சீவலப்பேரி ஸ்ரீ சுந்தரராஜப்பெருமாளைத் தொடர்ந்து நாம் அடுத்து சென்றது ,
ஆழ்வார்திருநகரி (திருக்குருகூர்) ஆதிநாதன் திருக்கோயில் ஒன்றாகும். இத்தலம் நம்மாழ்வார் அவதாரத் தலம் ஆகும். துக்தூத்குடி மாவட்டத்தின் ஆழ்வார் திருநகரியில் அமைந்துள்ளது. இத்தலம் பிரம்மாவுக்கு குருவாகப் பெருமாள் வந்த திருத்தலம் என்பதால் குருகூர் எனப்படுகின்றது. ஆதியிலேயே தோன்றிய நாதன் என்பதால் பெருமாள் ஆதிநாதன் என திருப்பெயர் பெற்றார்.
திருக்கோவில் அமைவிடம் அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயில் மற்றொரு நவதிருப்பதியான ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலியில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
திருக்கோயில் ஊரின் நடுநாயகமாக அமைந்துள்ளது. திருக்கோயிலின் முன்புறம் பந்தல் மண்டபம் என அழைக்கப்படும் கல் மண்டபம் அமைந்துள்ளது. இந்த கல் மண்டபத்தைத் தாண்டி, மாட வீதியைத் தாண்டிச் சென்றால் ராஜ கோபுரம் வருகிறது. கோயிலின் உள்ளே பலிபீடமும், அதனை அடுத்து கொடிமரமும் அமைந்துள்ளன. கருடர் சன்னதியைத் தாண்டிச் சென்றால் ஆதிநாதனின் மூலவர் சன்னதி அமைந்துள்ளது.
ஆழ்வார் திருநகரி என்னும் இத்திருத்தலத்தில் இலக்குவன் புளிய மரமாகி விட, அவன் வேண்டுகோளுக்கு இணங்கி ராமபிரான் பின்னாளில் தாமே நம்மாழ்வாராக அவதரித்து அப்புளிய மரத்தில் காட்சி அளித்ததாகவும், இலக்குவன் திருப்புளியாழ்வாராக இங்கு காட்சியளித்தமையால், இத்தலம் சேஷ ஷேத்திரம் என விளங்குவதாகவும் கூறுவர்.
சிற்பக்கலை அம்சம் இத்திருக்கோயில் சிற்பக்கலையிலும் சிறந்து விளங்குகிறது. இத்திருக்கோயிலில் சிற்பக் கலைக்கு மகுடம் வைத்தாற்போல் குழல் தூண்களும், கல் நாதஸ்வரமும், கல் படிமங்களும், இசைத் தூண்களும் உள்ளன. இங்குள்ள தூண்களில் இரண்டு துவாரங்கள் போடப்பட்டுள்ளன. இரு பக்கமும் இருவர் நின்று கொண்டு மாறி மாறி ஊதினால் சங்கின் ஒலியும், எக்காள ஒலியும் ஏற்படுகிறது.
தல இறைவன்: ஆதிநாதன், பொலிந்து நின்ற பிரான் (நின்ற திருக்கோலம்) (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு) தல இறைவி: ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி (தாயார்களுக்கு தனித் தனி சன்னதி)
தல தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம்,
திருச்சங்கண்ணி துறை விமானம்:
கோவிந்த விமானம் கிரகம்:
குரு ஸ்தலம்
தல விருட்சம்: உறங்காப்புளி.
இக்கோவிலை அடுத்து நாம் சென்றது திருச்செந்தூர் முருகன் கோவிலை கட்ட காரணமாக இருந்த ஐவருள் ஒருவரின் ஜீவ சமாதியைத்தேடி
யார் அந்த சித்தர்?காணலாம் வாருங்கள் .
ஸ்ரீ ஞான தேசிக மூர்த்தி சுவாமிகள் ஜீவா சமாதி .
இருப்பிடம் காந்தீஷ்வரம் ஆழ்வார்தோப்பு .
ஐந்தாவதாக உள்ள இந்த சித்தர் விபூதியை பொற்காசுகளாக மாற்றி அர்ப்புதங்களை நிகழ்த்தி திருச்செந்தூர் முருகன் கோவிலின் ராஜகோபுரத்தை கட்டிமுடித்த மகான் .சித்தர்,
அடுத்து நாம் திருசெந்தூரில் சந்திப்போம்
நம்பிமலை யாத்திரையின்போது நாம் தரிசித்த ஆலயங்கள் பகுதி 3 இல்
நன்றி.
