Subscribe

BREAKING NEWS

08 September 2017

அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017

அன்பார்ந்த மெய்யுணர்வாளர்களே...

இந்த பதிவின் மூலம் TUT குழு நடத்திய இரு நிகழ்வுகளும், அதன் துளிகளையும் இங்கே  விழைகின்றோம். எம் இதய கூட்டுக்குள் நிலைத்த நிகழ்வுகளை,இணையம் மூலம் உங்களின் இதய கூட்டுக்குள் பரிமாற்ற குருவருளிடம் வேண்டுகின்றோம். TUT யில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் குருவருளால் மட்டுமே நடைபெறுகின்றது.இங்கு நாங்கள் அன்பை மட்டுமே விதைக்கின்றோம்.

நாம் முன்னரே தெரிவித்த படி ஆவணி மாதத்தில் அமாவாசை பூரண தான நிகழ்வும், கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை நிகழ்வின் துளிகளை இங்கே உணர்த்த விரும்புகின்றோம். முதலில்
21/08/2017 அன்று காலை நடைபெற்ற நம் அப்பன்,அம்மையப்பன்,சொல்லில் அடங்கா அருளாளன் அகத்தியரின் ஆராதனை காண்போமா?




21/08/2017 திங்கட்கிழமை காலை சுமார் 9 மணி அளவில் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோவிலை அடைந்தோம். மாலை வாங்க சென்றுள்ளபடியால்,குருக்கள் நம்மை சற்று பொறுத்தருளும் படி வேண்டினார். நாம் உடனே கோவிலினுள் உள்ள ஒவ்வொரு நாயகர்களை வினை தீர்க்கும் விநாயகர், சிவ பெருமான், அம்மையார்,ஆஞ்சநேயர், ஐயப்பன், முருக பெருமான்,ராமலிங்க அடிகள் என தரிசனம் செய்தோம். மாலை மற்றும் நைவேத்தியம் இன்ன பிற பூஜை பொருட்கள் வந்ததும்,குருக்கள் தயார் ஆனார். நாமும் அகத்தியர் சன்னதிக்கு சென்றோம்.


அலங்காரத்திற்கு முன்னர் 

ஆங்! சொல்ல மறந்துவிட்டேன். நாம் விநாயகர் தரிசனம் பெற்ற பின்னர், நாம் வைத்து இருந்த சில சிவபுராண பாடல் மற்றும் ஆலயத்தில் தரிசனம் செய்யும் பொது பாட வேண்டிய பாடல்களை சில துண்டுப் பிரசுரங்களாக கொடுத்தோம்.அப்போது ஒரு சாது வந்து நம்மிடம் அதை முதன்முதலாக வாங்கினார்.இவரைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். சில நிமிடத்தில் அகத்தியர் சன்னதிக்கு   சென்றோம்.அனைத்து பூஜை பொருட்களும் தயார் நிலையில் கீழே 



குருக்கள் ஏற்கனவே நம்மிடம், பூஜையில் சித்தர்கள்  போற்றி சொல்லி துதிக்க
என்று சொன்னார்கள். நாம் அவரிடம் மேற்கொண்டு கேட்டதற்கு அவரே கொண்டு வருவதாகவும், சொன்னார்கள். ஆனால் அன்று அதை மறந்து விட்டார்.நானும் குருக்கள் சித்தர் போற்றி துதிக்க ஏற்பாடு செய்திருப்பார் என்று வெறுங்கையை வீசி சென்று விட்டோம். அகத்தியர் பூஜையை அவர் ஆரம்பிக்கும்  முன்பு நம்மை சித்தர் போற்றி துதி படிக்க சொன்னார்கள்.நமக்கு உடனே பதற்றம் உருவாகி விட்டது. நாம் சற்று மறுத்து விட்டோம். பின்பு உடனே அலைபேசியை எடுத்து , அகத்தியர் வனம் மலேஷியா திரு.சண்முகம்  ஆவடையப்பா ஐயாவின்  நினைவில் உடனே சித்தர் போற்றி தொகுப்பை இணையத்தில் எடுத்து,குருக்களிடம் அனுமதி கேட்டு , துதிக்க ஆரம்பித்தோம். நம் உறவுகளுக்காக இணைப்பை பதிவின் இறுதியில் இணைத்துள்ளோம். அனைவரும் குரு நாளில் கண்டிப்பாக சித்தர் போற்றித் தொகுப்பை மறக்காது வேண்டவும்.




