Subscribe

BREAKING NEWS

02 September 2018

பனப்பாக்கம் ஸ்ரீ அகத்திய முனிவ தம்பதிக்கு உருத்திராக்க மண்டபம் அமைக்கும் விழா

அனைவருக்கும் வணக்கம். 

விலாச காஞ்சி
திருத்தலபுரி
பனசையம்பதி
மயூரபுரி
புலியூர்
இந்திரபுரி
பிரம்மபுரி
கய்யாணமாவூர்
பாலாற்றின்வடகரை
பனப்பாக்கம்

என்ற பத்து விதமான பெயர்களில் அழைக்கப்பட்டு வருகின்ற ஊரான பனப்பாக்கத்தில் ஸ்ரீ மாயூரநாதர் ஆலயத்தில உள்ள ஸ்ரீ அகத்திய முனிவ தம்பதிக்கு வருகிற ஆவணி மாதம் 29 தேதி செப்டம்பர் 14/9/18 அன்று ருத்ராட்ச மண்டபம் அமைக்க பட உள்ளது. நாம் ஏற்கனவே பனப்பாக்கம் கோயில் பற்றி சிறிது தொட்டுக்காட்டி உள்ளோம்.மீண்டும் ஒருமுறை இங்கே அறியத் தருகின்றோம்.

 இத்தலத்தின் தல வரலாறு பற்றி கேள்விப்பட்டோம். இப்படியெல்லாம் நடைபெற காரணம் என்ன? கைலாயத்தின் முக்கியத்துவம் இங்கே உணர முடிகின்றது. தலைவரின் சொல்லே தரணி ஆளும் மந்திரம் என்றும் உணர்ந்தோம்.இதோ தல வரலாறு.
தலவரலாறு
ஒரு சமயம் சிவன் கயிலாயத்தில் உள்ள உத்தியான வனத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் தியானத்தில் இருக்கும் போது உமாதேவியும் நந்திதேவரும் அவ்விடத்தை விட்டு அவ்வனத்தின் பேரழகை கண்டனர். உமாதேவி அங்கு மயில் தோகை விரித்து ஆடுவதையும், நந்திதேவர்  அங்கு புலியின் விளையாட்டையும் கண்டு ரசித்துக்கொண்டிருந்தனர். சிவபெருமான் தியானத்திலிருந்து நீங்கி அங்கு உமாதேவியும் நந்திதேவரும் காணாததால் கயிலாயம் சென்றார். உமாதேவியும் நந்திதேவரும் திரும்பி வந்து பார்க்க சிவபெருமான் அங்கு இல்லாமையால் அவர்களும் கயிலாயம் சென்றனர். அங்கு சிவபெருமான் நீங்கள் இருவரும் என்னை மறந்து மயில் ஆட்டத்தையும், புலி விளையாட்டையும் பார்த்துக்கொண்டிருந்ததால் புவியில் மயிலாகவும், புலியாகவும் மாறுக என சபித்தார். இவ்விருவரும் சாபம் நீங்க வழியாதென வினவ பூவுலகில் தொண்டைநாட்டில் முக மண்டலம் போன்ற காஞ்சிக்கு ஒரு காத தொலைவில் பனசையம்பதியில் நம் திருவுருவமாக உள்ள சோதிவடிவாக உள்ள பெருமானை பூசிக்க இச்சாபம் விலகும் என்றார். இவ்விருவரும் இத்தலத்திற்கு வந்து பூசை செய்து வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றனர்.
மாயூரநாதர்
அன்று முதல் மயில் பூசித்ததால் அச்சோதிலிங்கப் பெருமானுக்கு மயூரநாதன் (மயூரம்-மயில்) என்றும் தல விருட்சம் பனை ஆதலால் பனசையம் பதி என்றும், பஞ்சதால மரங்கள் தோன்றியதால் தாலமா நகர் என்றும் பெயர் பெற்றது.
இனி யாரெல்லாம் இங்கே வந்து வழிபட்டார்கள் என்று சுருக்கமாக காண்போம்.

