Subscribe

BREAKING NEWS

21 September 2018

அடிக்கொரு லிங்கம் அருணாச்சலம், பிடிக்கொரு லிங்கம் பருவத மலை


இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால்

பார் போற்றும் பருவத மலையின் சிறப்பை உணர்த்தவே இங்கு பேசுகின்றோம். பதிவின் ஆரம்பம் சற்று வித்தியாசமாக உள்ளது என யோசிக்கின்றீர்களா? நமது குருநாதர் அருள்வாக்கு வழங்கும் போது இப்படித் தான் கூறுவார். அகத்தியரின் அருள்வாக்கு தொகுப்புகளை நேற்று முழுதும் படித்தோம். ஒவ்வொன்றும் அற்புதம். அனைத்து செய்திகளிலும் தானம் செய்க, தருமம் செய்க, பூசை செய்க. தல யாத்திரை செய்க என்று கூறிக் கொண்டே வருகின்றார் என்று பார்த்தால், ஆழமாக செல்ல செல்ல தியானம், தவம் செய்ய நம்மை நேராக பழக்காமல், தானம், பூசை, தல யாத்திரை செய்வதன் மூலம் நம் கர்ம வினை பயனை குறைத்து நம்மை தியான, தவ நிலைக்கு இட்டு செல்கின்றார்.  என்ன அன்பர்களே... மீண்டும் மீண்டும் சொல்கின்றோம்.தல யாத்திரை செல்லும் போது ஏதோ சுற்றுலா செல்வது போல செல்ல வேண்டாம். தமக்கு ஒத்த மாந்தர்களை இணைத்து, செல்லும் கோயில்களில் பூசை செய்து, குறைந்தது ஒருவருக்காவது  அன்னசேவை செய்து, தீபம் ஏற்றி வழிபட்டு வரவும். எத்தனை கோயில்களுக்கு, மலைகளுக்கு செல்கின்றோம் என்ற எண்ணிக்கை முக்கியமில்லை; அங்கிருந்து இறையருள் பெற்று வருகின்றோமா? என்பதே முக்கியம். சரி..பிடிக்கொரு லிங்கம் பருவத மலை  சிறப்புகளை இங்கு காண்போம். அடுத்த பதிவில் மலை ஏற்றம் செல்வோம்.



1. ஈஸ்வரன் இமயத்திலிருந்து தென்பகுதி தமிழகத்திற்கு வந்த போது முதன் முதலாக காலடி வைத்த மலை

2. ஆஞ்சநேயர் இமயத்திலிருந்து சஞ்சீவி மலையை தென் பகுதிக்கு தூக்கி வந்த போது விழுந்த ஒரு துளி தான் இந்த மலை

3. ஏழு சடைப்பிரிவுகளை கொண்ட மலை

4. மூலிகை காற்று எப்போதும் வீசி தீராத நோய் தீர்க்கும் மலை

5. 4500 அடி உயரமுள்ள செங்குத்தான  கடப்பாறைப் படி,தண்டவாள படி ,ஏணிப் படி கொண்ட உலகில் உள்ள அதிசய மலை

6. சித்தர்கள் வாழும் மலை. பல அடியார் பெருமக்களுக்கு சித்தர்கள் காட்சி கொடுத்துள்ளார்கள்.மலையில் உள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள்.

7.  இரவிலே ஜோதி தரிசனம் காணும் மலை. சிவன் கருவறையிலிருந்து கோயிலை சுற்றி, மலர்களின் வாசனையை நுகரலாம்.

8. அம்மன் அழகு...வேறெங்கும் காண முடியாத பேரழகு. இரவில் அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளி காணலாம்.

9. அம்மன் கருவறையிலிருந்து வெளியே செல்ல ,செல்ல தூரம் அதிகரிக்க,அதிகரிக்க, அம்மன் உயரமாக காட்சி தந்து நேரில் வருவது போல் இருக்கும். இந்த அருள் நிலை காண கண் கோடி வேண்டும் )

10. சிவபெருமான் எதிரே கற்பூரம் ஏற்றி வெளியே நின்று கற்பூர ஜோதியை நோக்கினால் நாகம்,சூலம், உடுக்கை பிம்பம் காணலாம்.

