Subscribe

BREAKING NEWS

26 September 2018

ஓம்காரம்...

அனைவருக்கும் வணக்கம்.

நம் தளத்தில் நம்பிமலை தொடர்பதிவுகள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையில் நம்மை மகிழ்ச்சிக்கு இட்டு செல்கின்றது. இன்றைய பதிவில் ஓம்காரம் இறைபணி மன்றத்தை நாம் தொட்டுக் காட்ட விரும்புகின்றோம்.

ஓம்காரம்...உலகின் மிகப்   பழமையான நூல் ரிக்வேதம். அது ஓம்காரத்தில் துவங்கி ஓம்காரத்தில் முடியும்.

ஓம்காரத்தின் மற்றொரு பெயர் பிரணவம். இதை ஏகாக்ஷரம் என்று பகவத் கீதை பகரும். எப்படி ரிக்வேதம் ஓம்காரத்தில் துவங்கியதோ அப்படி மாணிக்க வாசகரின் திருவாசகமும் ஓம்காரத்தில்  துவங்கி அதில் முடிவடைகிறது. திருவாசகத்தில் 51 பாடற் பகுதிகளில் முதலில் உள்ளது சிவ புராணம். அதில்
உய்ய என்னுள்ளத்துள் ஓம்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா – என்று சிவபுராணத்தில் ஓம்காரத்தை அமைத்துள்ளார்.

திருமந்திரத்தில்

ஓம்காரத்து உள்ளே உதித்த ஐம்பூதங்கள்
ஓம்காரத்து உள்ளே உதித்த சராசரம்
ஓம்கார தீதத்து உயிர் மூன்றும் உற்றன

ஓம்கார சீவ பரசிவ ரூபமே

திருப்புகழில்

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் நிறைய இடங்களில் ஓம்காரப் பெருமை கூறப்படுகிறது. இதோ ஒரே ஒரு திருப்புபுகழ்:
காமியத்தில் அழுந்தி இளையாதே
காலர் கைப்படிந்து மடியாதே
ஓமெழுத்தில் அன்பு மிகவூறி
ஓவியத்தில் அந்தமருள்வாயே
தூமமெய்க் கணிந்த சுக லீலா
சூரனைக் கடிந்த கதிர்வேலா
ஏமவெற்புயர்ந்த மயில்வீரா
ஏரகத்தமர்ந்த பெருமாளே


வள்ளலார் பாடலில்
அகத்திய முனிவனுக்கு முருகப் பெருமான் ஓம்கார மகிமையை உபதேசித்ததை, தெய்வ மணிமாலையில் வள்ளலாரும் பாடுகிறார்:-

சேமமிகு மாமறையின் ஓமெனும் அருட்பதத்
திறனருளி மலைய முனிவன்
சிந்தனையின் வந்தனையும் வந்த மெய்ஞ்ஞானசிவ
தேசிகாரத்னமே

என்று புகழ்கிறார்.

ஓம்காரத்தை ஒரு பதிவில் அடக்க முடியுமா என்ன?

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நம்முடன் நட்பில் இருந்து வருகின்றார் ஓம்காரம் செந்தில் ஐயா அவர்கள்.இவர்கள் செய்யும் பணி அளப்பரியது.சனாதன தர்மத்தை ஒவ்வொரு இல்லத்திலும் கொண்டு சேர்க்க வேண்டியது இவர்களின் குறிக்கோள். அதன் பொருட்டு உழவாரப்பணி, யாகங்கள்,வழிபாடுகள் என தொடர்ந்து வருகின்றார்கள். இங்கே சில தொகுப்பை தருகின்றோம்.

ஓம்காரம் நடத்திய 10 ஆம் ஆண்டு கோகுலாஷ்டமி விழா.. கிருஷ்ணனாக, ராதையாக குழந்தைகள். நாம சங்கீர்த்தனம், வழிபாடு, பிரசாதம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. தர்மம் காப்போம்.










அடடே...நாம் இந்த முறை தவற விட்டுவிட்டோம். அடுத்த ஆண்டு நம் தளம் சார்பில் கோகுலாஷ்டமி விழா நடத்த அந்த கிருஷ்ணன பரமாத்மா நமக்கு அருளட்டும்.

உத்திரங்குடி ஸ்ரீ ருத்ரபுரீஸ்வர்ர், புதிய நந்தியெம்பருமான் பிரதிஷ்டை விழா  5.09.2018, புதன் கிழமை நடைபெற்றுள்ளது. இவர்களின் நோக்கமே - ஆலயம் காப்போம்.. ஆனந்தம் காண்போம் என்பதுவே ஆகும்.

இது தவிர அமாவாசையை முன்னிட்டு வரம்பியம் ஸ்ரீ பிரத்யங்கிராதேவி ஆலயத்தில் ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனை, அன்னதானம் போன்றவை செய்து வருகின்றார்கள்.

மேலும் அடியார் பெருமக்களின் குருபூசையும் தவறாமல் நடத்தி வருகின்றார்கள். இவர்களின் குறிப்பிடத்தக்க ஒன்று சண்டி ஹோம விழா..இந்த ஆண்டு 5 ஆம் ஆண்டு மஹா சண்டி ஹோம விழா நடைபெற . வாய்ப்புள்ள அன்பர்கள் நேரில் சென்று கலந்து கொள்ளவும். பொருளுதவி செய்ய விரும்புபவர்கள் கீழ்க்கண்ட தகவலை பார்த்து உதவவும்.




- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்


மீள்பதிவாக :

நம்பிமலை யாத்திரையின்போது நாம் தரிசித்த ஆலயங்கள் பகுதி 4 - http://tut-temple.blogspot.com/2018/09/4.html

நம்பிமலை யாத்திரையின்போது நாம் தரிசித்த ஆலயங்கள் பகுதி 3 - http://tut-temple.blogspot.com/2018/09/3.html

நம்பிமலை யாத்திரையின்போது நாம் தரிசித்த ஆலயங்கள் பகுதி 2 - http://tut-temple.blogspot.com/2018/09/2.html

நம்பிமலை யாத்திரையின்போது நாம் தரிசித்த ஆலயங்கள் பகுதி 1 - http://tut-temple.blogspot.com/2018/09/1_22.html

No comments:

Post a Comment