Subscribe

BREAKING NEWS

22 September 2017

TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள்

அன்பர்களே,

அனைவருக்கும் TUT குழுமத்தின் சார்பாக நவராத்திரி நல்வாழ்த்துக்கள். இந்த பதிவில் நவராத்திரி பற்றியும்,அதனை ஒட்டிய நிகழ்வுகளின் சிறப்பு பற்றியும் அறிய உள்ளோம்.கூடுவாஞ்சேரி ! சென்னையின் புற நகரில் உள்ள ஊர் என்றாலும், நம் அகத்தினை ஒளி பெற செய்து கொண்டு உள்ளது.முதலில் என் குரு யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்கள் பிறந்து,வாழ்ந்த ஊர் என்பதே பெருமை. TUT ஆலய தரிசனம் பற்றிய செய்திகளுக்காக தேடிய போது, தற்போது வரை மூன்று கோயில்கள் நம்மை ஈர்த்து உள்ளது. முதலில் நந்தீஸ்வரர் கோயில்,
வேலி அம்மன் திருக்கோயில்,அடுத்து மாமரத்து விநாயகர் கோயில்.

இந்த ஆலயங்களில் நடைபெற்று வரவும் நவராத்திரி நிகழ்வுகளை இங்கே தொடர் பதிவாக தினமும் அளிக்க விரும்புகின்றோம்.இறையருளும்,குருவருளும் துணை நிற்க வேண்டுகின்றோம்.
அதற்கு முன்பாக நவராத்திரி பற்றிய சில செய்திகள் அறிவோம்.





நவராத்திரி கொண்டாடப்படுவதற்கு முன்னதாக நவராத்திரி வழிபாட்டின் மகிமையை உணர்த்தும் கதையை தெரிந்து கொள்ளலாம்.

காட்டில் கணவர் மனைவி வாழ்ந்து வருகிறார்கள். மிகவும் வறுமையில் இருக்கும் அவர்கள் மிகவும் துன்பத்தில் இருக்கிறார்கள் கணவருக்கு தீர முடியாத நோய் வேறு. அடுத்து என்ன செய்யப்போகிறோம்? உணவைத் தேடி செல்வதா? கணவருக்கான மருந்துகளை தேடுவதா? உணவா? பொருளா? மருந்தா என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது வாசலில் யாரோ அழைக்கும் ஓசை கேட்டது.

உதவி கேட்டு மகரிஷி ஒருவர் வந்திருந்தார். அழுது வீங்கிய கண்களுடன் இந்தப் பெண்ணைப் பார்த்தவுடனேயே, மகரிஷி ஒரு உண்மையை கண்டுபிடித்தார். உன்னைப் பார்த்தால் அரச குடும்பத்தைச் சேர்ந்தவளைப் போல இருக்கிறது. என்ன ஆயிற்று? ஏன் இங்கே வந்திருக்கிறாய் ? என்று கேட்டார்.


'எங்களுடைய தயாதிகள் எங்கள் மீது பொறாமைபட்டு எங்களுடன் போர்புரிந்து எங்களை தோற்கடித்துவிட்டார்கள்' என்று வருத்தப்பட்டிருக்கிறாள். உண்மையை அறிந்த முனிவர் ஆறுதல் அளித்ததோடு, அருகில் இருக்கும் பஞ்சவடியில் எழுந்தருளியிருக்கும் அம்பிகையை பூஜை செய்தால் இழந்த ராஜ்ஜியம் மீண்டும் கிடைக்கும் அதோடு வம்சத்தை விரித்தி செய்ய புத்திரனும் பிறப்பான் என்கிறார்.


அதைக் கேட்டு மகிழ்ந்த அந்தப் பெண்மணி தன் கணவருடன் பஞ்சவடிக்கு செல்கிறாள். இவரின் வீட்டிற்கு வந்த அங்கிரஸ முனிவர் அங்கே இருந்தார். அவர் முன்னின்று நடத்திய நவராத்திரி பூஜையை செய்து வைத்தார்.


பூஜையை முறைப்படி முடித்த பின்னர் அங்கிரஸர் முனிவருடன் அவரின் ஆசிரமத்திற்கே சென்றனர். அங்கே அரசர் நோயிலிருந்து மீண்டார். அரசிக்கு சூரியப் பிரதாபன் என்ற ஆண் குழந்தை பிறந்தது.
அங்கிரஸ முனிவரை குருவாக ஏற்ற சூரியப் பிரதமன் அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்தான். தன் பெற்றோர் ஏமாற்றப்பட்ட கதையை கேட்டு , பகைவர்களுடன் போரிட்டு தங்களின் நாட்டை மீட்டு வருகிறான்.இதன் பொருட்டே நவராத்திரி கொண்டாடப்பட்டு வருவதாக ஐதீகம்.


