Subscribe

BREAKING NEWS

26 September 2018

நம்பிமலை யாத்திரையின்போது நாம் தரிசித்த ஆலயங்கள் பகுதி 4

 கோடகநல்லூர் ஸ்ரீ பெரியபிறான் திருக்கோவில் 
ஸ்ரீ குலசேகர நாயகி சமேத மார்தண்டேஸ்வரர் கோவிலை தரிசித்தபின்னர் புறப்படும்போது மணி 6,   நாம் சுமார் எட்டு மணிக்கு கோடகனல்லூரில் இருக்க வேண்டும் ,காரணம் இந்த ஸ்ரீ பெரியபிறான் திருக்கோவிலில் சிறப்பாக செய்யப்படும் பூஜைகளில் ஒன்று பள்ளியறை பூஜை.
ஆகவேஓட்டுனரிடம் சொன்னோம் அண்ணே எப்படியாவது எட்டு மணிக்கு கோடகநல்லூர் போயாக வேண்டும் கொஞ்சம் சீக்கிரம் போங்கண்ணே ..எனக்கேட்டோம் அவர் அதர்க்கெல்லாம்\சான்சே இல்ல எனக்கூறிவிட்டார்.அதுவும் இந்த இரவு நேரம் ,வாகன நெரிசல் வேற எப்படி முடியும் ?என ஆதங்கப்பட்டுக்கொண்டார் ..அண்ணே எப்படியாவது கொஞ்சம் யோசிங்கன்னே திரும்பவும் நாம் கேட்க ...சிறிது நேரம் கழித்து வேனும்ன ஒரு வழி இருக்கு அந்த வழியாகப்போகலாம் ..ஆனா உறுதியாக சொல்லமுடியாது என சொன்னார் ..பரவா இல்லன்னே நீங்கள் போங்க பாத்துக்கலாம்..வாகனம் விரைந்துகொண்டிருந்தது ..மணி 7.30 இன்னும் 15 கிலோ மீட்டர் உள்ளது இது எப்படி சாத்தியமாகப்போகிறது என எண்ணிக்கொண்டோம் ..

அனைவருக்கும்  கவலை பூஜையை தவறவிட்டுவிடுவோம் போல இருக்கு .சரி ஒரு ஐடியா நாம் தங்குவதற்கு ரூம் ஏற்ப்பாடு செய்த ஐயங்காருக்கு ஒரு போனபோட்டு கொஞ்சம் பூஜையை தாமதமா ஆரம்பிக்க சொல்லுங்க என ஐடியா கொடுத்தார் நமது சகோதரி திருமதி ,பரிமளம் அவர்கள் .இது எப்படி சாத்தியமாகும் கடவுள் என்ன நமக்காக காத்திருப்பாரா என்ன ? சரி பேசிடுவோம் என போன்செய்தோம் ..இப்போ எங்கே இருக்கீங்க மறுமுனையில் ..ஐயா ஒரு பதினைந்து கிலோமீட்டர் தூரத்துல இருக்கோம் ,சரி பூஜையை கொஞ்சம் லேட்டா ஆரம்பிக்க சொல்லுறேன் 8.30 மணிக்குள்ளே வந்துடுங்க என காலாவகாசத்தை நீட்டித்தார்..நாம் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை ,ஆம் அன்று பக்தருக்காக ஸ்ரீ பெரியபிறான் காத்துகொண்டிருந்தார் என என்னவே தோன்றுகிறது.

சரியாக எட்டு மணிக்கு அக்ரஹாரம் உள்ளே நுழைந்தது நமது வாகனம் நேராக கோவிலின் வாசலில் சென்று நின்றது அனைவரும் அவசர அவசரமாக இறங்கி கோவிலின் உள்ளே ஓடினோம் .அனைத்தும் ஏற்ப்பாடு செய்யப்பட்டு பூஜைக்கு தயாராகவே இருந்தது உடனே ஆரம்பித்தார்கள் பள்ளியறை பூஜையை .

பிரஹன்மாதவர் என்னும் பெருமாள் பூமி தேவி, நீளாதேவியுடன் காட்சி 


நான் இதுவரை எந்த கோவிலிலும் இப்படி ஒரு பூஜையை பார்த்ததில்லை அப்படி ஒரு ஆஹம விதிப்படி முறையாக செய்கிறார் கோவிலின் பட்டாச்சாரியார்.விசாரித்ததில் கோவிலில் மக்கள் கூட்டம் இருந்தாலும்  இல்லாவிட்டாலும் கூட இவர் இப்படித்தான் தன் கடமையை தவறாமல் செய்துகொண்டிருப்பார் என்றார்கள் பின்பு நம் tut குழுவின் சார்பில் அனைவருக்கும் அர்ச்சனை செய்யப்பட்டது .கண்கொளா காட்சியாக பள்ளியறை பூஜையை கண்டுகளித்தோம் அந்த திருப்பதி வேங்கடமுடையானை தசித்த ஒரு திருப்தி அனைவருக்கும் ஏற்ப்பட்டது .

