டிரஸ்ட் சீவலபேரி திருக்கோவிலின் ஸ்தல வரலாறு ,வடஇந்தியாவில் பிரயாகைக்கு இணையாக போற்றப்படும் ஸ்தலம் சிவலபேரியாகும்.தாமிரபரணி ,சித்ராநதி,கோதண்டராம நதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் “முக்கூடல் சங்கமம்” அருகில் இந்த ஆலயம் அமைந்துள்ளது இந்த நதி கிழக்கு நோக்கி பூர்ணவகினியாக செல்வதால் தீர்தகட்டமாகிறது முக்கூடற்பள்ளு என்னும் நூல் இயற்றப்படுவதற்கு காரணமாக இருந்த முக்கூடல் இதுவாகும் ,இங்கு நீராடினால் பாபவிமோசனமும்,பித்ரு தோஷமும் நீங்கப்பெறலாம்,புரானகலத்தில் சக்ரத்தாழ்வார் (ஸ்ரீ சக்கரம்) க்யாதியை வதம் செய்ததால் ஏற்பட்ட ஸ்திரி (பெண் )டோசம்நீங்க இந்த திரிவேணி சங்கமத்தில் நீராடி ,அசுவமேதயாகம்  யாகம் செய்து தோஷம் நீங்கப்பெற்றார் என்பது வரலாறு .
ஒரு காலகட்டத்தில் ராஜதானியாக மருதமரங்கள் சூழ லஷ்மிவாசம் செய்யும் துளசிவனமாக இருந்த இந்த இடத்தை ஸ்ரீ வல்லபபாண்டியன் ஆட்சி செய்தார் இதனால் “ஸ்ரீவல்லப்பேரேரி” என்பது நாளடைவில் மருவி ஸ்ரீ வல்லப்பேரி –சீவலப்பேரி என்றாகியது.பல நூற்றாண்டுகளுக்குமுன் இந்த ஆலயம் கட்டப்பட்டதற்கு சான்றாக ஸ்ரீ விஷ்ணுவின் பாதத்தில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது ஸ்ரீ அம்பாளின் திரு விக்ரஹங்களுடன் ஒரே கால கட்டத்தில் உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ,

ஸ்ரீ துர்கா ரௌத்ராசுரமாக இல்லாமல் இங்கு சாந்த ஸ்வரூபிணியாக வலது கையில் புஷ்பம் கொண்டுஅண்ணன் ஸ்ரீ மகாவிஷ்ணுவை அர்ச்சித்த வண்ணம் சௌம்பியாக காட்சி தருகிறாள் ,ஸ்ரீ விஷ்ணு இடது கால் மடித்து அமர்ந்த கோலத்தில் சிவா அம்சமாக அருள்பாலிக்கிறார் .ஒரே வீற்றிருக்கும் அனுக்கிரஹ தேவதையான ஸ்ரீ துர்காம்பிகாவுடன் ஸ்ரீ மஹாவிஷ்னு ,மஹாகணபதியையும் அகஸ்தியர் வழிபட்டதாக கூறப்படுகிறது .ஐந்து கலசங்களுடன் ராஜகோபுரம் ,கொடிமர அம்சத்துடன் அமைந்துள்ளது . 











அடுத்து நாம் தரிசித்த மற்ற தித்தலங்களைப்பற்றி பகுதி -2இல் பார்க்கலாம் ,

நன்றி .

No comments:

Post a Comment