Subscribe

BREAKING NEWS

06 February 2018

மலை யாத்திரை : சதாசிவன் கோணா & கைலாச கோணா


மலை யாத்திரை/ மலை ஏற்றம் தற்போது நாம் விரும்பி தரிசிக்கும் ஒன்றாகிவிட்டது. எங்கும் நிறைந்த பரம்பொருளை மலைகளின் மீது சென்று தரிசிக்க வேண்டுமா? என்ற கேள்வி நமக்கும் எழுகின்றது. மலை நில மகளின் சிகரங்கள். வெறும் கண்களுக்கு மலை மற்றும் தான் தெரியும். மலையின் உச்சி அடைந்து அங்கு சில நேரத்துளிகள் அமைதியாக உட்கார்ந்து பாருங்கள், இயற்கையின் தாலாட்டும், பசுமை போர்வை போர்த்திய வனங்களும் நம்மை இச்சை கொள்ள வைக்கும். அன்பின் ஆழத்தை மலை நமக்கு உணர்த்துகின்றது. கருணையின் கண்களை மலை யாத்திரை திறக்கிறது.இதோ நாம் சென்ற ஆண்டு சென்ற சதாசிவன் கோணா & கைலாச கோணா நிகழ்வின் துளிகளை இங்கே பதிவேற்றம் செய்ய விரும்புகின்றோம்.




அழைப்பிதழ்  நமக்கு கிடைத்ததும் மனம் மகிழ்ந்தோம். இங்கு சிவராத்திரி வெகு விமரிசையாக கொண்டாடப் படும் என்று நாம் கேள்விப்பட்டோம். சிவன் ராத்திரி விழாவின் போது மட்டுமே ஆந்திர அரசால் பேருந்துகள் இயக்கப் படுகின்றன. மற்ற நேரங்களில் நாம் தான் நம்முடைய பயணத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். இரண்டு நாள் யாத்திரையில் முதல் நாள் திருத்தணிகை மலை, திருஆலங்காடு, நாராயணவனம், சுருட்டப்பள்ளி என தரிசனம் செய்தோம். அன்றிரவு  நாங்கள் கைலாச கோணா மலை சென்று அங்கு இருந்த சாந்தி ஆசிரமத்தில் தங்கினோம்.





அன்றிரவு வெகு நேரமாகி விட்டதால், அன்றைய உணவு முடித்து உறங்க சென்றோம். மறுநாள் காலை எழுந்ததும் கைலாச கோணா நீர்வீழ்ச்சிக்கு சென்றோம்.





                                                           எங்கும் பசுமை





இதோ கைலாச கோணா நீர்வீழ்ச்சி. அழகாய் ஒரு ஆனந்த குளியல் போட்டோம். நீர்வீழ்ச்சிக்கு அருகிலே  தலைவர் இருந்தார். குளித்து முடித்து, தலைவர்(சிவனார் ) தரிசனம் பெற்றோம்.




அம்மையப்பனை வணங்கி விட்டு, மீண்டும் ஆசிரமம் நோக்கி வந்தோம். அடடா. என மனம் ஆனந்தக்கூத்தாடியது. இரவில் சீக்கிரமே உறங்கிவிட்டபடியால், காலையில் ஆசிரமத்தை ஒரு சுற்று சுற்றினோம். கைலாச கோணா நீர்வீழ்ச்சி மற்றும் வழிபாட்டுக்கு அதிக தூரம் நடைப்பயணமோ, மலையேற்றமோ இல்லை என்பது நினைவில் கொள்க.




பிறை சூடிய எம் பெருமான் தரிசனம். ஆழ்ந்து அகன்ற நுண்ணியனை கண்டு மனம் கொள்ளை போனது.


அங்கே இருந்த ஸ்வாமிகள் ..மொழிப் பிரச்சினை இருந்ததால் நம்மால் அதிக தகவல்கள் திரட்ட இயலவில்லை. மகான்கள், சாதுக்களுக்கு மொழி என்ன ! ஒரு தடையா ! நாம் வழக்கம் போல், எல்லா உயிர்களும் பின்பற்று வாழ பிராத்தனை செய்தோம்.






என்னப்பா..இது சதாசிவன் கோணா & கைலாச கோணா என்று பதிவிட்டு , அங்கே உள்ள ஆசிரமம் பற்றி பேசுகின்றோம் என்று நினைக்க வேண்டாம். கைலாச கோணா மலையைப் பொறுத்தவரை நீர்வீழ்ச்சி, அற்புதமான தரிசனம் மட்டுமே. அங்கே இது போன்று பல ஆசிரமங்கள் உண்டு. அதில் இந்த ஆசிரமத்தில் நாம் தங்கியதால், நமக்கு பிடித்து போனது. கைலாச கோணா செல்பவர்கள் கண்டிப்பாக இந்த ஆசிரமம் சென்று, மனதை பிடிக்கவும்.




குரு பாதுகை தரிசித்தோம். குரு பாதுகை உயிரைக் காட்டிலும் விலைமதிப்பற்றது. ஒரு சிஷ்யனுக்கு அவனுடைய குருவின் தரிசனம் கிடைக்கவில்லை. இரண்டாவது சிஷ்யன் குருவை சந்திக்கும்போது குரு, தன் பாதுகையை அந்த சிஷ்யனின் மகனுடைய கல்யாணத்திற்காக அவனிடம் கொடுத்தார். இவ்விஷயம் முதல் சிஷ்யனுக்கு தெரிந்தபோது அவன், ‘பாதுகையை என்னிடம் கொடு. என் முழு சேமிப்பையும் உனக்கு தருகிறேன்’ என்றான். இரண்டாவது சிஷ்யன் பாதுகையை முதல் சிஷ்யனுக்கு தந்தான். முதல் சிஷ்யன் பாதுகையை மார்போடு அணைத்து ஆனந்த கூத்தாடினான். குருவிற்கு தெரிந்தவுடன் ‘என்ன விலை கொடுத்தாய்’ என்று கேட்டார். ‘என் முழு சேமிப்பையும் தந்தேன்’ என்றான் சிஷ்யன். ‘நீ மலிவாக பெற்றாய். சாதாரணமாக குரு பாதுகை அல்லது அருள் கிடைக்க உயிரையே தர வேண்டி இருக்கும். உயிரைக் கொடுத்து பெற வேண்டிய குரு பாதுகை இங்கே கண்டோம்.







பின்னர் அமைதியாய் அமர்ந்து, அங்கே நடந்த பூசையைக் கண்டோம், பூசை முடிவில் அமைதியை உணர்ந்து, பிரார்த்தனை செய்தோம். நல்ல ஒரு அதிர்வலைகள் சூழ்ந்த ஆன்மிக இடம் என்றே சொல்ல வேண்டும். அன்பு,கருணை,இரக்கம், தியாகம் என ஒவ்வொன்றின் ஆழம் உணர்த்தப் பட்டது.ஆசிரம நிர்வாகிகளை மரியாதை செய்தார்கள். அவர்களிடம் நன்றி கூறிவிட்டு, சதா சிவமே என்று உணர்த்தும் சதாசிவன் கோணா மலை நோக்கி நாம் சென்றோம்.

- சதா சிவத்தை உணர்த்தும் சதாசிவன் கோணா அடுத்த பதிவில் 

No comments:

Post a Comment