Subscribe

BREAKING NEWS

04 October 2018

நம்பிமலை தரிசனம் காண வாருங்கள் "திருமலை நம்பி கோவில்"

இதோ வந்துவிட்டோம் நம்பிமலைக்கு 
ம்பிமலை புராணங்களால் போற்றப்பட்ட முக்கியமான மலை. இதன் மீது அமைந் திருக்கும் திருமலைநம்பி கோயில், வைணவத் தலங்களில் பிரசித்திப்பெற்றது. மேற்கு மலைத் தொடரில் மகேந்திரகிரி மலைப் பகுதியின் ஓர் அங்கமாகத் திகழ்கிறது நம்பிமலை. மேனியெங்கும் பசுமையைப் போர்த்தியபடி விண்ணை முட்டும் அளவுக்குத் திகழும்  மேற்குமலைத் தொடரின் ஒரு முகட்டில், ‘நம்பினோரைக் கைவிடேன்’ என்று அருளும் வண்ணம், கருணையின் பிறப்பிட மாகக் கோயில் கொண்டிருக்கிறார் திருமலைநம்பி.வாருங்கள் புறப்படுவோம் நம்பி மலைக்கு...
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் முன்பாக வேன் பேசி ஏறி அமர்ந்தோம் .
Image result for திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில்.
இங்கிருந்துதான் வாகனத்தில் புறப்படவேண்டும் 


நம் குழுவினர் வாகனத்தில் அமரும் காட்சி 

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடிக்கு அருகிலுள்ள வைணவ திருத்தலம் திருக்குறுங்குடி. இங்கிருந்து களக்காடு செல்லும் வழியில் பெரிய குளம் ஒன்று உள்ளது. `வட்டக் குளம்’ என்கிறார்கள். அதை யொட்டி வட்டப்பாறை அருகில் கோயில் கொண்டிருக்கிறார் சுடலை யாண்டவர். இவரை வழிபட்டுவிட்டு நகர்ந்தால், இந்தப் பகுதியிலுள்ள தோரண வளைவி லிருந்து தொடங்குகிறது நம்பிமலை பயணம்.
வனப்பகுதி நுழைவுவாயில் 

வனப்பகுதி நுழைவுவாயில் 
வட்டக்குளத்திலிருந்து சுமார் 6 கி.மீ தூரத்தைக் கடந்தால் வனத் துறையின் செக் போஸ்ட் வருகிறது. அதைத் தாண்டி செல்ல தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
அங்கு, முறைப்படி பெயர் முதலான விவரங் களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். அந்த இடத்துக்குமேல் வாகனங்களில் பயணிக்க இயலாது; ஆனால் அதற்கென்ற பிரத்யேக வாகனத்தில் செல்லலாம் ஒருனபருக்கு இரநூறு கட்டணம் (up & down)சேர்த்து கேட்ப்பார்கள் நாங்கள் அப்படித்தான் சென்றோம் சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு மலைப் பாதையில் நடக்கவேண்டியிருக்கும். சற்றுக் கடினமான பயணம்தான். எனினும், பக்தர்கள் திருமலை நம்பியின்மீது அதீத நம்பிக்கை யோடும் பக்தியோடும் நடந்து செல்கிறார்கள் ..
பெரும்பாலும் மலைக் கோயில்கள் சித்தர்களால் சிறப்பு பெற்றது என்பார்கள். இந்த மகேந்திரகிரி மலைப்பகுதியிலும் அகப்பேய் சித்தர், கல்யாணி சித்தர் உள்பட பல சித்தர்கள் நித்யவாசம் செய்வ தாகவும், மனதாலும் புலன்களாலும் நன்கு பக்குவப்பட்டவர்கள், இங்குள்ள சித்தர்களின் அனுக்கிரகத்தைப் பெறலாம் எனவும் நம்புகிறார்கள், 
மலை மீது ஏறும்போதே  மகேந்திரகிரியைப் பற்றி அவசியம் அறிந்துகொள்ளவேண்டும். விசாரித்ததில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1800 மீட்டர் உயரம் கொண்டது இந்த மலை. அடர்ந்த வனம்  மற்றும் ஓடைகள் நிறைந்தது இந்த மலைப்பகுதி. மலையின் அற்புதமான சீதோஷ்ண நிலையில் மூலிகைகள் செழித்து வளருகின்றன. தொழு கண்ணி, அழுகண்ணி, இடிநருங்கி, மதிமயங்கி, கருணைக் கிழங்கு, மலைநீலி, நீலத்தும்பை, அழவணம், கல்தாமரை, குமரி, குறிஞ்சிச் செடி, மருள், நாகதாளி, திருநீற்றுப் பூண்டு, பொன்னா வாரை, பேய்த்தி, பூவரசு, காட்டுச் சீரகம், மகா வில்வம், தான்றிக்காய் போன்ற மருத்துவ குணம் மிக்க அரிய மூலிகைகள் நிறைந்து திகழ்கின்றன.
வாகனத்தில் போகும்போது நமது உடலினுள்ள அனைத்து தசைப்பகுதிகளுக்கும் நல்ல ஒரு மசாஜ் கிடைத்ததாகவே உணர்ந்தோம் அப்படியொரு கரடுமுரடான பாதையில் எப்படி இந்த வாகனத்தை இயக்குகிறார்களோ தெரியவில்லை ஆனால் பத்திரமாக கொண்டுபோய் வந்து சேர்த்தார்கள் .