11. மலை உச்சியில் ராட்ச சூலம் உள்ளது.

12. தலைக்கு மேல் மேகம் தவழ்ந்து போவதை காணலாம்.

13. எந்த குறை ( செய்வினை, திருமணத் தடை, தொழில் மந்தம் ) இருப்பினும், 5 அல்லது 7 அல்லது 9 முறை இந்த மலைக்கு வந்து நெய் தீபம் போட்டு வணங்கினால் குறை தீரும்.

14. கி.பி. 3 ஆம் நூற்றாண்டில் மாமன்னர் நன்னன் எனும் அரசன் இங்கு வந்து வணங்கியதாக மலைபடுகடாம் நூலில் குறிப்பு உள்ளது.

15. வடநாட்டில் அவரவர் கையினால் இறைவனுக்கு அபிஷேகம் செய்வது போல், இங்கும் அடியார்கள் தங்கள் கைகளால் இறைவனுக்கு அபிஷேகம் செய்யலாம் என்பது பெரிய பாக்கியம். தமிழ் நாட்டில் இங்கு மட்டுமே இப்படி ஒரு அதிசயம் உள்ளது.


16. கன்னியாகுமரி போன்று இங்கும் சூரிய உதயம், அஸ்தமனம் காணலாம்.

17.  அமாவாசையில் பக்தர்களுக்கு அடிவாரம் முதல் உச்சி வரை, இரவில் இறைவனுடைய ஒளி வழி காண்பிப்பது தமிழத்தில் இங்கு மட்டும் தான். யாருடைய உதவியும் இன்றி, இரவிலும் அரோகரா, ஓம் நமசிவாய, ஓம் சக்தி, சிவசக்தி, பருவதகிரி பராசக்தி என கோஷம் போட்டு வரவும், கஷ்டமின்றி வரலாம்.

18. இதுவரை இங்கே வந்தவர்களில் தவறி கீழே விழுந்தவர்கள் என ஒருவர் கூட கிடையாது.

19. சித்தர்கள் கழுகாக திருக்கழுக்குன்றம் வலம் வருவது போல், இங்கும் 3 கழுகுகள் (பாப்பாத்தி) மலையை சுற்றிய வண்ணம் இருக்கின்றார்கள்.

20. மலை உச்சியில் நடு ஜாமத்தில் தாரை, தப்பட்டை,மேளம்,சங்கு  ஓசை கீழே மலையை சுற்றி உள்ள கிராமங்களில் கேட்கலாம்.

21. 5000க்கு மேற்பட்ட பக்தர்கள் தமிழகத்தின் பல இடங்களில் இருந்தும் இங்கே வருகிறாரகள்.

22. இங்கு 24 மணி நேரமும் பூசை உண்டு.

23. பால் பூசை இங்கு மிகவும் உயர்ந்தது. உயிர் பலி இங்கு கிடையாது.

24.  சித்ரா பௌர்ணமி , ஆடி 18, ஆடிப்பூரம், புரட்டாசி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி 1, மாசி சிவராத்திரி, பங்குனி உத்திரம் முதலிய நாட்களில் விழாக்கள் உண்டு.

25. குழந்தை இல்லாதவர்கள் மலையை கிரிவலம் வர, 80 % குழந்தை பாக்கியம் பெற்றுள்ளனர்.

26. மனித உடலில் ஆறு ஆதாரங்களை கடந்து குண்டலினி சக்தி உச்சியில் உள்ள சதாசிவத்துடன் சேர்கின்றது. அது போல் நாமும் கடலாடி மெத்தக மலை, குமரி நெட்டு மலை, கடப்பாறை மலை, கணகச்சி ஓடை மலை போன்ற மலைகளை கடந்து சிவ சக்தியோடு சேர்கின்றோம்.

27. 48 பௌர்ணமி,அமாவாசை எவர் தொடர்ந்து வந்து இங்கு தரிசனம் பெறுகிறார்களோ, அவர்கள் ஆன்மிகத்தின் ஆழம் உணர்வது உறுதி.