பின்பு சகோதரி பரிமளம் அவர்கள் நம் குழுவிற்காக உணவு ஏற்ப்பாடு செய்து கொண்டுவந்திருந்தார்கள் ஒருவருக்கு உணவு தயார் செய்துகொண்டு சுற்றுலா செல்வதே பெரிய வேலை ,ஆனா இவங்க சிரமம் பாராமல் சுமார் இருபது பேருக்கு மூன்று வேலை உணவை வீட்டிலிருந்து தயார் செய்து கொண்டுவந்தார்கள் என்றால் பாருங்க ,இதற்க்கு பக்கத்துணையாக இருந்த அவர்களின் அம்மா மற்றும் அவரது தங்கை அவர்களுக்கு நமது tut குழுவின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்..    அந்த உணவை அனைவரும் திருப்தியாக அருந்தியபின் நமக்காக ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த ரூமிற்கு சென்று ஓய்வெடுத்தோம்..

ரூமில் ஓய்வெடுக்கும் நண்பர்கள் 

அதிகாலை வேளையில் கோவிலின் வாசல் தெளித்து கோலமிடும் காட்சிகள் 

அதிகாலை எழுந்தவுடன் தாமிரபரணி ஆற்றில் குளித்துமுடித்து ரெடியாகிய பின்னர் கோவிலின் வாசலில் நின்று ஒரு குழு புகைப்பட
 எடுத்துக்கொண்டோம் அது உங்களுக்காக கீழே .





வாகன ஓட்டுனருடன் 


அடுத்து நாம் தரிசிக்க இருப்பது கோடகநல்லூர் ஸ்ரீகைலாயநாதர் 


நவகைலாயங்களில் மூன்றாவது கைலாயமான கோடகநல்லூர் ஸ்ரீகைலாயநாதர் திருக்கோயிலாகும். 









நவக்கிரகங்களில் செவ்வாய் தலமாகவும் இத்திருக்கோயில் விளங்குகிறது. கார்கோடக க்ஷேத்திரம் என்றும் கோடகனூர் என்றும் இத்திருத்தலம் அழைக்கப்படுகிறது. 


மனித வாழ்க்கையில் செவ்வாய் தசை ஏழு ஆண்டுகள் நடக்கும். இந்த ஏழு ஆண்டுகளில் செவ்வாய் பகவானின் அருள் இருந்தால்தான் வாழ்க்கை செம்மையாக நடக்கும். சிலருக்கு ஜாதகத்தில் செவ்வாய் நீச்சம் பெற்றுள்ளதாகச் சொல்வார்கள். பெண்களுக்கு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் நடக்கத்  தாமதமாகும் என்பதுண்டு. இப்படிப்பட்டவர்கள், அவசியம் வழிபாடு செய்ய வேண்டிய தலம் கோடகநல்லூர் திருக்கோயிலாகும். 


புராண வரலாறு: 

ஆதிகாலத்தில் முனிவர் ஒருவர் காட்டில் தவம் புரிந்து கொண்டிருந்தார். ரிஷிக்கு உதவியாக முனிவரின் குமாரர் யாகம் நடத்தத் தேவையான சமித்துகளைச் சேகரிக்கச் சென்றிருந்தார். அப்போது அந்த வழியாகக் காட்டில் வேட்டையாட வந்த பரிஷித் மகாராஜவின் குமாரர் முனிவர் யாகம் செய்யும் வழியாக வந்துள்ளார். அரச குமாரன் முனிவரை அழைக்க, முனிவர் கண்ணும்கருத்துமாக யாகம் வளர்ப்பதிலேயே குறியாக இருந்தார். இதனால் கோபமடைந்த ராஜகுமாரன் கோபமடைந்து இறந்து கிடந்த பாம்பை முனிவரின் கழுத்தில் போட்டு விட்டுச் சென்று விட்டார். தன் தந்தையின் கழுத்தில் இறந்த பாம்பு கிடப்பதைப் பார்த்த ரிஷி குமாரன் இச்செயலைச் செய்தவர் அரசகுமாரன் தான் என்று தன் ஞானதிருஷ்டியில் அறிந்து ராஜ குமாரனுக்கு ‘என் தந்தையின் கழுத்தில் நீர் பாம்பைப் போட்டதால் உன் தந்தையும் பாம்பு தீண்டி இறப்பார்' என்று சாபமிட்டார். இதை அறிந்த பரிஷித் மகாராஜா தன் ஆஸ்தான ஜோதிடரிடம் தன் ஜாதகத்தை நன்கு ஆராயுமாறு கேட்டுக்கொண்டார். ஜோதிடர்களும் அவருக்குச் சர்ப்பத்தினால் கண்டம் உண்டாகும் என்பதனைத் தெரிவித்தனர். 

