Subscribe

BREAKING NEWS

28 September 2017

TUT நவராத்திரி 5 ம் நாள் தரிசனம்

தள வாசகர்களே

நவராத்திரி கொண்டாட்டங்கள் சீரோடும்.சிறப்போடும் நடைபெற்று வருகின்றது.
இதோ.இன்றைய பதிவில் 5 ம் நாள் தரிசனம் பற்றி காண உள்ளோம். அதற்கு முன்பாக சில நவராத்திரி  செய்திகள்  சுருக்கமாக காண்போம்.

கடந்த 21-ம் தேதி தொடங்கி, நவராத்திரி நடைபெற்றுவருகிறது. இதன்பொருட்டு பல கோயில்கள், வீடுகளில் மக்கள் கொலு வைத்து நவராத்திரியை சிறப்பாகக் கொண்டாடிவருகின்றனர் எனபது நாம் அறிந்த செய்தியே. நம் TUT தளமும் கூடுவாஞ்சேரியில் உள்ள மாமரத்து விநாயகர் கோயில் மற்றும் வேலி அம்மன் ஆலயத்தில் உள்ள நிகழ்வின் பதிவுகளை, தினசரி அம்மன் தரிசனத்தை பதிவேற்றி வருகின்றோம். ஒரே ஒரு மனக்குறையாக இருப்பது நந்தீஸ்வரர் தரிசனம் பெறாமல் இருப்பது தான். நவராத்திரி முடிவதற்குள் எப்படியாவது தரிசனம் பெற வேண்டும் என்று எல்லாம் வல்ல ஈசனிடம் வேண்டுகிறோம்.

சக்தியை நோக்கி அனுஷ்டிக்கும்  விரதங்களில் ஒன்றுதான் நவராத்திரி விரதம். மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

மகா சங்கார (பேரழிவுக்) காலத்தின் முடிவில், இறைவன் உலகத்தை உண்டாக்க விரும்பிய போது இச்சை என்ற சக்தியும், அது எவ்வாறு தோன்றியது என்று அறிந்தபோது ஞானசக்தியும் தோன்றின; பின் கிரியா சக்தியினால் இறைவன் உலகைப் படைத்தான் என்ற கருத்தே நவராத்திரி விழாவால் விளக்கப்படுகின்றது. (இச்சை = விருப்பம், ஞானம் =அறிவு, கிரியா = செய்தல், ஆக்கல்)
  • நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.
  • நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்.

  • இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான் என்பது சிவாகமத்தின் உள்ளுறையாகும்.

நவராத்திரி விரத நியதிகள்

  • புரட்டாதி மாத வளர்பிறை பிரதமைத் திதியில் கும்பம் வைத்து நவமி வரை பூசை செய்தல் வேண்டும்.
  • வீடுகளிலும் ஆலயங்களிலும் கொலுவைத்தல் வேண்டும்.
  • விரதம் கைக்கொள்ளுவோர் அமாவாசையில் ஒரு வேளை உணவு உண்டு பிரதமை தொடக்கம் முதல் எட்டு நாட்களும் பகல் உணவின்றி இரவு பூசை முடிந்தபின் பால் பழம் அல்லது பலகாரம் உண்பது நல்லது.
  • ஒன்பதாவது நாளாகிய மகாநவமி அன்று பட்டினியாய் (உபவாசம்) இருந்து மறுநாள் விஜயதசமியன்று காலை ஒன்பது மணிக்குமுன் பாறணை செய்தல் வேண்டும். இயலாதவர்கள் முதல் எட்டுநாளும் பகல் ஒருவேளை உணவருந்தி ஒன்பதாம் நாள் பால் பழம் மட்டும் உட்கொள்ளலாம்.
  • விஜயதசமி அன்று காலையில் சுவையுள்ள உணவுப் பதார்த்தங்கள் தயார் செய்து சக்திக்கு நிவேதித்து நவமியில் வைத்துள்ள புத்தகம் இசைக்கருவிகளைப் பாராயணம் செய்து குடும்ப அங்கத்தினர்களுடன் பாராயணத்தை பூர்த்தி செய்யலாம்.
  • தசமி திதியில் பாராயணம்  செய்தல் வேண்டும்.
  • இவ் விரதத்தை ஒன்பது வருடங்கள் தொடர்ந்து அனுட்டித்தல் வேண்டும்.
நவராத்திரியில் ஸ்ரீதேவியைத்(திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள் சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீட்டுப்பேறாகிய முக்தியையும் நல்குவாள் என்று காரணாகமம் கூறுவதாகச் சொல்லப்படுகின்றது

