Sunday, March 4, 2018

ஏடங்கை நங்கை இறை எங்கள் முக்கண்ணி - உழவாரப் பணி அறிவிப்பு

நங்கநல்லூர்...சென்னையின் மற்றொரு புனித பூமி. எங்கும் நிறைந்து கிடக்கும் கோயில்கள் நம் மனதிற்கு மகிழ்வைத் தருகின்றது. இன்றைய பதிவில் நங்கநல்லூர் ஶ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஆசிரமம் பற்றி அறிய தருவதோடு, இந்த மாத உழவாரப் பணியை இங்கே செய்திட திருவருள் நம்மை கூட்டுவித்துள்ளது. வழக்கம் போல் தள அன்பர்கள் உழவாரப் பணியில் வந்து சிறப்பு சேர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நம்மை வரவேற்கும் ஆலய முகப்போடு, பதிவில் உள் நுழைகின்றோம். யாரும் அறியாத பல விசேஷ அம்சங்களுடன் கூடிய, யந்திரங்கள் கொண்ட ராஜ கோபுரத்தையும், பல சிறப்புகளையும் கொண்டது இத்திருக்கோயில். திருமூலரால்  பாடப்பட்டு, நங்க நல்லூர் தான் ஶ்ரீ ராஜ ராஜேஸ்வரிக்கு மூலஸ்தானமாக விளங்குகின்றது.மூத்தோனின் தரிசனம் நமக்கு இங்கே உள்நுழைந்த உடன் கிடைக்கின்றது. ஶ்ரீ லக்ஷ்மி சத்ய நாராயண பெருமாள் கால சர்ப தோஷம் நீக்கும் தலமாக இத்திருத்தலம் விளங்குகின்றது. இங்கே அம்பாளுக்கு அர்ச்சனை செய்ய நம் தோஷம் விலகுகின்றது. பெருமாளுக்கு அர்ச்சனை செய்ய காரியத்தில் வெற்றி கிடைக்கின்றது. எனவே பக்கத்தில் பெருமாள் கோவில் உள்ளது. இது தவிர, கால சர்ப்ப தோஷம் நீங்குகின்றது.பெருமாள் கோவிலில் நவகிரகங்கள் மாறி, மாறி இருப்பது இங்கு சிறப்பு. அடுத்த பதிவில் இதைப் பற்றி இன்னும் அறியலாம்.


ஶ்ரீ வித்யா முறைப்படி இந்த கோயில் மந்திரப் பூர்வமாக கட்டப்பட்டுள்ளது. எனவே சிவாச்சாரியார் இங்கு பூசை செய்ய முடியாது. ஶ்ரீ வித்யா மந்திரம் தீட்சை பெற்று, சுவாமிகளால் பூர்ணாபிஷேகம் செய்யப்பட்டவர்கள் தான் இங்கு பூசை செய்ய இயலும்.

அம்பாள் உத்தரவுப் படி, இங்கு படி ஏறும் முன் மந்திர சுத்தி செய்யப்பட்ட குங்குமம்  வாங்கி உங்கள் குடும்ப தோஷம் நீங்க, திதி தேவிக்கு அங்குள்ள  பெட்டியில் போட வேண்டும். வெளியிலிருந்து நெய், பூக்கள் மட்டுமே இங்கு ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.


திருமூலர் இங்கு சில காலம் தங்கி, இந்த இடத்தை தன் திருமந்திரத்தில் சக்தி பேதை திரிபுரை சக்கர விளக்கத்தில் "ஏடங்கை நங்கை இறை எங்கள் முக்கண்ணி" என்று குறிப்பிட்டுள்ளார்.நங்கை என்றால் 16 வயதுப் பெண். இராஜ ராஜேஸ்வரிக்கு 16 வயது தான். திருமூலர் பூசித்த தேவி இவர் . அகத்திய பெருமான் இங்கு தங்கி, ஒவ்வொரு திதிக்கும் ஒரு பாடல் வீதம், பூர்வபக்க்ஷமாக 16 பாடல்கள், அமரபக்ஷமாக 16 பாடல்கள் பாடி உள்ளார். அந்த பாடல்களை இங்குள்ள படிக்கட்டுகளில் காணலாம். உங்களுக்காக கீழே இணைத்துள்ளோம்.
கலியுகத்தில் ஶ்ரீதேவி சுயம்புவாக அக்னிகுண்டத்திலிருந்து இங்கு ஆவிர்பவித்து உள்ளார். இதனுடன் ஸ்தலம்,மூர்த்தி , தீர்த்தம், ஸ்தல விருட்சம் என ஒவ்வொன்றும் இங்கு சிறப்பான முறையில் பேசப்பட்டு வருகிறது.தன்வந்திரியும், வருணனும் இங்கு தீர்த்தத்தை உண்டாக்கி, அம்பாளை உபாசனை செய்துள்ளார்கள். மகிழ மரம் இங்கு தல விருட்சமாக உள்ளது.

இத்துணை சிறப்புகள் கொண்ட திருக்கோயில் , வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அன்று 11/3/2018 காலை சரியாக 8 மணி அளவில் உழவாரப் பணி செய்ய உள்ளோம். வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற நம் தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் சார்பாக அழைக்கின்றோம்.இறை அன்பர்களே.நமது TUT குழுமத்தின் நான்காம்  உழவாரப்பணியை பற்றிய அறிவிப்பை இத்துடன் அறிவிப்பு செய்கின்றோம்.இறை அருளாலும்,குருவருளாலும் வருகின்ற  உழவாரப் பணி  நங்கநல்லூரில் உள்ள ஶ்ரீராஜ ராஜேஸ்வரி ஆஸ்ரமத்தில் வருகின்ற 11/3/2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது.
உழவாரப்பணியை  தொடர்ந்து அபிஷேகம்,ஆராதனை நடைபெறும்.அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு தொண்டினை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.


நிகழ்வின் நிரல் 

உழவாரப்பணி 
அபிஷேகம்,ஆராதனை 
தீபாராதனை 
பிரசாதம் வழங்கல் 


நாள்:11/3/2018 ஞாயிற்றுக்கிழமை 

இடம் :

ஶ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஆஸ்ரம ம்
18/29, 16 ஆவது தெரு,
தில்லை கங்கா நகர்,
நங்கநல்லூர்,
சென்னை-61

நேரம்: காலை 8 மணி முதல் 1 மணி வரை 

தங்களின் வருகையை கண்டிப்பாக உறுதி செய்ய தொடர்பு கொள்ளவும் 

இத்திருக்கோவில் தல வரலாறு, அகத்தியர் அருளிய சோடச மாலை போன்ற செய்திகளை அடுத்தடுத்து வரும் பதிவுகளில் காண்போம்.


இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