28. இதோ ஒரு நொடியில் பார்த்துவிட்டு வருகின்றேன் என்று சவால் விட்டு செல்லும் ஆஜானுபாகுவான தோற்றமும், முறுக்கு மீசையும் கொண்டவர்கள் கடப்பாறை நெட்டுமலையை கீழ் இருந்து மேல் நோக்கியதும் வெட்கி,மிரண்டு, அங்கேயே கற்பூரம் ஏற்றி அப்படியே திரும்பியவர்கள் பலர். ஆனால் ஐந்து வயது குழந்தை பயமின்றி மேலே வந்து சேரும்.

29. சஞ்சீவி பருவதமலைக்கு குடும்பத்துடன் வந்து இரவு தங்கி தரிசனம் செய்பவர்கள் பல மகிமைகள் உணரலாம்.

30. மலைக்கு வருபவர்கள் வெள்ளை, மஞ்சள், காவி உடை அணிந்து வருவது சிறப்பு.

31. தரிசனம் பெற வருபவர்கள் உணவு,தண்ணீர்,போர்வை, பேட்டரி, தீபம் போட விளக்கெண்ணெய், பூசை பொருட்களை கொண்டுவருவது மிக மிக முக்கியம்.

32. ஒரு முறை மலைக்கு வந்தவர்கள் சென்று வந்த உடன் 2 நாட்கள் கால்கள் வீங்கி இருப்பார்கள்.கால்கள் வலிக்கும். ஒரு மாதம் ஆனவுடன் மீண்டும் எப்போது செல்வோம் என்று காந்தம் போல் ஈர்க்கும் மலை.

33.  அடிக்கொரு லிங்கம் அருணாச்சலம், பிடிக்கொரு லிங்கம் பருவத மலை

34. யோகம் செய்த தவசிகள் 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்பே இம்மலையில் ஆலயம் அமைத்து இந்த மலையை யோகமலை யாக ஆக்கி உள்ளார்கள்.

35. குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர்  பருவதமலையில் தங்கி கருநொச்சி உண்டு வாலிப பருவம் எய்தி உள்ளார்கள்.

36. பருவத மலையில் தீபம் ஏற்றி, அபிஷேகம் செய்து ஒரு நாள் வழிபாடு செய்தால் , பூமியில் 365 நாட்கள் பூசை செய்த பலன் கிடைக்கும்.

37. திருஅண்ணாமலையை சுற்றி சுமார் 30 சதுர மைலுக்குள் எவருக்கும் குரு தேவை இல்லை. நானே அவர்களுக்கு குருவாக இருந்து வழி நடத்தி செல்வேன் என்று பகவான் ரமணர் கூறியுள்ளார். எனவே ஆன்மிக பற்று உள்ளவர்கள் இங்கு மாதந்தோறும் வந்து யோகம் செய்தால் சித்தி பெறுவது உறுதி.

38. சகல நோய் தீர்க்கும் பாதாள சுனை தீர்த்தம் உண்டு.

39. சுனையில் கீழே சூட்சும தேகத்தால் செல்லக்கூடிய வழி உள்ளது. சித்தர்கள் தாங்கும் தாமரை தடாகம், வாழைத் தோட்டம், காராம் பசு உள்ளது என  அங்குள்ள கிராமத்து பெரியோர்கள் கூறுகின்றனர்.

40. சித்தர்கள் தேனீக்கள் வடிவிலும் இங்கு வருகின்றனர். ஒரு முறை பாதாள சுனை அருகே ஒரே ஊரை சார்ந்த 5 பேரை காட்டியுள்ளனர். ஆனால் அங்கிருந்த மற்றவர்களை எதுவும் செய்யவில்லை. நல்ல எண்ணம் உடையவர்களே இங்கு வந்து தரிசிக்க முடியும்.

41. தியானம் செய்வதற்கு உகந்த மலை

42. பூண்டி மகான் பாதி மலை ஏறும் போதே ஒன்பது சித்தர்கள் தரிசனம் கண்ட கீழே இறங்கிவிட்டார்.

