Subscribe

BREAKING NEWS

12 March 2018

வாழ்வில் திருப்பங்கள் தரும் தீர்த்தகிரி யாத்திரை

தீர்த்தமலை 

ஒரே மலையில் ஐந்து தீர்த்தங்கள். ஐந்து தீர்த்தங்கள் இங்கே இருப்பதால் தான் பேரே தீர்த்தமலை என்று உருவாகி உள்ளது.இந்த மலையில் இறைவன் சிவபெருமான் எழுந்தருளி இருக்கிறார். இங்கிருக்கும் சிவபெருமான் தீர்த்தகிரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இங்கு ஓடி வரும் புனித நீரூற்றுகளில் குளித்தால் நமது பாவங்கள் எல்லாம் அழிந்துவிடும் என்று இந்த பகுதியில் இருக்கும் மக்கள் நம்புகின்றனர்.

தர்மபுரிக்கு அருகில் அமைந்திருக்கும் தீர்த்தமலை மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு ஆன்மீக தலமாகும். இந்த தலம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூருக்கு அருகில் அமைந்துள்ளது.

 தீர்த்தமலையின் உச்சியில் அமைந்துள்ளது இந்த தீர்த்தகிரீஸ்வரர் கோயில். இது மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாகவும், தெற்கில் சிவபெருமான் வாழும் இடமாகவும் நம்பப்படுகிறது.

இதோ தீர்த்த மலை யாத்திரையில் தீர்த்தங்களில் நீராடிவிட்டு, நாம் இறை தரிசனம் பெற காசி விஸ்வநாதரை அடைந்தோம். இங்கே ஒரு சிவ பக்தை இருந்தார்கள். வழக்கம் போல் செல்லப்பன் அண்ணன் திருவாசகம் பாட, நாமும் இணைந்து கொண்டோம்.



பின்னர் அந்த அம்மையார் அவர்கள், தீபம் போட்டுக் கொடுங்கள் என்றார். நாம் ஏற்கனவே அஷ்டதிக்கு விளக்கு போட அகல், நெய் போன்றவை வாங்கி சென்றிருந்தோம். நாம் நினைத்தது வேறு. ஆனால் அங்கே நடந்தது வேறு. இதனைத் தான் எல்லாம் அவன் செயல் என்றும் நாம் கூறுகின்றோம். அஷ்டதிக்கு விளக்குகள் இங்கே ஒவ்வொரு தெய்வத்தின் சந்நிதிக்கு என்று அவர்களே விரும்பும்போது, நாமும் அதனைத் தான் செய்ய வேண்டும்.


மாசற்ற ஜோதியைக் கண்டோம்.

மாசற்ற ஜோதி மலர்ந்த மலர்ச்சுடரே 
தேசனே தேன் ஆர் அமுதே சிவபுரனே
பாசமாம்  பற்று அறுத்து பாரிக்கும் ஆரியினே
நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெட 
பேராது நின்ற பெருங்கருணை  பேராறே.

என்று மனத்தினுள்ளே ஆடிக் கொண்டே, வாயார அவர் புகழ் பாடினோம். அடுத்து அந்த அம்மையார் அப்படியே ஒவ்வொரு சந்நிதியாக சென்று விளக்கேற்றுங்கள் என்று கூறி ஆசி கொடுத்தார்கள்.




அடுத்து மூத்தோன் சந்நிதி 



நமக்குத் தெரிந்த விநாயகர் அகவல்களை பாடினோம். ஒளவை யார் என்று உலகிற்கு உணர்த்திய உத்தமன், வினை நீக்கும் நாயகன்,வெற்றியின் வேந்தன் என ஒருங்கே திகழும் விநாயகரை தீபமேற்றி வணங்கினோம். காலையில் தீர்த்தமாடி விட்டு என்ன செய்ய போகின்றோம்? அதிக நேரம் உள்ளதே? கீழே மதியத்திற்கு மேலே சென்றால் தானே நன்றாக இருக்கும் என்றெல்லாம் யோசித்த நமக்கு இப்படி தீபமேற்றி தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது என்றால் இதனை நாம் என்னவென்று சொல்வது?








அடுத்து நாம் சென்ற சன்னதி. நம்ம வேலவன். முருகா ..எத்துணை பிறவியப்பா எடுத்து வந்தோம் நின் நாமம் செப்பிடவே ! உள்ளம் உருகுதய்யா  என்று நாம் பலமுறை கேட்டிருக்கின்றோம்.


ஆனால் இங்கே பார்த்தபோது தான் அந்த பாடலின் பொருள் புரிந்தது. 

உன்னடி காண்கையிலே. அள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதய்யா முருகா.

பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேரி முருகா ஓடி வருவாயப்பா

என்று மனதிலே ஓடிக்கொண்டே இருந்தது.





