தமிழகம் முழுவதும், ‘கூடுவாஞ்சேரி’ என நன்கு அறியப்படும் நந்திவரம் என்ற
நகரம், பல்லவர் கால வரலாற்றுத் தொடர்புடையது. புகழ்பெற்ற சிவதலமாக
விளங்கும் நந்தீஸ்வரர் கோவில் அமைந்திருக்கும் இடமாதலால்,
‘நந்திகேச்சுரம்’ மருவி நந்திவரம் என்றானதாக கூறப்படுகிறது.
நந்திவரத்தில் அமைந்துள்ள நந்தீஸ்வரர் கோவில், நந்தி வழிபட்ட தலம் எனவும்,
பல்லவர் கால வழிபாட்டுத் தலம் எனவும் நம்பப்படுகிறது. பல்லவர் கால
வாணிபக் கூடமாகவும், நந்திவரம் விளங்கியுள்ளதற்கான சான்றுகளாக,
கல்வெட்டுகள் பல உள்ளன.
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாம்பரத்தை அடுத்து வண்டலூர்
உயிரியல் பூங்கா கடந்ததும் வரும் ஊர்
கூடுவாஞ்சேரி. திருநந்திவரம், திருநந்திகேஸ்வரம் என்றெல்லாம்
முன் காலத்தில் அழைக்கப்பட்ட இந்தப் பகுதி, தற்போது
நந்திவரம் (கூடுவாஞ்சேரி) என்று
வழங்கப்படுகிறது.
இத்தகு பாடல் வைப்புத் தலமான கூடுவாஞ்சேரியில் நந்தீஸ்வரர் கோவில் மட்டுமின்றி, மேலும் பல கோயில்கள் அருள் தந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயில், வேலி அம்மன் ஆலயம், வள்ளலார் கோயில் என கூற முடிகின்றது. ஒவ்வொரு கோயிலும் இங்கே தனிச்சிறப்பு கொண்டு விளங்குகின்றது. கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயம் பற்றி விரிவான தனிப்பதிவை அடுத்து தருகின்றோம்.
கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர்
மூத்தோனை வணங்க வேண்டிய தலமாக இங்கே உள்ளார். உலகெலாம் படைத்த மூத்தோன், உயிரெலாம் வணங்கும் அருளோன், தன்னலமிலா தலைவன், நெற்றிப்பொட்டாய் தகிப்பவன், ஒற்றைக்கால் தேரில் வருபவன், முற்றிய நோயை நீக்குபவன், வெற்றிக்கு துணைவன் ஆனவன், மதிஒளி வழங்கும் ஆசான் ,மனவொளி பரப்பும் சுடரானவன், அதிதியின் அழகுப்புதல்வன்,
அகண்ட தீப செங்கதிரானவன், காரிருள் விலக்கும் கதிரவன்,கர்ணன் போற்றும் தந்தையானவன்,கருணையே, காந்தமே, சாந்தமே, காலத்தின் சாட்சியாய் நிலைப்பவன் என ஏக பரம்பொருளாய் கணபதி இங்கே நிலை பெற்று இருக்கின்றார். இந்த திருக்கோயில் முருகன் அருளால் உருவானது என்றால் கொஞ்சம் யோசிக்கின்றீர்கள் தானே? திருப்புகழ் அமிர்தம் ஊட்டிய வாரியார் சுவாமிகளின் கைங்கர்யத்தில் இந்த விநாயகர் கோயில் உருவாகி உள்ளது என்றால் முருகப் பெருமானே தானே இங்கே ஆதாரம். முருகன் அருள் முன்னிற்க இங்கே விநாயகர். விநாயகர் இங்கே சுயம்பு மூர்த்தியாக மாமரத்தில் வாசம் செய்து வருகின்றார்.
நாம் அகத்தியரை பல இடங்களில் தேடிக் கொண்டிருக்க, கூடுவாஞ்சேரியில் நம் அப்பன் இருப்பதை கேள்வியுற்றோம். என்ன ஆச்சர்யம் ! முருகன் அருள் முன்னின்றால் அகத்தியரும் இருப்பார் தானே ! அகத்தியர் ஆயில்ய ஆராதனையில் ஐயம் தெளிகின்றோம். அகத்தியர் ஆயில்ய ஆராதனை நாம் தொடர்ந்து செய்து வருகின்றோம். இந்த பதிவு வாயிலாக அனைவரையும் ஆயில்ய பூசைக்கு அழைக்கின்றோம்.
மெய் அன்பர்களே.
நிகழும் மங்களகரமான ஹேவிளம்பி வருடம் மாசி மாதம் 16 ஆம் நாள் (28/02/2018) புதன் கிழமை ஆயில்ய நட்சத்திரமும்,அமிர்த யோகமும் கூடிய சுப தினத்தில் காலை 9 மணி முதல் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து ஆயில்ய ஆராதனை செய்ய உள்ளோம். அன்பர்கள் தவறாது கலந்து கொண்டு அகத்தியரின் அருள் பெற வேண்டுகின்றோம்.
தொடர்புக்கு : 7904612352/9677267266
tut-temple.blogspot.in
https://www.facebook.com/thedalullathenikalaai/
சரி. சென்ற மாத ஆயில்ய பூசையின் அருள் படங்களை கீழே இணைத்துள்ளோம்.
அபிஷேக பொருட்கள் பிரிக்கப்பட்டு தயார் செய்த நிலையில்
எண்ணெய் காப்பில்
அஷ்ட திக்கு தீபம் ஏற்றிய காட்சி
மஞ்சள் அபிஷேகம்
விபூதி அபிஷேகம்
தீபாராதனை
கருணை விழியால் பதமலர் தருவாய்
ஞானத்தின் வடிவே அருட்பெருஞ் சுடரே
கருணா அருணா யோகத்தை வென்றாய்
உனைப்போல் தெய்வம் வேறொன்று யார் சொல்லப்பா
ஆசை கொண்டேன் அருகினில் நீ வா வா
அருவாய் உருவாய் வருவாய் அருள்வாய்
உன் பதமே பரமே
தாள்பணிந்து நின்றேன்
சரண் அடைந்து கொண்டேன்
அகத்தியர் கீதத்தில் இருந்து இங்கே இசைத்துள்ளோம். நாம் என்ன தான் ஆராதனையின் அனுபவத்தை இங்கே சொன்னாலும், நேரில் வந்து அந்த அனுபவத்தை பெற்றால் தான் நாம் சொல்வது புரியும். தேன் என்று சொல்லி, அது இனிப்பாக இருக்கும், அப்படி இப்படி என சொல்வதை விட, நீங்கள் தேனை பருகினால் தான் அந்த இனிப்பு எப்படி என்று தெரியும். அது போல் தான் உழவாரப் பணியும், அன்ன சேவையும், பூசைகளும்.
அனைவரும் வருக! சித்தர்களின் அருள் பெறுக !!
- அடுத்த பதிவில் மீண்டும் இணைவோம்.
No comments:
Post a Comment