Subscribe

BREAKING NEWS

20 February 2018

இனிதே நடைபெற்ற "தேடல் உள்ள தேனீக்களாய் (TUT)" இரண்டாம் ஆண்டு விழா

குருவருளாலும் திருவருளாலும் நம் நண்பர்கள் மற்றும் வாசகர்களின் மகத்தான ஆதரவினாலும் நம்
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT ) இரண்டாம் ஆண்டு விழா சிறப்பாய், இல்லை இல்லை சிறப்பினும் சிறப்பாக நடைபெற்றது. ஆவலுடன் அனைவரும் காத்திருப்பீர்கள் என்று நாம் நம்புகின்றோம். அதற்காக இந்த பதிவில் ஒரு சிறிய அப்டேட்.

காட்சிப்படங்கள் அனைத்தும் கிடைத்த உடன் மிக விரிவான பதிவு நம் தலத்தில் பதிவிடப்படும்.

விழாவைப் பற்றி எழுத வேண்டும் என்றால் எழுதிக் கொண்டே இருக்கலாம், இந்த ஒரு பதிவு போதவும் போதாது. சென்ற ஆண்டு மரம் நடு விழா மூலம் சிறிய அளவில் கொண்டாடினோம். இந்த ஆண்டு குடும்ப விழா வாக அனைத்து தேனீக்களும் ஒன்று கூடி தேனை பருகின என்பது உண்மை.

விழாவிற்காக நாம் தாயாரான விதம், அதனையொட்டிய நிகழ்வுகள், விழாவிற்கு வந்தவர்கள் என ஒவ்வொன்றைப் பற்றியும் நாம் இங்கே சொல்ல விரும்புகின்றோம். இது ஒரு முன்னோட்ட பதிவு மட்டுமே.

ஒரே ஒரு புள்ளியை வைத்து தான் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் விழா நிறைவில் அந்த ஒற்றைப் புள்ளியின் மூலம் அழகான ஓவியமே கிடைத்து விட்டது. இது தான் குருவருள் என்பது . இங்கே நாம் எடுத்த படங்களையும் சில நிகழ்வுகளையும் பகிர்கின்றோம். இந்த முன்னோட்டப் பதிவிலேயே அதிக படங்கள் இணைத்துள்ளோம். பொறுமை காத்து ஒவ்வொன்றாக பார்க்கவும்.


 சரியாக 7:30 மணி அளவில் விழா நடைபெறும் சதானந்த சுவாமிகள் ஆசிரமம் அடைந்து, விழா ஏற்பாடுகள் தொடங்கினோம். தேடல் உள்ள தேனீக்களாய் (TUT ) பேனர் கட்டப்பட்ட காட்சி



                                                         வரவேற்பு இடம் தயார்



விழா மேடை தயார் செய்த பின்னர் நீங்கள் பார்க்கும் காட்சி 










சிறப்பு விருந்தினர் சிவத்திரு வேதகிரி ஐயா மற்றும் நால்வரின் பாதையில் திரு சுரேஷ் அவர்கள் அழைத்து வரப்பட்ட நிகழ்வில்







           வேதகிரி ஐயா அவர்கள் வரவேற்பறையில் சிறிய சத்சங்கம் நிகழ்த்திய போது





விழா ஏற்பாடு பற்றி அறிமுகம் செய்த தருணம். கல்லூரி நாட்களில் ஒலிபெருக்கியை கையில் பிடித்தோம். சுமார் 10 ஆண்டுகள் கழித்து, சற்று படபடப்பாக இருந்தது.


                               விளக்கேற்றி , மலர் சாற்றி விழாவினை ஆரம்பித்தோம்.


                             திருமதி லலிதா அவர்கள் பிரார்த்தனை செய்த போது


சில பதிகங்கள் பாடி தான் விழாவினைத் துவக்கினோம். புகைப்பட நிபுணர் மட்டுமல்ல சிவத்தொண்டர் திரு.சண்முகம் அவர்களுக்கும் நன்றி 



                இறை வணக்கம் பாடிய தருணம். திருமதி.ரமா சங்கர் அவர்களுக்கு நன்றி



                                              மேடையை அலங்கரிக்கும்  இருவர்.






                     விழாவினை தொகுத்து வழங்கும்  செல்வன்.ரித்தீஷ் பரத். நன்றிகள்







சிவத்திரு.வேதகிரி ஐயா அவர்களின் சிறப்புரை. செவிகள் புண்ணியம் செய்தால் தான் இவரின் உரையை நாம் கேட்க முடியும்.


