அனைவருக்கும் வணக்கம்.
நம் தளத்தின் மூலம் பல அறப்பணிகள், சேவைகள்,பூசைகள் என செய்து வருவது அனைவரும் அறிந்ததே. தற்போது கேரளா நிவாரண சேவைக்கு அகத்தியர் வனம் மலேசியா குழுவோடு இணைந்து பல தளங்களில் பங்கெடுத்தோம். அனைவருக்கும் இங்கே நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். மாதம் தோறும் அகத்தியர் பெருமானுக்கு ஆயில்ய ஆராதனை செய்து வருகின்றோம். இது அகத்தியர் பெருமானுக்கு மட்டும் நடைபெறுகின்றது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நேரில் வந்து பார்த்தால் தான் தெரியும். இது அனைத்து சித்தர்கள், மகான்களுக்கான பூசை. ஆயில்ய ஆராதனையில் சித்தர்கள் போற்றித் தொகுப்பை நாம் ஓதி வருகின்றோம். இதுவே நம்மை வழி நடத்தி வருகின்றது.
இந்த பயணத்தில் நாம் அடுத்து அடி எடுத்து வைத்தது மோட்ச தீப வழிபாடு. சென்ற ஆடி மாதம் கோலாகலமாக சிறப்பாக கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில் வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் நமக்கு நேரிடையாக வந்து , முதல் வழிபாட்டை துவக்கி வைத்த அகத்தியர் அடியார்கள் பாதம் தொட்டு வணங்குகின்றோம். இதோ இந்த மாதம் ஆவணி மோட்ச தீப வழிபாட்டிற்கு அனைவரையும் இந்த பதிவின் மூலம் அழைக்கின்றோம்.
சென்ற மாத நிகழ்வின் துளிகளை பார்த்துவிடுவோமா? அதற்கு முன் ஆவணி மாத அழைப்பிதழ் தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்.
ஆடி மாத மோட்ச தீப வழிபாட்டிற்கு வெளியூர்களில் இருந்து நம் அகத்தியர் அன்பர்கள் அன்று மதியமே வந்து விட்டார்கள். வீட்டிற்கு அழைத்து சென்று வழிபாட்டிற்கான பொருட்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டோம்.
அனைத்து பொருட்களையும் சரிபார்த்து ,கோயிலுக்கு சரியாக 5 மணி அளவில் அடைந்தோம். பின்னர் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றுவதற்கான பணிகள் நடைபெற்றது.
தீபம் ஏற்றுவதற்கு முன்பாக, விநாயகப் பெருமான், அகத்தியர் இருவரையும் வாங்கினோம். முதல் முறை வழிபாடு என்பதால் மோட்ச தீபம் ஏற்றுவது பற்றி சுருக்கமாக எங்கள் குரு பாலா ஐயா அவர்கள் சில வார்த்தைகள் உபதேசித்தார்.பின்னர் சுமார் 7 மணி அளவில் தீபம் ஏற்றப்பட்டது.
நேரம் ஆக ஆக நெய் ஊற்ற வேண்டி இருந்தது. அப்போது தான் தீபம் நன்கு ஒளிரும்.சுமார் 10 லி நெய் அன்று தேவைப்பட்டது. இதனை நம் அண்ணன் சந்திரசேகரன் எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு தீபமாக நெய் ஊற்றிக் கொண்டு வந்தார். அவருக்கு கடைசியில் வேர்க்க ஆரம்பித்து விட்டது.
பிரார்த்தனை முடிந்ததும், அனைவரையும் ஒவ்வொருவராக அழைத்து, தீபங்களின் முன்னிலையில் பூக்கள் தூவி வழிபட வேண்டினோம். இந்நிகழ்விற்கு பின்னர், கை, கால் அலம்பி விட்டு, பிரசாதம் உண்ண பணித்தோம். வழக்கம் போல் வேளச்சேரி சிவா அவர்களிடம் பிரசாதம் கேட்டிருந்தோம். இனிப்பிற்கு சக்கரை பொங்கல் வழங்கப்பட்டது.பிரசாதம் இனிமையாக இருந்தது.
அன்றைய தினம் வழிபாடு முடித்து, அனைவருக்கும் நன்றி கூறி மோட்ச தீப வழிபாட்டை முழுமை செய்தோம். மோட்ச தீப வழிபாடு பற்றி சொல்வதானால் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.இனிவரும் பதிவுகளில் அவ்வப்போது நமக்கு கிடைக்கின்ற செய்திகளை இங்கே பகிர்கின்றோம். சரி..இந்த மாத மோட்ச தீப வழிபாடு பற்றி கீழே கண்டு பங்கு பெறவும். வருபவர்கள் தங்களால் முடிந்த அளவில் நெய் மற்றும் எள்ளு வாங்கி கொண்டு வரவும்.
மெய் அன்பர்களே.
நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் ஆவணி மாதம் 24 ஆம் நாள் (09/09/2018) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் கூடுவாஞ்சேரி - மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷி முன்னிலையில் பித்ருக்களின் ஆசி வேண்டி மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்ய உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து முன்னோர்களின் அருளாசி பெறும்படி வேண்டுகின்றோம்.