விழிக்குத் துணை, திரு மென் மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை, முருகா எனும் நாமங்கள், முன்பு செய்த பழிக்குத் துணை, அவன் பன்னிரு தோளும், பயந்த தனி வழிக்குத் துணை, வடிவேலும், செங்கோடன் மயூரமுமே!

முதலில், முருகனை ‘விழிக்குத் துணை’ என்கிறார் அருணகிரிநாதர். அதாவது, ‘நான் பார்க்கும் இடங்களில் எல்லாம் உன்னை மட்டும்தான் காணவேண்டும். என்னுடைய விழியை விட்டு எப்போதும் நீங்காத, அதற்கு ஏற்ற துணை, உன்னுடைய மென்மையான திரு மலர்ப் பாதங்கள்தாம்.’

இதைச் சற்றே வேறுவிதமாகவும் சொல்லலாம்: ‘உன்னுடைய பாதங்களைத் தவிர வேறெதையும் காண விரும்பவில்லை முருகா, உன் காலடியிலேயே நிரந்தரமாக எனக்கு இடம் கொடு!’

விழிக்கு அடுத்து, மொழி. அதுவும் மெய்ம்மை குன்றாத, பொய் பேசாத மொழி. அதற்கு ஏற்ற துணை என்ன தெரியுமா?  முருகா, கந்தா, கடம்பா, கதிர்வேலா, கார்த்திகேயா, வள்ளி மணவாளா, ஷண்முகா, வடிவேலா, சுப்ரமணியா என்றெல்லாம் விதவிதமாக உன்னைப் போற்றுகிற பல்வேறு திருநாமங்கள் தான். அவற்றின் துணையோடு பேசுகிறபோது, எழுது கிறபோது, எல்லாமே சிறப்பாகும். 

அறிந்தோ, அறியாமலோ, இதற்குமுன் நான் நிறைய தவறுகள் செய்திருக்கலாம். அந்தப் பழிக்கெல்லாம் துணை (அதாவது, பரிகாரம்) உன்னைப் பற்றிப் பாடுவதுதான், உன்னுடைய அழகான பன்னிரண்டு தோள்களில் என்னுடைய பாமாலையைச் சூட்டவேண்டும்!

முருகா, இந்த உலகில் எல்லாப் பாதைகளும் பயமுறுத்துகின்றன. அவற்றில் தனியே நடந்து செல்ல பயமாக இருக்கிறது. நீயும் என்னோடு வழித்துணையாக வருவாயா? அதுவும், நீமட்டும் தனியே வந்தால் போதாது, உன்னுடைய அழகிய வேல், மயிலையும் அழைத்துக் கொண்டு வா! ஆக, விழித்துணை உன் பாதங்கள், மொழித்துணை உன் நாமங்கள், பழித்துணை உன் தோள்கள், வழித்துணையாக நீயும் உன் வேலும் மயிலும்! வருவான் வந்துயிங்கே அருள் புரிவான்.




 ஒரு சாம்ராஜ்யத்தையே ஆண்ட ராஜேந்திரச் சோழன் இந்த கோயிலுக்கு அடிக்கடி வருவாராம். அதிலும் அவர் கையாலே சிவபூசை செய்வார் என்றும் கல்வெட்டுக்களிலிருந்து அறிய முடிகிறது. இவர் மட்டுமின்றி அந்த கால புலவர் அருனகிரிநாதர் உட்பட பல்வேறு புலவர்பெருமக்கள் வந்து பாடிய தலமாக இது அறியப்படுகிறது 

அடுத்து நாம் தரிசித்தது நம் அகத்தியர் பெருமாளே. வெளியே இருந்து பார்க்கும் போது லிங்கப் பிரதிஷ்டை என்று நினைத்தோம். ஆனால் உள்ளே சென்று பார்த்தால்...



தேனோடும் ஓடையில், பழந்தோட்டத்தில் உள்ள பழங்கள் விழுந்து இருக்கும் போது,அங்கே ஒரு கரும்புத்தோட்டம் , இங்கே ஒரு எறும்பு உள்ளே நுழைந்தால் எப்படி இருக்கும்? அது போன்று தான் இருந்தது. அகத்தியரை அகம் குளிர தரிசித்தோம்.








விபூதி அழகில் ...



















கற்றைவார் சடையான் பெற்ற கற்றைவார் சடையன் நீயே ...!

நற்றவச் சிவனார் பெற்ற நற்றவ முனிவன் நீயே ...!

பெற்றவன் தமிழைப் பெற்றான் பிள்ளைநீ தமிழ் வளர்த்தாய்

கொற்றவன் அவன் இமயம் குடமுனி பொதிகை வேந்தே ....!

வேந்தன்நீ என்பதால் என் வேதனை தவிர்க்க கேட்டேன்

மாந்தர்தம் துயர் துடைத்தல் மன்னநின் கடமை அன்றோ ...!