உமாதேவி
மயிலாக சாபம் பெற்ற உமாதேவி பல வனாந்திரங்களைக்கடந்து சிவகங்கையில் நீர் அருந்த பூர்வ ஞானம் தோன்றி சோதிலிங்க பெருமானை அடைந்து பூசித்தார் . பூசனைக்கு மகிழ்ந்த சிவபெருமான் காட்சியளித்து வேண்டும் வரம் யாதென வினவ, ஐயனே என் சாபம் நீங்கப்பெற்றதை போன்று உம்மை பூசிக்கும் அடியார்களின் ஆணவபிணி நீங்கவும் இத்தலம் காஞ்சிக்கு அணித்தாக உள்ளதால் விசால காஞ்சி எனவும் பெயர்பெறவும் அருள் செய்தல் வேண்டும் என்றார். இறைவன் அவ்வாறே வரம் அளித்தார். உமையின் மயிலுருவத்தை அருளுடன் நோக்க அதிலிருந்து பாக்கு, பனை, தெங்கு, தாளிப்பனை, ஈந்து (ஈச்சை) ஆகிய ஐவகை மரங்களும் தோன்றின. உனது வடிவம் மிக்க வனப்புடன் இருப்பதால் உலகத்தார் சவுந்தரநாயகி என உன்னை அழைப்பார்கள். நீ என் இடப்பாகம் வந்து அமருவாய் என்று கூறி மறைந்தார்.
நந்திதேவர்
நந்தி தேவர் புலியுருவம் தாங்கி பனசைநகர் வந்து சேர தனது துர்குணங்கள்  நீங்கி சற்குணத்துடன் சோதிலிங்கப் பெருமானைப் பூசிக்க சிவபெருமான் சவுந்தரநாயகியுடன் காட்சி தந்து தன்னை விட்டு நீங்கா வரமும் தந்தார். நந்தி தேவர் புலி உரு கொண்டு இறைவனை பூசித்ததால் திருப்புலியீசன் என்றும் இத்தலம் சிவபுரத்திற்கு ஒப்பானதால் சிவபுரம் என்றும் வழங்கப்படுகிறது.
இந்திரன்
இராமபிரானால் சாபம் பெற்ற தன் மகன் சயந்தனின் சாபம் தீர மாயூரநாதரை வேண்டி சாப விமோசனம் பெற்று தென்மேற்கு திசையில் ஒரு சிவலிங்கம் அமைத்து பூசை செய்ய எம்பெருமான் சூரிய ஒளி போன்று காட்சி தந்ததால் அருணாசலேஸ்வரன் என்று பெயர் பெயரிட்டு வணங்கி தன் இந்திர உலகம் சென்றான்.
பிரம்மன்
கங்கா தேவியால் சிறகுகள் ஒடிக்கப்பட்ட அன்னப்பறவைக்கு மீண்டும் அதே பொலிவு பெற வேண்டி பிரம்மன் அன்னத்துடன் இத்திருத்தலம் வந்து மாயூரநாதரை வணங்கி புதுப்பொலிவு பெற்று திருக்கோயிலுக்கு தெற்கே அரைகடிகை தூரத்தில் ஒரு லிங்கத்தை அமைத்து பூசை செய்து அருள் பெற்றார். பெருமானுக்கு விரிஞ்சகேசன் என்று பெயரிட்டு தன் உலகம் சென்றார்.
திருமால்
திருமாலின் வாகனமான கருடனுக்கு வெப்பு நோய் ஏற்பட்டது. கருடன் திருமாலுடன் இங்கு வந்து மாயூரநாதரை வணங்க அந்நோய் தீரப்பெற்றது. எம்பெருமான் திருமாலை நோக்கி இன்று முதல் நீவீர் இலக்குமிநாராயணராக மேற்குதிசையில் அமர்வாய் என்றார். 
தக்கன்
தக்கனது யாகத்தை அழித்து அவனது தலையை கொய்த வீரபத்திரக்கடவுள் மீண்டும் அவனை ஆட்டுத்தலையுடன் உயிர்ப்பிக்க  சாப நிவர்த்தியாக இத்தலம் வந்து மாயூரநாதரை வணங்க சாப நிவர்த்தி பெற்று கீழ் திசையில் (ரெட்டிவலம்) தான்தோன்றி ஈசனையும் பெரியநாயகி அம்மனையும் ஸ்தாபித்து பூசை செய்து தன் உலகம் சென்றான்.
இராகவன்(இராமன்)
நாட்டிலுள்ளோர் பழிக்க, சீதையை காட்டில் விட்ட பாவம் தீர இராமன், வசிஷ்ட முனிவரின் அறிவுறுத்தலின் பேரில் தாலமா நகர் வந்து மாயூரநாதரை வணங்கி சாப நிவர்த்தி பெற்றார்.
மன்மதன்
சிவபெருமானின் மீது அம்பு தொடுத்த பாவம் தீர மன்மதன், மாயூரநாதரை வணங்கி கிழக்கே ஒரு லிங்க உருவத்தை அமைத்து வழிபட இறைவன் காட்சி தந்து சாப நிவர்த்தி அருளினார். மன்மதன், இறைவனுக்கு மதணேசன் என்றும் அம்பிகைக்கு திரிபுர சுந்தரி என்றும் அவ்வூருக்கு நல்ல நகர் என்றும் பெயரிட்டு வழிபட்டு இரதி தேவியுடன் தன் உலகம் அடைந்தனர்.
இயமன்
இயமன், சிவலிங்கத்தின் மீதும், மார்கண்டேயன் மீதும் பாசக் கயிற்றை வீசிய பாவம் தீர தாலமா நகர் வந்து மன்மதன் வழிபட்ட நல்லீசப் பெருமானை வணங்கி பின்பு மாயூரப்பெருமானையும், திருக்காளத்தி நாதரையும் வணங்கி பாவ நிவர்த்தி பெற்று தன் உலகம் சென்றனன்.
வீரபத்திரர்