பரிஷித் மகாராஜவும் தன் உயிரைப் பாம்பிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள ஏழு மலை தாண்டி ஏழு கடல் தாண்டி கப்பலில் மணிமண்டபம் கட்டி வசிக்கத் துவங்கினார். விதி வசத்தால் கார்கோடகன் என்ற பாம்பானது மன்னர் சாப்பிடும் மாம் பழத்தில் சிறு புழுவாக உருமாறிப் புகுந்து பரிஷத் மகாராஜவைத் தீண்டியது. மகாராஜா இறந்து போனார். 

கார்கோடகம் பாம்பு, தான் வசித்த இடத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் மாட்டிக் கொண்டது. அப்போது சூதாட்டத்தில் தன் சொத்து,சுகங்களை இழந்த நள மகராஜா சோகமாக அந்த வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார். தீயில் மாட்டிக் கொண்டிருந்த கார்கோடன் சர்ப்பத்தை போராடி நள மகராஜா காப்பாற்றினார்.  பரிஷத் மகராஜவை தீண்டிய தோஷத்திற்கு சாபவிமோசனம் வேண்டி மகாவிஷ்ணுவை வேண்டி தியானம் செய்தது. திருமாலும் கார்கோடகன் முன் தோன்றி ‘கார்கோடகநல்லூருக்கு வா அங்கு உனக்கு முக்தி தருகிறேன்' எனக் கூறினார்.


கார்கோடகன் சர்ப்பம் முக்தியடைந்ததால் கார்கோடகநல்லூர் என்ற பெயர் இத்திருத்தலத்திற்க்கு வழங்கப்பெறுகிறது. 


திருக்கோயில் சிறப்புகள் 

இத்திருக்கோயிலில் சுவாமி கைலாசநாதராகவும் அம்பாள் சிவகாமி அம்மனாகவும் அருள் பாலிக்கின்றனர். கோடகநல்லூரில் வடபுறமாக ஸ்ரீகைலாயநாதர் கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் கொடிமரம், கோபுரம் ஆகியவை கிடையாது. ஜாதகத்தில் செவ்வாயின் தசை நடைபெறும் பொழுது இத்திருக்கோயிலுக்கு வந்து வழிபடுவது நற்பலன்கள் நடைபெற உதவுகிறது. 


திருக்கோயிலின் அமைவிடம் திருநெல்வேலியிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 


திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி, முக்கூடல் செல்லும் சாலையில் நடுக்கல்லூர் என்ற ஊரிலிருந்து தெற்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் கோடகநல்லூர் அமைந்துள்ளது. 


மூலவர்: கைலாசநாதர் 

அம்மன்/தாயார்: சிவகாமி, அனந்தகவுரி 

தல விருட்சம்: வில்வம் 

தீர்த்தம்: தாமிரபரணி 

ஊர்: கோடகநல்லூர் 

மாவட்டம்: திருநெல்வேலி 


தாலியுடன் நந்தி 

கைலாசநாதர் கோயில்கள் பல இடங்களில் அமைக்கப்பட்டன. அதில் இந்தக் கோயிலும் ஒன்று. அங்காரகன் இங்கு சிவனை வழிபட்டார். அதனால் இது செவ்வாய் பரிகாரத் தலமாயிற்று. இங்குள்ள நந்திக்கு, செவ்வாய் தோஷத்தால் திருமணம் தள்ளிப்போகும் பெண்கள், 58 விரலிமஞ்சளை, தாலிக்கயிற்றில் கட்டி, மாலையாக அணிவித்து வழிபடுகிறார்கள்.


 இக்கோவிலில் விநாயகர், வள்ளி தேவ சேனாபதி, நந்தி போன்ற தேவதைகளுடன் கைலாசநாதர் கிழக்கு நோக்கியும், சிவகாமியம்மை தெற்கு நோக்கியும் எழுந்தருளி அருள்கின்றனர். கோவிலுக்கு கொடிமரம் ஏதும் கிடையாது.  சிவராத்திரி, பிரதோஷம், திருவாதிரை போன்ற விசேஷங்கள் வெகு விமரிசையாக நடந்து வருகிறது.  திருநெல்வேலியில் இருந்து மிக அருகில் இருக்கும் இந்தச் சிறப்பான தலத்திற்கு நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள்...

அடுத்து நாம் தரிசிக்க இருப்பது கல்யானத்தடை அகலும் ஸ்ரீ சௌந்தர்யநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ அவி முக்தீஸ்வரர் கோடகநல்லூர். 

நம்பிமலை யாத்திரையின்போது நாம் தரிசித்த ஆலயங்கள் பகுதி 5 இல் காணலாம் .

நன்றி.

No comments:

Post a Comment