Subscribe

BREAKING NEWS

04 September 2017

வாழ்வில் வளம் பெற - அருள் முத்துக்கள்


அறிய வேண்டிய மகான்கள் வரிசையில் இன்று ஸ்ரீ மகாவீரர் பற்றியும்,அவர்தம் அருள் மொழிகள் பற்றியும் காண உள்ளோம்.அவரின் அருள்மொழிகள் அனைத்தும் கடினமானவை அன்று.மிக மிக எளிது படிப்பதற்கு மட்டும் அல்ல..பின்பற்றுவதற்கும் சேர்த்து தான்.காலை எழுந்தது முதல் செய்ய வேண்டிய முத்தான மணிகளை அழகாக சொல்லி இருக்கின்றார்  ஸ்ரீ மகாவீரர்.


சமண சமயத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய மாபெரும் ஜைன மதத்துறவி மகாவீரர் ஆவார். மூன்று ரத்தினங்கள் என அழைக்கப்படும் ‘நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல்’ என்ற போதனையை போதித்தவர். ஜீனர் (வென்றவர்), மாமனிதர், ஞானப்புத்திரர், அதிவீரர் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். அவருடைய போதனைகளும், தத்துவங்களும் இன்றும் உலகமுழுவதும் அனைத்துத் தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகப் போற்றப்படுகிறது. தன்னுடைய 32 வயதிலேயே மனித வாழ்க்கையின்  உண்மையை உலகத்திற்கு எடுத்துரைத்த ‘வர்த்தமானரை’ நினைவு கூறும் வகையில், உலகெங்கும் உள்ள ஜைனர்கள் அவருடைய பிறந்த நாளான ஏப்ரல் 2 ஆம் தேதியை, ஒவ்வொரு வருடமும் ‘மகாவீரர் ஜெயந்தியாக’ கொண்டாடுகின்றனர். சிறுவயதிலேயே ஆன்மீகத்தில் ஈடுபாடுகொண்டு இல்லறவாழ்வினைத் துறந்து, துறவறம் மேற்கொண்ட மகாவீரரின் வாழ்க்கை வரலாறு மற்றும் போதனைகளை விரிவாகக் காண்போம்.





பிறப்பு: கி.மு. 599
இடம்: குண்டா, வைசாலி, பீகார் மாநிலம், இந்தியா
பணி: மத குரு 
இறப்பு: கி. மு. 527
நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு
‘வர்த்தமானர்’ என்ற இயற்பெயர்கொண்ட “மகாவீரர்” கி.மு. 599 வருடம், இந்தியாவின் பீகார் மாநிலம் வைசாலிக்கு அருகிலுள்ள “குண்டா” என்ற இடத்தில் சித்தாத்தர் என்பவருக்கும், திரிசாலாவுக்கும் மகனாக ஒரு அரசக் குடும்பத்தில் பிறந்தார். இவருக்குப் பெற்றோர்கள் இட்டப் பெயர் “வர்த்தமானர்” ஆகும்.

ஆரம்ப வாழ்க்கை
அரசக் குடும்பத்தில் பிறந்ததால், மிகவும் செல்வாக்காக வளர்க்கப்பட்டார். இருப்பினும் அச்சிறுவயதிலே ஆன்மீகநாட்டம் கொண்டவராகவும், தியானத்திலும், தன்னறிவதிலும் அதிக ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். பின்னர் யசோதரை என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, இல்லறவாழ்க்கையை நடத்தி வந்தார். சமணத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக விளங்கிய அவர், பிறகு இல்லற வாழ்விலிருந்து விலகி, தன்னுடைய முப்பதாவது வயதில் அரச வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கையைத் துறந்து துறவறம் மேற்கொண்டார்.



மகாவீரரின் ஆன்மீகப் பயணம்
மனித வாழ்க்கையின் அர்த்தம் தேடி, சுமார் பனிரெண்டு ஆண்டுகள் தியானம் மற்றும் ஆன்மீகத் தேடலில் ஈடுபட்ட மகாவீரர் அவர்கள், “சாலா” என்னும் மரத்தடியில் ஞானம் பெற்றார். அதிலிருந்து அவர் “மகாவீரர்” என அழைக்கப்பட்டார். மகாவீரர் என்றால், ‘பெரும்வீரர்’ என்று பொருள் ஆகும். தான் கண்ட உண்மைகளை உலகத்திற்கு எடுத்துரைக்க விரும்பிய மகாவீரர், இந்தியா முழுவதும் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு, தாம் அறிந்த உண்மைகளை மக்களுக்கு போதித்தார். வெறும் கால்களில், துணிகள் ஏதும் இன்றி, அவர் போதித்த போதனைகளைக் கேட்க அனைத்துத்தரப்பு மக்களும் திரண்டது மட்டுமல்லாமல், சமண சமயம் இந்தியாவெங்கும் தீவிரமாக பரவத்தொடங்கியது. இதனால், சமண மத குருமார்கள் வரிசையில் மகாவீரர் இருபத்தி நான்காவது தீர்த்தங்கரராகப் போற்றப்பட்டார். இவரே சமண சமயத்தில் தோன்றிய கடைசி தீர்த்தங்கரும் ஆவார்.