            எண்ணிக்கை முக்கியமல்ல..எண்ணங்களே முக்கியம் என உணர்த்தப்பட்ட போது






மற்றொரு சிறப்பு விருந்தினர் இயற்கை நல்வாழ்வு அறக்கட்டளை நிறுவனர்  திரு.செல்வக்குமார் ஐயா அவர்களை வரவேற்ற போது




                                        விழா மேடையை அலங்கரிக்கும் மூவர்











தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) - உழவாரப்பணி பேனர் வெளியீட்டின் நிகழ்வுகள்



                           திரு.சுரேஷ் பிரியன் அவர்கள் சிறப்புரை ஆற்றிய போது







தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) - அன்னதானம் பேனர் வெளியீடு 







தொண்டாற்றி இன்பம் காண்போம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றும் திரு.செல்வகுமார் ஐயா அவர்கள்.






அகத்தியர் கீதம் ஒலித்தகடு வெளியிட்ட தருணம். பாடலைப் பாடிய கௌரி அவர்கள் சென்னை வந்திருந்து நம் விழாவினை சிறப்பித்தார்கள். அவர்களுக்கு நம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.





அகத்தியர் வனம் இந்தியா - AVI - http://agathiyarvanamindia.blogspot.in/ வலைத்தளம் புதிதாய் அறிமுகம் செய்யப்பட்டு துவக்கப்பட்ட நிகழ்வில்




 நம் குழுவின் உறவாம் திரு.சிவசங்கர் தம் அனுபவத்தை பகிர்ந்த போது



 நீண்ட நாள் கழித்து, பள்ளிப்பருவ நண்பர்கள் சந்தித்த பொழுது. இதனை நாம் சற்றும் எதிர்பார்க்கவில்லை


தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு உறவுகள் அனைவருக்கும் அகத்தியர் ஆசி கொடுத்த போது, அகத்தியர் லோபாமுத்ரா காட்சி தரும் அருள்படம் வழங்கப்பட்டது.





திரு.சுரேஷ் பிரியன் அவர்களை மரியாதை செய்த போது 










சிவத்திரு வேதகிரி ஐயா அவர்களை திரு.ராஜ்குமார் அவர்கள் மரியாதை செய்த தருணம் 



திரு.செல்வக்குமார் ஐயா அவர்களை எம் தந்தை திரு.ராதாகிருஷ்ணன் மரியாதை செய்த தருணம். நன்றி இறைவா!












ஆதம்பாக்கத்தை சார்ந்த திருமதி. ரமணி அவர்கள் கீதம் இசைக்கும் காட்சி. விழாவிற்கு முந்தய நாள் தான் இவர்கள் பாடுவார்கள் என்பது நமக்குத் தெரியும். விழாவின் அடுத்த நாள் பாடி, அனைவரின் பாராட்டுக்கும் ஆளானார் என்பது சிறப்பு.






செல்வி சௌமியா அவர்களுக்கு அகத்தியர் வனம் மலேசியா வழங்கிய நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தோம்.






காலையில் சுமார் 9:15 மணிக்குத் துவங்கிய விழா சரியாக மதியம் 12:45 மணி அளவில் சிறப்பு விருந்தினர்களின் ஆசியுரையோடு  நிறைவு பெற்றது.சிறப்பிலும் சிறப்பாக விழா இனிதே நடைபெற்றது. விழா நடைபெற உறுதுணையாக இருந்த அனைவர்க்கும், ஆசிரம நிர்வாகிகளுக்கும் நன்றி கூறி விழாவினை நாம் நிறைவு செய்தோம். அடுத்து கல்யாண விருந்தாய் மதிய உணவு வழங்கப்பட்டது. நேற்று நாம் சிறப்பு விருந்தினர் திரு.செல்வக்குமார் ஐயாவிடம் பேசிய போது, விழாவில் வழங்கிய அருளமுது இன்னும் உடலில் மட்டுமல்ல, உள்ளத்திலும் உள்ளது என்று கூறினார். சிவத்திரு வேதகிரி ஐயா அவர்கள், இயற்கை சூழலில் இனிமையான விழா. இது போல் தொடர்ந்து இங்கேயே நடத்துங்கள் என்று அன்பு கட்டளை இட்டுள்ளார்.

அவன் அருளின்றி இது சாத்தியமாகா. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி, அனைவருக்கும் மீண்டும் நன்றி சொல்லி நிறைவு செய்கின்றோம்.

- அடுத்த பதிவில் இணைவோம்.

No comments:

Post a Comment