அன்பான தள வாசகர்களே.
உலகினை இயக்கும் ஒரு வார்த்தை. எது? என்று கண்டுபிடித்து விட்டிர்களா? சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் கல்வியா? செல்வமா? வீரமா? என்ற கேள்வியும் அதனை மெய்ப்பிக்கும் பக்திப் பனுவலாக படம் இருக்கும்.இப்போது? சொல்லவே வேண்டாம்? சரஸ்வதி சபதம் போன்ற பக்திக் காவியங்களை பாருங்கள்.வருகின்ற வளரும் தலைமுறைக்கு சொல்லிக் கொடுங்கள்.நம் பண்பாட்டைப் போற்றுங்கள்.சிறுவர்களுக்கு கராத்தே,குங்பூ இவற்றை விட சிலம்பாட்டம் கற்றுக் கொடுக்க முயற்சி செய்யுங்கள்.சிறுமிகளுக்கு டான்ஸ்,பெல்லி டான்ஸ் போன்றவற்றை விட பரத நாட்டியம் கற்றுக் கொடுக்க உதவுங்கள்..சரி.சரி..பதிவிற்கு செல்வோமா?
கல்வியா செல்வமா வீரமா என்ற பாடல் பற்றி தனிப் பதிவாக காண்போம்.
அன்பைக் கொண்டு இந்த பதிவைத் தர விரும்புகின்றோம். அன்பைப் பற்றி சொல்லாத அற நூட்கள் இல்லை.அன்பே சிவம். அன்பே வாழ்வு. அன்பு தான் இவ்வுலகை இயக்கம் மகா சக்தி.ஒவ்வொரு மனிதனையும் மகா சக்தி மனிதர்களாக மாற்றுவது அன்பு மட்டுமே. நமக்குத் தெரிந்த வெற்றியாளர்கள் அனைவரும் அன்பின் பிடியின்றி வெற்றி பெற வில்லை என்பது கண் கூடு.
இங்கே நாம் அனைவரும் அறிந்த இரு கதைகளை காண உள்ளோம்.கதையின் கருத்துக்கள் எளிமையாக இருந்தாலும், வாழ்வின் புரிதலை நோக்கி நம்மை நகர்த்தும்.
இப்போது புரிகின்றதா? அன்பர்களே..அன்பின்றி இவ்வுலகம் இல்லை. அன்பைப் சிந்தனை முத்துக்களைப் பார்த்துவிட்டு அடுத்த கதைக்குச் செல்வோம்.
* அன்பு ஆட்சி செய்யுமிடத்தில் அச்சமில்லை. தூய அன்பு அச்சத்தைத் துரத்திவிடக்கூடிய வலிமை கொண்டது -இயேசுபிரான்
* எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள். ஆனால் அன்போடு பரிமாறுங்கள் -இங்கிலாந்து பழமொழி
* அன்புடன் கூர்மையான அறிவும் சேர்ந்துவிட்டால், அதனால் அடைய முடியாதது உலகில் எதுவும் கிடையாது -கதே
* உலகில் மிகவும் தெய்வீகமானது எது? சக மனிதனிடம் நீங்கள் காட்டும் அன்புதான் -வால்டேர்
* அன்பை விற்கவோ, வாங்கவோ முடியாது. அன்புக்கு அன்பே விலை -ஜான்கீட்ஸ்
* நான் எதையும் நேசிக்கிறேன். அதனால்தான் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடிகிறது - -டால்ஸ்டாய்
* உங்கள் அன்பை ரகசியமாக வைத்திருக்காமல் நல்ல நல்ல செயல்கள் மூலம் அதை வெளிப்படுத்திக்கொண்டே இருங்கள் - -இரவீந்தரநாத் தாகூர்
* அன்புக்கு விலை இல்லை. ஆனால் அது எல்லாவற்றையும் விலைக்கு வாங்கி விடுகிறது -மாண்டேகு
* நீங்கள் பிறருக்குத் தரும் பரிசுப்பொருளைவிட மேன்மையானது அன்புதான் -கார்லைல்
அடுத்த கதைக்கு செல்வோமா? சிறிய கதை தான். பொருள் பொதிந்த கதை.மீண்டும் மீண்டும் படியுங்கள். அன்பின் விலை புரியும்.
ஆறு வயது சிறுவன் ஒருவன் தன் நான்கு வயது தங்கையை அழைத்து கொண்டு கடை தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான்.
ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மைகளை பார்த்து தயங்கி நின்ற தங்கையை பார்த்து, "எந்த பொம்மை வேண்டும்?'' என்றான்.
