அன்பர்களே,
அனைவருக்கும் TUT குழுமத்தின் சார்பாக நவராத்திரி நல்வாழ்த்துக்கள்.இன்றைய பதிவில் பேரின்பம் பெற காத்திருக்கின்றோம். பொதுவாக பேசும் போது இன்பம் என்ற வார்த்தையை கேட்டிருப்போம். நாம் அனுபவிக்கும் இன்பம் சிற்றின்பமே. அதையும் தாண்டி ஒரு இன்பம் - அதுவும் பேரின்பமாக உள்ளது. நம்மில் சிலர் சில நொடிகளில் பேரின்பம் அனுபவித்து இருப்போம். சிலர் ஆலயங்களில், சிலர் மகான்களின் ஆசியில், சிலர் இயற்கையின் வனப்பில், என்று சொல்லலாம்.
இந்தப் பதிவில் சிற்றின்பம்,பேரின்பம் பற்றிய தெளிவாக விளக்க உள்ளோம். படித்துப் பார்த்து பேரின்பம் அடையுங்கள்.அந்த வரிசையில் பார்த்தல் இந்த பதிவும் ஒரு பேரின்பமே.
மேலே சொன்ன கவியை படித்துப் பாருங்கள்.பேரின்பக் களிப்பை உணரலாம்.
படிப்பினால் ஈர்க்கப்பட்டால் சிற்றின்பம்
படைத்தவனால் ஈர்க்கப்பட்டால் பேரின்பம்
படைப்புகளை அனுபவித்தால் சிற்றின்பம்
படைப்புகளை ஆராதித்தால் பேரின்பம்
படைப்புகளை படைப்புகளாய் கண்டால் சிற்றின்பம்
படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் பேரின்பம்
என்னால் தான் இந்த வாழ்க்கையெனில் சிற்றின்பம்
இறைவனால் தான் இந்த வாழ்க்கையெனில் பேரின்பம்
நான் இந்த உடல் என்று எண்ணினால் சிற்றின்பம்
நான் இந்த உயிர் என்று எண்ணினால் பேரின்பம்
அமைதி ஆனந்தம் சிறிது பெற்று பின் இழந்தால் சிற்றின்பம்
அமைதி ஆனந்தம் நித்யமாகப் பெற்றால் பேரின்பம்
செய்வதெல்லாம் தனக்காக என்றால் சிற்றின்பம்
செய்வதெல்லாம் இறைவனுக்காக என்றால் பேரின்பம்
புறப் பொருட்களில் சுகம் பெற்றால் சிற்றின்பம்
அகத்திலே நித்திய சுகம் பெற்றால் பேரின்பம்
நிரந்தர பேரின்பத்தை மறைப்பது சிற்றின்பம்
நிலையற்ற சிற்றின்பத்திற்கு அப்பாற்பட்டது பேரின்பம்
உடலோடு மனதை இணைத்தால் சிற்றின்பம்
உயிரோடு மனதை இணைத்தால் பேரின்பம்
இன்பம் என்ற வடிவிலிருக்கும் துன்பமே சிற்றின்பம்
துன்பத்துள் அறியப்பட்டு இன்பமாவது பேரின்பம்
எங்கோ இருக்கின்றான் இறைவன் எனில் சிற்றின்பம்
எங்கும் இருக்கின்றான் இறைவன் எனில் பேரின்பம்
பலவீனம், நோய், துன்பம்,மரணம் தருவது சிற்றின்பம்
மரணமிலா பெருவாழ்வு தருவது பேரின்பம்
பயம்,சஞ்சலம்,சந்தேகம்,குற்ற உணர்வு தருவது சிற்றின்பம்
பயமின்றி,உறுதியோடு ,தூய்மையானது பேரின்பம்
சிறு உணர்ச்சிகளில் இன்பம் அடைவது சிற்றின்பம்
எல்லையற்ற பிரம்மத்தில் கலப்பது பேரின்பம்
பிறரை தனக்காக பயன்படுத்துவது சிற்றின்பம்
தன்னை பிறருக்காக அர்ப்பணிப்பது பேரின்பம்
அளவுடையது,முடிவுடையது சிற்றின்பம்
அளவற்றது முடிவில்லாதது பேரின்பம்
அறிவை மழுங்கடிக்க செய்வது சிற்றின்பம்
அறிவை பிரகாசிக்க செய்வது பேரின்பம்
அழகை மட்டும் ஆராதித்தால் சிற்றின்பம்
அழகற்றதும் அழகும் ஒன்றானால் பேரின்பம்
பயன்கருதி செயல் புரிந்தால் சிற்றின்பம்
பயன்கருதாது செயல் புரிந்தால் பேரின்பம்
முதலில் இனித்து பின் கசப்பது சிற்றின்பம்
முதலில் கசந்து பின் என்றும் இனிப்பது பேரின்பம்
இரக்கமற்றது,ஒழுக்கமற்றது சிற்றின்பம்
கருணையுடையது,தர்மமானது பேரின்பம்
உடலாய் அனைத்தையும் கண்டால் சிற்றின்பம்
உயிராய் அனைத்தையும் கண்டால் பேரின்பம்
புலன்களில் இன்பம் துய்ப்பது சிற்றின்பம்
புலன்களுக்கு அப்பால் சென்றால் பேரின்பம்
மனம் உலகில் அலைந்தால் சிற்றின்பம்
மனம் இறைவனில் ஒடுங்கினால் பேரின்பம்
மரண பயம் ஏற்படுத்துவது சிற்றின்பம்
மரணத்தை வெல்வது பேரின்பம்
மனமாய் இருந்தால் சிற்றின்பம்
மனதைக் கடந்தால் பேரின்பம்
வேறு வேறாய்க் கண்டால் சிற்றின்பம்
எல்லாம் ஒன்றெனக் கண்டால் பேரின்பம்
பகுதியாய்க் கண்டால் சிற்றின்பம்
