Subscribe

BREAKING NEWS

11 September 2018

கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் சதுர்த்தி பெருவிழா அழைப்பிதழ்


அனைவருக்கும் வணக்கம்.

 சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாம்பரத்தை அடுத்து வண்டலூர் உயிரியல் பூங்கா கடந்ததும் வரும் ஊர் கூடுவாஞ்சேரி. திருநந்திவரம், திருநந்திகேஸ்வரம் என்றெல்லாம் முன் காலத்தில் அழைக்கப்பட்ட இந்தப் பகுதி, தற்போது நந்திவரம் (கூடுவாஞ்சேரி) என்று வழங்கப்படுகிறது.
இத்தகு பாடல் வைப்புத் தலமான கூடுவாஞ்சேரியில் நந்தீஸ்வரர் கோவில் மட்டுமின்றி, மேலும் பல கோயில்கள் அருள் தந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயில், வேலி அம்மன் ஆலயம், வள்ளலார் கோயில் என கூற முடிகின்றது. ஒவ்வொரு கோயிலும் இங்கே தனிச்சிறப்பு கொண்டு விளங்குகின்றது. கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயம் பற்றி விரிவான தனிப்பதிவை அடுத்து தருகின்றோம்.

கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர்
மூத்தோனை வணங்க வேண்டிய தலமாக இங்கே உள்ளார். உலகெலாம் படைத்த மூத்தோன், உயிரெலாம் வணங்கும் அருளோன், தன்னலமிலா தலைவன், நெற்றிப்பொட்டாய் தகிப்பவன், ஒற்றைக்கால் தேரில் வருபவன், முற்றிய நோயை நீக்குபவன், வெற்றிக்கு துணைவன் ஆனவன், மதிஒளி வழங்கும் ஆசான் ,மனவொளி பரப்பும் சுடரானவன், அதிதியின் அழகுப்புதல்வன், 
அகண்ட தீப செங்கதிரானவன், காரிருள் விலக்கும் கதிரவன்,கர்ணன் போற்றும் தந்தையானவன்,
கருணையே, காந்தமே, சாந்தமே, காலத்தின் சாட்சியாய் நிலைப்பவன்  என ஏக பரம்பொருளாய் கணபதி இங்கே நிலை பெற்று இருக்கின்றார். இந்த திருக்கோயில் முருகன் அருளால் உருவானது என்றால் கொஞ்சம் யோசிக்கின்றீர்கள் தானே? திருப்புகழ் அமிர்தம் ஊட்டிய வாரியார் சுவாமிகளின் கைங்கர்யத்தில் இந்த விநாயகர் கோயில் உருவாகி உள்ளது என்றால் முருகப் பெருமானே தானே இங்கே ஆதாரம். முருகன் அருள் முன்னிற்க இங்கே விநாயகர். விநாயகர் இங்கே சுயம்பு மூர்த்தியாக மாமரத்தில் வாசம் செய்து வருகின்றார்.








இந்த திருத்தல வரலாறு விரைவில் தருகின்றோம். இங்கு விநாயகரோடு, முருகப்பெருமான், சிவன், பார்வதி, லலிதாம்பாள், துர்க்கை, குரு பகவான், பெருமாள், ஐயப்பன், ஆஞ்சநேயர், நவகிரக நாயகர்கள், அகத்தியர், வள்ளலார் என அனைவரையும் ஒருங்கே காணலாம். இங்கு நித்ய பூசை  அனைத்து மூர்த்திகளுக்கும் நடைபெற்று வருகின்றது.








நீங்கள் மேலே காண்பது பிரதோஷ பூசை ஆகும். சிறப்பு பூசைகளும் இங்கே அருளப்பட்டு வருகின்றது. சதுர்த்தி அன்று விநாயகர் வழிபாடு,பிரதோஷ சிவன் வழிபாடு, அஷ்டமி பைரவர் வழிபாடு, மூலம் ஆஞ்சநேயர் வழிபாடு, சஷ்டி,கிருத்திகை முருகன் வழிபாடு, பூசம் வள்ளலார் வழிபாடு, ஆயில்யம் அகத்தியர் வழிபாடு என்று களை கட்டும் திருத்தலம் என்று சொன்னால் அது மிகையில்லை. மேலும் இங்கு அமாவாசை தோறும் நம் TUT குழுவின் மூலம் மோட்ச தீப வழிபாடும் நடைபெற்று வருகின்றது.




விநாயகருக்கென்றே பிரத்தியேகமான திருத்தலத்தில் வருகின்ற வியாழக் கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி பெருவிழா கொண்டாட இருக்கின்றார்கள். அதனை இங்கே பதிவு செய்ய விரும்புகின்றோம். அழைப்பிதழை இங்கே இணைத்துள்ளோம். வாய்ப்புள்ள அடியார் பெருமக்கள் திரளாக கலந்து கொண்டு மூத்தோன் அருள் பெற வேண்டுகின்றோம்.




விநாயகர் சதுர்த்தி பெருவிழாவில் காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. நாம்  சென்று பார்த்த போது, கோயிலுக்கு வெளியே தனி மேடை அமைத்துக் கொண்டு இருந்தார்கள். இன்னிசை நிகழ்ச்சியும் உண்டு. நம் தமிழக ஆளுநர் அன்று கோயிலுக்கு வந்து சிறப்பு சேர்க்க உள்ளார்கள்.





இடர்களை நீக்கும் இடம்புரி கணபதியையும் ,வளங்களை அருளும் வலம்புரி கணபதியையும் ஒரு சேர வணங்கி, வாழ்வில் வளம் பெற அனைவரையும் நம் தளத்தின் சார்பில் அழைக்கின்றோம். மேலும் சென்ற வாரம் நடைபெற்ற மோட்ச தீப வழிபாட்டின்போது, இத்திருக்கோயிலை காணொளியாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுளோம். இதோ தங்களின் பார்வைக்கு.



இணையத்தில் இங்கே பார்க்கலாம். மிக மிக அற்புதமான காணொளித் தொகுப்பை வெளியிட்ட திரு.யாணன் ஐயா அவர்களுக்கும் நம் தளத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

- மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-


TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - http://tut-temple.blogspot.com/2017/08/tut.html

மண(ன)ப் பொருத்தம் - தொடர் பதிவு - http://tut-temple.blogspot.com/2017/08/blog-post_78.html

ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/09/blog-post_7.html

அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (11/08/2018) - http://tut-temple.blogspot.com/2018/08/11082018.html

கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயில்,அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 15/07/2018 - http://tut-temple.blogspot.com/2018/07/15072018.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 17/06/2018 - http://tut-temple.blogspot.com/2018/06/17062018.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு 21/05/2018  - http://tut-temple.blogspot.com/2018/05/21052018.html

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_22.html

அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017- http://tut-temple.blogspot.in/2017/09/2017.html

அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி சதய பூஜை அழைப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_74.html

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!! - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_89.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html

மனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_6.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_16.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே ! - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_76.html

அகத்தியர் ஆயில்ய ஆராதனை (21/05/2018) - http://tut-temple.blogspot.com/2018/05/21052018_19.html

No comments:

Post a Comment