Subscribe

BREAKING NEWS

17 October 2018

TUT நவராத்திரி தரிசனம் தொகுப்பு

மெய்யன்பர்களே..

நவராத்திரி மூன்று நாள் தரிசனம் வரை பெற்றுள்ளோம்.இன்றைய பதிவில் மேலும் தரிசனக் காட்சிகளை தொடர்வோம்.

ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி #நமோஸ்துதே

எல்லா மங்களங்களும் அருளும் மாங்கல்ய தேவியே! க்ஷேமத்தைக் கொடுப்பவளே, எல்லாவற்றையும் சாதிக்கக் கூடியவளே, த்ரயம்பகே, நாராயணியே, உன்னைச் சரணடைந்தவர்களை ரக்ஷிப்பவளே உனக்கு நமஸ்காரம்.

நவராத்திரிக் கொண்டாட்டங்களில் இன்று நாம் காண இருப்பது நான்காம் நாள் தரிசனம்.

விதவிதமான நைவேத்தியங்கள், கோலங்கள், வழிபாடுகள், தானங்கள், பாடல்கள் என இந்த விழாவே களிப்பூட்டக்கூடியது. இந்த நாள்களில் ஆட்டம், பாட்டத்துக்கு குறைவே இருக்காது. சர்வம் சக்தி மயம் என்பதை உணர்த்தவே இந்த நாள்களில் கொலு பொம்மைகளை அடுக்கி வைக்கும் வைபவம். அனைத்து உயிர்களிலும், சக்தியைக் காண வேண்டும் என்பதை சொல்லவே படிகளில் தெய்வங்களின் பொம்மைகள் மட்டுமின்றி எல்லாவித பொம்மைகளும் வைக்கப்படுகின்றன. மாலைவேளைகளில் கொலு வைத்தவர்கள் வீடே,  திருவிழாக்கோலம் பூண்டு இருக்கும். ஒவ்வொரு நாளும் சிறுமிகளை அம்பிகையின் வடிவமாக கொண்டாடுவது வழக்கம். முருகன், கிருஷ்ணன், ராதா, ராமன்,  அம்பிகை போன்ற வேடங்களை அணிந்து குழந்தைகளை கொலுவுக்கு அழைத்துச் செல்வார்கள். மேலும், இந்த விழாவின் ஒன்பதாம் நாள் கல்விக்காக சரஸ்வதி பூஜையும்,  உழைப்புக்குத் துணை நிற்கும் கருவிகளைக் கொண்டாடுவதற்காக ஆயுத பூஜையும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள்களில் செய்யும் பூஜையால் அறம், பொருள், இன்பம், மோட்சம்  ஆகியவை கிடைக்கச் செய்யும். பெயரன், பெயர்த்தி என ஏழேழ் பரம்பரைக்கு நீண்ட ஆயுளும் கிடைக்கும் எனச் சொல்லப்படுகிறது.

நான்காம் நாளில் நாம் வழிபடவேண்டிய தெய்வம் வைஷ்ணவி தேவி.வைஷ்ணவி என்பவள் விஷ்ணுவின் சக்தி ஆவாள். திருமாலைப் போலவே நீல நிறத் திருமேனியையும், கரிய கூந்தலையும் உடையவள், தன்னுடைய இரண்டு கரங்களில் சங்கும் சக்கரமும் ஏந்தியவள். கருடனை வாகனமாகக் கொண்டவள். தேவி அசுரர்களை சம்ஹாரம் செய்யப் புறப்பட்டபோது மும்மூர்த்தியரும், மற்ற தேவர்களும் தங்களுடைய சக்தியை அம்பிகைக்கு அளித்தனர். அப்படி விஷ்ணுவின் சக்தியைப் பெற்ற தேவியே வைஷ்ணவி. வைஷ்ணவி தேவியை வழிபட்டால், நமக்கு வேண்டிய செல்வங்கள் அனைத்தையும் அவளே நமக்கு அருள்வாள்.
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையின் வடிவமாக பாவித்து பெண்குழந்தைகளை ஒவ்வொரு தேவியாக பாவித்து வழிபடவேண்டும். அந்த வகையில் ஐந்து வயது பெண் குழந்தைகளை நம் வசதிக்கு ஏற்றபடி ஒரு குழந்தையோ அல்லது ஒன்றுக்கு மேல் ஒற்றைப்படை எண்ணிக்கையில் நம் வீட்டுக்கு வரவழைத்து, ரோஹிணி என்ற திருப்பெயருடன் வழிபட வேண்டும். ரோஹிணி என்ற பெயருக்கு ரோகங்களை அகற்றுபவள் என்று பொருள். நான்காவது நாளில் பெண்குழந்தைகளை ரோஹிணியாக பூஜித்தால், நோய் நொடிகளில் இருந்து விடுபடுவதுடன், ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெறலாம்.