முதலில் நாமும்,குருக்களும் மட்டுமே அகத்தியர் முன்பு இருந்தோம். குருக்களின் இசைவு கேட்டு, சித்தர் துதி ஆரம்பமானது. காப்பான கருவூரார் பாடலில் ஆர்மபித்து அப்படியே,நம் அப்பனை நினைத்து, பாடிக் கொண்டே சென்றோம். வேகமாக பாடி முடித்து விட்டோம்.சுமார் 10  நிமிட இடைவெளி முடித்து, அகத்தியர் முன் சுமார் 5,6 அன்பர்கள் நின்றிருந்தனர்.எல்லாம் அவர் அருள் தானே !


அகத்தியர் அலங்காரம் முடிந்ததும்,ஆர்த்தி காண்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.










இதற்குத் தானே ஆசைப்படுகின்றோம் எம் ஐயனே ! அம்மையும் அப்பனுமாய் காண்கின்றோம் வெள்ளொளி வேந்தே! அருணாச்சல சிவ ! அருணாச்சல சிவ ! பொய்யை  நீக்கி மெய்யை உணர்த்தும் முழுமுதற் கடவுளே..ஒப்பிலா மணியே ...தமிழ் தந்த கடவுளே. என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தோம். கண் குளிர அகம் மகிழ அகத்தியர் தரிசனம் கிடைக்கப் பெற்றோம்.இது தாம்  பெரும்பேறு. செல்வத்துள் செல்வம். அறுசுவை கேள்விப்பட்டிருப்போம். அகத்தியர்  தரிசனத்தில் ஏழாம் சுவை உணர்ந்தோம். ஏன் ! எதற்கு ? என்று தெரியவில்லை. நடப்பதெல்லாம் நின் அருளாலே என்று மனதுள் நன்றி சொன்னோம். குருக்கள் தீபாராதனை காட்ட தாயாராகி விட்டார்.






தீபாராதனை உங்களுக்காக ! எப்பேர்ப்பட்ட புண்ணியம் செய்துள்ளோம். இந்த கவின்மிகு,அருள்மிகு,அன்புமிகு,கருணைமிகு,ஆற்றல்மிகு தரிசனம் பெற ! கண்ணில் சிறிது நீர்த்துளி எட்டிப்பார்த்தது. அனைவரும் ஆரத்தி எடுத்துக் கொண்டார்கள். அப்புறம் குருக்கள்,அகத்தியரிடம் வேண்டி, நம்மைப் பார்த்து, அகத்தியர், நம்மை மாதந்தோறும் ஆயில்ய ஆராதனை செய்ய விரும்புவதாக சொன்னார்கள். மிக்க நன்றி என்று குருக்களிடம் கூறிவிட்டு, நமது TUT குழுவின் சார்பாக இங்கே, அகத்திய ஆராதனை ஆயில்யம் நட்சத்திரம் அன்று  அளித்தோம்.அடுத்து அவர் சொன்ன செய்தி  நம்மை அற்புதத்தில் ஆழ்த்தியது.

பொதுவாக அமாவாசை தினம் சித்தர்கள்,முனிவர்கள் வழிபாடு  செய்ய உகந்தது. நாம் அன்று செய்த பூஜை ஆயில்ய நட்சத்திரத்தோடு,அமாவாசை என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி என்றதும், உள்ளம் நெகிழ்ந்தது.பின்பு அகத்தியர் தரிசனம் கண்டீர்களா? என்றார்? நாம் சுற்றும்,முற்றும் பார்த்தோம். இல்லை என்றோம். அப்போது அவர் தொடர்ந்தார். சித்தர்களின் ஆசி, நீங்கள் நினைப்பது போல்,அதிசயமாக நிகழாது. நம்முள் ஒருவராக வந்து ஆசி கொடுப்பார்கள் என்றார்.அங்கே இருந்த சாது ஒருவரைக் காண்பித்தார்.இவர் வருவார் என்று நாங்கள் நினைக்கவில்லை.இவர் தான் இங்கே அகத்தியர் சொரூபமாக வந்து உள்ளார் என்றார். நாமும் உடனே சுதாரித்துக் கொண்டோம்.உணர்ந்தோம். எப்படியோ முதல் பூஜையில் எங்களுக்கு சாது ரூபத்தில் வந்து ஆசி வழங்கிய அகத்தியரை நாம் வணங்கினோம்.