மகாவீரரின் போதனைகள்
இருபத்திநான்கு தீர்த்தங்கரர்களில் கடைசி தீர்த்தங்கரர் என சமணர்களால் போற்றப்படும் மகாவீரரின் போதனைகள், அன்பையும், மனிதநேயத்தையும், அகிம்சையையும் போதிக்கும் உன்னத கோட்பாடுகளாக விளங்கியது. மகாவீரர், ‘ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஓர் ஆத்மா உண்டென்றும், அது, தனது நல்ல அல்லது கெடுதல் செயல்களின் விளைவாக “கர்மா” என்னும் வினைப் பயன்களை அடைய நேரிடும்’ என போதித்தார். இதிலிருந்து விடுபட, மூன்று ரத்தினங்கள் என அழைக்கப்படும் ‘நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல்’ போன்றவற்றை கடைப்பிடித்தால், ‘சித்த நிலையை அடையலாம்’ எனவும் போதித்தார். மேலும், ‘எந்த உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்காமல் இருத்தல், உண்மையை மட்டும் பேசுதல், திருடாமை, பாலுணர்வு இன்பம் துய்காதிருத்தல், பணம் பொருள் சொத்துகள் மீது ஆசை கொள்ளாமல் இருத்தல்’ என ஐந்து பண்புகளும் ஜைன மதத்தின் உறுதிமொழிகளாக விளங்கின. உண்மையை சொல்லப்போனால் மகாவீரர் அகிம்சையை தன்னுடைய கொள்கையாக போதித்த மாபெரும் சீர்த்திருத்தவாதியாக போற்றப்படுகிறார்.




இறப்பு

அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகாட்ட வேண்டும், பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமையும், கொல்லாமையுமே அறநெறி எனக் காட்டி அகிம்சை வழியையும், அன்பு வழியையும் மக்களுக்கு உணர்த்தி, சமண சமயத்தின் திருவுருவமாகவே வாழ்ந்த மகாவீரர் கி. மு. 527ல் பீகாரிலுள்ள “பாவா” என்னும் இடத்தில் தன்னுடைய 72வது வயதில் காலமானார்.

முத்தான அருள் மொழிகள் இதோ :

