Subscribe

BREAKING NEWS

13 September 2018

TUT & AVM இணைந்து 108 நெய் தீபம் ஏற்றும் விழா


அடியார் பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம்.

சென்ற வாரம் மோட்ச தீப வழிபாடு மிக மிக சிறப்பாக குருமார்களின் அருளால் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் நடைபெற்றது. வழிபாட்டின் ஆரம்பம் முதல் நிறைவு வரை மனது முழுமை பெற்றது. அன்றைய தினம் அன்னம்பாளிப்பு மிக சிறப்பு. அன்னம்பாளிப்பு மலேசியாவை சேர்ந்த அகத்தியர் வனம் குழுவினாரால் வழங்கப்பட்டது. இங்கே அவர்களுக்கு நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, அவர்கள் 4 ஆம் ஆண்டாக 108 நெய் தீபம் ஏற்றும் விழா வருகின்ற சனிக்கிழமை அன்று கொண்டாட இருக்கின்றார்கள். நமக்கும் இந்த வழிபாட்டை செய்யும்படி குருமுகமாக உணர்த்தப்பட்டது. இது முழுக்க முழுக்க அகத்தியரின் நாடி மூலம் நடைபெறும் வழிபாடு ஆகும். இந்த 108 நெய் தீபம் ஏற்றும் வழிபாடு சாதாரண வழிபாடு அன்று; இப்பூவுலகில் வாழும் ஜீவராசிகள் அனைத்தும் சகல வளங்களும், நலங்களும் பெற்று வாழவும்,இப்பூமியில் இயற்கை சீற்றங்கள் குறையவும் இந்த வழிபாடு நடைபெற உள்ளது. வழிபாட்டிற்கென அகத்திய பெருமான் உரைத்த செய்திகளை நாம் பொது வெளியில் பகிர இயலாது, நேரில் வந்து கண்டு தெளியுங்கள்.

சும்மா ..108 நெய் விளக்கு தானே என்று நினைத்து ஆரம்பித்தோம். ஆனால் தற்போது நின்று பார்க்கும் போது, இந்த வழிபாடு கிடைத்தற்கரிய பேறு; அதுவும் சித்தர்களின் நெறியில் நின்று இந்த வழிபாட்டை செய்ய இருக்கின்றோம் என்பது கூடுதல் சிறப்பு. நாமும் வழக்கமாக சொல்வது தான். எந்த கோயிலுக்கு சென்றாலும் தீப வழிபாட்டை சிரமேற்கொண்டு செய்யுங்கள் என்று.. நீண்ட நாட்களுக்கு பின்னர் பஞ்செட்டி சதய பூசைக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. அன்றைய தினம் தீபமேற்றி வழிபாடு செய்தோம். அன்று கோயிலுக்குள் சென்று பார்க்கும் போது மிக மிக அழகாக தீபம் ஏற்றி இருந்தார்கள். யார் என்று விசாரித்த போது , நம் தள உறவான சிவசங்கர் என்று தெரிந்தது.


அடுத்து நாம் அன்றைய சதய பூஜையில் விளக்கேற்றிய தருணம் இதோ.






மிக அதிக நாட்கள் கழித்து சித்தனருள் வலைப்பக்கம் சென்று பார்க்கும் போது, மீண்டும் இதே  தீப வழிபாடு பற்றி கூறி இருக்கின்றார்கள். அட..இது தான் குருவின் அருள் என்பது. இதோ. 108 நெய் தீப வழிபாடு சித்தர்களின் அருளால் நிகழ்த்தப் பட உளள்து. சித்தனருள் செய்தியை அப்படியே தருகின்றோம்.