வாகனத்தில் பயணிக்கும் தருணம் 

வாகனத்தில் பயணிக்கும் தருணம்
வாகனத்தில் இருந்து இறங்கியவுடன் ஒரு பாலம் அதனை கடந்துதான் நம்பிமலை கோவிலுக்கு செல்ல வேண்டும்.
பாலம் 

பாலம் 

 நம்பி ஆண்டவர் ஆலயத்தின் அடிவாரத்தில் ஒரு புற்று உள்ளது. இந்தப் புற்றில் 201 சித்தர்கள் வசிப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் தினமும் நம்பியைப் பூஜை செய்து அரூபமாக உலவுபவர்கள்.
நம்பியைத் தரிசிக்கும் முன்பு நம்பி ஆற்றில் ஒரு குளியல் போட வேண்டும். கோயிலில் இருந்து மிக அருகிலேயே நம்பி ஆறு அருவியாக கொட்டுகிறது. பாறைகளைக் கடந்து சில இடங்களில் தத்தித்தாவித்தான் செல்ல வேண்டும். பத்து நிமிடங்கள் பாறைகளைப் பிடித்து இடுக்குகளை தாவியும் நம்பி அருவிக்கு வந்தோம். சுமார் 50 அடிதான் உயரம் இருக்கும். இரண்டு பெரிய பாறை இடுக்கு வழியாக நம்பி ஆறு பொங்கி வழிகிறது. முன்பு பெரிய தடாகம். கண்ணாடி போல் தெளிவாக இருந்தது தண்ணீர்.நீங்களே பாருங்கள் .




நீரின் குளுர்சியில் கும்மாளமிடும் நமது நண்பர்கள் 

காலில் மீன் மசாஜ் செய்துகொள்ளும்போது 

குடிநீரை சேகரிக்கும் நமது அண்ணன் 



நாம் இப்போது அருந்தும் குடிநீர் மினரல் வாட்டர் என்கிற பெயரில் உயிர்சத்தில்லா குடிநீரை அருந்திகொண்டிருக்கின்றோம் ஆனால் இந்தநீர் அதனைவிட நூறு மடங்கு தூய்மையானது உயிச்சத்துள்ளது  .நாம் குடித்ததுபோக மீதி குடிநீரை பாட்டிலில் சேகரித்துவைத்துக்கொண்டோம்.பிறகு அனைவரும் உடைகளை மாற்றிக்கொண்டு நம்பி பெருமாளை தரிசிக்கச்சென்றோம் .
கோவிலின் முகப்பு 

கோவிலின் உள்ளே செல்லும் வழிப்பாதை 


மூலவர் திருப்பதி வெங்கடாஜலபதி போன்றே காட்சிதருகிறார் கூட்டமும் அதிகமில்லாததால் நிதானமாக திவ்யதரிசனம் பெறமுடிந்தது .


நமது tut குழுவின் சார்பாக நமது உறுப்பினர் அனைவரும் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் பெற்று வாழ அர்ச்சனை செய்யப்பட்டது .இவ்விரண்டும் மட்டும் இருந்தால் போதும் இவுலகின் அனைத்து சுகங்களையும் அடைந்துவிடலாம் ,எப்போதும் கடவுளிடம் வேண்டும்போது தனித்தனியாக வீடு வேண்டும் ,கல்வி வேண்டும் ,பணம் வேண்டும் ,இன்ன பிற சமாச்சாரங்கள் வேண்டும் ,எனக்கேட்காமால் மகிழ்ச்சி வேண்டும் என்று மட்டும் வேண்டுவோம் ,எவ்வளவுதான் பணம் இருந்தாலும் ஆரோக்கியம் இல்லையென்றால் அக்குடும்பதில் மகிழ்ச்சி இருக்காது.ஆரோக்கியம் கிடைத்துவிட்டால் மகிழ்ச்சி தானாக வந்துவிடும்.அந்த மகிழ்ச்சி நீடிக்க வேண்டுமென்றால் மேலே சொன்ன சமாச்சாரங்களும் கிடைக்கவேண்டும் அதை அந்த கடவுள் பார்த்துக்கொள்வார் ........சரி விடுங்க ரொம்ப அட்வைஸ் பண்ணல... 
தரிசனத்திர்க்குபின்னர் பிரசாதமாக துளசியும் மஞ்சளும் தருகிறார்கள்,பெற்றுக்கொண்டு பிரஹாரத்தைவலம்வந்து,நம்பிமலை ஆண்டவர் தரிசனம் முழுமை பெற்றது 

