நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவானை
நீங்காதார் குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர் என்று யுகயுகத்தும் தோன்றும்
அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!
நெஞ்சார மனதில் நினைப்பவருக்கு நிழல் போன்று இருப்பவர்.அதாவது நிழல் என்றால் பகலில் மட்டும் தெரியும்.இங்கே இரவு பகல் பாராது, நம்முடனே இருந்து வழி காட்டும் அருட்குரு அகத்தியர்.நம் குலம் தழைக்க, செல்வம் மட்டும் தராமல், அதனோடு சேர்த்து மிக மிக முக்கியமான செல்வமான ஆரோக்கியமும் தருகின்ற அக குரு ஆவார்.இதனை நாம் தற்போது கண்கூடாக உணர்ந்து அனுபவித்து வருகின்றோம்.அகத்தியரின் நாமம் சொல்ல,சொல்ல நம் அகம் ஒளி பெறுகின்றது.அகம் ஒளிர,ஒளிர புற செயல்கள் மிளிரும் என்பதே ஆன்றோர் வாக்கு. அகத்தில் உள்ள ஈசனை உயிர்ப்பிக்க செய்தால் அகத்தியம் மிளிரும்.அகத்தியம் மிளிர அகத்தியர் அருள் காட்டுவார்.புரட்டாசி மாத ஆயில்ய ஆராதனை நிகழ்வின் துளிகள் இங்கே பகிர்கின்றோம்.
17/9/2017 அன்று காலை உழவாரப் பணி நிறைவு செய்து விட்டு, அன்று மாலை அகத்தியர் ஆயில்ய ஆராதனைக்காக மாலை கூடுவாஞ்சேரி வந்தோம். நம்முடன் வந்து இணைவதாக திருமதி.பரிமளம் கூறினார்கள். சரியாக மாலை 5 மணி அளவில் கூடுவாஞ்சேரி வந்து சேர்ந்து, பூஜைக்குத் தேவையான பொருட்களை வாங்க வேண்டி,தயார் செய்து கொண்டிருந்தோம். சற்று நேரத்தில் பரிமளம் அவர்களும் வந்து சேர்ந்தார்கள். குருக்கள் கொடுத்த பூஜை பொருட்களை வாங்கி கொண்டு மாமரத்து விநாயகர் கோயில் சென்றோம்.அங்கு சென்ற பின்னர் தான் தெரிந்தது அன்று பிரதோஷ பூஜை உள்ளதென்று.
குருக்கள் பிரதோஷ பூஜை முடித்து விட்டு, அகத்தியர் பூஜை செய்யலாம் என்றார்.நாம் சரி என்று கூறிவிட்டு, அங்கே பிரதோஷ பூஜை கண்டோம்.சரியாக 6 மணி அளவில் பரிமளம் அவர்கள்,தாம் வீட்டுக்கு செல்வதாக கூறினார்கள்.நாமும் சரி என்று கூறிவிட்டு, பிரதோஷ பூஜை நிகழ்வில் இருந்தோம்.அன்று காலை ஒரு அன்பர் தொலைபேசியில் அழைத்து,தம்மை அறிமுகப் படுத்திக் கொண்டு,அன்று மாலை ஆயில்ய பூஜைக்கு வருவதாக சொன்னார்.
அவருக்கும், திரு.வினோத் அவர்களுக்கும்,கோயிலின் இருப்பிட முகவரியை பகிர்ந்து விட்டோம்.இருவரின் வரவிற்காக காத்திருந்தோம். அதற்குள் அங்கே நடந்த பிரதோஷ பூஜையை கண்டு ரசித்துக் கொண்டு இருந்தோம்.சரவணனும்,வினோத் குமாரும் வருவதற்குள் நாமும் பிரதோஷ பூஜையை பார்ப்போம்.வாருங்கள்.சில காட்சிகள் மட்டுமே.
