Subscribe

BREAKING NEWS

01 September 2017

இயற்கை வழிபாட்டின் ரகசியம் உணர்த்திய மருதேரி பிரம்ம யக்னம்

மருதேரி

இயற்கை அன்னையின் தாலாட்டு தவிழும் பூமி. தற்போது செடி,கொடிகளின் வளர்ச்சியின் பின்புலத்தின் கொள்ளை கொள்ளும் அழகில். கண்களுக்கு விருந்தாய் உள்ளது. சென்ற முறை பிரம்ம யாகம் நிகழ்விற்காய் சென்று வந்தோம்.அந்த இன்பத்தை சற்று இங்கே அனைவரும் பெற்றிட, இங்கே பதிக்கின்றோம்.

மருதேரியில் பிருகு  மகரிஷி வாசம் செய்கின்றார்.குருவருள் நிரம்பித் ததும்பும் புண்ணிய பூமி பிருகு மகரிஷி அருள் நிலையம்.இங்கே சித்தர் வழியில் பூஜை,யாகம் மட்டும் நடைபெறும்.மௌன நிலையில் பிரபஞ்ச ரகசியம் உணர்த்தும் இடம். யாரும் யாரையும் இங்கே கட்டுப்படுத்துவதில்லை.ஒரு முறை சென்று வந்தாலே மீண்டும் ,மீண்டும் செல்லத் தூண்டும் அருள் நிலையம் மருதேரி .

அகத்தியர் வனம் மலேஷியா AVM  உடன் இணைந்து சனிக்கிழமை  அன்னதானம் செய்து விட்டு,அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை 13/08/2017 அன்று காலை பிரம்ம யக்னம் நிகழ்விற்காக மருதேரி கிளம்பினோம். அன்று காலை முதலே சரியான மழை.சிங்க பெருமாள் கோவில் அடைந்ததும். சரியாக பேருந்தில் ஏறி,சென்று கொண்டிருந்தோம். நல்ல மழை ..அதுவும் அடை மழை.









நம்மை பொருத்தவரை, மாதம் ஒருமுறை யேனும் மருதேரி செல்ல வேண்டும்.அந்த சுத்தமான காற்றை சுவாசிக்க, மனத்தில் மௌனத்தை இறுத்த , குருவின் அருள் பெற்றிட,இன்னும் இன்னும். இது நமக்கு கிடைத்த இன்பம்.இது ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம். சரியாக 8:30 மணி அளவில் உள்ளே சென்று ,குருவை வணங்கி அமர்ந்தோம். ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தார்கள்.

பிருகு மகரிஷியின் ஆசி வேண்டினோம். அகண்டம் ஏற்றப்பட்டது.எத்தனை முறை சொன்னாலும்,ஒவ்வொரு முறையும் குரு தொட்டுக்காட்டும் செய்திகள் வேறு.இட்டுக் காட்டும் நிலைகள் வேறு.




அகண்டத்தின் பேரொளியில் 

அகண்டம் ஏற்றப்பட்டதும், மனதில் உள்ள அழுக்குகள்,கறைகள் பிருகு முனிவரின் காயத்ரி சொல்ல சொல்ல,மனம் ஒடுங்கியது.





ஓம் சர்வ லோகாச்சார்யாய வித்மஹே 
பாத நேத்ராய தீமஹி 
தன்னோ பிருகு முனிச ப்ரசோதயாத் 

உந்தன் மலரடி போற்றுவதே யாம் பெற்ற பேரின்பம்.இதை விட நமக்கு என்ன வேண்டும்.? உண்டு,உறங்கி வாழ்வதற்கா இந்தப் பிறப்பு.இல்லவே இல்லை.பிருகு முனிவரின் கடைக் கண் பார்வையில் இருந்திடத் தான் இந்த பிறப்பு என்று உணர்ந்தோம்.







           
                                                                குருவின் பொற்றாள் சரணம்



                                                                   குருவின் கம்பீரம் 

அடுத்து, யாகத்திற்கான ஏற்பாடு வேலைகள் நடைபெற்றன. எப்போது சென்றாலும், இல்லை என்று சொல்லாது சன்மார்க்க நெறியில் இங்கே உணவிட்டுக் கொண்டிருப்பது மற்றுமொரு சிறப்பு. மழையின் மகிழ்வில்,அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது.






           பழங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி,சிறு சிறு துண்டுகளாக மாற்றினோம்.




அங்கே உள்ள ஒரு பைரவ அம்சத்திற்கு பிஸ்கட் வழங்கிய காட்சி மேலே.

அனைவரிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோள்.எப்போது சித்தர் பீடங்கள்,கோவில்கள் செல்லும்போதும், மறக்காமல் நல்லெண்ணெய் மற்றும் ஓரிரண்டு பிஸ்கட் பாக்கெட் வாங்கி செல்லுங்கள்.சித்தர்  கோவில்களில் கண்டிப்பாக பைரவர்களை தரிசிக்க முடியும்.இதுவரை சென்ற உயிர் நிலை கோவில்களில் அதாவது சித்தர் கோவில்களில் பைரவர்களை நாம் பார்த்துக் கொன்று வருகின்றோம்.



                                           சூடான,சுவையான இட்லி காலை உணவாக






யாகம் நடைபெற உள்ள இடம் மேலே காட்டியுள்ளோம்.மழை பொழிந்து கொண்டே இருந்தது.நேரமும் சென்று கொண்டு இருந்தது. அனைத்து ஆயத்தப் பணிகளும் முடிந்ததும், யாகம் ஆரம்பிக்க சென்றோம். அப்போது திரு.செல்வம் ஐயா,"யாகம் முடிவதற்குள் சூரிய பகவான் ஆசி அனைவருக்கும் கிடைக்கும் " என்றார். நமக்கு நம்பிக்கையில்லை.ஏனெனில் இருள் சூழ்ந்த மேகம் இருந்ததினால் தான்.











யாக சாலை தயாராகி விட்டது.நாமும் மனதளவில் தயாராகி விட்டோம்.இது நாம் பங்கு பெறும் மூன்றாம் யாகம்.இங்கே இதற்கு முந்தைய யாக காணொளி காட்சி இணைப்புகள் பதிவின் இறுதியில் இணைக்கின்றோம்.










வினைகள் தீர்க்கும் விநாயகரை வேண்டி, முதலில் தீபம் ஏற்றினோம். காற்றின் வேகத்தில் தீபம் ஏற்றுவது கடினமாக இருந்தது. கட்டுக் கட்டாக தூபங்களை ஏற்றி,அதன் மூலம் தான் தீபம் ஏற்றினோம்.


                                                         இதோ ! யாகம் ஆரம்பம்











வில்வம்,துளசி,தாமரை,ரோஜா, நவ தானியங்கள் என ஒவ்வொரு சமித்துக்களாக யாகத்தில் சமர்ப்பித்தோம். யாகத்தீ அந்த சூழல் தெய்விக மணம் பரப்பியது. மழையின் குளிரில் முதல் முதலாக செய்த யாகம், புதிய அனுபவமாய் இருந்தது. யாக குண்டத்தை சுற்றி அனைவரும் நின்று கொண்டோம். 








சூரிய வழிபாடு தொடங்கியது. சூரிய மந்திரம் சொல்லி, ஸமர்ப்பயாமி என்று சொல்லி, மஞ்சள்,குங்குமம்,நைவேத்தியம் என ஒவ்வொன்றாக சமர்பித்தோம்.அடுத்து சந்திரன்,இது போல நவகிரக நாயகர்களை அழைத்தோம்.சித்தர் பெருமக்களின் பாதம் சரண் அடைந்தோம்.பைரவர்களை அழைத்தோம். வாலைத் தெய்வத்தை வேண்டினோம். சக்தியின் அருளை வேண்டிக் கொண்டே இருந்தோம்.











                                                யாகத்தீ கொழுந்து விட்டு எறிந்த காட்சி




ஒவ்வொரு வேண்டுதலின் முடிவிலும் சற்று வித்தியாசமான உணர்வு நிலையை உணர்ந்தோம். சுமார் 1 மணி நேர நிறைவில் யாகம் முடிவுற இருந்தது.பொதுவான சங்கல்பம் வைத்தோம். மருதேரி அருள் நிலையத்திற்கு என்று சில வேண்டுதல்கள் வைக்கப்பட்டது.அவிர் பாகம் சமர்ப்பிக்கப் பட்டது.இதோ யாக நிறைவு காட்சிகள் கீழே 













 
                                                       பைரவருக்கு சமர்ப்பணம்


                                                         யாகம் நிறைவு பெற்ற பின்.


                                                   திருமூலர் கோ சாலையில் 

பின், திருமூலர் கோ சாலை சென்று,அங்கிருந்த கோமாதாவை வணங்கினோம்.பசுக்கள் பெருகி,அறம் செழிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யப் பட்டது.







மலர்கள் தூவி, கோ வந்தனம் செய்தோம்.மனது திருப்தியாய் இருந்தது. இந்த பிரம்ம யக்னம் உணர்த்தும் செய்தி என்ன? 






பூக்களின் நறுமணமும்,இயற்கையின் இன்னிசையும்.அக்னியின் ஆற்றலும்,மலையின் சாரலும் என அன்றைய தினம் மனம்,மொழி,செயல் அனைத்திலும் ஒரு ஒழுங்கைப் பதித்தது என்பதே உண்மை.