தாலமா நகரின் மன்னன் வச்சிராங்கதனும் மக்களும் சைவத்தை மறந்து சமணத்திற்கு மாறுகின்ற சேதியறிந்த எம்பெருமான் வீரபத்திரரையும் பத்திரகாளியையும் அனுப்பி மன்னனையும் மக்களையும் சைவத்திற்கு திருப்பி அனைத்து ஆலயங்களையும் புதுப்பித்தனர். மன்னன் வச்சிராங்கதன் வீரபத்திரருக்கு கோயில் ஒன்று எழுப்பி வழிபட்டு மகிழ்ந்தான்.
அகத்தியர்
திருத்தணிகை வேலனிடம் தாலமாநகரின் வரலாற்றைக் கேட்ட அகத்தியர் தன் மனைவி லோபமுத்திரையுடன் தாலமா நகர் வந்து மாயூரநாதரை வணங்கி வட திசையில் (நெடும்புலி) லிங்க மூர்த்தியையும் அகிலாண்ட நாயகியையும் ஸ்தாபித்து பொதிகை மலைக்கு சென்றனர்.
வேதியர்
மகப்பேறு வேண்டி சிவராத்திரை பூசைக்கு காளத்தி யாத்திரை சென்ற இராமேஸ்வரத்து தம்பதியர் கர்ப்பவாதியான  மனைவியுடன் மயூரநாதரை வணங்கி தங்கியிருக்கும் போது அன்று இரவு ஆண் மகவு பெற்றதனால் காளத்திநாதனை இங்கேயே அமைத்து பூசித்து இராமேசுவரம் சென்றனர்.
மீண்டும் ஒருமுறை கோயிலின் தகவல்கள் சுருக்கமாக இக்கோயில் 5 நிலை ராஜகோபுரம், பிரகாரங்களுடன் மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார். அம்மன் சௌந்தர்ய நாயகி. தலமரம் பனைமரம், ஆதலால் இவ்வூருக்கு பனப்பாக்கம் என்றும் உமையம்மை மயில் வடிவில் வழிபாடு செய்ததால் இறைவனுக்கு மயூரநாதர் என்றும் பெயர். இத்தலத்திற்கு திருத்தாலபுரி, மயூரபுரி, புலியூர், இந்திரபுரி, பிரமபுரி, கலியாணமாவூர் முதலிய பெயர்கள் இத்தலப்புராணமாகிய பனசைப் புராணத்தில் குறிக்கப்படுகிறது. நந்திதேவர், பிரமன், இந்திரன், அகத்தியர், முதலியோர் பூஜை செய்து பேறு பெற்றத் தலம். கல்வெட்டுக்கள் 2 உள்ளன. இறைவர் பெயர் புலியப்பர் என்றே குறிக்கிறது. நாள்தோறும் மூன்று கால பூஜை சித்திரை மாதத்தில் மகநட்சத்திரத்தில் பிரமோற்சவம் நடைபெறுகிறது.
இத்தகு பெருமைமிக்க கோயிலில் வருகின்ற 14/9/2018 அன்று அருள்மிகு ஸ்ரீ லோபாமுத்ரா சமேத அருள்மிகு ஸ்ரீ அகத்திய பெருமானுக்கு உருத்திராக்க மண்டபம் அமைக்கும்விழா நடைபெறுகின்றது. இந்த விழாவில் அடியார்கள் கலந்தது கொண்டு சித்தர்களின் அருளைப் பெறும்படி வேண்டுகின்றோம்.



