Subscribe

BREAKING NEWS

09 September 2017

அருள்மிகு அருங்கரை அம்மன் திருக்கோவில்!

அம்மன் என்றாலே பெண் தெய்வம் தான். அதனால் பெண்கள் அனைவரும் அம்மனுக்கு விரதம் இருந்து பல விதமான பிரச்சனைகளிலிருந்து விடுபடுகின்றனர். ஆனால் கரூர் மாவட்டம் பெரிய திருமங்கலத்திலுள்ள அருங்கரை அம்மன் ஆண்களுக்கு மட்டுமே அருள் புரிகிறார்.


தலவரலாறு:

முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த மீனவர்கள் அமராவதி ஆற்றில் மீன் பிடிக்கும் தொழிலை செய்து வந்தனர். ஒருசமயம் ஒரு மீனவர் ஆற்றில் வலைவீசிய போது, அம்மன் சிலை உள்ள பெட்டி ஒன்று சிக்கியது. அம்பாள் தனக்கு அருள்புரிவதற்காகவே ஆற்றில் வந்ததாக கருதிய மீனவர்கள் ஆற்றங்கரையிலுள்ள மரத்தின் அடியில் பெட்டியை வைத்து வழிபாடு செய்து வந்தனர். காலப்போக்கில் அவர்கள் அவ்விடத்தை விட்டு சென்றுவிடவே, மணல் மூடி பெட்டி மண்ணுக்குள் புதைந்து விட்டது.
பெட்டி இருந்த இடத்தில் சிறிய மேடு மட்டும் இருந்தது. பல வருடங்களுக்கு பிறகு இப்பகுதியில் நல்லதாய் என்ற சிறுமி, மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது ஒரு பசு மட்டும் மரத்தின் அடியில் இருந்த மணல் மேட்டின் மீது பால் சொரிந்ததைக் கண்டு வியப்புற்று அருகில் சென்று பார்த்தபோது ஒரு மேடு இருந்தது. அதன் மீது அவள் அமர்ந்தாள். அதன்பின் எழவில்லை.மாலையில் மாடுகள் மட்டும் வீடு திரும்பின. சிறுமியைக் காணாததால் ஊரில் இருந்த ஆண்கள் அவளைத்தேடி இங்கு வந்தபோது, சிறுமி மணல் திட்டில் அமர்ந்திருந்ததைக் கண்டனர். அங்கிருந்து வர மறுத்த சிறுமி அவர்களிடம், நான் இங்கேதான் இருக்க விரும்புகிறேன். என்னைக் கண்ட இந்த நாளில், இதே நேரத்தில் மட்டும் எனக்கு பூஜை செய்து வழிபடுங்கள் என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டாள். பின் அவர்கள் சிறுமியை அம்பாளாக எண்ணி உருவம் ஏதுமில்லாமல் வழிபட்டு வந்தனர். பிற்காலத்தில் இங்கு கோவில் கட்டப்பட்டது.

தலச் சிறப்பு :

சிறுமியை தேடிய ஆண்கள் இப்பகுதிக்கு வந்தது செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வேளை என்பதால், இங்கு செவ்வாய்க்கிழமை மட்டுமே கோவில் திறக்கப்பட்டு நள்ளிரவில் பூஜை நடக்கிறது.
பெண்களுக்கு உள்ளே அனுமதியில்லை. அவர்கள் வாசலில் நின்று வழிபடலாம். பெண் குழந்தைகள் கூட கோவிலுக்குள் செல்ல அனுமதி கிடையாது.
அம்பாளுக்கு பூஜை முடிந்தபின்பு, படைக்கப்பட்ட பூஜைப் பொருட்கள், மற்றும் நேர்த்திக்கடனாக செலுத்தும் வாழை, தானியங்கள் போன்றவற்றை கோவில் முன் மண்டபத்தில் இருந்து சூரை விடுகின்றனர். இதனை பெண்கள் தங்களது சேலைத்தலைப்பில் பிடித்துக் கொள்கின்றனர். அம்பாள் பிரசாத பொருட்களின் வடிவில் பெண்களுக்கு அருளுவதாக நம்பிக்கை.

பிரார்த்தனை :



கோவில் பெயர் : அருள்மிகு அருங்கரை அம்மன் திருக்கோவில்.

அம்மனின் பெயர் : அருங்கரை அம்மன்

தல விருட்சம்   : ஊஞ்சல்மரம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை   மணி முதல் 10 மணி வரை, 
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை. 

முகவரி : கோவில் நிர்வாகக்குழு, அருங்கரையம்மன் கலைக்கல்லூரி, அம்மன் நகர், பெரியதிருமங்கலம், சின்னதாராபுரம் - 639 202. 
கரூர் மாவட்டம். P h:4320 - 233 344, 233 334, 94432 - 37320.

கோவில் சிறப்பு : 

* 500 வருடங்களுக்கு முன் பழமையானது.

* சோழர்களால் கட்டப்பட்டது

* இது 129 வது தேவாரத்தலம் ஆகும்.

அம்பாள் கோவில்களில் வழக்கமாக தரப்படும் மஞ்சள், குங்கும பிரசாதமும் இங்கு தரப்படுவதில்லை

*  நைவேத்தியம் தயாரிக்கும் அடுப்பிலுள்ள சாம்பலையே தருகின்றனர். இது மருத்துவத்தன்மை வாய்ந்தது என்கிறார்கள். கோவில் அருகே ஓடும் அமராவதி ஆறு அம்பாளுக்கு மாலையிட்டது போல இவ்விடத்தில் திரும்பிச் செல்கிறது. தொடக்கத்தில் அம்பாள் "நல்லதாய்' என அழைக்கப்பட்டாள்.

* ஆற்றங்கரையின் அருகே அமர்ந்த அம்பாள் என்பதால் இவளை "அருங்கரை அம்மன்' என்றும் அழைத்தனர். காலப்போக்கில் இந்த பெயரே நிலைத்து விட்டது.ருக்கிறார். 

* பெண்கள் இந்த ஆலயத்திற்குள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. வெளியில் நின்றுதான் வணங்க வேண்டும். ஆண்கள் மட்டுமே உள்ளே சென்று வணங்குகின்றனர். 

குடும்பம் சிறக்க, விவசாயம் செழிக்க அம்பாளிடம் வேண்டிக் கொள்கின்றனர். காவல் தெய்வங்களுக்கு கிடா வெட்டியும், குதிரை பொம்மைகள் செய்து வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றன

நன்றி,திருமதி,ரமாசங்கர்.