பிரதோஷ நாயகன் தரிசனம்
பின்பு பூஜைப் பொருட்கள் ஒவ்வொன்றாக சன்னிதி முன்பு எடுத்து வைத்தோம்.பஞ்சாமிர்தம் பிசைய வேண்டும் என்று குருக்கள் சொன்னார். அனைத்து பூஜை பொருட்களையும் தனித்தனியாக பிரித்து வைத்தோம்.சில அபிஷேக பொடியை கலசத்தில் இடும்படி கூறினார்கள். நம் தோழர்கள் இருவரும் அப்பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தாங்க.
அனைத்து பூஜை பொருட்களையும் சரிபார்த்து விட்டு,சுமார் 7 மணி அளவில் ஆராதனை ஆரம்பமானது.முதலில் எண்ணைக் காப்பிட்டு,தீபாராதனை. பின்பு பன்னீர் அபிஷேகம் , பால் அபிஷேகம்,தயிர், சந்தனம்,விபூதி, அபிஷேக பொடி,வில்வ பொடி என்று சென்று கொண்டிருந்தோம்.என்ன வரிசையில் செய்தோம் என்று குறிப்பு எடுக்க முடியவில்லை. ஒவ்வொரு அபிஷேகமும் இனிமையைத் தந்தது. சென்ற பூஜையில் அர்ச்சனை,சித்தர் போற்றித் தொகுப்பு,தீபாராதனை என்று இருந்தது.இம்முறை சற்று அபிஷேகம் செய்ய எண்ணி, இதோ..ஐயனின் மனதுள் நீந்திக் கொண்டிருப்பது தெரிகின்றது.வேறென்ன வேண்டும்?இந்த அருட்காட்சி போதாதா? அப்படியொரு தரிசனம்.
தயிர் அபிஷேகம்
அனைத்து அபிஷேகமும் முடிந்த பிறகு, ஆராதனைக்குத் தாயாரானோம். குருக்கள் அலங்காரம் செய்தார்கள்.சித்தர்கள் போற்றித் தொகுப்பை எடுத்து குருக்கள் சித்தம் உணர்த்த சொன்னார்கள்.அன்று பிரதோஷ பூஜையாதலால், ஒலிப் பெருக்கியில் சித்தர் போற்றி ஓத சொன்னார்கள்.நாம் மூவரும் சேர்ந்து, சித்தர் போற்றி மூலம் சித்தர்களிடம் வேண்டினோம். நாம் எடுக்க ஆரம்பித்தால், ஒரே வேகம் தான். 24 நிமிட சித்தர் போற்றித் தொகுப்பை சுமார் 15 நிமிடத்தில் படித்து முடித்தோம்.அடுத்த முறை மெதுவாக போற்ற சித்தர்கள் அருள் புரியட்டும்.
அடுத்து என்ன? இதோ ! மகா தீப ஆராதனை தான். கண்டு களியுங்கள். உண்டு மகிழுங்கள்.

அன்னையின் அருள் வெளிப்பாடு
ஹர ஹர மகாதேவா
பூஜை முடிந்து காத்துக் கொண்டிருந்த நேரத்தில், இதோ..சரவணனும்,வினோத்தும் வந்து விட்டார்கள்.குருக்கள் சற்று ஆசுவாச படுத்திக் கொண்டார்.சுமார் 10 நிமிட இடைவெளியில் ஆயில்ய ஆராதனைக்காக ஆயத்தம் நடைபெற துவங்கியது.இம்முறை இரவின் தன்மையில் பூஜை நடைபெற இருந்தது. மாலை கொடுக்க வேண்டிய நைவேத்தியம் அன்று காலையிலே கொடுத்து விட்டதாக குருக்கள் கூறினார்.எனவே அன்று பூஜை மட்டும் தான் என்று தெரிந்தது. முதலில் அகத்தியர் தரிசனம் பெறுவோமா?
பின்பு பூஜைப் பொருட்கள் ஒவ்வொன்றாக சன்னிதி முன்பு எடுத்து வைத்தோம்.பஞ்சாமிர்தம் பிசைய வேண்டும் என்று குருக்கள் சொன்னார். அனைத்து பூஜை பொருட்களையும் தனித்தனியாக பிரித்து வைத்தோம்.சில அபிஷேக பொடியை கலசத்தில் இடும்படி கூறினார்கள். நம் தோழர்கள் இருவரும் அப்பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தாங்க.