பூந்தமிழ் வளர்த்த செல்வ புலவர்நற் குல முதல்வ

சாந்தநற் குருவே நின்தாள் சரணென அடைந்தேன் காவாய் !

காவாயேல் என்னை ஈங்கு காத்திட எவருமில்லை

நாவாயும் புயலிற் சிக்கி தவித்தற்போல்  தவிக்கின்றேன் நான்

பேய்வாயினின்றும் மீட்ட பெருமானே - என்றும்

தாயாய் இருந்தே காப்பாய் ! தலைவைத்தேன் நினதுதாளே சரணம் !

ஓம் ஸ்ரீ அகத்தீசாய நமோ நமஹ .....
















                அகத்தியரை அருட்குருவை அகத்தில் வைத்தால் புன்சிரிப்பு வரத்தானே செய்யும்




கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா
பாவியென்றிகழாமல் எனக்குன் பதமலர் தருவாயப்பா

என்று தொழுதோம்.




அடுத்து அம்மையின் தரிசனம்.இங்கே வினோத் குமாரை விளக்கேற்ற கூறினோம்.





அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி அன்னை அகிலாண்டேஸ்வரி தரிசனம் பெற்றோம்.









                       அடுத்ததாக சப்த கன்னியர்களுக்கு விளக்கேற்றி வழிபட்டோம்.




அப்படியே திருக்கோயிலை வளம் முடித்து விட்டோம். பின்னர் தீர்த்தகிரீஸ்வரர் தரிசனம் பெற உள்ளே நுழைந்தோம். சிலரிடம் அங்கே  கேட்ட தல வரலாறு இங்கே பதிக்கின்றோம்.

ராவணனை சம்ஹாரம் செய்து விட்டு அயோத்தி நோக்கி போகும் போது இங்கு சிவபூஜை செய்ய விரும்பினார்.பூஜைக்கு காசியிலிருந்து தீர்த்தமும் பூவும் எடுத்து வர அனுமனால் தாமதமாகி விட்டது. ஆஞ்சநேயர் தீர்த்தம் எடுத்து வர தாமதமாகி விட்டதால் ராமர் தனது பாணத்தை எடுத்து மலையில் விட்டார். அவர் பாணம் விட்ட பாறையிலிருந்து தீர்த்தம் வந்தது.அதை வைத்து சிவபூஜை நடத்தினார். இதனால் இதற்கு ராமர் தீர்த்தம் என்று பெயர் வந்தது. மேலும் ஆஞ்சநேயர் தான் எடுத்து வந்த தீர்த்தத்தை வீசி எறிய அது 12 கி.மீ. தூரத்தில் தென்பெண்ணையாற்றங் கரையில் விழுந்து அனுமந்த தீர்த்தம் என்று பெயர் பெற்றது.அனுமந்த தீர்த்தத்தில் குளித்து விட்டு இங்கு வந்து ராம தீர்த்தத்தில் குளித்தால் பாவங்கள் விலகும்.

தீர்த்தகிரீஸ்வரர் - உடல் நோய் தீர்க்கும் பெருமானாகவும், உள்ள நோய் தீர்க்கும் பெருமாளாகவும் நமக்கு அருள் கொடுத்தார். தேங்காய் உடைத்து நம் குழு உறவுகள் அனைவர்க்கும் அர்ச்சனை செய்து, சிவபுராணம் அச்சிட்ட தொகுப்பை சுவாமி பாதத்தில் வைத்து தரும்படி வேண்டினோம். அங்கே இருந்த அடியார்களிடம் சிவபுராணம் வழங்கி விட்டு, மதிய உணவு உண்ண தயார் செய்தோம்.

காலை உணவாக சில உணவு பொட்டலங்கள் வாங்கினோம். இது மதிய உணவானது. நேரம் தான் நமக்கு போதவில்லை. அடுத்து மலையில் இருந்து இறங்கி, மலை அடிவாரத்தில் அருள்பாலிக்கும் தீர்த்தகிரீஸ்வரர் தரிசிக்க விரும்பி சரியாக 2 மணி அளவில் கீழிறங்கினோம்.

கீழிறிங்கி விட்டு,  ஸ்ரீ குருமண்டல தெய்வமே என போற்றப் பெரும் அகத்தியரை மலையடிவார ஆசிரமத்தில் தரிசித்தோம்.ஏற்கனவே அந்த பதிவு நம் தளத்தில் கொடுக்கப் பட்டுள்ளது. மீண்டும் கீழே மீள்பதிவாக இணைக்கின்றோம்.

அடுத்து மலையடிவார தீர்த்தகிரீஸ்வரர் தரிசனம் பெறுவோம்.



மீள்பதிவாக :-

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே ! - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_76.html

ஸ்ரீ ராமரின் வழியில் தீர்த்தகிரி யாத்திரை - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_8.html

யாத்திரையாம் யாத்திரை ...தீர்த்தகிரி யாத்திரை - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_7.html

No comments:

Post a Comment