மேலும் சிறிய குறிப்பு :- . 
மாயவன் பரப்பு என்ற இடத்தில் ஐந்து சுனைகளாகத் தோன்றுகிறது நம்பியாறு. பின் கடையார் பள்ளம் வழியாக தாய்பாதம் தொட்டு, நம்பி கோயில் வந்து சேருகிறது. நின்ற கோலத்தில் நம்பாடுவானுக்கு அருள்புரிந்தவர், நாம் கேட்கும் வரம் தருவதற்காகவே தினமும் அருளாட்சி தருகிறார். எனவேதான் பக்தர்கள் தங்கள் உடல் ரணத்தைப் பொருட்படுத்தாமல் மேலே வந்து வணங்கி செல்கின்றனர் .
பெரும்பாலான வைணவக் கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமை மட்டுமே கருட சேவை நடைபெறும். ஆனால், திருமலை நம்பிகோயிலில் மட்டும் ஆண்டு முழுவதும், ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் கருட சேவை நடக்கிறதாக சொல்லப்படுகிறது ..
நடுக்காட்டுக்குள் இருக்கும் மலைமேல் நம்பியைத் தரிசிக்க வரும் பக்தர்களையும், கோயிலையும் சுற்றுபுரத்தினையும் தூய்மையாக வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் , நாமும் அதனை கடைபிடித்தோம் .
அறிவிப்பு பலகை 
பின்பு அனைவரும் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டோம் .அவை உங்களுக்காக 







மேலும் சில புகைப்படங்களை இணைக்கின்றேன் இயற்க்கை எழில்கொஞ்சும் அழகை ரசிப்பதற்காக ..








என்ன நண்பர்களே ! நம்பிமலை யாத்திரையின்போது நாம் தரிசித்த ஆலயங்கள் பகுதி ஒன்று முதல் ஒன்பது வரை படித்திருப்பீர்கள் எனநினைக்கின்றேன் ,தொலைகாட்சி சீரியல் போல எப்போது நம்பிமலை தரிசனம் கிடைக்கும் என ஏங்கவைத்தமைக்கு மன்னிக்கவும் .இந்த புரட்டாசி மாதத்தில் மூன்றாவது சனிக்கிழமை பெருமாளுக்கு பூஜைகள் செய்து வழிபடுவது  மட்டும் பெரியதல்ல அவனின் புராண இதிகாசங்களையும் சிறப்புகளையும் ,வரலாற்றையும் ,திருவிளையாடல்களையும் கண்டு ,பார்த்து ,அனுபவித்து படித்ததே ஒரு பெரிய பாக்கியம்தான்,நான் அப்படித்தான் கருதுகிறேன் .நாம் தரிசித்த பெருமாள் கோவில்கள் சிறு நினைவூட்டல் ... 
1)ஸ்ரீ சுந்தரராபெருமாள் கோவில் சீவலப்பேரி 
2)ஆழ்வார்திருநகரி (திருக்குருகூர்) ஆதிநாதர்.பெருமாள் 
3)கருங்குளம் ஸ்ரீ வெங்கடாஜலபதி 
4) கோடகநல்லூர் ஸ்ரீ பெரியபிறான்
5)நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில் 
6)திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில்
7)திருமலைநம்பி கோயில் நம்பிமலை .
இடையில் ஒரு சில சிவ ஸ்தலங்களையும் தரிசனம் பெற்றோம் மறுப்பதற்கில்லை ..என்றாலும் இந்த புரட்டாசிமாத கதாநாயகன் நம் பெருமாள்தானே!!!

நான் எழுதிய இந்த பதிவுகள் அனைத்தும் என் சுய சிந்தனையில் எழுதப்பட்டவை அல்ல, கூகிள் ஆண்டவரின் துணையோடு அவரிடமிருந்து யாசகம்பெற்ற சில தகவல்களும் உள்ளடங்கியதுதான் இந்த ஒன்பது பதிவுகளும் .
மேலும் நான் எழுதிய இந்த பதிவுகளில் சில இடங்களில் சொற்குற்றம் ,பொருட்குற்றம் ,எழுத்துப்பிழையை ,சுட்டிக்காட்டிய அன்பு உள்ளங்களுக்கும் ,சிலத்தவருகள் இருந்தாலும் ,எங்களால் சரியாகவே படித்து புரிந்துகொள்ளமுடியும்.என ஆறுதலாக பேசிய நல்ல உள்ளங்களுக்கும் இவ்விடத்தில் நான் மனமார நன்றிகளை தெரிவித்துகொள்கின்றேன் .  நன்றி ...நன்றி..நன்றி .

இத்துடன் இந்த நம்பிமலை யாத்திரைப்பதிவுகள் முடிவடைகின்றது .
மீண்டும் ஒரு ஆலய தரிசனத்தில் சந்திப்போம் அவனின் அருளிருந்தால் .

No comments:

Post a Comment