Subscribe

BREAKING NEWS

19 October 2018

தாமிரபரணி புஷ்கரம் - சில செய்திகள்

அனைவருக்கும் வணக்கம்.

அனைவரும் ஆயுத பூசை சிறப்பாக கொண்டாடி இருப்பீர்கள் என்று விரும்புகின்றோம். இன்று அனைவருக்கும் விஜய தசமி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். சென்ற வாரம் நவராத்திரி தரிசனம் கண்டு வந்தோம். நம் குழுவின் சார்பில் நவராத்திரி சேவையில் பங்கு பெற இயலவில்லையே என்று இருந்தோம். ஏனென்றால் கூடுவாஞ்சேரியில் உள்ள இரு கோயிலிலும் வழக்கமாக நவராத்திரி உபயதாரர்களே இந்த ஆண்டும் தொடர்வதாக கூறினார்கள். நாமும் அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். இந்த சூழலில் இரண்டு நாட்களுக்கு முன்னர் நாம் நவராத்திரி தரிசனம் செய்து கோயிலுக்கு வெளியே வந்துவிட்டோம்.( குருக்கள் கோயிலில் இல்லை என்று உறுதி செய்த பின்னர் தான் )

வெளியே வந்த உடன், நம் பெயர் சொல்லி அழைக்கும் சப்தம் கேட்டது. யார் நம்மை அழைக்கப் போகிறார்கள் என்று திரும்பி பாரத்தால் கோயில் குருக்கள் என்று தெரிந்தது. உடனே அருகில் சென்று பேசினோம். அவர் விஜய தசமி சண்டி ஹோமத்திற்கு ஏதாவது கைங்கர்யம் செய்யலாமே என்று கேட்டார். மொத்தம் 13 அத்தியாயங்களாக நடைபெறும். முதல் அத்தியாயம் தேடல் உள்ள தேனீக்களாய் -TUT குழு மூலம் செய்யலாமே என்றார். எவ்வளவு தொகை என்று கேட்டோம். ரூ.5000 ஆகும் என்றார். அவரே நீங்களே செய்யுங்கள் என்று பணித்தார். நாமும் சரி என்று கூறிவிட்டு நகர்ந்தோம்.

இரண்டு நாள் கழித்து நம் நண்பரும் அகத்திய அடியாருமான திரு.பத்ம குமார் அவர்கள் நம்முடன் பேசினார். கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலுக்கு ஏதாவது கைங்கர்யம் செய்ய விழைவதாக கூறினார்.உடனே நாம் இது போல் சண்டி ஹோமம் இருப்பதாக கூறி அவரை கோயிலுக்கு அழைத்து சென்றோம். பாதி தொகையினை அவரே கொடுத்தார். நாம் மீதம் உள்ள தொகையை நேற்று கொடுத்தோம்.இன்று காலை கோயிலுக்கு சென்றோம். அற்புதமான அலங்காரத்தில் அம்மன் தரிசனம் பெற்றோம். ஹோமத்தில் கலந்து கொண்டோம். நம் தேடல் உள்ள தேனீக்களாய் - TUT குழுவிற்கு சங்கல்பம் செய்தோம். நம் அன்பர்கள் சிலரும் வந்து ஹோமத்தில் கலந்து கொண்டனர். சரி..தாமிரபரணி புஷ்கரம் பற்றிய சில செய்திகளை இங்கே பகிர விரும்புகின்றோம்.

அவ்வப்போது நம்மிடம் சிலர் அலைபேசியில் தொடர்பு கொண்டு தாமிரபரணி புஷ்கரம் பற்றி கேட்கின்றார்கள்.நாமும் நம்மால் இயன்ற வரையில் தொடர்பு படுத்தி வருகின்றோம். இன்றைய நிலவரப் படி, புஷ்கர் நீராடும் இடங்கள் தகவல்களை தருகின்றோம்.



புஷ்கர் நீராடும் இடங்கள்

வரும் செவ்வாய்கிழமையுடன் புஷ்கர விழா நிறைவு பெறுகிறது. இந்நிலையில் பெரும்பாலோருக்கு எங்கு ஸ்நானம் செய்ய வேண்டும் என்ற தகவல்கள் சரியாக போய் அடையவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

தைப்பூச மண்டபம்
திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவு தான். படித்துறையும் இருக்கிறது. அருகிலேயே கைலாசநாதர் ஆலயமும் இருக்கிறது. 24 மணி நேரமும் போக்குவரத்து வசதி உண்டு.

மணிமூர்த்தீஸ்வரம்
வண்ணார்பேட்டையில் இருந்து தொடங்கும் பைபாஸ் ரோட்டில் வலதுபக்கத்தில் உள்ளது
மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோயில் உள்ளது. அங்கும், அதன் அருகிலும் விசாலமான படித்துறைகள் உள்ளன. ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோவில் செல்ல 80 ரூபாய் வரை கேட்பார்கள்.

ஜடாயு தீர்த்தம்
மணிமூர்த்தீஸ்வரம் வழியாக எட்டெழுத்து பெருமாள் கோவில் செல்லும் வழியில் இருக்கிறது. கொஞ்சம் சகதி காணப்படும்.

ருத்ரபாத கட்டம்
தாழையூத்தில் இருந்து நாகர்கோவில் பைபாஸ் ரோடில் வந்தால் நாரணம்மாள்புரம் என்ற ஊர் வரும். அங்கு மெயின் ரோட்டிலேயே தாமிரபரணி செல்கிறது. நெரிசல் இல்லாமல் குளிக்கலாம்.

