Subscribe

BREAKING NEWS

25 September 2018

நம்பிமலை யாத்திரையின்போது நாம் தரிசித்த ஆலயங்கள் பகுதி 3

வணக்கம் அனைவருக்கும்! அனைவரும் நலம் தானே ! இதோ நாம் வந்துவிட்டோம் திருச்செந்தூர் முருகனைக்கான...








முருகன் என்றால் அழகு, அழகு என்றாலே அது முருகன் தான்,இந்த திருச்செந்தூர் முருகனை பற்றி நான் என்னத்தை பெரிதாக சொல்லிவிடப்போகிறேன்,பல திரைப்படங்களில் இவரைப்போற்றி புகழ்ந்து இன்ரும் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறது,திரைப்பாடல்கள்.அதில் ஒன்று.

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதர் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
அசுரரைக் கொன்ற இடம் இது தேவரை காத்த இடம் .....

அடடா ! கேட்கும்போதே உச்சிமுதல் உள்ளங்கால்கள் வரைசிலிர்க்கிறது உண்மைதானே !
இந்த திருச்செந்தூர் முருகனை நம் குழு அரை மணி நேரத்திற்குள்ளாகவே தரிசித்து முடித்தோம் எப்படி சாத்தியம்,இந்த உலகில் காரணமின்றி காரியமில்லை என்பதை பெரிதும் நம்புபவன் நான்,பாவம் இந்த பக்தர்கள் நம்மை தரிசிப்பதற்காக மட்டும் இரண்டு மூண்டு மணி நேரம் ஆகிவிட்டால் ,மற்ற கோவில்களை தரிசிக்க முடியாமல் போய்விடுவார்களே என்னவோ என்று அந்த எம்பெருமான் நினைத்திருப்பார் போலும் அதனாலோ என்னவோ அந்த முருகன் தன்அடியவர் இருவரை நமக்கு துணையாக அனுப்பிவைத்தார்போலும் ,யார் அவர்கள்? ,வல்லக்கோட்டை பழனி பாதயாதிரைக்குழு தலைவர் திரு ,பார்தீபன் ஐயா அவர்கள் ,இவர் காவல் துறையில் பெரிய பொறுப்பில் இருக்கிறார் ,இவருடன் பேசியபோதுதான் தெரிந்தது, காவல்துறையில் பணிசெய்பரா இப்படி பேசுகிறார் என என்னத்தோன்றுகிறது,அவ்வளவு பக்தி ,தன்னடக்கம்,எதற்கெடுத்தாலும் எல்லாம் முருகன் செயல் எனக்கூறும் வார்த்தைகள் ,மெய்சிலிக்க வைக்கிறது ,இவரை நமக்கு அறிமுகம் செய்துவைத்தவர் திரு ,ஆதிமூலம் என்கிற ஆதி ஐயா அவர்கள் ,இவர் அதே  வல்லக்கோட்டை பழனி பாதயாதிரைக்குழுவில்
உறுப்பினராகவும் உள்ளார் நமது tut யில் உறுப்பினராகவும் உள்ளார் ,நமது உழவாரப்பனிகளில் கலந்துகொள்வார் ,இவரும் குருநாதருக்கு சளைத்தவரில்லை தன்னடக்கத்தில்,அன்புகொண்ட உள்ளங்களை நம்னுடன் இணைத்து வைப்பதுதான் அவனின் விருப்பம் நம்விருப்பமும் கூட இவர்களின் உதவியினால் தான் அந்த திருச்செந்தூர் முருகனை நாம் சந்தித்தோம் என்று எழுதினால் உடனே மறுத்து விவாதம் செய்யத்தொடங்கிவிடுவார்கள் அதனால் அந்த முருகனின் கருணையினால் தான் நம் குழு அவரின் அருள் தரிசனம் கிடைக்கச்செய்தார் என்றே எழுதுகிரேன் ,இதோ அவர்கள் நமக்கு அளித்த அன்பு பரிசு. இந்த புத்தகம்.