அகஸ்தீஸ்வரர் கவசம் கூறி இங்கே பேரின்பம் பெறுவோம்.

அம்மையப்பன் தன்னருளால் 

ஆனந்த உவகையால்

'அம்உம்மம்' என்னும்

ௐங்கார ஓசையினால்

உதிந்தெழுந்த ௐளியுருவே

உலகெல்லாம்  உணர்ந்தேத்தும் ௐங்காரப் புதல்வனே! அகஸ்தீசா! அகஸ்தீசா! 

அம்மை உலோபாமுத்திரை உடனாய

சத்குருவே! அகஸ்தீசா சரணம் காத்தருள்! காத்தருள்!..மகாகுருவே

சரணம், சரணம், சரணம்.

பிறவிப் பெருங்கடல்

நீந்தா வினையினால்

பலகோடி ஆண்டுகளாய்

பரிதவிக்கும் ஆத்மா,

அரவணைக்க ஆளின்றி

அழுகின்ற துயரத்தை

நீக்கியருள் குருநாதா!

அகஸ்தீசா! அகஸ்தீசா!

அம்மை உலோபாமுத்திரை உடனாய சத்குருவே! 

அகஸ்தீசா சரணம்

காத்தருள்! காத்தருள்!..மகாகுருவே

சரணம், சரணம், சரணம்.

ௐருயிராய்த் தொடங்கி

ஆறுயிராய் நிலைத்து

பிறப்பிலும் இறப்பிலும்

அல்லலுறும் ஆத்மா,

அழுவதற்கும் இயலாமல்

அரற்றுகின்ற துயரத்தை

நீக்கியருள் குருநாதா!

அகஸ்தீசா! அகஸ்தீசா!

அம்மை உலோபாமுத்திரை உடனாய சத்குருவே!

அகஸ்தீசா சரணம்..

காத்தருள்! காத்தருள்!..மகா குருவே சரணம், சரணம், சரணம்.

நன்மையும் தீமையும் 

உணர்த்திய பின்னாலும்

தற்புகழ்ச்சிக் கொண்டதனால்

நிலையிழந்த ஆத்மா,

பலமிழந்து தடுமாறி

தவிக்கின்ற துயரத்தை

நீக்கியரூள் குருநாதா!

அகஸ்தீசா! அகஸ்தீசா!

அம்மை உலோபாமுத்திரை

உடனாய சத்குருவே!

அகஸ்தீசா சரணம். காத்தருள்!

காத்தருள்!..மகாகுருவே

சரணம், சரணம், சரணம்.

காசுபல வைத்திருந்தும்

பசித்த வயிற்றுக்கு

அன்னமிட எண்ணாமல்

பக்தியெனும் பேராலே

பொழுதெல்லாம் சீரழிக்கும்

ஆத்மாவின் பழுதுகளை

நீக்கியருள் குருநாதா!

அகஸ்தீசா! அகஸ்தீசா!

அம்மை உலோபாமுத்திரை உடனாய சத்குருவே!

அகஸ்தீசா சரணம்!

காத்தருள்! காத்தருள்!..மகாகுருவே

சரணம், சரணம், சரணம்.

அகங்கார மமகார

குணத்தாலே பிதற்றி

வாழ்வெல்லாம் புகழ்தேடி

அலைகின்ற ஆத்மா,

செல்லும் வழியின்றி

படுகின்ற துயரத்தை

நீக்கியருள் குருநாதா!

அகஸ்தீசா! அகஸ்தீசா!

அம்மை உலோபாமுத்திரை உடனாய சத்குருவே! அகஸ்தீசா சரணம்!

காத்தருள்! காத்தருள்!..மகாகுருவே

சரணம், சரணம், சரணம்.