 சமீபத்தில், ஒரு இடத்தில், நாடியில் வந்து, நம் குருநாதர் அகத்தியப் பெருமான் இவ்வாறு உரைத்தார்.
"இந்த லோகமானது மிக மிக சிரமமான நேரத்துக்குள் மாட்டிக்கொண்டுள்ளது. பூமியும் அதில் ஒன்று. இறைவன் அருளால், அனைவரின் பிரார்த்தனையும் அதனுடன் சேர்ந்தால், மிகப் பெரிய சோதனைகளிலிருந்து தப்பிக்கலாம். ஆகவே, என் சேய்களிடம், எந்நேரமும் பிரார்த்திக்கச்சொல். இறைவன் சன்னதியில் விளக்கேற்றி, இந்த லோகமும், எல்லா ஜீவராசிகளும் க்ஷேமமாக காப்பாற்றப்பட்டு, கரை ஏற்றி விடவேண்டும் என வேண்டிக் கொள்ள சொல்" என்றார்.

அகத்தியர் அடியவர்களே! இதற்கு முன் ஒருமுறை எல்லோரும் வேண்டிக்கொண்டு விளக்கு போட்டது நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன். நிச்சயமாக அதற்கு பலன் இருந்ததால்தான், இம்முறையும், நம்மை அகத்தியர் அழைத்து செய்யச் சொல்கிறார் எனவும் நினைக்கிறேன். வாருங்கள்! அவரவர், வீட்டருகில் உள்ள கோவிலில், லோக ஷேமத்துக்காக ஏதேனும் ஒரு நாளில், மாலை நேரத்தில் விளக்கேற்றுவோம், வேண்டிக் கொள்வோம். இயற்கை சீற்றங்கள் மிக மிக வேகம் கொள்கிற இந்த காலத்தில், சித்தர்கள் துணையுடன், இறை அருளை பெற்று, இந்த லோகம், இப்படிப்பட்ட, சோதனை காலத்திலிருந்து விடுபட வேண்டும், என எல்லோரும் பிரார்த்திப்போம்.

நாம் நம் தளத்தில் செய்கின்ற ஒவ்வொரு சேவையும், வழிபாடும் சித்தர்களின் ஆசையினால் தான் நடைபெற்று வருகின்றது என்பது கண்கூடு. ஆயில்ய பூசை, மோட்ச தீபம், அம்மாவாசை அன்னம்பாளிப்பு, உழவாரப்பணி  என ஒவ்வொன்றும்  அவர்களின் அருளாசியினால் தான் நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.






TUT & AVM - 108 நெய் தீபம் ஏற்றும் விழா

 இப்பூவுலகில் வாழும் ஜீவராசிகள் அனைத்தும் சகல வளங்களும், நலங்களும் பெற்று வாழவும்,இப்பூமியில் இயற்கை சீற்றங்கள் குறையவும் 108 நெய்தீபம் ஏற்றி சித்தர்களையும், முருகப் பெருமானையும், வருகின்ற 15/09/2018 அன்று ஷஷ்டி திதியில்,காலை 8 மணி முதல் பெருங்களத்தூரில் உள்ள சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் வழிபாடு செய்ய உள்ளோம்.அனைவரும் வந்து இந்த வழிபாட்டில் ஈடுபட்டு சகல வளங்களும் பெற வேண்டி அன்புடன் வேண்டுகின்றோம்.

தொடர்புக்கு : 7904612352/9677267266
tut-temple.blogspot.in
https://www.facebook.com/thedalullathenikalaai/

இந்த வழிபாடு ஆண்டுக்கொரு முறை மட்டுமே நடைபெறும். மோட்ச தீப வழிபாடு காணொளி இங்கே இணைத்துள்ளோம் 



இணையத்தில் காண- https://www.youtube.com/watch?v=tBlFQZV1M9Y&t=75s


- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் 

மீள்பதிவாக:-

ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/09/blog-post_7.html

தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு (10/08/2018) - http://tut-temple.blogspot.com/2018/08/10082018.html

முன்னோர்களின் ஆசி பெற மோட்ச தீப வழிபாடு - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_15.html

வளங்களை அள்ளித் தரும் மோட்ச தீப வழிபாடு - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_29.html

21 தலைமுறை முன்னோர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றுவோம் - http://tut-temple.blogspot.in/2018/04/21.html


No comments:

Post a Comment