தொடர்புக்கு : 7904612352/9677267266
tut-temple.blogspot.in
https://www.facebook.com/thedalullathenikalaai/
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
மீள்பதிவாக:-
முன்னோர்களின் ஆசி பெற மோட்ச தீப வழிபாடு - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_15.html
வளங்களை அள்ளித் தரும் மோட்ச தீப வழிபாடு - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_29.html
21 தலைமுறை முன்னோர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றுவோம் - http://tut-temple.blogspot.in/2018/04/21.html
நம் தளத்தின் மூலம் பல அறப்பணிகள், சேவைகள்,பூசைகள் என செய்து வருவது அனைவரும் அறிந்ததே. தற்போது கேரளா நிவாரண சேவைக்கு அகத்தியர் வனம் மலேசியா குழுவோடு இணைந்து பல தளங்களில் பங்கெடுத்தோம். அனைவருக்கும் இங்கே நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். மாதம் தோறும் அகத்தியர் பெருமானுக்கு ஆயில்ய ஆராதனை செய்து வருகின்றோம். இது அகத்தியர் பெருமானுக்கு மட்டும் நடைபெறுகின்றது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நேரில் வந்து பார்த்தால் தான் தெரியும். இது அனைத்து சித்தர்கள், மகான்களுக்கான பூசை. ஆயில்ய ஆராதனையில் சித்தர்கள் போற்றித் தொகுப்பை நாம் ஓதி வருகின்றோம். இதுவே நம்மை வழி நடத்தி வருகின்றது.
இந்த பயணத்தில் நாம் அடுத்து அடி எடுத்து வைத்தது மோட்ச தீப வழிபாடு. சென்ற ஆடி மாதம் கோலாகலமாக சிறப்பாக கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில் வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் நமக்கு நேரிடையாக வந்து , முதல் வழிபாட்டை துவக்கி வைத்த அகத்தியர் அடியார்கள் பாதம் தொட்டு வணங்குகின்றோம். இதோ இந்த மாதம் ஆவணி மோட்ச தீப வழிபாட்டிற்கு அனைவரையும் இந்த பதிவின் மூலம் அழைக்கின்றோம்.
சென்ற மாத நிகழ்வின் துளிகளை பார்த்துவிடுவோமா? அதற்கு முன் ஆவணி மாத அழைப்பிதழ் தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்.
ஆடி மாத மோட்ச தீப வழிபாட்டிற்கு வெளியூர்களில் இருந்து நம் அகத்தியர் அன்பர்கள் அன்று மதியமே வந்து விட்டார்கள். வீட்டிற்கு அழைத்து சென்று வழிபாட்டிற்கான பொருட்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டோம்.
அனைத்து பொருட்களையும் சரிபார்த்து ,கோயிலுக்கு சரியாக 5 மணி அளவில் அடைந்தோம். பின்னர் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றுவதற்கான பணிகள் நடைபெற்றது.
தீபம் ஏற்றுவதற்கு முன்பாக, விநாயகப் பெருமான், அகத்தியர் இருவரையும் வாங்கினோம். முதல் முறை வழிபாடு என்பதால் மோட்ச தீபம் ஏற்றுவது பற்றி சுருக்கமாக எங்கள் குரு பாலா ஐயா அவர்கள் சில வார்த்தைகள் உபதேசித்தார்.பின்னர் சுமார் 7 மணி அளவில் தீபம் ஏற்றப்பட்டது.
நம் குழு அன்பர்களும் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தார்கள். அனைவரும் எள்ளு, நெய் வாங்கி வந்தார்கள். சுமார் 7 பேர் ஒவ்வொருவராக தீபம் ஏற்றினோம். தீபம் ஏற்றியவுடன் அந்த இடம் அப்படியே ஒளி வெள்ளத்தில் மிதந்தது. இதனை நேரில் உணரத்தான் முடியுமே தவிர, சொல்லி புரிய வைக்க முடியாது. பின்னர் 108 முறை இரண்டு மந்திரங்கள் உச்சாடனம் செய்தோம்.
பிரார்த்தனை முடிந்ததும், அனைவரையும் ஒவ்வொருவராக அழைத்து, தீபங்களின் முன்னிலையில் பூக்கள் தூவி வழிபட வேண்டினோம். இந்நிகழ்விற்கு பின்னர், கை, கால் அலம்பி விட்டு, பிரசாதம் உண்ண பணித்தோம். வழக்கம் போல் வேளச்சேரி சிவா அவர்களிடம் பிரசாதம் கேட்டிருந்தோம். இனிப்பிற்கு சக்கரை பொங்கல் வழங்கப்பட்டது.பிரசாதம் இனிமையாக இருந்தது.
அன்றைய தினம் வழிபாடு முடித்து, அனைவருக்கும் நன்றி கூறி மோட்ச தீப வழிபாட்டை முழுமை செய்தோம். மோட்ச தீப வழிபாடு பற்றி சொல்வதானால் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.இனிவரும் பதிவுகளில் அவ்வப்போது நமக்கு கிடைக்கின்ற செய்திகளை இங்கே பகிர்கின்றோம். சரி..இந்த மாத மோட்ச தீப வழிபாடு பற்றி கீழே கண்டு பங்கு பெறவும். வருபவர்கள் தங்களால் முடிந்த அளவில் நெய் மற்றும் எள்ளு வாங்கி கொண்டு வரவும்.
மெய் அன்பர்களே.
நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் ஆவணி மாதம் 24 ஆம் நாள் (09/09/2018) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் கூடுவாஞ்சேரி - மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷி முன்னிலையில் பித்ருக்களின் ஆசி வேண்டி மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்ய உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து முன்னோர்களின் அருளாசி பெறும்படி வேண்டுகின்றோம்.
தொடர்புக்கு : 7904612352/9677267266
tut-temple.blogspot.in
https://www.facebook.com/thedalullathenikalaai/
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
மீள்பதிவாக:-
முன்னோர்களின் ஆசி பெற மோட்ச தீப வழிபாடு - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_15.html
வளங்களை அள்ளித் தரும் மோட்ச தீப வழிபாடு - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_29.html
21 தலைமுறை முன்னோர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றுவோம் - http://tut-temple.blogspot.in/2018/04/21.html
No comments:
Post a Comment