இது எங்களின் பூஜை அறையில் இன்றும் பாராயணம் செய்யப்படுகிறது அவர்களுக்கு நன்றிகள் பல ...
சரி இந்த திருச்செந்தூர் முருகன் கோவிலை கட்டிய சித்தர்களில் ஒருவரான
ஸ்ரீ ஞான தேசிக மூர்த்தி சுவாமிகள் ஜீவா சமாதி .
 காந்தீஷ்வரம் ஆழ்வார்தோப்பு .இல் பார்த்தோம் மற்ற நான்கு சித்தர்கள் எங்கே ?இதோ இந்த முருகன் கோவில் அருகிலேயே இருக்கிறார்கள் .கோவிலின் தெற்கே நாழிக்கிணறு அருகே அமைத்துள்ளது மூவர் சமாதி,  மூன்றும் அருகருகே அமைந்துள்ளது .குறிப்பிடத்தக்கது .













ஞான ஸ்ரீவள்ளி நாயக சுவாமி இவரின் ஜீவா சமாதி கோவிலின் வடக்கே அமைந்துள்ளது ,புகைப்படம் எடுக்க தவறிவிட்டோம் மன்னிக்கவும்

அனைத்து சித்தர்களின் ஜீவ சமாதிகளை அனைவரும் இருந்த இடத்திலேயே தரிசித்துவிட்டால் நேரில் வந்து தரிசனம் செய்யும் பக்த்தர்களுக்கு என்ன வித்தியாசம் என நினத்துவிட்டார்போலும் இந்த முருகன் .அதனாலோ என்னவோ புகைப்படம் எடுக்க மறந்துபோனது .



 நாழிக்கிணறு 24 அடி ஆழத்தில் உள்ளது. இங்கு நீராடுவதற்கு முன்னர்  கடலில் நீராட வேண்டும் என்பது ஐதீகம்.அதெல்லாம் நாம் குழு சரியாகவே முடித்துவிட்டார்கள்..
 அடுத்து முருகனின் தரிசனம் காண செல்வோம் வாருங்கள் ..
ஸ்பெசல் அனுமதி பெற்றபின் நமது குழு அனைவரும் கருவறைக்குள் அனுமதிக்கப்பட்டனர் கண்கொள்ளா காட்சிகள் எம்பெருமானின் தரிசனம் பெற்றோம் ,





நாழி கிணற்றில் நீராடும் போது



நீராடியபின் நுழை வாயிலுக்கு வரும்போது 


முருகனின் தரிசனத்திர்க்குபின் கண்டிப்பாக தரிசிக்க வேண்டிய ஒன்று பஞ்சலிங்க தரிசனம் இது முருகனின் கருவறையை ஒட்டியே முருகனுக்கு  இடதுபக்கத்தில் அமைந்துள்ளது  . இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன.
வெளியிலிருந்தபடி முருகரை தரிசனம் செய்யும்போதே பஞ்சலிங்க தரிசனம் செய்ய இயலாது. மூலவர் முருகரின் இடதுபுறம் உள்ள சிறு வாயில் வழியே உள்ளே நுழைந்து சுற்றி வலது புறம் வந்து பாதாள பஞ்சலிங்க தரிசனம் செய்ய வாரநாட்களில் இயலும்.இதற்கு கோயில் சார்பில் ஐந்து ரூபாய் கட்டண நுழைவுச்சீட்டு உண்டு. 
பஞ்சலிங்க தரிசனம் 