ஆழ்வார்திருநகரி (திருக்குருகூர்) ஆதிநாதன் திருக்கோயில் ஒன்றாகும். இத்தலம் நம்மாழ்வார் அவதாரத் தலம் ஆகும். துக்தூத்குடி மாவட்டத்தின் ஆழ்வார் திருநகரியில் அமைந்துள்ளது. இத்தலம் பிரம்மாவுக்கு குருவாகப் பெருமாள் வந்த திருத்தலம் என்பதால் குருகூர் எனப்படுகின்றது. ஆதியிலேயே தோன்றிய நாதன் என்பதால் பெருமாள் ஆதிநாதன் என திருப்பெயர் பெற்றார்.
திருக்கோவில் அமைவிடம் அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயில் மற்றொரு நவதிருப்பதியான ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலியில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
மூலவர் அருள்மிகு ஆதிநாதர் |
கோவிலின் முகப்பு தோற்றம் |
ஆழ்வார் திருநகரி என்னும் இத்திருத்தலத்தில் இலக்குவன் புளிய மரமாகி விட, அவன் வேண்டுகோளுக்கு இணங்கி ராமபிரான் பின்னாளில் தாமே நம்மாழ்வாராக அவதரித்து அப்புளிய மரத்தில் காட்சி அளித்ததாகவும், இலக்குவன் திருப்புளியாழ்வாராக இங்கு காட்சியளித்தமையால், இத்தலம் சேஷ ஷேத்திரம் என விளங்குவதாகவும் கூறுவர்.
சிற்பக்கலை அம்சம் இத்திருக்கோயில் சிற்பக்கலையிலும் சிறந்து விளங்குகிறது. இத்திருக்கோயிலில் சிற்பக் கலைக்கு மகுடம் வைத்தாற்போல் குழல் தூண்களும், கல் நாதஸ்வரமும், கல் படிமங்களும், இசைத் தூண்களும் உள்ளன. இங்குள்ள தூண்களில் இரண்டு துவாரங்கள் போடப்பட்டுள்ளன. இரு பக்கமும் இருவர் நின்று கொண்டு மாறி மாறி ஊதினால் சங்கின் ஒலியும், எக்காள ஒலியும் ஏற்படுகிறது.
தல இறைவன்: ஆதிநாதன், பொலிந்து நின்ற பிரான் (நின்ற திருக்கோலம்) (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு) தல இறைவி: ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி (தாயார்களுக்கு தனித் தனி சன்னதி)
தல தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம்,
திருச்சங்கண்ணி துறை விமானம்:
கோவிந்த விமானம் கிரகம்:
குரு ஸ்தலம்
தல விருட்சம்: உறங்காப்புளி.
இக்கோவிலை அடுத்து நாம் சென்றது திருச்செந்தூர் முருகன் கோவிலை கட்ட காரணமாக இருந்த ஐவருள் ஒருவரின் ஜீவ சமாதியைத்தேடி
யார் அந்த சித்தர்?காணலாம் வாருங்கள் .
ஸ்ரீ ஞான தேசிக மூர்த்தி சுவாமிகள் ஜீவா சமாதி .
இருப்பிடம் காந்தீஷ்வரம் ஆழ்வார்தோப்பு .
ஐந்தாவதாக உள்ள இந்த சித்தர் விபூதியை பொற்காசுகளாக மாற்றி அர்ப்புதங்களை நிகழ்த்தி திருச்செந்தூர் முருகன் கோவிலின் ராஜகோபுரத்தை கட்டிமுடித்த மகான் .சித்தர்,
இதுதான் ஞான ஸ்ரீதேசிய மூர்த்தி சுவாமியின் ஜீவா சமாதி |
இந்த கோவிலின் பின்புறம்தான் சித்தரின் ஜீவ சமாதி உள்ளது காந்தீஸ்வரம் சிவன் ஆலயம் |
காந்தீஸ்வரம் சிவன் ஆலயம் |
சித்தரின் ஜீவா சமாதிக்கு செல்லும் வழி |
திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி திருக்கோவில் திருப்பணி செய்து ஆலயத்தை கட்டிய சித்தர்கள் மொத்தம் ஐந்து சித்தர்கள்
1-மௌன சுவாமி
2-காசி சுவாமி
3-ஆறுமுக சுவாமி
வெளிப்பிரகாரம் கட்டிய சித்தர் ஜீவசமாதி
4-ஞான ஸ்ரீவள்ளி நாயக சுவாமி
திருக்கோவில் ராஜகோபுரம் கட்டிய சித்தர்
5-ஞான ஸ்ரீதேசிய மூர்த்தி சுவாமி .