பாணதீர்த்தம்
பொதிகை வனப்பகுதியில் தான் தாமிரபரணி தொடங்குகிறது. பாபநாசத்தில் தான் முதல் அருவி. சொறிமுத்து ஐயனார் கோவில் முன்பாக தெளிந்த நீரோடை. ஜாக்கிரதையாக செல்ல வேண்டும்.

பாபநாசம்
ரோட்டை ஒட்டி இருக்கிறது. நவகைலாயங்களில் ஒன்றான பாபநாசம் சிவன் கோவில் படித்துறை இது.போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும். நீரோட்டமும் அதிகம்
அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சியில் படித்துறைகள் உண்டு. தெளிந்த நீரை இங்கு பார்க்கலாம்.

அதே போல் திருப்புடைமருதூர், அத்தாளநல்லூர், சேரன்மகாதேவி போன்ற இடங்களிலும் ஸ்நானம் செய்யலாம். இங்கெல்லாம் ஆழம் கிடையாது.

அடுத்து கோடகநல்லூர், சுத்தமல்லியில் படித்துறைகள் இருக்கிறது. ஆனால் போக்குவரத்து வசதி குறைந்த இடங்கள். நிம்மதியாக குளிக்கலாம்.

ராஜவல்லிபுரம்
தாழையூத்தில் இருந்து 3 மூன்று கிமீ தொலைவில் இருக்கும் இடம். இங்கு தான் தாமிரசபை என அழைக்கப்படும் அழகிய கூத்தர் ஆலயம் அமைந்துள்ளது.



சீவலப்பேரி
சொந்த வாகனங்களில் வருபவர்கள் எளிதில் அடையமுடியும் இடங்களில் இதுவும் ஒன்று. நகர எல்லையை தாண்டி இருப்பதால் கூட்டம் குறைவாகவே காணப்படும். இங்கிருக்கும் துர்க்கை மிகவும் பிரசித்தி பெற்றவள்.

முறப்பநாடு
ஆழம் இல்லாத கொஞ்சம் கூட்டம் இருக்கும் இடம். கைலாசநாதர் கோவில் படித்துறை. பாதுகாப்பும் அருமை.

வல்லநாடு அகரம்
முறப்பநாடு தாமிரபரணி ஆற்றின் கீழ்க்கரையில் அமைந்துள்ளது வல்லநாடு அகரம். கூட்டத்தை விரும்பாதவர்கள் இங்கு வந்து ஸ்நானம் செய்யலாம்
ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி போன்ற இடங்களிலும் படித்துறைகள் உண்டு.
முக்காணி, ஆத்தூர் போன்ற ஊர்களிலும் படித்துறைகள் உள்ளது. தூத்துக்குடி வழியாக வருபவர்கள் இங்கு வந்து விடலாம்.

ஆத்தூரை அடுத்து புன்னக்காயல். இங்கு தான் தாமிரபரணி கடலில் கலக்கிறது. ஆழம் அதிகம்.
எந்த ஸ்நான கட்டத்திலும் சங்கல்ப ஸ்நானமோ, தர்ப்பணமோ செய்து வைக்க வாத்யார் இல்லை என்பது கவலைக்குரிய விஷயம். கடைசி மூன்று நாட்கள் வாத்யார்கள் நெல்லையை நோக்கி படையெடுக்க கூடும் என்று தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. நவராத்திரி இன்றோடு முடிவடைவதால் குலசை தசராவிழாவும் இன்று கொண்டாடப்படுவதல் கட்டுக்கடங்காத கூட்டத்தை நெல்லை மாவட்டம் எதிர்பார்க்கிறது.

ஸ்நானம் செய்ய வருகிறவர்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் ஸ்நானம் செய்ய மாவட்டத்தின் சார்பில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து ஸ்நான கட்டங்களிலும் அன்னதானத்திற்கும் ஏற்பாடுகள் செய்துள்ளார்கள்.


இனி, தாமிரபரணி புஷ்கரத்தில் நம் ஐயன் அகத்தீசன் தரிசனக் காட்சிகள் இங்கே இணைக்கின்றோம்.























புஷ்கரணி நாயகனை தரிசனம் செய்தீர்களா? எப்படி இருந்தது? இறை,சித்தம், தாமிரபரணி என் என்றால் அது அகத்தின் ஈசனாம் அகத்தியரின் அருளாலே அன்றி,வேறென்ன? 

அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்.

- மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

சன்மார்க்க நேசனின் பக்தி சொற்பொழிவு - தாமிரபரணி புஷ்கரம் - 19/10/2018 - http://tut-temple.blogspot.com/2018/10/19102018.html

நதியைக் காப்போம்...முன்னோர் வழி நடப்போம்... - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_14.html

தாமிரபரணி தாயே போற்றி - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_12.html

தாமிரபரணி புஷ்கரம் தீப ஆரத்தி பெருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post.html

 இறை, சித்தர், தாமிரபரணி அருளை பெறுவதற்கு தாமிரபரணி புஷ்கரம் அழைக்கின்றது - http://tut-temple.blogspot.com/2018/07/blog-post_24.html

பிழைத்தலில் இருந்து வாழ்தல் நோக்கி - ஒரு நூல் அறிமுகம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_47.html

"ஜீவ அமிர்தம்" பருகலாமே! - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_30.html

No comments:

Post a Comment