                           முருகப் பெருமானுடன் இணைந்த அகத்தியர் தரிசனம்



நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு. உடனே வெற்றிலை, பாக்கு உடன் பழங்கள் கொடுத்து சாதுவிடம் வேண்டினோம்.அவர் காட்சிப்படம் எடுக்க அனுமதிக்க வில்லை. நைவேத்தியமாக சுண்டல் வழங்கப்பட்டது. நமக்கு ஒரு பிரசாதத்தோடு சேர்த்து,சுண்டலும் தந்தார்கள். நாம் அலுவலகம் வந்து அவற்றை எடுத்து சுவைத்துப் பார்த்தோம். என்ன சுவை ! இன்னும் நாக்கில் சுவை ஊறுகின்றது ? அந்த காரமும், சுவையும்! அடடா ! என்னன்னே தெரியல! என்ன மாயமோ? கோவில் பிரசாதம் ....கோவில் பிரசாதம் தான்.சாட்சாத் ..அகத்தியர் அருள் நிறைந்ததன்றோ !



சோ...யம்மி ..

இதோ அடுத்த ஆயில்ய பூஜைக்கான அறிவிப்பை இணைத்துள்ளோம்.அன்பர்கள் தவறாது கலந்து கொண்டு,அகத்தியர் ஆசி பெற அழைக்கின்றோம்.


அகத்தியருக்கு ஆயில்ய அபிஷேகம் 

மெய் அன்பர்களே.

TUT( தேடல் உள்ள தேனீக்களாய்) குழுவின் சார்பாக வருகின்றன 17/09/2017 ஞாயிற்றுக்கிழமை ஆயில்ய நட்சத்திரத்தில் மாலை 6 மணி அளவில்  கூடுவாஞ்சேரி - மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷிக்கு வழிபாடு செய்ய இறையருளும்,குருவருளும் கூட்டியுள்ளது. அன்பர்கள் தவறாது கலந்து கொண்டு அகத்தியரின் அருள் பெற வேண்டுகின்றோம்.

இவண்,
நிர்வாகம்
TUT- தேடல் உள்ள தேனீக்களாய் 

தொடர்புக்கு : 7904612352/9677267266






24 நிமிட சித்தர் பூஜை பெற இங்கே சொடுக்கவும். அடுத்த பூஜையில் பங்கேற்கும் அன்பர்களுக்கு இத்தொகுப்பை நகல் எடுத்து தர உள்ளோம்.

17/09/2017 ஞாயிற்றுக்கிழமை - மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். புரட்டாசி மாத துவக்க நாள். அன்றைய  தினம் பிரதோஷம்.  மேலும் முன்னோர்கள் நமக்காய் குருவருளை யாசித்துப் பெற்றுத் தரும் புரட்டாசி மாளயபட்சத்தின் யதிமாளயத் திருநாள் 17.9.2017⁠⁠⁠⁠

ஆம்.மூதாதையர்களான நம் பிதுர்க்கள் நமக்கு குருவருளை பெற்றுத் தருவதற்காய் நாம் வாழும் பூமிக்கே வந்து வழிபடும் முக்கியமான நாளும்,குறித்த வழிபாட்டு தலங்களும் உண்டு.இத்திருநாளே புரட்டாசி மாதத்தின் மாளய பட்ச 15 நாட்களில் 12 ம் நாள் துவாதசி திதியில் வரும் யதிமாளயம் எனும் நாள்.அன்றைய நாளில் மகான்களின் ஜீவாலயங்களில் பூஜிப்பது சிறந்தது. அன்றைய தினம் நாம் அகத்தியர் ஆராதனை செய்ய உள்ளோம்.இது குருவருளாலே தீர்மானிக்கப் பட்டுள்ளது.


- அடுத்த பதிவில் அன்னதான நிகழ்வின் அனுபவம் தொடரும் 

முந்தைய பதிவுகளுக்கு :-

எண்ணுவோம் பெற்றோர்களை முதல் குருவாக! - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_29.html

அகத்தியர் தேவாரத் திரட்டு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_65.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_24.html

மழை வாழ்த்து - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_8.html

சரணம் சரணம் சண்முகா சரணம்! - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_4.html



No comments:

Post a Comment