திருச்செந்தூர் ஆலயத்தை கட்டியவர்கள் இந்த ஐந்து சித்தர்கள் தான்.
தமிழகத்தில் உள்ள கோவில்கள் பெரும்பாலும் மன்னர்கள் கட்டிய நிலையில் பக்தர்களாலேயே கட்டப்பட்ட திருக்கோவில் திருச்செந்தூர் முருகன் கோவிலாகும்.
இந்த ஐந்து சித்தர்களின் ஜீவசமாதிகளையும் ஒரே நாளில் யாரும் வணங்கியவர்கள் உண்டா என தெரியவில்லை. ஆனால் நாம்_வணங்கியுள்ளோம். அது நமது பாக்கியமாக கருதுகிறேன்.
தரிசனம் செய்ய செல்லும் வழி
1-காசி சுவாமி, 2-மௌன சுவாமி ,
3-ஆறுமுகசுவாமி ஆகிய மூவருக்கும் ஜீவசமாதி திருச்செந்தூர் முருகன் ஆலத்தின் நேர் எதிராக கடற்கரையில் சற்று தூரத்தில் மூவர் சமாதி என்ற பெயருடனே உள்ளது. நல்ல அமைதியான இடம். மரம் செடிகளுடனே அமைந்திருக்கும்.
3-ஆறுமுகசுவாமி ஆகிய மூவருக்கும் ஜீவசமாதி திருச்செந்தூர் முருகன் ஆலத்தின் நேர் எதிராக கடற்கரையில் சற்று தூரத்தில் மூவர் சமாதி என்ற பெயருடனே உள்ளது. நல்ல அமைதியான இடம். மரம் செடிகளுடனே அமைந்திருக்கும்.
4-ஞான ஸ்ரீவள்ளி விநாயகசுவாமி ஜீவசமாதி திருச்செந்தூர் கோவிலின் ராஜகோபுரம் அருகே உள்ள சாண்டோ சின்னப்பாத்தேவர் நுழைவு வாயிலில் இருந்து சரவணபொய்கை செல்லும் பாதையின் அருகில் வலதுபுறம் உள்ளது.
மேலே உள்ள நன்கு சித்த்ர்கின் ஜீவ சமாதிகளை நாம் திருச்செந்தூர் சென்று தரிசிப்போம்
5-ஆவதாக உள்ள ஞான ஸ்ரீதேசிய மூர்த்தி சுவாமி ஜீவசமாதி திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி சாலையில் ஸ்ரீவைகுண்டத்திற்கு முன்னதாக ஆழ்வார்திருநகரி எனும் ஊரில் இறங்கி அங்கிருந்து நடந்தோ அல்லது ஆட்டோவிலோ ஆழ்வார்தோப்பு என்னும் ஊருக்கு செல்லவேண்டும்.( நாம் நம் குழுஉடன் வாகனத்தில் சென்றோம் )அந்த ஊரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள காந்தீஸ்வரம் சிவன் ஆலயத்தின் பின்புரம் நடந்து சென்றால் அருகிலேயே இருக்கும்.
முதல் மூன்று சமாதியை அதிக முறை கோவிலுக்கு சென்றவர்கள் பாத்திருக்கலாம். மூன்றும் ஒரே இடத்தில் இருக்கும். 4வது பலருக்கும் தெரியாது . தெரிந்த சிலர் மட்டுமே அதுவும் உள்ளூர்வாசிகளே போவர். 5 ஜீவசாமாதி இருக்கும் இடமே தெரியாது. கோவில் வரலாறு தெரிந்த சிலருக்கு தான் தெரியும். ஆனாலும் யாரும் செல்வதில்லை. நாம் பலரிடம் விசாரித்து சென்றோம். பூட்டி கிடந்தது. வசலில் அமர்ந்து வணங்கி வந்ததோம் மனதிற்கு பெரும் தெளிவை அமைதியும் தந்தது. இயற்கை சூழ்ந்த இடம். முடிந்தால் போய் வாருங்கள் நண்பர்களே.
அடுத்து நாம் திருசெந்தூரில் சந்திப்போம்
நம்பிமலை யாத்திரையின்போது நாம் தரிசித்த ஆலயங்கள் பகுதி 3 இல்
நன்றி.
No comments:
Post a Comment