அவள் கூறிய பொம்மையை எடுத்து அவள் கையில் கொடுத்து விட்டு ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் கடையின் முதலாளியை பார்த்து... ''அந்த பொம்மை என்ன விலை?'' என்று கேட்டான்.
அதற்கு சிரித்துக்கொண்டே அந்த முதலாளி,
''உன்னிடம் எவ்வளவு உள்ளது?'' என்று கேட்டார்.
அதற்கு அந்த சிறுவன்.... தான் விளையாட, சேர்த்து வைத்து இருந்த கடல் சிப்பிகளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்தான்!
''இது போதுமா...?" என்று கவலையுடன் கேட்டான்.
அதற்கு அந்த கடைக்காரர் அவனின் கவலையான முகத்தை பார்த்து கொண்டே...., "எனக்கு நான்கு சிப்பிகள் போதும்!'' என்று மீதியை கொடுத்தார்.
சிறுவன், மகிழ்ச்சியோடும் மீதி உள்ள சிப்பிகளோடும்.... தன் தங்கையோடு அந்த பொம்மையை எடுத்துக்கொண்டு சென்றான்.
இதை எல்லாம் கவனித்து கொண்டு இருந்த அந்த கடையின் வேலையாள்.... முதலாளியிடம்,
"அய்யா! ஒன்றுக்கும் உதவாத சிப்பிகளை வாங்கிக்கொண்டு விலை உயர்ந்த பொம்மையை கொடுத்து விட்டீர்களே...." என்றான்.
அதற்கு அந்த முதலாளி,
''அந்த சிறுவனுக்கு, 'பணம் கொடுத்தால்தான் பொம்மை கிடைக்கும்' என்று புரியாத வயது. அவனுக்கு அந்த சிப்பிகள்தான் உயர்ந்தவை.
நாம் பணம் கேட்டால் அவன் எண்ணத்தில் 'பணம்தான் உயர்ந்தது' என்ற மாற்றம் வந்து விடும்... அதை தடுத்து விட்டேன்.
மேலும், 'தன் தங்கை கேட்டவற்றை தன்னால் வாங்கித் தர முடியும்' என்ற தன்னம்பிக்கையை அவனுக்குள் விதைத்து விட்டேன்.
என்றோ ஒரு நாள்... அவன் பெரியவன் ஆகி இந்த சம்பவங்களை நினைத்து பார்க்கையில், 'இந்த உலகம் நல்லவர்களால் ஆனது!' என்ற நல்ல எண்ணம் அவன் மனதில் தோன்றும்.
ஆகையால், அவன் எல்லோரிடமும் அன்பு காட்ட தொடங்குவான். உலகம் அன்பினால் கட்டமைக்க பட வேண்டும்'' என்றார்!
"அன்பு" என்ற ஒரு வார்த்தையில் தான் இன்னும் இந்த உலகமும் உயிரினங்களும் வாழ்ந்துகொண்டிருக்கிறது...
எத்தனை சாத்தியமான வார்த்தைகள்.இந்த வார்த்தைகளை உங்கள் வாழ்க்கையாக்குங்கள்.வெற்றி நிச்சயம் !
நன்றி : திரு.ஹரிஹரன்
முந்தைய பதிவுகளுக்கு :-
மண(ன)ப் பொருத்தம் - தொடர்பதிவு (1) - https://tut-temple.blogspot.in/2017/08/1.html
மண(ன)ப் பொருத்தம் - தொடர் பதிவு - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_78.html
வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (1) - http://tut-temple.blogspot.in/2017/07/1.html
வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html
இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. 'வெற்றி' உங்களை தேடி வரும்..! - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_4.html
சிக்கல்களில் இருந்து சீக்கிரம் மீள்வோமா? - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_2.html
ஓடுவது முள் அல்ல...நம் வாழ்க்கை - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post.html
தாலாட்டு வேண்டுமா? தேசிய கீதம் வேண்டுமா? - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_51.html
இவ்வளவுதங்க குடும்பம்...! - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_98.html
நட்பின் வலிமை - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_55.html
ஆழ்மனத்தின் ஆற்றல் - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_17.html
உருகி உருகி நான் பிராத்திக்கும் கடவுளிடம் ஒரு நாள் பேச சந்தர்ப்பம் கிடைத்தது... - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_6.html
கடவுளை காட்டுங்க! - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_24.html
சில நேரங்களில் சில மனிதர்கள்... - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_14.html
கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்!!! - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_13.html
கண்ணனுக்கு சொன்ன கதை - http://tut-temple.blogspot.in/2017/04/kannanukku-sona-kathai.html
No comments:
Post a Comment