Sunday, February 18, 2018

அன்றாட வாழ்வுக்குரிய ஆன்மீக தகவல்கள்

அன்பர்களே...
வாரீர்..நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக தளத்தின் பதிவுகள் அளித்துக் கொண்டே இருக்கின்றோம்.அனைத்தும் அவன் அருள் தானே வேறொன்றும் இல்லை. நாமெல்லாம் வெற்றுக் காகிதம்.ஆன்மிகத்தின் அரிச்சுவடி இப்போது தான்  படிக்க ஆரம்பித்திருக்கின்றோம். நாம் சொல்லும் செய்திகளில் பிழை இருப்பின் பொருத்தருள்க. 

இன்றைய பதிவில் நமக்கு கிடைத்த ஆன்மிக செய்திகளை தொகுத்து ஒரு கதம்ப மாலையாக தருகின்றோம்.படித்து விட்டு தங்கள் கருத்துக்களை பகிரவும்.எங்கிருந்து எப்படி ஆரம்பிக்கலாம். ஆரம்பம் என்றாலே பிள்ளையார் சுழி இட வேண்டும் அல்லவா?

திருமூலர் ஐயா இயற்றிய பாடலில் இருந்து தொடக்கம்
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
புத்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என விநாயகரை புராணம் கூறுகிறது.மகப்பேறு பெற மருத இலை, எதிரிகளின் தொலை தீர் அரச இலை, இதர துன்பங்கள் நீங்க அகத்தி இலை, சுகமான வாழ்வு பெற வில்வ இலை ( வில்வம் பற்றி தனிப் பதிவில் ) , சுகமான வாழ்வு பெற வெள்ளெருக்கு இலை, புகழ் பெற மாதுளை இலை, லட்சுமி கடாட்சம் பெற கண்டங்கத்திரி இலை இவற்றால் வழிபட வேண்டும். அருகம்புல், செம்பருத்தி , வெள்ளெருக்கு, மாவிலை இவைகளைக் கொண்டு அர்ச்சிக்க, இவை எல்லாவற்றையும் ஒன்றாக அடையலாம் .

விநாயகர் பற்றி அறிந்தோம். அடுத்து முருகப் பெருமான் தான்.  

தரிசித்தாலே போதும், வீடுபேறு நிச்சயம் என்று சொல்லுமளவிற்கு சிலிர்ப்பூட்டும் சிறுவாபுரி தான் இப்போது. சிறுவாபுரி  சொந்த வீடு இல்லாதவர்களுக்கு இது ஒரு பரிகாரமத் தலமாகும். பூமி சம்பந்தமான அனைத்து கோரிக்கைகள் நிறைவேறவும், வீடு இல்லாதவர்களுக்கு புதிய வீடு அமையவும், மழலைப் பேறு இல்லாதவர்களுக்கு பிள்ளைப்பேறு பெறவும், கடன் தொல்லைகள் தீரவும் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகின்றது. 

இந்த முருகனை தரிசித்தாலே போதும் . நம் கடன் தொல்லை நீக்கி, சொந்த வீட்டிற்கு சென்று குடியேறும் வாய்ப்புக்கள் செய்து தருவார். செங்கற்களை அடுக்குகிறேன் பேர் வழி என்று ஆலயத்தை நாம் அசுத்தம் செய்வதோ, பக்தர்களுக்கு இடையூறு செய்வதோ கூடவே கூடாது. இப்படி கல்லைஅடுக்குவது மூட நம்பிக்கை.
இது போல, பூட்டுக்களை கொண்டு வந்து பூட்டுவதும் தவறு. இது போல எங்கும் சொல்லப்பட வில்லை.
சிறுவாபுரி முருகனை சென்று தரிசித்து வாழ்வின் சிக்கல்களை தீர்த்துக்கொள்ளுங்கள்

அடுத்து நாம் கோயில் வழிபாட்டில் தீப வழிபாடு செய்கின்றோம். அதனைப்பற்றி சிறு செய்திகள். எண்ணெயின் வகையும் பலனும் என தொடர்கின்றோம். நெய் தீபம் ஞானம் ஏற்படும்,.கடையில் விற்கும் நெய் தீபம் வேண்டாம். அது நெய் தீபமல்ல. அது பொய் தீபம் ஆகும். நல்லெண்ணெய் தீபம் எம பயம் அணுகாது.இலுப்பை எண்ணெய் தீபம் ஆரோக்கியம் கிடைக்கும் . விளக்கெண்ணெய் தீபம். சகல செல்வமும் கிடைக்கும்.

தீப வழிபாடு பற்றி சிறிது கண்டோம் . திருக்கோவில்களை வலம் வந்து வணங்க வேண்டிய முறை பற்றி தொடர்வோம். சிவன் கோவில் என்றால் குறைந்தது 3 முறை. அதற்கு மேல் 5,7,9 இவ்வாறாக.
விநாயகர் : 1 முறை
அம்பாள் : 4 முறை
விஷ்ணு  4 முறை
முருகன் : 3 முறை
மேலே குறிப்பிட்டவாறு வழிபாட்டு முறைகளில் கூறப்பட்டிருந்தாலும் பொதுவாக 3 முறை. அதற்கு மேல் 5,7,9 இவ்வாறாக வணங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

- அடுத்த  பதிவில் சந்திப்போம் .

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