Subscribe

BREAKING NEWS

04 October 2018

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே... குரு பெயர்ச்சி சிறப்பு பதிவு

அன்பார்ந்த மெய்யன்பர்களே.

அனைவருக்கும் வணக்கம். இன்றைய குரு நாளில்  வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு 10.11 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்.திருக்கணித பஞ்சாங்கபடி 11.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 24 ஆம் நாள் காலை 3.04 நிமிடத்திற்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்.

குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரங்கள் என்று எங்கு பார்த்தாலும் அமோகமாக தெரிகின்றது. குரு பெயர்ச்சி பற்றி எந்த கவலையும் பட வேண்டாம்.குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்வார்கள்.நம் குரு நம்மை எப்பவும் பார்த்து கொண்டே உள்ளார்.எனவே பயப்பட வேண்டாம்.குரு பெயர்ச்சி அக்டோபர் 4 ஆம் தேதி இரவு 9.58 மணிக்கு நடைபெற உள்ளது.. பல ஆலயங்களில் இரவு நேரத்தில் பரிகார யாகங்களும் பூசைகளும் நடைபெறுகின்றது.தயவு செய்து யாரும் அதில் பங்குகொள்ள வேண்டாம்.இது அபத்தமான செயல் ஆகும். இரவில் 9 மணிக்கு மேல் யாகம் செய்ய கூடாது என்பது சாத்திரம்.அதை மீறி சில ஆலயங்கள் வருமானம் பார்க்க இந்த மாதிரி செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இன்றைய குரு நாளில் குரு பெயர்ச்சி நாளில் குருவாய் என்ற சொல்லின் செல்வர் முருகப்பெருமான் பற்றி இங்கே அறிய உள்ளோம். மிகவும் நீண்ட நாட்களாக அகரம் ஸ்ரீ சுப்பிரமண்ய சுவாமி பற்றி சொல்ல விழைந்தோம். ஆனால் அது இன்றைய நாளில் நடந்தேறுகிறது. காரியமின்றி காரியமில்லை என்பதற்கு இந்த பதிவும் ஒரு உதாரணம்.

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
    கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!




உருவாக, உருவமில்லாததாக, உள்ளதாக, இல்லாததாக, நறுமணமாக, மலராக, மணியாக, உலகின் மூலப்பொருளாக, உயிருக்கு உயிராக, வீடுபேறை அடைகின்ற விழியாக விளங்கும், என் முருகா, வந்து அருள் புரிவாய்.

அகாலங்களை தவிர்க்க, அகரம் ஸ்ரீ சுப்பிரமண்ய சுவாமி தரிசனம் பெற வாருங்கள்.



தென்பெண்ணையாற்றின் கரையில் அமைந்துள்ள போச்சம்பள்ளி தாலுகாவில் உள்ள அகரம் என்ற ஊரில் ஸ்ரீ சுப்பிரமண்ய சுவாமி அருள் பாலித்து வருகின்றார். இந்த கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கோயில் ஆகும். இந்த கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது மிக மிக விசேஷம் ஆகும்.கோயிலில் முருகப் பெருமான் வள்ளி,தெய்வானையோடு காட்சி தருகின்றார்.சுமார் 5 அடி உயரத்தில் கிழக்கு நோக்கி முருகப் பெருமான் காட்சி தருவது இங்கே குறிப்பிடத்தக்க ஒன்றாகும். குருவை கண்டால் அனைத்தும் துன்பங்களும் சூரியனைக்  கண்ட பனி போல் விலகி விடும். அது போல் தான் அகரம் ஸ்ரீ சுப்பிரமண்ய சுவாமி தரிசனம் பெற உள்ளோம்.

சரி.இந்த கோயிலின் சிறப்புகள் ஒவ்வொன்றாக காண்போமா?

அகரம் ஊருக்கு சென்று, தென்பெண்ணை ஆற்றில் குளித்து, ஓம் சுப்ரமண்யாய நமஹ என்று முருகப்பெருமானை அழைத்து, எவரொருவர் வழிபடுகின்றாரோ, அவருக்கு அகலா நிகழ்வுகள் மற்றும் அகால மரணம் எதுவும் நடைபெறா.

அகரம் ஊரில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக யாருக்கும் அகால மரணம் ஏற்படவில்லை. குறிப்பாக யாரும் பாம்பு தீண்டி இறக்கவில்லை.

இந்த தலம் சர்ப்ப தோஷ பரிகாரத்  தலம் ஆகும். பாம்பு தீண்டி யாராவது இங்கு வந்தால், தீண்டிய பாம்பின் விஷம் ஏறாது, மேலும் சுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை அளித்து, முருகப் பெருமானிடம் வேண்ட, உடல் சுகம் பெறுவது .

இந்த தலத்தில் வரும் பாம்புகளுக்கு விஷம் இருக்காது என்பது திண்ணம்.

முன்னரே சொன்னது போல் இங்கு முருகப் பெருமான் தம்பதி சகிதமாக வள்ளி,தெய்வானையோடு காட்சி தருகின்றார். எனவே யோகம் வேண்டியும் போகம் வேண்டியும் இங்கே வழிபடலாம். இங்குள்ள தென்பெண்ணையாற்றில் குளித்து விட்டு, இங்குள்ள முருகப்பெருமானிடம் வேண்ட, ராகு கேது தோஷம், செவ்வாய் தோஷம் நீங்கப் பெறுவது உறுதி.

கல்யாணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறவும், புத்ர பாக்கியம் பெறவும் இங்கு வேண்டுவது உடனடி பலன் தரும்.

இங்கு ஞானம் வேண்டியும் வழிபடலாம் என்பது கூடுதல் சிறப்பு.

காட்சிப்பதிவுகளாக தல வரலாற்றை இங்கே தருகின்றோம்.









இனிவரும் பதிவுகளில் அகரம் ஸ்ரீ சுப்பிரமண்ய சுவாமி தரிசனம் பெறுவோம்.

மீள்பதிவாக:-

நம்பிமலை தரிசனம் காண வாருங்கள் "திருமலை நம்பி கோவில்" - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_20.html

நம்பிமலை யாத்திரையின்போது நாம் தரிசித்த ஆலயங்கள் பகுதி 8 - http://tut-temple.blogspot.com/2018/09/8.html

நம்பிமலை யாத்திரையின்போது நாம் தரிசித்த ஆலயங்கள் பகுதி 7. - http://tut-temple.blogspot.com/2018/09/7.html

நம்பிமலை யாத்திரையின்போது நாம் தரிசித்த ஆலயங்கள் பகுதி 6. - http://tut-temple.blogspot.com/2018/09/6.html

நம்பிமலை யாத்திரையின்போது நாம் தரிசித்த ஆலயங்கள் பகுதி 5 - http://tut-temple.blogspot.com/2018/09/5_27.html

நம்பிமலை யாத்திரையின்போது நாம் தரிசித்த ஆலயங்கள் பகுதி 4 - http://tut-temple.blogspot.com/2018/09/4.html

நம்பிமலை யாத்திரையின்போது நாம் தரிசித்த ஆலயங்கள் பகுதி 3 - http://tut-temple.blogspot.com/2018/09/3.html

நம்பிமலை யாத்திரையின்போது நாம் தரிசித்த ஆலயங்கள் பகுதி 2 - http://tut-temple.blogspot.com/2018/09/2.html

நம்பிமலை யாத்திரையின்போது நாம் தரிசித்த ஆலயங்கள் பகுதி 1. - http://tut-temple.blogspot.com/2018/09/1_22.html


No comments:

Post a Comment