அன்பர்களே....
இதோ... நேற்று அகத்தியர் வனம் இந்தியா என்ற இந்த தளத்தைத் துவக்கினோம். விழாவில் "அகத்தியர் கீதம் " இசைத்தோம். இந்த நிகழ்வின் தருணத்தை அருமையாக கவிதையில் நம் "தேடல் உள்ள தேனீக்களாய்" குழுவை சார்ந்த அகத்திய அடியவர் தற்போது வடித்துள்ளார்.இதோ தங்கள் அனைவரின் பார்வைக்கும் இதை சமர்ப்பிக்கின்றோம்.
முத்தான முருகனருள் முன்னிற்க
குறைவின்றி குருவருள் கூடிநிற்க
சத்குரு சதானந்தர் குடில்தனிலே
வித்தொன்று வந்துதித்த வேளைதனில்
அன்புசார் மெய்ஞானம் ஓங்கிடுமே
தேடல் உள்ளதேனீக்கள் எல்லாம்
நுழைந்தது அகத்தியர் வனத்தினிலே
முத்தான முருகனது நாமம்கொண்டு
வித்தக செயல்தன்னை செய்துவிட்டார்
சண்முகனாய் சுவாமிநாதனாய் வழிநடத்தி
வனத்தை வரமாய் தந்தார் தேனீக்களுக்கு
அன்புடனும் அன்னதானம் அறச்செயலும்
அற்புதமாய் புரிந்திட ஆசிகோடி
அபயமும் அளித்திட்டார் நம்ஆசான்
பல்யுகமும் வாழ்க குருநாமம்
குருவழி குருவடிபற்றி நிற்போம்
சீரான அவர்பதம்அடையும் வரை
வணக்கமும்,
வாழ்த்துக்களும்
அகத்தியர் அடிமை
வேறென்ன வேண்டும்? பொதுவாக பார்த்தல் இது ஒரு விழாவாகத் தோன்றும். விழாவினுள் நடைபெற்ற ஆசிகள்..அப்பப்பா ..எல்லாம் அகத்தியரின் அருள் தான். விழாவில் கலந்து கொண்ட ஒவ்வொரு வரும் அகத்தியருடன், ஏனைய அருளாளர்களின் அருள் பெற்று இருப்பார்கள். அதனை சதானந்தர் பார்த்துக் கொள்வார் . எப்போ அழைப்பீரோ? என்று வழி மேல் விழி வைத்து மீண்டும் காத்துக் கொண்டிருக்கின்றோம். விழாவைப் பற்றியும், அதில் ஏற்பட்ட செய்திகளையும் வரும் பதிவுகளில் அறியத் தருகின்றோம்.
No comments:
Post a Comment