Subscribe

BREAKING NEWS

13 February 2018

12 ஜோதிர்லிங்கங்கள் தரிசனம் – ஒரு நேரடி அனுபவம் – மகா சிவராத்திரி சிறப்பு பதிவு

இதோ இன்றிரவு  சிவராத்திரி தொடங்குகின்றது. என்ன பதிவு வழங்கலாம்  என்று சற்று யோசித்த போது, என்னை மறந்து விட்டாயா? என்ற அண்மையில் நாம் தரிசித்த 12 ஜோதிர்லிங்கங்கள் அனுபவம் நம்முள் மீண்டும் அன்பில் ஆழ்த்தியது. சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் 12 ஜோதிர்லிங்கங்கள் தரிசனமானது ஹிந்து ஆன்மிக கண்காட்சியில்  (HSSF) கிடைத்தது. அந்த அனுபவத்தை இங்கே தர இருக்கின்றோம்.

பாரதத்தின் 12 ஜோதிர்லிங்க சிவத்தலங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.அதுவும் அந்தந்த தலங்களின் லிங்கங்களை அதே உருவில் அங்கு சென்று நேரிலேயே தரிசனம் செய்வது போன்ற ஓர் அற்புத உணர்வு கிடைக்கிறது. இது சென்னை மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

மனிதகுலம் அனைத்திற்கும் மேலான சக்தி பொருந்திய இறைவன் கடவுள் ஒருவர் என்று அனைத்து மதங்களும் ஒருசேர இணக்கமாய் வருவது ஒரே ஒரு கருத்தில்தான். அதாவது இறைவன் ஒளிமயமானவர் என்பது. அவ்வாறு ஒளியாய் ஜோதியாய் விளங்கும் பரம்பொருள் இறைவனை அன்புடன் நினைப்பது, தியானிப்பது, அல்லது பூஜை செய்வது, வணங்குவது என்பது எல்லா மனிதர்களுக்கும் கடினமாய் தென்பட்டது.

ஆகவே அந்த பெரிய உருவில் எளிதாய் வழிபட லிங்க உருவாய்க் கண்டு பல்வேறு கோணங்களில் உலகின் பல பாகங்களிலும் பல மதத்தினரும் வணங்கி வந்துள்ளனர் என்பது சரித்திர ஆய்வாளர்களின் முடிவு. அந்த சிவலிங்க உருவம் தொன்று தொட்டு பாரதத்தின் 12 முக்கிய ஸ்தலங்களில் பிரசித்தமாய் பல்வேறு அளவுகளில், பல்வேறு பெயர்களில் வணங்கப்பட்டு வருகிறது.

அத்தலங்கள் பின்வருமாறு:

1. சோமநாத்  -  பிரபாக்ஷேத்ரம் கடற்கரை - குஜராத்

2. மல்லிகார்ஜுனர் - ஸ்ரீசைலம் - ஆந்திர பிரதேசம்

3. மகா காளேஷ்வர் சிப்ரா நதிக்கரை- உஜ்ஜயினி அருகே - மத்திய பிரதேசம்

4. ஓம்காரேஷ்வர் - நர்மதை நதிக்கரை, உஜ்ஜயினி – காண்ட்வா சாலை - மஹாராஷ்டிரா

5. வைத்யநாத் - பரவி, ஜஸதி, சன்தால் பர்காணா

6. பீம் சங்கர் - பீமா நதிக்கரை, நாசிக்கிலிருந்து 120கி.மீ. - மஹாராஷ்டிரா

7. ராமேஸ்வரர் - ராமேஸ்வரம் - தமிழ்நாடு

8. நாகேஷ்வரர் - தாருகாவனம் - குஜராத்

9. விஸ்வநாத் - காசி - உத்தர பிரதேசம்

10 திரியம்புகேஷ்வர் - பிரம்மகிரி அருகில், நாசிக் அருகில் - மஹாராஷ்டிரா

11 கேதாரேஸ்வர் - கேதார்நாத் - உத்தர பிரதேசம்

12 கிருஷ்ணேஷ்வர் - பேரூல் - ஆந்திர பிரதேசம்


முழுமுதற் கடவுளாம் சிவனை, ஜோதி உருவாய்த் திகழ்பவரை மனதார எண்ணி, புத்தியின் மூலமாய் தியானம் செய்வது அவருடைய வழிகாட்டின் உன்னத நிலையாகும். இவ்வாறு மனதையும் புத்தியையும் இறைவன்பால் ஒருமுகப்படுத்தும் முறையே இராஜயோக தியானம் எனப்படுகிறது.