பஞ்சலிங்க தரிசனத்திபோது தியானத்தில் அமர்ந்த நமது மகளிர் அணி .
அணைத்து தரிசனமும் அவனருளாலே பெற்றோம்,பின்பு அனைவரும் வெளிபிரகாரத்தை வந்தடைந்தோம் ,நானும் அண்ணன் திரு ,ராஜாகுமார் மட்டும் ,நமக்கு சிறப்பு தரிசனத்திற்கு உள்ளே போக அனுமதித்த கோவிலின் பிரசிடன்ட் அவர்களை பார்த்துவிட்டு ஒரு நன்றியை தெரிவிக்கச்சென்றோம் அங்கே நமக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது ,விபூதி இலைஎன்று சொல்லக்கூடிய கோவிலின் சிறப்பு பிரசாதம் அது பலபேருக்கு இந்த பிரசாதம் பற்றி தெரிந்திருக்க வாய்பில்லை இது ஒரு இலையில் விபூதி வைத்து தருவார்கள் இதனை ஒரு சிட்டிகை அளவிற்கு உண்டுவந்தால் உடலில் உள்ள சிறிய அளவிலான நோய்கள் தீருமாம் ஒரு இலையின் விலை ரூ,200.மிக மிக குறைந்த அளவே கோவிலின் அலுவலகத்திலே இது கிடைக்குமாம் ஆனால் நமக்கு சுமார் இருபது இலைகள் கிடைத்தன அதுவும் இலவசமாகவே மிகப்பெரிய நன்றிகளை திரு பிரசிடன்ட் ஐயா அவர்களுக்கு  தெரிவித்துக்கொண்டு விடைபெற்றோம். அனைவருக்கும் மிகப்பெரிய ஆசீர்வாதம் கிடைத்ததாகவே உணர்ந்தோம் பின்பு அனைவருக்கும் இந்த பிரசாதம் பகிர்ந்தளிக்கப்பட்டது . 

அடுத்து நாம் செல்ல இருப்பது கருங்குளம் ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோவில் இது ஒரு மலைக்கோவில் .




இங்கு ஸ்ரீ வைகானஸ பகவத் சாஸ்திர ஆகம முறைப்படி கர்ப்ப வைஷ்ணவர்களால் பூஜிக்கப்படுகிறது இங்கு எழுந்து அருள்பாலிக்கும் இறைவன் தாருருபவடிவில் (சந்தனகட்டையில் )இரு தூண்கள் போன்ற வடிவில் உடையவர் சுப கண்டன் என்ற அரசனக்கு தீராத கண்டமாலை நோய் ஏற்ப்பட்டதால் திருப்பதி பெருமாளுக்கு பிரார்த்தனை செய்ய அப்பெருமால் கணவில் எனக்கு சந்தன கட்டையால் தேர் ஒன்று செய்து வை ,அதி இரு சந்தனக்கட்டைகள் மீதமாகும் 
அந்தக் கட்டைகளைக் கொண்டு சென்று தாமிரபரணி நதிக்கரையிலுள்ள வகுளகிரியில் பிரதிஷ்டை செய்தால், உன் நோய் முற்றிலும் சரியாகிவிடும்’’ என்று தெரிவித்தார்.
பெருமாள் கூறியதைப்போலவே, சந்தனக் கட்டைகளால் ஆன தேரை பக்தியுடன் செய்யத் தொடங்கினார் சுபகண்டன். தேரைச் செய்து முடித்த பிறகு, பெருமாள் கூறியதைப் போலவே இரண்டு கட்டைகள் மீதமிருந்தன. சந்தனத் தேரை வெங்கடாசலபதிக்குச் சமர்ப்பித்த பிறகு, மீதமிருந்த அந்த இரண்டு சந்தனக் கட்டைகளை எடுத்துக்கொண்டு திருப்பதியிலிருந்து புறப்பட்டு தாமிரபரணி நதிக்கரையை வந்தடைந்தார். தாமிரபரணி நதிக்கரைக்கு அருகிலிருந்த ஒரு மலையில் சீனிவாசன் ஆலயம் ஒன்று அமைந்திருந்தது. ஆதிசேஷனே வகுளகிரியாகக் காட்சி தருவதாக ஐதீகம். புளியமரத்துடன் கூடிய அந்த மலையில் புளியமரத்துக்கு வடக்கேயும், சீனிவாச பெருமாள் ஆலயத்துக்குத் தெற்கேயும் இருந்த இடத்தில் மீதியிருந்த இரண்டு சந்தனக் கட்டைகளையும் பிரதிஷ்டை செய்ய எண்ணினார் சுபகண்டன்.அப்போது சந்தன மரக்கட்டைகளிலிருந்து பிரகாசமான ஒளி தோன்றியது. அந்த ஒளியைக் கண்டு பிரம்மாவே இந்திரன் மற்றும் தேவர்களுடன் இங்கு வந்து தன் கரங்களால் சந்தன மரப் பெருமாளை பிரதிஷ்டை செய்தார். இவர்தான் 'தென் திருப்பதி ஶ்ரீவெங்கடாசலபதி’ என்று அழைக்கப்படுகிறார். பிரம்ம தேவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஶ்ரீவெங்கடாசலபதி பெருமாளுக்கு வருடத்தில் 365 நாள்களும் பால், எண்ணெய், இளநீர் ஆகியவற்றால் திருமஞ்சனம் செய்யப்படுகிறது.சுபகண்டன் ஆரம்பித்த சித்ரா பௌர்ணமி திருவிழா பல ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. திருவிழா நடக்கும் பத்து நாள்களில், ஒன்பது நாள்கள் மலையின் மீதே சுவாமி எழுந்தருளுகிறார். இங்கே வெங்கடாசலபதிக்கு என்று தனி உற்சவர் இல்லை. அருகிலிருக்கும் கோயிலில் உள்ள சீனிவாசப் பெருமாளே உற்சவராக இருக்கிறார். சீனிவாசப் பெருமாளை தெற்குப் புறமாக இருக்கும் கோயிலுக்கு அழைத்து வந்து தினமும் இருவருக்கும் திருமஞ்சனம் செய்யப்படுகிறது.