அனைத்து பூஜை பொருட்களையும் சரிபார்த்து விட்டு,சுமார் 7 மணி அளவில் ஆராதனை ஆரம்பமானது.முதலில் எண்ணைக் காப்பிட்டு,தீபாராதனை. பின்பு பன்னீர் அபிஷேகம் , பால் அபிஷேகம்,தயிர், சந்தனம்,விபூதி, அபிஷேக பொடி,வில்வ பொடி என்று சென்று கொண்டிருந்தோம்.என்ன வரிசையில் செய்தோம் என்று குறிப்பு எடுக்க முடியவில்லை. ஒவ்வொரு அபிஷேகமும் இனிமையைத் தந்தது. சென்ற பூஜையில் அர்ச்சனை,சித்தர் போற்றித் தொகுப்பு,தீபாராதனை என்று இருந்தது.இம்முறை சற்று அபிஷேகம் செய்ய எண்ணி, இதோ..ஐயனின் மனதுள் நீந்திக் கொண்டிருப்பது தெரிகின்றது.வேறென்ன வேண்டும்?இந்த அருட்காட்சி போதாதா? அப்படியொரு தரிசனம்.
பஞ்சாமிர்த அபிஷேகம்
தயிர் அபிஷேகம்
சந்தன அலங்காரம்
சந்தன அலங்காரத்தை அடுத்து, விபூதி அபிஷேகம். விபூதி அபிஷேகத்தில் ஐயனை கண்டோம். கண்கள் கருணைக் கடலில் மிதந்தன. அகத்துள் உள்ள ஈசனை உணர்த்திய தருணம்.சொல்லில் அடக்க முடியவில்லை.வாய்ப்புள்ளவர்கள் அடுத்த ஆராதனையில் கலந்து கொண்டு ,யாம் பெற்ற இன்பத்தை பெற வேண்டுகின்றோம்.
அனைத்து அபிஷேகமும் முடிந்த பிறகு, ஆராதனைக்குத் தாயாரானோம். குருக்கள் அலங்காரம் செய்தார்கள்.சித்தர்கள் போற்றித் தொகுப்பை எடுத்து குருக்கள் சித்தம் உணர்த்த சொன்னார்கள்.அன்று பிரதோஷ பூஜையாதலால், ஒலிப் பெருக்கியில் சித்தர் போற்றி ஓத சொன்னார்கள்.நாம் மூவரும் சேர்ந்து, சித்தர் போற்றி மூலம் சித்தர்களிடம் வேண்டினோம். நாம் எடுக்க ஆரம்பித்தால், ஒரே வேகம் தான். 24 நிமிட சித்தர் போற்றித் தொகுப்பை சுமார் 15 நிமிடத்தில் படித்து முடித்தோம்.அடுத்த முறை மெதுவாக போற்ற சித்தர்கள் அருள் புரியட்டும்.
அடுத்து என்ன? இதோ ! மகா தீப ஆராதனை தான். கண்டு களியுங்கள். உண்டு மகிழுங்கள்.
அகத்தீசா ! சரணம்
அகத்தியர் பொற்பாதம் போற்றி
ஆராதனை முடிவில் அகத்தியர் தரிசனம் கண்டோம். உருத்திராக்க மாலை அணிந்து, வில்வ தரிசனத்தில்,துளசியின் மகிமையில்..அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைத்தோம்.
- அகத்தியர் ஆயில்ய ஆராதனை வளரும்
முந்தைய பதிவுகளுக்கு:-
அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017 - https://tut-temple.blogspot.in/2017/09/2017.html
எண்ணுவோம் பெற்றோர்களை முதல் குருவாக! - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_29.html
அகத்தியர் தேவாரத் திரட்டு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_65.html
நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_24.html
மழை வாழ்த்து - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_8.html
சரணம் சரணம் சண்முகா சரணம்! - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_4.html
No comments:
Post a Comment