அன்பதனைப் புரியாமல்

அனைவரையும் அடிமையாக்கி

தற்பெருமை சுகத்தாலே

நிலையிழந்த ஆத்மா,

எமனுலகப் பயத்தாலே

அலறுகின்ற துயரத்தை

நீக்கியருள் குருநாதா!

அகஸ்தீசா! அகஸ்தீசா!

அம்மை உலோபாமுத்திரை உடனாய சத்குருவே!

அகஸ்தீசா சரணம்!

காத்தருள்! காத்தருள்!..மகாகுருவே

சரணம், சரணம், சரணம்.

மந்திரங்கள் பலசொல்லி

வலுவிழந்த மதமார்க்கம்

நீதியினைப் புறந்தள்ளி

தன்னுயிரை மிகமதித்த

அகோர ஆத்மா,

அலறியழும் துயரத்தை

நீக்கியருள் குருநாதா!

அகஸ்தீசா! அகஸ்தீசா!

அம்மை உலோபாமுத்திரை உடனாய சத்குருவே! அகஸ்தீசா சரணம்!

காத்தருள்! காத்தருள்!..மகாகுருவே

சரணம், சரணம், சரணம்.

அட்டாங்க யோகத்தை

ஆசையினால் மிகப்பழகி

மூட்டுகளில் நீர்தேங்கி

உடலழிய உண்மையை

உணராத ஆத்மா

கலங்குகின்ற துயரத்தை

நீக்கியருள் குருநாதா!

அகஸ்தீசா! அகஸ்தீசா!

அம்மை உலோபாமுத்திரை உடனாய

சத்குருவே! அகஸ்தீசா சரணம்! காத்தருள்! காத்தருள்!..

மகாகுருவே சரணம், சரணம், சரணம்.

புராணப் போதையிலே

வாழ்விழந்து போனாலும்

வாழ்விக்க உற்றதொரு

குருவில்லா ஆத்மா

கடைத்தேற இயலாமல்

கலங்கிடும் துயரத்தை

நீக்கியருள் குருநாதா!

அகஸ்தீசா! அகஸ்தீசா!

அம்மை உலோபாமுத்திரை உடனாய சத்குருவே! அகஸ்தீசா சரணம்! காத்தருள்! 

காத்தருள்!..மகாகுருவே சரணம், சரணம், சரணம்.

ஐம்பூத கலவையினால்

உடலெடுத்த ஆத்மா

ஐம்பூதம் அறியாமல்

உய்யும்வழி புரியாமல்

பலவழிகள் தான் கற்று

படுகின்ற துயரத்தை

நீக்கியருள் குருநாதா!

அகஸ்தீசா! அகஸ்தீசா!

அம்மை உலோபாமுத்திரை உடனாய சத்குருவே! அகஸ்தீசா சரணம்!

காத்தருள்! காத்தருள்!..மகாகுருவே

சரணம், சரணம், சரணம்.

மானுடம் மாய்க்கின்ற

பிரிவினைகள் பலசெய்து

குதியோட்டம் போட்ட

இருளுலகு ஆத்மா

தர்மத்தை அறியாமல்

தவிக்கின்ற துயரத்தை

நீக்கியருள் குருநாதா!

அகஸ்தீசா! அகஸ்தீசா!

அம்மை உலோபாமுத்திரை உடனாய சத்குருவே!

அகஸ்தீசா சரணம்!

காத்தருள்! காத்தருள்!..மகாகுருவே

சரணம், சரணம், சரணம்.

எழுபத்தி ரெண்டாயிரம்

நாடி நரம்பெல்லாம்

ஓங்காரம் பரவாமல்

உருப்படவும் முடியாமல்

நோயாலே நொந்தழியும்

கொடூர துயரத்தை 

நீக்கியருள் குருநாதா!

அகஸ்தீசா! அகஸ்தீசா!

அம்மை உலோபாமுத்திரை உடனாய சத்குருவே! அகஸ்தீசா சரணம்! 

காத்தருள்! காத்தருள்!..மகாகுருவே

சரணம், சரணம், சரணம்.

ஆறாதார சக்கரத்தின்

அருமை உணராமல்

ஓராயிரம் ஜெபதபங்கள்

செய்தாலும் உயர்வின்றி

சுயபோதைக் கோளாறால்

நிலையழியும் துயரத்தை

நீக்கியருள் குருநாதா!