சரி அங்கு நாம் என்ன செய்தோம் என்று பார்ப்போம் நாம் அங்கு சென்ற நேரம் கோவில் பூட்டி இருந்தது மாலை ஐந்து மணி இருக்கும்  அர்ச்சகர் எப்போது வருவர் எனத்தெரியவில்லை அருகில் உள்ளவர்களை விசாரித்தபோது வரும் நேரம்தான் என்றார்கள் ,நக்கு பொறுமை இல்லை ஒரு போனை போட்டுவிடலாம் என்று போனை போட்டோம் ,மறுபக்கத்தில் நீங்க யாரு பேசறேள் என்றார் அர்ச்சகர். சுவாமி நாங்க சென்னையில் இருந்து வந்திருக்கோம் ஒரு இருபது பேரு அதுசரி உங்களுக்கு யாரு கொடுத்த என் செல் நம்பர்...சாமி கோவிலோட பானர்லேயே இருக்கு அதுசரி இதோ வந்துட்டேன் என்றார் போனை வைக்கவும் அவர் வாசலில் உள்நுழையவும் சரியாக இருந்தது ,ஒரு நமஸ்காரத்தை போட்டுவிட்டு அறிமுகப்படுத்திக்கொண்டோம் .சாமி நீங்க சன்னதிய ரெடிபன்றதுக்குள்ள நாங்க உள் மற்றும் வெளி பிரஹாரங்களை சுத்தம் செஞ்சி கொடுக்குறோம் நாங்க உழவாரப்பணி குழு தாங்க !எனப்பேசி அனுமதிபெற்றோம் .அனுமதிபெற்றதந்தான் தாமதம் கிழே பாருங்கள் .பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள் .










அர்ச்சகரும் பார்த்து சந்தோசப்பட்டார் இருக்காதா பின்ன எத்தனவருட அனுபவம் ...






மேலே நீங்கள் பார்ப்பது மலைமேல் இருந்து எடுக்கப்பட்டது எவ்வளவு அழகான இயற்க்கை காட்சிகள்..
 பின்பு அனைவருக்கும் சேர்த்து அர்ச்சனை செய்யப்பட்டது அச்சகருக்கு நன்றியை தெரிவித்துவிட்டு புறப்பட்டோம் ..இக்கோவிலைப்பற்றி அதிகம் எழுதலாம் பதிவின் நீளம் கருதி இத்துடன் முடிக்கின்றேன்.

பின்பு மலையடிவாரத்தில் ஒரு கோவிலை இறங்கும்போது பார்த்தோம் அதன் புகைப்படம் இதோ ..

ஸ்ரீ குலசேகர நாயகி சமேத மார்தண்டேஸ்வரர்


அடுத்து நாம் தரிசிக்கச்செல்வது கோடகநல்லூர் ஸ்ரீ பெரியபிறான் திருக்கோவில் ...

நம்பிமலை யாத்திரையின்போது நாம் தரிசித்த ஆலயங்கள் பகுதி 4 இல் 
இதனை நாம்  காணலாம் .


நன்றி.

No comments:

Post a Comment