43. காஞ்சி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சாரியார் மலை நோக்கியதும் சிவலிங்கம் தொடர் வடிவாக காட்சி தரவே காலால் மிதிப்பது கூடாது என கிரிவலம் செய்து வணங்கி சென்றார்.

44. ஆலயத்தில் கதவு, பூசிக்க குருக்கள் இல்லாத மலை

45. மாதந்தோறும் அடிவாரம் மகான் மௌன யோகி குடிலிலிருந்து பௌர்ணமி இரவு 7 மணிக்கு புதுவை சாது கணேசநம்பி, காஞ்சி ஜோதி டைலர் குழுவினர் இந்த மலையை கிரிவலம் செய்து வருகின்றனர். பயண தூரம் 26 கி. மீ. குழந்தை இல்லாதவர்களுக்கு கிரிவலம் கண்கண்ட மருந்து.

46. கயிலை சென்று வந்தவர்கள், 18 முறை சபரிமலை சென்று வந்தவர்கள் கூறும் உண்மை - பருவத மலைக்கு நிக்க பருவத மலை தான் 

47.  வாழ்வில் ஒரு முறையேனும்  இங்கு வந்து செல்வது பூர்வ ஜென்ம புண்ணயம்.

48. சாது தரிசனம், பாவ விமோசனம்.

49. வழித்துணை அடிவாரம் முதல் கடப்பாரை படி வரை பைரவர் நமக்கு துணைக்கு வருவார்.

50. மலை உச்சியில் மௌன யோகி சித்தர் குகையில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் அருள்பாலிக்கின்றார்.

51. மலை அடிவாரம்  ஆசிரமத்தில் மௌன யோகி விட்டோபானந்தர் குருஜி
தவமிருந்து வருகின்றார். இங்கு எப்போதும் அன்னதானமும் உண்டு.


நாமும் தற்போது நம் குழுவின் சில அன்பர்களோடு மலை தரிசனம் செய்து வந்தோம். நம்முடைய முதல் மலை யாத்திரை இங்கு தான் நடந்தது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நம் மகளிர் குழுவுடன் முதல் யாத்திரை செய்தோம். அடுத்து சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் சுமார் 8 பேரோடு பருவத மலை யாத்திரை முழுமை செய்தோம். அந்த அனுபவத்தை இனிவரும் பதிவுகளில் தருகின்றோம். கீழே யாத்திரை காட்சிப் படங்களை இணையத்தில் இருந்து எடுத்து இணைத்துள்ளோம்.








மலை உச்சி அடைந்து அந்த இறைவனின் அனுபவம் பெரும் போது, கால் கடுக்க நடந்து, மலை ஏறிய வலி காணாமல் போகும்.

- அடுத்த பதிவில் மலை ஏற்றம் தொடர்வோம்.

மீள்பதிவாக:-

வெள்ளியங்கிரி ஈசன் தந்த தெம்பே போதும் - http://tut-temple.blogspot.com/2018/07/blog-post_28.html

 வெள்ளியங்கிரி ஈசனே போற்றி ! - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_58.html

வெள்ளியங்கிரி ஆண்டவரே துணை - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_81.html

ஈர்த்தெம்மை ஆட்கொண்ட எந்தை பெருமாளே! - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_11.html

வெள்ளியங்கிரி யாத்திரை -2018 - http://tut-temple.blogspot.in/2018/04/2018.html


அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே... - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_47.html

தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - http://tut-temple.blogspot.com/2018/06/1.html

வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post.html

இப்பிறப்பில் உன்னைக் காண்கின்றோம் - வெள்ளியங்கிரி ஈசா ! - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_51.html

வெள்ளியங்கிரி ஈசன் தரிசனம் கிடைக்குமா? - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_3.html

வெள்ளியங்கிரி ஈசனே! நீயே துணை - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_28.html

இன்பத்தை அள்ளித்தரும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_15.html

பாவம் தீர்க்கும் வெள்ளியங்கிரி - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_19.html

மனதை வெளுக்கும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_13.html

இம்மாத மலை தரிசனம் - ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_15.html

குழந்தை வரம் அருளும் ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை - தொடர்ச்சி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_19.html

No comments:

Post a Comment