மொத்தமாய்க் கண்டால் பேரின்பம்
அகங்காரம் கொண்டால் சிற்றின்பம்
அகங்காரம் துறந்தால் பேரின்பம்
தசையில் சுகம் பெறுவது சிற்றின்பம்
அன்பில் தன்னை இழப்பது பேரின்பம்
ஆண் பெண்ணில் இன்புறுவது சிற்றின்பம்
ஆண் பெண்ணை வணங்குவது பேரின்பம்
துய்க்கும் நேரத்தில் மட்டும் இருப்பது சிற்றின்பம்
துய்த்து விட்டால் நீங்காதது பேரின்பம்
ஜீவராசிகளால் தரமுடிந்தது சிற்றின்பம்
இறைவனால் தரப்படுவது பேரின்பம்
உலகைப் பற்றினால் சிற்றின்பம்
இறைவனைப் பற்றினால் பேரின்பம்
பிறர்நலனைக் காணாதது சிற்றின்பம்
தன்னலனை கொள்ளாதது பேரின்பம்
இன்பம் இல்லாத இன்பம் சிற்றின்பம்
இன்பமான இன்பமே பேரின்பம்
பெற்று மகிழ்வது சிற்றின்பம்
கொடுத்து மகிழ்வது பேரின்பம்
சக்தியை இழப்பது சிற்றின்பம்
சக்தியாய் மாறுவது பேரின்பம்
பற்றுக் கொள்வது சிற்றின்பம்
பற்றற்று இருப்பது பேரின்பம்
மாறுவது,தாவுவது சிற்றின்பம்
மாறாதது, நிலையானது பேரின்பம்
நிலையற்றது சிற்றின்பம்
நிலையானது பேரின்பம்
இதோ இன்பம் குறித்து விவேகானந்தர் சொல்வதைக் கேளுங்கள்.எத்தனையோ ஆளுமைகள் பற்றி நாம் கேள்விப் பட்டிருப்போம். உதாரணத்திற்கு அப்துல் கலாம் ஐயா ..சிற்றின்பத்தை குறைத்து பேரின்ப நிலையில் வாழ்ந்ததால் தான், நம் எல்லோர் மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். பதிவை திரும்ப திரும்ப படியுங்கள். அப்போது தான் பேரின்பம் பற்றிய கருத்து விளங்கும். பின் என்ன! நாமும் பேரின்பம் நோக்கி நகரலாம் அன்றோ ?

முந்தைய பதிவுகளுக்கு:-
உலகினை இயக்கும் ஒரு வார்த்தை - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_18.html
மண(ன)ப் பொருத்தம் - தொடர்பதிவு (1) - https://tut-temple.blogspot.in/2017/08/1.html
மண(ன)ப் பொருத்தம் - தொடர் பதிவு - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_78.html
வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (1) - http://tut-temple.blogspot.in/2017/07/1.html
வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html
இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. 'வெற்றி' உங்களை தேடி வரும்..! - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_4.html
சிக்கல்களில் இருந்து சீக்கிரம் மீள்வோமா? - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_2.html
ஓடுவது முள் அல்ல...நம் வாழ்க்கை - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post.html
தாலாட்டு வேண்டுமா? தேசிய கீதம் வேண்டுமா? - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_51.html
இவ்வளவுதங்க குடும்பம்...! - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_98.html
நட்பின் வலிமை - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_55.html
ஆழ்மனத்தின் ஆற்றல் - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_17.html
உருகி உருகி நான் பிராத்திக்கும் கடவுளிடம் ஒரு நாள் பேச சந்தர்ப்பம் கிடைத்தது... - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_6.html
கடவுளை காட்டுங்க! - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_24.html
சில நேரங்களில் சில மனிதர்கள்... - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_14.html
கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்!!! - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_13.html
கண்ணனுக்கு சொன்ன கதை - http://tut-temple.blogspot.in/2017/04/kannanukku-sona-kathai.html
No comments:
Post a Comment