  • அதிகாலையில் எழுந்திரு.
  • படுக்கையிலிருந்து வலது பக்கமாக எழுந்திரு.
  • கிழக்கு முகமாக உட்கார்ந்து கொள்.
  • கடவுளை வணங்கு.
  • மந்திரத்தை நினை -ஜபம் செய்.
  • காலைக்கடன்களை முடித்துக்கொள். கை, கால், முகம், சுத்தம் செய்து கொள்.
  • உடனே குளித்து விடு.
  • ஆலயத்திற்கு செல்.
  • தெய்வ வழிபாடு செய்.
  • பின்னர் உன் தொழிலைக் கவனி.
  • தொழிலைச் செய்வதில் ஊக்கம் கொள்.
  • நியாய முறையில் பொருளைத்தேடு.
  • அநியாயத்தை மனத்திலும் கருதாதே.
  • உலகத்தோடு ஒத்து வாழ்.
  • உன்னைப் போல் மற்றவரையும் நினை.
  • எவ்வுயிர் கட்கும் தீங்கு செய்யாதே.
  • மற்றவரைக் கண்டு பொறாமைப்படாதே.
  • புகழொடு வாழ்.
  • பகைவரிடத்திலும் இனிமையாகப் பேசு.
  • எல்லோரிடத்திலும் அருவருப்பாகப் பேசாதே.
  • எவரிடத்திலும் அருவருப்பாகப் பேசாதே.
  • அனைவரிடத்தும்  முக மலர்ச்சியுடன் பேசு.
  • நல்லவரைப் பின்பற்றுக.
  • நல்லவர் சொற் கேள்.
  • நல்லவர் போன வழி நீயும் போகுக.
  • நல்லோரைக் காண்பதுவும் நன்றே.
  • நெடுந்தூரம் சென்றாயினும் நல்லவரைக் காண்க.
  • பெரியோரிடத்தில் வணக்கமாய் இரு.
  • பெரியோர் எதிர் நின்று மாறுதல் பேசாதே.
  • பெரியோர் பேச்சைக் கேள்.
  • பெரியோரைக் கண்டால் தாழ்மையுடன் நட
  • பெரியோர் வார்த்தையை மீறாதே
  • பெரியோர் சொற்படி நட.
  • தீயோருடன் சேராதே.
  • தீயோர் சொற்களைக் கேட்காதே.
  • தீயோருடன் பழகாதே.
  • தீயோரைக் கண்டால் தூர நட
  • தீயோரைக் காண்பதும் தீதே.
  • தீது செய்தல் இம்மைக்கும் மறுமைக்கும் தீதே.
  • தர்மம் செய்க.
  • தர்மத்தைப் பேணிக் காக்க.
  • புண்ணியம் செய்க.
  • பாபத்தைச் செய்யாதொழிக.
  • இறைவனை வழிபடுக.
  • குருக்களை வணங்குக.
  • அற நூல்களை ஓதுக.
  • கொலை செய்யாதே.
  • பொய் பேசாதே.
  • கொல்லானை எல்லாவுயிரும் கைகூப்பித் தொழும்.
  • திருடாதே (களவு செய்யாதே).
  • ஐம்புலனை அடக்குக.
  • பிரம்மசர்ய விரதம் காக்க.
  • பொருள்மீது பேராசைப் படாதே.
  • பொருட்கள் கிடைத்ததைக் கொண்டு திருப்தியாய் இரு.
  • நீ மனிதனாக இரு.
  • நீ மனிதனாக வாழ்க.
  • விலங்கு இனத்தைச் சேர்ந்தவனாக வாழாதே.
  • பகுத்தறிவுள்ளவனாக வாழ்க.
  • பொறாமைப்படாதே.
  • கோபத்தை அடக்குக.
  • கர்வங் கொள்ளாதே.
  • வஞ்சனை செய்யாதே.
  • கபடம் செய்யாதே.
  • பிறருக்குக் கொடுத்து வாழ்தலைக் கற்க.
  • லோபத்தை விடுக.
  • அன்னமிட்டுண் (அன்னதானம் செய்)
  • அபய தானம் செய்.
  • கல்விக்கு உதவி செய்.
  • பிறர் பிணி நீக்குக.
  • பிறர் நலம் கருதுக.
  • தன்னலம் கருதாதே.
  • பிறரை இகழாதே.
  • தற்புகழ்ச்சி செய்யாதே.
  • எல்லோரிடத்திலும் நேசமாயிரு.
  • எவ்வுயிரையும் துன்புறுத்தாதே.
  • யாருக்கும் கெடுதி செய்யாதே.
  • பிற உயிருக்கு இன்னலை நினைக்காதே.
  • பிறருக்குக் கெடுதி யுண்டாவதைப் பற்றிப் பேசாதே.
  • ஊன் உண்ணாதே.
  • ஊன் உண்பது மனித இயல்பல்ல.
  • ஊன் உண்பது கொடிய விலங்கின் செயல்.
  • கள் குடிக்காதே.
  • கள் மயக்கத்தைத் தரும்.
  • கள் அறிவைக் கெடுக்கும்.
  • கள் மனித இயல்பைக் கெடுக்கும்.
  • கள்ளைக் கனவிலும் கருதாதே.
  • களவையும் கனவில் நினைக்காதே.
  • பிறர் பொருளை விரும்பாதே.
  • பிறர் மனை நயவாதே.
  • சூதாடாதே.
  • வேசியை நேசிக்காதே.
  • விபசாரியை விரும்பாதே.
  • குருபத்தினியைக் கருதாதே.
  • கன்னியைக் கெடுக்காதே. குலமாதரைக் கெடுக்காதே.
  • மாதாவைத் தெய்வமாக நினை
  • செய்ந்நன்றி மறவாதே.
  • பித்ரு துரோகம் நினைக்காதே.
  • தாயாதி துரோகம் நினைக்காதே.
  • அண்டினவரைக் காப்பாற்றுக.
  • பிராணிகளை வதைக்காதே.
  • பிராணிகளின் காது முதலானவற்றை அறுத்துத் துன்புறுத்தாதே.
  • பிராணிகளை அடிக்காதே.
  • பிராணிகளுக்குச் சரியான வேளையில் தீனி வைக்காமல் கட்டிப் போடாதே.
  • காலந் தவறி தீனி வைக்காதே.
  • காலந்தவறி தண்ணீர் காட்டாதே.
  • வண்டிகளில் (பொதிமாடுகளின் மீது) அதிகக் சுமை ஏற்றாதே.
  • மாடுகள் வண்டியிழுக்க சக்தியற்றவையாயிருப்பின் வண்டியைத் தள்ளி உதவி செய்.
  • உதவி செய்யாமல் அடிக்காதே.
  • பசுங்கன்றுக்குப் பால் விடு.