அகஸ்தீசா! அகஸ்தீசா!

அம்மை உலோபாமுத்திரை உடனாய சத்குருவே!

அகஸ்தீசா சரணம் 

காத்தருள்! காத்தருள்!..மகாகுருவே

சரணம், சரணம், சரணம்.

தசவாயு அத்தனையும்

தடுமாறா வகை செய்து

உடலெடுக்க வழி செய்த

உன்னதம் புரியாமல்

ஏதோதோ பல செய்து

ஏமாறும் துயரத்தை நீக்கியருள் குருநாதா!

அகஸ்தீசா! அகஸ்தீசா!

அம்மை உலோபாமுத்திரை உடனாய சத்குருவே!

அகஸ்தீசா சரணம்!

காத்தருள்! காத்தருள்!..மகாகுருவே

சரணம், சரணம், சரணம்.

காணுகின்ற காட்சியெலாம்

இறையுருவாய் எண்ணாமல்

குறைபேசி வாழ்ந்திட்டேன்;

குற்றம் பல புரிந்திட்டேன்;

குருவருள் இல்லாமல்

ஏதுமறியாமல் இருந்திட்டேன்!

அருள் தருவாய் குருநாதா!

அகஸ்தீசா! அகஸ்தீசா!

அம்மை உலோபாமுத்திரை

உடனாய சத்குருவே! அகஸ்தீசா சரணம்!

காத்தருள்! காத்தருள்!..மகாகுருவே

சரணம், சரணம், சரணம்.

கர்மவினை அத்தனையும்

அறியாமல் வந்ததுவே

வழிகாட்டும் குருவின்றி

ஆசையினால் விளைந்ததுவே

காலதேவன் அருளாலே

அறிந்திட்டேன் குருதேவா!

அகஸ்தீசா! அகஸ்தீசா!

அம்மை உலோபாமுத்திரை உடனாய சத்குருவே! அகஸ்தீசா சரணம்! காத்தருள்! 

காத்தருள்!..மகாகுருவே சரணம், சரணம், சரணம்.

ஆனந்தப் பேரொளியில்

அகலாமல் நிலைத்திருக்க

மனமதைச் செம்மையாக்கி

குருவருளால் சீர்படுத்தி

வாசியிலே குடியிருந்து

வாழும் கலை அறிவித்து

அருள்தருவாய் குருநாதா!

அகஸ்தீசா! அகஸ்தீசா!

அம்மை உலோபாமுத்திரை

உடனாய சத்குருவே!

அகஸ்தீசா சரணம்!  காத்தருள்! காத்தருள்!..மகாகுருவே

சரணம்,சரணம், சரணம்.

மகாகுருவாம் அகஸ்தீசர்

அருள்சீடன் நற்குணசிவம் வடித்திட்ட சிறுநூலாம்

அகஸ்தீசர் அருள் கவசத்தை

கருத்துடனே காலை மாலை ஆறுமுறை ஓதுவார்கள் பிறப்பற்ற நிலைகண்டு

பேரோளியில் நிலைத்திருக்கும் சித்தநிலை உருப்பெற்று சீருடனே

வாழ்ந்திருப்பார்; பொய்யில்லை  ஒருபோதும்;

சத்தியம்! சத்தியம்!.

- மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

பனப்பாக்கம் - அகத்திய பெருமான் 108 கலச பூஜை விழா - http://tut-temple.blogspot.com/2017/12/108.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - http://tut-temple.blogspot.com/2017/11/blog-post_21.html

நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_39.html

ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் - https://tut-temple.blogspot.in/2017/10/tut-avm.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html

TUT நவராத்திரி 5 ம் நாள் தரிசனம் - https://tut-temple.blogspot.in/2017/09/tut-5.html

நவராத்திரி - 4 ம் நாள் தரிசனம் - (5) - https://tut-temple.blogspot.in/2017/09/4-5.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு(3) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-3.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/09/tut-2.html

TUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு (1) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-1.html

TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temple.blogspot.in/2017/09/tut.html

TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - https://tut-temple.blogspot.in/2017/08/tut.html

விநாயகர் சதுர்த்தி செய்தி - மண(ன)ப் பொருத்தம் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_78.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html

No comments:

Post a Comment