விரதகாலங்களில் ஓதத்தக்க தோத்திரப்பாடல்கள்

  1. தேவி மகாத்மியம்
  2. அபிராமி அந்தாதி
  3. துர்க்கா அஷ்டகம்
  4. இலட்சுமி தோத்திரம் (கனகதாரா தோத்திரம்)
  5. சகலகலாவல்லி மாலை
  6. சரஸ்வதி அந்தாதி
  7. மஹிஷசுரமர்த்தினி தோத்திரம்
  8. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்
சில தோத்திரப் பாடல்கள் கண்டு, அன்னையின் தரிசனம் காண்போம்.


பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும் படி நின் கடைக்கண் நல்காய் உளம் கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள் ஓதிமப் பேடே சகலகலாவல்லியே!








எல்லோராலும்  பாட்டு எழுத முடிவதில்லை. அப்படியே பாட்டெழுதினாலும் பொருட்செறிவுடன் எழுத எல்லோராலும்  முடிவதில்லை. அப்படியே பொருட் செறிவுடன் எழுதினாலும் எல்லாருக்கும் பயன் தரும் பொருளுடன் எழுத எல்லாராலும் முடிவதில்லை. அப்படி எழுதுவது கலைவாணியின் அருள் உள்ளவருக்கு மட்டுமே முடியும்.

அவள் அருள் பெற்றவர்களும் தமிழ்ப்பாடல்கள் எழுதுவார்கள்; அருள் பெறாதவர்களும் எழுதுவார்கள். அருள் பெற்றவர் எழுதுவது தீம்பால் அமுதமென இருக்கும். மற்றவர் எழுதுவது வெறும் நீரென இருக்கும். அவை இரண்டினையும் பிரித்து நமக்கு தீம்பால் அமுதத்தை தெளிவாக்கிக் கொடுக்கும் அன்னப் பறவை போன்றவள் கலைவாணி. 




அன்னையின் தரிசனம் பெற அனைவரும் தயாரா? மீண்டுமொரு அம்மையப்பன் தரிசனம்.







தாயும் நீயே..தந்தையும் நீயே..என்று சரணாகதி அடைவோம். கண்ணில் ஒற்றிக் கொண்டோம்.மேலே காண்பது மாமரத்து விநாயகர் கோயிலில் நாம் பெற்ற தரிசனம்.

வேலி அம்மன் ஆலயம் ஆலயத்தில் கஜேந்திர தரிசனம்.தற்போது தான் கஜேந்திர தரிசனம் பற்றி நம் தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டோம்.








அப்பப்பா ..என்னே அழகு.. சொக்க வைக்கும் மீனாட்சியா? கருணையைப் 
பொழியும் காமாட்சியா? மொத்தத்தில் நம் பித்தம் தெளிந்து சித்தம் உணர்த்துகிறாள் நம் அன்னை.அன்பர்களே..இன்றைய தரிசனம் எப்படி இருந்தது? 


ஆறாம் நாள் தரிசனத்தில் அருள் பெறுவோம்.

முந்தைய பதிவுகளுக்கு:-

நவராத்திரி - 4 ம் நாள் தரிசனம் - (5) - https://tut-temple.blogspot.in/2017/09/4-5.html

 TUT நவராத்திரி சிறப்புப் பதிவு(3) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-3.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/09/tut-2.html

TUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு (1) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-1.html

TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temple.blogspot.in/2017/09/tut.html

TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - https://tut-temple.blogspot.in/2017/08/tut.html

விநாயகர் சதுர்த்தி செய்தி - மண(ன)ப் பொருத்தம் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_78.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html




No comments:

Post a Comment