  • பாலை அடியோடு கறக்காதே.
  • கன்றுகளைக் காப்பாற்று; உழவுக்கு உதவும்.
  • வயதான மாட்டை ஊன் உணவுக்கு விற்காதே.
  • உழைத்த உயிர் நீங்கிய மாட்டை ஓரிடத்தில்; புதைத்து விடு.
  • பொய்ப் பிரசாரம் செய்யாதே.
  • பிறருக்கு துன்பம் ஏற்படும் சொல்லைச் சொல்லாதே.
  • உண்மையற்றதை உலகில் பரப்பாதே.
  • ஆண் பெண் சம்பந்தமான ரகசியத்தை வெளியிடாதே.
  • ரகசியத்தை அறிந்தாலும் அறியாமலிருந்து விடு. வெளியிடாமல் இருந்துவிடு.
  • பிறர் பொருளை அபகரிக்காதே.
  • உன்னிடம் பிறர் இருப்பு வைத்த பொருளை அவர் மறந்து விடினும் அதனைக் திருப்பிக் கொடுத்து விடு.
  • பிறர் பொருளை அபகரிக்கக் கனவிலும் கருதாதே.
  • தன்னுடையதல்லாதவற்றை யாருடையதென்று விசாரித்து அவருக்குக் கொடுத்து விடு.
  • அரசு ஆணையை மீறாதே.
  • அரசு சட்டப்படி நட
  • அரசுக்கு அடங்கி நட.
  • அரசை அவமதிக்காதே.
  • அரசு அன்று கொல்லும்.
  • தெய்வம் நின்று கொல்லும்.
  • ராஜா பிரத்யக்ஷ தேவதா.
  • பாலில் நீரைக் கலந்து விற்காதே.
  • தான்யத்தில் மண்ணையும் கல்லையும் கலந்து விற்காதே.
  • அதிக விலையுள்ள பொருளில் குறைவான விலையுள்ள பொருளைக் கலந்து விற்காதே.
  • அழுகிய பொருளை அகற்றி விடு. அதனைக் கலந்து விற்காதே.
  • வாங்கும்போது அதிக நிறுத்தலில் வாங்காதே.
  • விற்கும் போது குறைவான நிறுத்தலில் விற்காதே.
  • விலையைக் குறைத்தாலும் குறை அளவைக் குறைக்காதே.
  • அளவை மத்யஸ்தமாக அளத்தல் வேண்டும்.
  • வாங்கும்போது அதிக அளவில் வாங்காதே.
  • விற்கும்போது குறைந்த அளவில் விற்காதே.
  • திருட்டுப் பொருளை வாங்காதே.
  • சட்டத்திற்கு மீறி நடக்காதே.
  • பொருள்களை மிதமாக வைத்துக் கொண்டு வாழ்க.
  • அதிகமான பொருள்களைச் சேர்த்து வைக்காதே.
  • உன் தேவைக்கு அளவான பொருள்களைச் சம்பாதித்துக் கொள்.
  • அதிகமான பொருள்களை நீயே பொருளற்றவர் கட்குப் பங்கிட்டுக் கொடு.
  • எதிலும் அதிக ஆசைப் படாதே.
  • ஜாதி குல முறைப்படி மணம் செய்து கொள்.
  • மணம் செய்து கொண்ட மனைவியுடன் ஒத்து வாழ்.
  • மனைவி மனம் நோக எதையும் செய்யாதே.
  • தன் மனைவியிருக்க பிறர் மனைவியைச் சேராதே.
  • வேசியின் உறவு கொள்ளாதே.
  • புணர்ச்சி செய்வதில் அதிக ஆவல் கொள்ளாதே.
  • புணர்ச்சி செய்வதை ஒரு தொழிலாகக் கொள்ளாதே.
  • மக்களைப் பெறுதற்கு மிதமாகப் புணர்தல் வேண்டும்.
  • புணர்ச்சி செய்வதற்குரிய அங்கத்தில் புணர்தல் வேண்டும்.
  • புணர்ச்சிக்குரிய காலத்தில் (இரவில்) புணர்தல் வேண்டும்.
  • பகலில் புணர்ச்சி செய்யாதே.
  • உறவினரை உள்ளன்போடு நேசி.
  • உறவினருக்கு உன்னால் இயன்ற உதவி செய்.
  • உறவினருக்கு விருந்தளி.
  • விருந்தினரிடம் முகமலர்ந்து பேசு.
  • உபசரித்து உள்ளங்களித்து உப்பிலாக் கூழிட்டாலும் உண்பது அமிர்தமாகும்.
  • முகங்கடிந்து முப்பழமொடு பால் கொடுப்பினும் கடும்பசி யாகும்.
  • வீட்டிற்கு வந்தவரை வாவென்று அழைக்காமல் இராதே.
  • பிறருக்குக் கொடுப்பதில் உன்னிடம் உள்ளதை நல்ல எண்ணத்துடன் மறைக்காதே
  • பிறர் கொடுப்பதைக் கண்டு பொறாமைப் படாதே.
  • உலகில் நல்லவனாக வாழ்க.
  • கெட்டவனென்று பேரெடுக்காதே.
  • உலகுக்கு உதவியாளனாக வாழ்.
  • உலகத்தார் விரும்பாத செயலைச் செய்யாதே.
  • உன்னுடைய வாழ் நாட்களை நல்லபடியே கழி.
  • வாலிபத்தில் எவ்விதமாயினும் வாழ்ந்து விடலாம். முதுமையில் வாழ இயலாது.
  • முதுமையில் உறவினருடன் ஒத்து வாழ்தல் வேண்டும்.
  • பெண்கள் தனித்து வாழ்தல் கூடாது.
  • பெண்கள் இளமையில் தந்தை தாயின் அடக்கத்தில் இருத்தல் வேண்டும்.
  • பெண்கள் வாலிபத்தில் கணவனுடன் கூடி வாழ்தல் வேண்டும்.
  • பெண்கள் முதுமையில் மக்களுடன் கூடி வாழ்தல் வேண்டும்.
  • மக்கள் இளமையில் நன் முறையில் இருக்க வேண்டும்.
  • மக்கள் மறுமையில் சுகத்துடன் வாழ முயலல் வேண்டும்.
பார்ப்பதற்கு எளிமையாக உள்ளதே என்று அலட்சியப்படுத்தி விட்டு விட வேண்டாம்.மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள்.தங்கள் மனம் கவர்கின்ற ஒரு முத்தையேனும்,தங்களின் சொத்தினைப் போல் நினைத்து பின்பற்றிக் காத்திடுக.