 நவராத்திரி விழா ஆண்டு தோறும் புதுப்புது மாற்றங்களுடன் கொண்டாடப்படும் விழாக்களுள் ஒன்று. நவம் என்ற சொல்லுக்கு ஒன்பது என்றும் புதியது என்றும் பொருள். மகிஷாசூரனை அழிப்பதற்காக அம்மன் ஒன்பது நாள் போர் செய்து பத்தாம் நாள் வெற்றி பெறுகிறாள்.

சும்பன், நிசும்பன் என்ற அசுரர்கள் பிரம்மனின் அருளால் சாகாவரம்பெற்றனர். இருந்தாலும் தங்களுக்கு சமமான பெண்ணால் மட்டுமே எங்களுக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரத்தை பெற்றிருந்தனர். எனவே தேவர்களை ஜெயித்தும் அதர்மங்களை விளைவித்தும் வந்தனர். அவர்களது அழிவு காலத்தில் ஆதிபராசக்தியிடமிருந்து கவுசிகியும், காளிகா என்ற காலராத்திரியும் தோன்றினர். காளிகாவுக்கு துணையாக முப்பெரும்தேவியின் வடிவான அஷ்டமாதர்களும் அஷ்ராத்திரிகளாக தோன்றினர்.

பிராம்மணி என்ற பிரம்ம சக்தி அன்ன வாகனத்தில் அட்சமாலை, கமண்டலத்துடனும் வைஷ்ணவி என்ற விஷ்ணுசக்தி கருட வாகனத்தில் சங்கு சக்கரம் கதை தாமரைப்பூவுடனும், மகேஸ்வரி என்ற சிவனின் சக்தி ரிஷப வாகனத்தில் திரிசூலம் மற்றும் வரமுத்திரையுடனும், கவுமாரி என்ற கார்த்திகேய சக்தி வேலாயுதத்துடனும் மாகேந்திரி என்ற இந்திரனின் சக்தி ஐராவதத்தில் வஜ்ராயதத்துவம் வாராஹி என்ற வாராஹிருடைய சக்தி எருமை வாகனத்தில் கலப்பையுடனும், சாமுண்டா என்ற பைரவரின் சக்தி எம வாகனத்தில் கத்தியை ஏந்தியவளாகவும் நரசிம்மஹி என்ற நரசிம்மரின் சக்தி கூரிய நகத்தை ஆயுதமாகவும் கொண்டு கமல பீடத்தில் தோன்றினார்கள். இவர்கள் காளிகா என்ற சண்டிகா தேவியுடன் ஒன்பது ராத்திரிகளாயினர் இந்த நவராத்திரி தேவதைகள் சும்ப நிசும்பர்களை ஒழித்தனர்.

அசுரர்களின் கொடுமையில் இருந்து விடுபட்ட தேவர்கள் கவுசிகியான அம்பிகையையும், நவராத்திரி தேவதைகளையும் போற்றி துதித்தனர். இந்த வைபவம் நவராத்திரி எனப்படுகிறது.
அடுத்த பதிவில் கொலு படி தத்துவம் பற்றி காண்போம்.இனி கொலுப்படிகள் மற்றும் அனைத்து நவராத்திரி நிகழ்வின்  துளிகள் தங்களின் பார்வைக்கு.பார்த்து அம்மன் அருள் பெறுங்கள்.












                                             நன்றி திரு.சுவாமிநாதன் கோபாலன்










                                                   நன்றி திரு.சுரேஷ் பிரியன்








நன்றி திருமதி ரமா ஷங்கர்


நன்றி திரு.சந்திரசேகரன்

பதிவின் நீளம் கருதி, அடுத்த பதிவில் கூடுவாஞ்சேரி கோயில்களில் இருந்த நிகழ்வுகளை பதிவிடுகின்றோம்.


முந்தைய பதிவுகளுக்கு:-


TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - https://tut-temple.blogspot.in/2017/08/tut.html


விநாயகர் சதுர்த்தி செய்தி - மண(ன)ப் பொருத்தம் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_78.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html
 



No comments:

Post a Comment