பிருகு வம்ச அருளாளர்களே ! இதோ இந்த ஆண்டுக்கான பிருகு மகரிஷியின் மகா குரு பூஜை  எதிர் வரும் மாதத்தில் நடைபெற உள்ளது. தேதி மற்றும் நேரம் மற்ற விபரங்கள் அழைப்பிதழ் கிடைத்ததும் பகிர்கின்றோம்.குரு பூஜையின் சிறப்பு நிகழ்வாக 108 க்கும் மேற்பட்ட மூலிகைகள் சேர்த்து சர்வ ரோக நிவாரண யாகம் நிகழ உள்ளது.இது போன்ற பற்பல ஆசிகள் நமக்குக் காத்திருக்கின்றது.இந்த யாகத்தின் பொருட்டு, இந்த பதிவைப் படித்து,குரு சேவையில் ஈடுபட விரும்பும் உள்ளங்கள்,தங்களால் முடிந்த உதவியை செய்யும் படி கேட்டுக் கொள்கின்றோம்.

பிருகு மகரிஷி அருள் நிலைய அன்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்...

அவரவர் இருக்குமிடத்திலோ அல்லது பயணப்பபடும் இடங்களிலோ இயற்கையான முறையில் விளைந்த மூலிகைகள், மரப்பட்டைகள், மருத்துவ குணம் பொருந்திய மலர்கள், விதைகள் ஆகியவற்றை சேகரித்து அருள் நிலையத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்

உதாரணமாக நெல்லிக்காய் கடைகளில் விதையுடன் கிடைக்கும்...அவற்றை வாங்கி விதை நீக்கி உலர வைத்து யாகத்திற்காக வழங்கலாம்.

காடுகளில் உலவும் சந்தர்ப்பம் கிடைத்தவர்கள் தேவதாரு போன்ற மரங்களின் பட்டைகளை சேகரிக்கலாம்.

பழங்களில் மாதுளம் போன்ற பழங்களின் தோலை உலர வைத்து தரலாம். வில்வ இலைகளை உலர வைத்து தரலாம்.

குரு பூசையில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கின்றோம்... ஒவ்வொருவரும் நூறு கிராம் அளவு மூலிகைகளை சேகரித்தால் கூட போதும்...

சர்வ ரோக நிவாரண யாகம் 108க்கும் அதிகமான மூலிகைகளை கொண்டு இயற்றப்படும்.. மேற்சொன்ன மூலிகைகள் உதாரணத்திற்காக சொல்லப்பட்டவையே... அன்பர்கள் பல்வேறு விதமான மூலிகைகளை அடையாளம் கண்டு சேகரித்து தரலாம்..


அருள் நிலையத்தில் புதிதாக முலிகை பெட்டகம்


அருள் நிலையத்தில் மூலிகைகள் சேகரிப்பு - பிரண்டை 





மூலிகைகளை அரைக்க மற்றும் மருந்து தயாரிக்க ஆட்டுக்கல்.இத எங்கயோ பார்த்த மாதிரி இருக்கா ? இப்போது வளர்ந்து வரும் எதிர்கால தலைமுறைகளுக்கு இவற்றைப் பற்றி அறிய வாய்ப்பே இல்லை.எப்போது இவற்றை எல்லாம் இழந்து மிக்ஸி,கிரைண்டர் என்று சென்றோமோ,அன்று முதல் நம் உடல் நலம் குன்றியது உண்மை.குறிப்பாய் பெண்கள் படும் உடல் தொந்தரவுகளுக்கும் இந்த மிக்ஸி,கிரைண்டர் காரணம்.

என்று பார்ப்போம்? 
நம் மரபின் மாற்றத்தை 
அம்மிக்கல்,ஆட்டுக்கல்
 வழியாக!


                        அருள் நிலையத்தில் மூலிகைகள் சேகரிப்பு - கண்டங்கத்திரி வேர்


நெல்லிக்காய் காயவைத்தது


                                                                 எருக்கம் செடிகள்


                                அருள் நிலையத்தில் மூலிகைகள் சேகரிப்பு -  ஆல் விழுதுகள்


முந்தைய பதிவுகளுக்கு:-

பாம்பாட்டி சித்தர் பெருமைகள்... - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_62.html



பிருகு முனிவர் ஆசிரமத்தில் நம் வாசகரின் மற்றுமோர் நேரடி அனுபவங்கள்.. - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_30.html


அருள்மிகு பிருகு மகரிஷி சித்தர் குடில் தரிசனம்... - http://tut-temple.blogspot.in/2017/04/test.html

No comments:

Post a Comment