- மகான்களின் அருள்மொழிகள்  தொடரும்...



முந்தைய பதிவுகளுக்கு:-

பாம்பாட்டி சித்தர் பெருமைகள்... - 

பிருகு முனிவர் ஆசிரமத்தில் நம் வாசகரின் மற்றுமோர் நேரடி அனுபவங்கள்.. - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_30.html

அருள்மிகு பிருகு மகரிஷி சித்தர் குடில் தரிசனம்... - http://tut-temple.blogspot.in/2017/04/test.html

இம்மாத மலை தரிசனம் - ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_15.html

கேட்ட வரம் அருளும் வீரபாண்டி கௌமாரிஅம்மன் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_60.html

ஆடி மாத சிறப்பு தரிசனம் - வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோவில் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_1.html

இப்பிறப்பில் உன்னைக் காண்கின்றோம் - வெள்ளியங்கிரி ஈசா ! - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_51.html

வெள்ளியங்கிரி ஈசன் தரிசனம் கிடைக்குமா? - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_3.html

வெள்ளியங்கிரி ஈசனே! நீயே துணை - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_28.html

இன்பத்தை அள்ளித்தரும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_15.html

பாவம் தீர்க்கும் வெள்ளியங்கிரி - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_19.html

மனதை வெளுக்கும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_13.html

மனக் கஷ்டம் நீங்க..மயிலாண்டவர் திருக்கோவிலுக்கு வாங்க ! - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_24.html

மருதேரியில் ஸ்ரீ பதஞ்சலியின் ஆசிகள் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_15.html

உன்னுள் உத்தமனைக் காணும் வழி சாகாக் கல்வி - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_4.html

அருளை அள்ளித்தரும் நவயோகி,தவ யோகி,சிவ யோகி ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகள் - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_82.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html

No comments:

Post a Comment