நான்காம் நாள் தரிசனம் பெறலாமா? 



ஸ்ரீ கஜலட்சுமி அலங்காரம் பெற இருக்கின்றோம்.









அருமையான சத்சங்கமும் அன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அடுத்து வேலி அம்மன் ஆலயம் சென்றோம். அங்கு ஒரு திருவிழா நடைபெறுவது போன்று இருந்தது.








 அடுத்து தரிசனம் தான்.



மேலும் நவராத்திரி கொண்டாட்டம் இங்கே தொடர்கின்றது.






அடுத்து அம்மனின் அலங்காரம் தொடர்கின்றது.











செல்லாத்தா என்ற பாடல் கேட்டபோது நமக்கே ஆட்டம் போட வேண்டியது போல் இருந்தது.



மலேசியாவில் உள்ள அகத்தியர் வனம் குழுவை சேர்ந்த  திரு பாலச்சந்தர் ஐயா வீட்டில் இருந்து கொலு காட்சி 


அடுத்து ஐந்தாம் நாள் தரிசனம் பெற சென்ற போது அங்கு மின்சாரம் இல்லாது இருந்தது, ஆனாலும் அன்றைய தரிசனம் கோடி பிரகாசம் தருவதாக இருந்தது. நம் அப்பன் அகத்தீசன் அருள் தந்த காட்சி மேலே.











பதிவின் நீளம் கருதி, மீண்டும் அடுத்த பதிவில் நவராத்திரி தரிசனம் தொடரும்.

மீள்பதிவாக:-

நவராத்திரி மூன்றாம் நாள் தரிசனப் பதிவு - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_15.html

நவராத்திரி இரண்டாம் நாள் தரிசனம் - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_13.html

நவராத்திரி 75 - முதல் நாள் தரிசனம் - http://tut-temple.blogspot.com/2018/10/75.html

நவராத்திரி விழா கொண்டாட வாருங்கள் - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_10.html

தாமிரபரணி தாயே போற்றி - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_12.html

நவராத்திரி சிறப்பு பதிவு - அம்மன் நெய்க்குளம் தரிசனம் (8) - https://tut-temple.blogspot.in/2017/10/8.html

TUT நவராத்திரி தரிசனம் - ஆறாம் நாள் (7) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-7.html

தாமிரபரணி புஷ்கரம் தீப ஆரத்தி பெருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post.html

 இறை, சித்தர், தாமிரபரணி அருளை பெறுவதற்கு தாமிரபரணி புஷ்கரம் அழைக்கின்றது - http://tut-temple.blogspot.com/2018/07/blog-post_24.html

TUT நவராத்திரி 5 ம் நாள் தரிசனம் - https://tut-temple.blogspot.in/2017/09/tut-5.html

நவராத்திரி - 4 ம் நாள் தரிசனம் - (5) - https://tut-temple.blogspot.in/2017/09/4-5.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு(3) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-3.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/09/tut-2.html

TUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு (1) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-1.html

TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temple.blogspot.in/2017/09/tut.html

TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - https://tut-temple.blogspot.in/2017/08/tut.html

விநாயகர் சதுர்த்தி செய்தி - மண(ன)ப் பொருத்தம் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_78.html


No comments:

Post a Comment