மனித ஆத்மாக்கள் அனைவருக்கும் மேலான தந்தை நிராகாரமானவர் (மனித உருவற்றவர்) ஜோதி சொரூபமாய் விளங்குபவர். இந்த உலக சிருஷ்டியின் கர்த்தா அவரே! அவரை அன்புடன் நினைத்து தியானம் செய்வதன் மூலம் நமது பாவச்சுமைகள் அழிந்து புதிய உலகமான சொர்க்கம் இப்புவியில் படைக்கப்படும். அதுவே இறைவனது படைப்பில் முதல் யுகமாகும். அதைத் தொடர்ந்து திரேதா, துவாபர மற்றும் கலியுகம் என்று காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும். தற்போது நாம் கலியுக இருண்ட, துக்கம் நிறைந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிவோம்.

ஆனாலும் பலரால் மறந்து போய் விடப்பட்டிருக்கும் இம்மாபெரும் உண்மையை எளியமுறையில் இன்றைய தலைமுறையினரும் புரிந்துகொண்டு தியானம் செய்ய வேண்டுமென்பதற்காகவே பிரம்மாகுமாரிகள் இயக்கம் இந்த மாபெரும் 12 ஜோதிர்லிங்க தரிசனத்தை ஏற்பாடு செய்துள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளுக்கும்  தமிழகம் கேரளா மற்றும் ஆந்திர தேசத்திலும் பல முக்கிய நகரங்களில் சுமார் 112 இடங்களில் இத்தரிசனம் நடந்தேறியுள்ளது. பல லட்சக்கணக்கான மக்கள் இத்தரிசனத்தைக் கண்டு பயனடைந்துள்ளனர். பிரம்மாகுமாரிகள் இயக்கம் அகில உலக அளவில் 147 நாடுகளில் 9500 கிளை நிலையங்களின் மூலம், ஆன்மீக, சமூக மற்றும் கல்விப் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. இதன் தலைமையகம் இராஜஸ்தானில் மவுண்ட் அபு என்னுமிடத்தில் உள்ளது.தமிழக மண்டல தலைமையகம் சென்னை அண்ணா நகரிலுள்ளது. சுமார் 300 கிளைகள் உள்ளன. இவ்வியக்கம் ஐநாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் உலக அமைதி சேவைக்கான அங்கீகாரம் என்றே சொல்ல வேண்டும்.

இத்தரிசனத்தின் சிறப்பு யாதெனில், பாரதத்தின் 12 ஜோதிர்லிங்க சிவதலங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கிறது. அதுவும் அந்தந்த தலங்களின் லிங்கங்களை அதே உருவில் அங்கு சென்று நேரிலேயே தரிசனம் செய்வது போன்ற ஓர் அற்புத உணர்வு கிடைக்கிறது.
















இன்றைய சிவராத்திரியில் அருமையான தரிசனம் - அதுவும் 12 ஜோதிர்லிங்கங்கள் தரிசனம் கிடைத்ததா?  இன்று மாலை பிரதோஷத்துடன் சிவராத்திரி கொண்டாட சிவாலயம் சென்று சிவ உணர்வுடன் சிந்தியுங்கள்.

அனைவருக்கும்  சிவராத்திரி நல்வாழ்த்துக்கள்.

மீள்பதிவாக:-
மங்களங்களைத் தரும் மஹாதேவா சரணம் - http://tut-temple.blogspot.in/2017/10/blog-post_25.html


No comments:

Post a Comment