Subscribe

BREAKING NEWS

05 February 2018

ஒருநாள் போதுமா? இன்றொரு நாள் போதுமா?

அன்பர்களுக்கு வணக்கம்

மிகவும் நீண்ட இடைவெளிகளிக்குப் பின் இங்கே சந்திக்கின்றோம். வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நம் "தேடல் உள்ள தேனீக்களாய்" குழுவின் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாட இருக்கின்றோம்.அதனையொட்டி விழா ஏற்பாடுகளை செய்வதால் நம்மால் பதிவுகளை அளிப்பதில் தடங்கல் ஏற்பட்டது.ஆனால் நாம் வழக்கமாக செய்யும் பணிகள் தொடர்ந்து செய்து வருகின்றோம்.இம்மாத உழவாரப்பணியை சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் குரு பூசை பொருட்டு செய்தோம். வழக்கம் போல, எண்ணிக்கை முக்கியமல்ல, எண்ணங்களே முக்கியம் என்று உணர்ந்தோம்.

இம்மாத அன்னதானத்தையும் சதானந்த சுவாமிகள் குரு பூசை விழாவில் செலுத்திவிட்டோம்.அன்றைய தினம் காலை முதல் அருமையான , சுவையான அருட்பிரசாதமாய் உணவு கிடைத்தது. கண்டு இன்புற்றோம். இன்புற்று வாழ்வது மட்டுமே நம் வாழ்வின் குறிக்கோள். நம் ஆண்டு விழாவிற்காக அனைத்து வேலைகளும் சிறப்பாக எந்தவொரு தொய்வுமின்றி,குருவின் அருளால் நடைபெற்று வருகிறது. அகத்தியர் கீதம் ஒலித்தகடு வெளீயீடும் அகத்தியர் அருளால் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு விழா யாருடைய தனிப்பட்ட முயற்சியிலும் நடைபெறவில்லை. நம். குழுவின் கூட்டு முயற்சியே. 

விழாவிற்காக உழைத்து நமக்கு ஆக்கமும் ஊக்கமும் ஊட்டி, உறுதுணையாக மட்டுமின்றி, உற்றதுணையாக இருக்கும் அனைவருக்கும் நம் நன்றியை இங்கே தெரிவித்துக்கொள்கிறோம். மீண்டும் ஒருமுறை அழைப்பிதழை இங்கே இணைத்துள்ளோம்.இது நம் குடும்ப விழா. அனைவரும் வந்து அருள் பெறுமாறு வேண்டுகிறோம்.




இன்றைய பதிவில் சதானந்த சுவாமிகள் அருளிய 96ஆவது மகா குரு பூசையின் நிகழ்வின் துளிகளை காண்போம். பொதுவாக மாதந்தோறும் நடைபெறும் மக நட்சத்திர பூசை களை கட்டும்.பூக்களில் சுவாமிகள் நிறைந்து காணப்படுவார். வருகின்ற அன்பர்களுக்கு உணவு இல்லை என்று கூறாது, அன்னதானமும் இரண்டு , மூன்று பந்தி என தொடரும். திருவாசக முற்றத்தில் நடைபெறும் . இவ்வாறு நம் உடல் மட்டுமன்றி, உடல்,உயிர்,மனம் என அனைத்தும் ஒருங்கே அருள் பெற மகம் பூசையின் போது இங்கே பெறலாம். இப்படி இருக்க , 96ஆவது மகா குரு பூசை என்றால்! மனதில் மட்டற்ற மகிழ்ச்சி.





அருள் விழா காலை 5 மணிக்கு சத்-குருவின் அபிசேகம் மற்றும் பேரொளி வழிபாடு மூலம் தொடங்கியது.ஒவ்வொரு அபிசேகம் ஒவ்வொரு உணர்தலை தந்தது.சித்தர்கள் உணர்த்தும் சோதி வழிபாட்டை பேரொளி வழிபாட்டில் கண்டோம். சுமார் 8 மணி அளவில் சத்குருவின் பக்திப் பாடல்கள் இசைக்கத் தொடங்கினார்கள்.வயிற்றுக்கு விருந்தாய் சிற்றுண்டி ஆரம்பமானது.கேட்க கேட்க இனிக்குதடா! என்று பக்திப்பாடல்களும், உண்ண உண்ண இனிக்குதடா என்றும் உணவும். அமைந்தது. இந்த சிற்றுண்டி வருகின்ற அன்பர்கள் அனைவருக்கும் இல்லை எனாது, நண்பகல் வரை தொடர்ந்தது.











பின்பு சுமார் 9:30 மணி அளவில் , சிவத்தொண்டன் சிவனடியார் திருக்கூட்டம் வழங்கிய திருக்கைலாய வாத்திய இசையோடு, குருவை ஆசிரமத்தின் அருகில் உள்ள விநாயகர் கோவிலிலிருந்து தேர் மூலம் ரத வழிபாடு செய்வித்தனர். இதனுடைய தொடர்ச்சியாய் தீந்தமிழ் திருவாசக விண்ணப்பம் நடைபெற்றது.இந்த விண்ணப்பம் காலை 11 மணி முதல். தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெற்றது என்றால் தமிழ் தேன் அனைவரையும் திக்குமுக்காடச் செய்தது என்பது கண்ணால் கண்ட உண்மை.









மதியம் 12 மணிக்கு மகாதீப ஆராதனை நடைபெற்றது. அருட்பெருஞ்சோதியை இந்த ஆராதனையில் கண்டோம். அருட்பெருஞ்சோதி ஆண்டவரையும் ஒருங்கே கண்டு இன்புற்றோம்.மாலை 4 மணி முதல் 5 மணி வரை பன்னிரு திருமுறை உண்டோம். மாலை முதல் பல்வேறு நிகழ்ச்சிகள். கண்களுக்கு, செவிகளுக்கு விருந்து சமைத்தார்கள். பரத நாட்டிய கலை நிகழ்ச்சியில் மனம் சொக்கிப் போனோம். 
















வேண்டத் தக்கது அறிவோய் நீ! என்று மனதில் சில பிரார்த்தனை செய்தோம், சொல்லில் அடங்கா, மெய்யில் உணரச் செய்த அருள் விழாவினை ஏற்பாடு செய்த, சதானந்த சுவாமிகள் மடத்தைச் சார்ந்த அன்பர்களுக்கும்,பொருளுதவி செய்த பெரியவர்களுக்கும், அருளுதவி செய்த அருளாளர்களுக்கும் நம் மனமார வாழ்த்துக்களையும் , நன்றியையும் இந்த பதிவின் மூலம் நம் "தேடல் உள்ள தேனீக்களாய் " குழுவின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.























- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்  


No comments:

Post a Comment